Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017


முனைவர் பா.இறையரசன்

இசை உலக சாம்ராஜ்யத்தின் கம்பீரமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இசைஞானி இளையராஜா. சினிமா பாடல்களைத் தாண்டி, படத்தின் பின்னணி இசையில் இந்தியாவில் இது வரை இவரை முந்த ஆளில்லை. 1000 படங்களைத் தாண்டியும் இவரின் இசைப்பயணம் இப்போதும் ஜீவனுள்ளதாகத் தான் இருக்கிறது. பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையடுத்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு கச்சேரி நடத்த, அங்குள்ள நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்தது. எஸ்.பி.பி., பாடகி சித்ரா உட்பட பல பாடகர்கள் இணைந்து அந்த இசை நிகழ்சியில் பாட ஒப்புக்கொண்டிருந்தனர். அந்த இசை நிகழ்ச்சிக் கட்டணமாக, இந்திய ரூபாயில் குறைந்தபட்சம் 7500 ரூபாயும் அதிகபட்சம் 25000 ரூபாயும் நிர்ணயம் செய்திருந்தது அந்த நிறுவனம்.

இந்த நிலையில், ""அந்த இசைக்கச்சேரியில் எஸ்.பி.பி., சித்ரா, ஆகியோர் எனது பாடல்களைப் பாடக்கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இதனால் மனவேதனை அடைந்த எஸ்.பி.பி. ""இனிமேல் இளையராஜா பாடல்களை எந்தக் கச்சேரியிலும் பாடப்போவதில்லை. நல்ல வேளை மற்ற இசைஅமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியிருக்கிறேன்''’ என்று முதலில் அறிக்கை விட்டவர், ‘""இனிமேல் இதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம், இத்துடன் விட்டுவிடுவோம்''’ எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.ஆனாலும் இளையராஜா மீது விமர்சனக்கணைகளும் ஆதரவு அலைகளும் திரை உலகில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே இசைஞானி இளையராஜாவின் ஆதங்க ராகம் சரியா? என்பதை அறிய தமிழ் சினிமாவின் இப்போதைய இளம் இசைஅமைப்பாளர்கள் மூவர்  மற்றும் பாடலாசிரியர்கள் இருவரை இனிய உதயம் இதழுக்காக நேரில் சந்தித்தோம்.

யுகபாரதி

காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இளையராஜா எடுத்துவரும் நியாயமான நடவடிக்கைகளைப் பலரும் பலவாறாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் அவருடைய நடவடிக்கைகளுக்கு நோக்கம் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகால இசைப்பணியில் அவர், தனக்காகவும் தனக்குப் பின்னால் வரப்போகிற சந்ததிகளுக்காகவும் எழுப்பியிருக்கிற முதல் குரல் இதுதான். பொதுவெளியில் தான் வெவ்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டபோதும் சரி, உரிய அங்கீகாரம் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்ட போதும் சரி, அவர் எவ்வித எதிர்வினையும் இந்த அளவுக்கு ஆற்றியதில்லை என்பது கவனத்துக்குரியது.காப்புரிமை குறித்து போதிய தெளிவில்லாத அல்லது சட்ட வரைவுகள் கவனத்துக்கு வராத நிலையில் அவரும் அவரைப்போன்ற இன்னபிற இசையமைப்பாளர்களும் அமைதி காத்ததை புரிந்துகொள்ள முடிகிறது. ஐ. பி. ஆர். எஸ்.ஸின் செயல்பாடுகள் திருப்தியளிக்காத சூழலில் அவரே களத்தில் இறங்கியிருப்பது வரவேற்கப்படவேண்டியதே. தவிர, விவாதிக்கப் படவேண்டியதில்லை. ஒரு பத்திரிகைக்கு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதினோமென்றால் அப்பத்திரிகை அப்படைப்பை பயன்படுத்திக்கொள்ள சன்மானத் தொகையளிக்கிறது. சன்மானம் கொடுத்துவிட்டதால் அப்படைப்பு சம்பந்தப்பட்ட பத்திரிகைக்குச் சொந்தமாவதில்லை.

எழுதிய படைப்பாளனுக்கே சொந்தம் என்பதால்தான் அதை எழுதியவர்கள் தங்கள் தொகுப்புகளில் இணைத்து வெளியிடுகிறார்கள். திரைப்பாடலும்கூட அப்படித்தான். ஒருமுறை பயன்படுத்திக்கொள்ள வழங்கப்படும் அனுமதியும் பெறப்படும் சன்மானமும் எந்த விதத்திலும் அதை படைத்த படைப்பாளைக் கட்டுப்படுத்துவதில்லை. இளையராஜா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை இவ்வாறாகப் புரிந்துகொண்டால் சிக்கலில்லை. மாறாக, கங்கை அமரனைப் போன்றோர் காப்புரிமை குறித்த தெளிவில்லாமல் பேசிவருவது படைப்பாளனுக்கு மட்டுமல்ல சட்டத்துக்கே விரோதமானது.

வர்ஷன்

இயக்குனர் ஜனநாதனின் ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர். இசை ஆல்பங்கள், சென்னை வடபழனியில் இசைப்பள்ளி என மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். ராஜா-பாலு சர்ச்சை குறித்து வர்ஷன் கூறியது.

சாதனையின் சிகