Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017வ்வொரு நாட்டிலும் தினமும் ஏதாவது ஒரு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அந்நாடு சார்ந்த முக்கிய தினமாக இருக்கலாம். ஆனால் சில தினங்களை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து உலகளவில் கொண்டாடுகின்றன. இவற்றில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்த தினங்களே அதிகம். ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த அனைத்து தினங்களையும் அதன் 192 உறுப்பு நாடுகளும் கடைப்பிடிக்கின்றன. இத்தினங்கள் யாவும் பொழுதுபோக்கிற்காகக் கொண்டாடப்படுபவை அல்ல. உலகில் விழிப்புணர்வை உருவாக்கவும் உலகளவில் மாற்றத்தைக் கொண்டுவரவுமே கொண்டாடப்படுகின்றன. இப்படி ஐ.நா. சபையால் 1975-ல் அங்கீகரிக்கப்பட்ட தினம்தான் மகளிர் தினம்.

இன்று மகளிர் தினம் என்பது பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்து கூறுவது மற்றும் கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப் போட்டி நடத்துவது என்று திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டுள்ளது.

“உழைக்கும் மகளிர் தினம் என்பது கொண்டாட்ட நாள் அல்ல; அது ஒரு போராட்ட நாள். பெண்களுக்கான உரிமைகள் குறித்த சிந்தனைகளையும், அதற்காகச் செயலாற்றியவர்களையும் நினைவுகூரும் நாள் இன்று. இந்நாளைப் பற்றி பெண்கள் அனைவரும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும் அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது. 18-ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளைச் செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்விகூட மறுக்கப்பட்டது. இந்த நிலையில்தான் 1857-ஆம் ஆண்டில் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும் படுகாயமடைந்து நடக்கமுடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது.

உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு கிட்டியது. இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலைசெய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்துகொண்டது.

உழைக்கும் மகளிர் கஷ்டப்பட்ட அந்த 19-ஆம் நூற்றாண்டில் சுமார் 14-16 மணிநேரம் வேலையாக இருந்ததாம். ஆண்களுக்கு இது சாத்தியம் தான் ஏனென்றால் அவர்கள் பலசாலிகள், புத்திசாலிகள், வீரர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். வெளிவேலையை மட்டும் செய்யும் ஆண்களுக்கு அது சாத்தியமாக இருந்தது. ஆனால் அலுவல் வேலை, வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என்று பல வேலைகளைச் செய்யும் பெண்களுக்கு 16 மணிநேர அலுவல் வேலை சிரமமாக இருந்ததால், போராடி வேலை நேரத்தை 16-லிருந்து 8 மணி நேரமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 30,000 பெண்களுக்கு மேல் போராடிய தினம்தான் மார்ச் 8. அதே தினத்தை பெண்கள் தினமாக்கலாம் என்று 1910-ல் தீர்மானித்திருந்தாலும் அதனை 1975-ல் தான் ஐ.நா. சபை 'பெண்கள் தினமாக' ஏற்றதாம். (பெண்கள் தீர்மானித்தால் மட்டும் அதை அமலுக்குக் கொண்டு வர எத்தனை வருஷமாகிறது பாருங்கள்).

அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணியம், இன்று தடைகளைத் தகர்த்து வீறுகொண்டு எழுந்து வருகிறது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை. கல்விச் சிறகுகள் பெண்களை வாழ்வின் உயர்ந்த இடங்களுக்கு உயர்த்தியிருக்கிறது. இதுவரை ஆண்களின் பார்வையிலிருந்தே தங்களின் உலகத்தைப் பார்த்துவந்த பெண்கள், தங்களின் உலகத்தைக் கட்டமைக்கத் தயாராகிவிட்டனர். தலையணைக்கு உறை மாட்ட மட்டும் தெரிந்த பெண்கள், இன்று இராணுவத்தில் துப்பாகிகளுக்குத் தோட்டாக்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ‘மனையுறை மகளிர்’ விண்வெளி விந்தைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கலை, இலக்கியம் என எல்லாத்துறைகளிலும் ‘பேசாப் பொருளை’ பேச முன்வந்துள்ளனர். பெண்களின் சக்தி அளவிட முடியாதது. இன்றைக்கு பெரும்பாலானோர் அதனைப் பயன்படுத்திப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்துவருகின்றனர். எழுதப் படிக்கத் தெரியாத பெண்களும் இன்று மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வெற்றி பெற்ற தொழில் முனைவோராக மாறியிருக்கிறார்கள் பெண்ணியம் என்றாலே ஏதோ அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சித்தாந்தம் என்கிற மனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் விடுதலை குறித்த வீரியமிக்க சிந்தனைகளை முன்வைத்த மரபு நமக்குண்டு. தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது சாதி ஒழிப்புடன், பெண்ணியச் சிந்தனைகளையும் வலுவாக முன்வைத்தார். சாதி ஒழிப்பு, பெண் விடுதலை இவை இரண்டும்தான் பெரியாரின் செயல்பாடுகளுக்கான முக்கியமான அடித்தளங்கள் என்றே சொல்லலாம். பெண்ணின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியதில் பாரதிக்கு பெரும் பங்குண்டு. பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார், தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில்தான்  செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார்.

தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்த திரு.வி.க அவர்களும் பெண்களின் பெருமையைப் போற்றியும், விதவை மணத்தை ஆதரித்தும், வழுக்கி விழுந்த சகோதரிகளுக்குப் புதுவாழ்வை வற்புறுத்தியும், பெண்கல்வியை வலியுறுத்தியும் என்று அனைத்து நிலைகளிலும் பெண் உயர்வை வலியுறுத்தியவர்.

உழைப்பும் தியாகமும் உன்னதமானது என்பதற்கு நம் முந்தைய தலைமுறை பெண்களே வழிகாட்டியாக இருந்துள்ளனர். முதன்முதலில் தூது சென்ற வீராங்கனை ஔவையார், வெள்ளையர்களை வென்று முடிசூட்டிய ராணி வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலு நாச்சியாரின் சபதம் நிறைவேற்றிடத் தன்னையே தற்கொலைப் போராளியாய் கொடுத்து உயிர் நீத்த வீரப்பெண் குயிலி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் நாட்டிற்காக தனது உயிரை போர்க்களத்தில் மாய்த்துக்கொண்ட தியாகப்பெண் ராணி அவந்திபாய், ''பலன்  ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் உயிரை தியாகம் செய்த  இந்த பெண்தான்  முதன் முதலில் எனக்கு விடுதலை உணர்வை ஊட்டிய  பெருமைக்குரியவர்'' என காந்தியடிகள்  பாராட்டிய தில்லையாடி வள்ளியம்மை.

போக்குவரத்து  வசதியில்லாத அந்நாட்களில்  மாட்டு  வண்டி கட்டிக் கொண்டு ஊர் ஊராக சென்று மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிய படிக்காத அஞ்சலை அம்மாள், பெண்களின் உரிமைக்காகப் போராடிய    ஈ.வெ.இராமசாமி என்ற புரட்சியாளருக்கே பெரியார் பட்டத்தை வழங்கிய தர்மாம்பாள், தனது 18ஆவது வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகி சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஜானகி ஆதி நாகப்பன், தேவதாசி முறையை ஒழித்துக்கட்டிய இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி ரெட்டி…

இவர்களின் வரிசையில், ராமாமிர்தம் அம்மையார், அசலாம்பிகை அம்மையார், பெரியாரின் சகோதரி கண்ணம்மையார், மனைவி நாகம்மையார், கே.கே.எஸ். காளியம்மாள், எஸ்.என்.சுந்தராம்பாள், பாரதியாரின் மனைவி செல்லம்மா, பத்ம ஸ்ரீ அம்புஜம்மாள், தலித் மக்கள் மற்றும் பெண்கள் விடுதலைக்காக போராடிய அன்னை மீனாம்பாள், பிராமணக் குடும்பத்தில் பிறந்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை தூக்கியெறிந்துவிட்டு ‘பாப் கட்டிங்’ வெட்டி, கதர் சட்டை, தோளில் துண்டு என வலம் வந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய மணலூர் மணியம்மா, தான் ஆநிரைகள் மேய்த்தாலும் பெண்கள் வாழ்வில் தன்னிறைவு அடைய கல்வி தேவை என உணர்ந்து பெண் கல்விக்காக தனது சொத்துக்கள் முழுவதையும் தானமாகக் கொடுத்த மயிலை செல்லம்மாள் என எத்தனையோ பெண்மணிகள் மண் விடுதலைக்காகவும், பெண்விடுதலைக்காகவும் போராடி தியாகம் செய்துள்ளார்.

பெண்ணியம் என்பது சமூக அக்கறையின் வெளிப்பாடு. பெண்ணியக் கோட்பாட்டினைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியம். பெண்ணியம் என்பது பெண் விடுதலையை மையப்படுத்துவதா? பெண் முன்னேற்றத்தை முன்வைப்பதா அல்லது ஆண் சமூகத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துவதா எனப் பல்வேறு நிலைகளில் இன்று பெண்ணியம் பேசப்படுகிறது. ஆனால் “உண்மையில் பெண்ணியம் என்பது பெண்கள் தங்கள் உரிமையை உணர்ந்து, சமுதாயத்தில் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும், பால் சமத்துவத்திற்காக போராட உதவும் ஒரு வழிகாட்டியே ஆகும். நியாய உணர்வும் சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய லட்சியம் இது.’’

 நாம் பெற்றிருக்கின்ற வாழ்விற்கும், அந்த வாழ்வைத் தகுதியுள்ளதாக அமைத்துத் தந்ததற்கும், நாம் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்று பொவீ என்னும் அறிஞர் மொழிந்துள்ளார்.

இதனையேதான் நமது மகாகவி பாரதியாரும்,
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்

புவி பேணி வளர்த்திடும் ஈசன்.’’என்று பாடிச் சென்றார். எனவே பெண்ணின் பெருமையை உணர்வோம். இந்த மண்ணுலகம் அவளை மதித்திட செய்வோம்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :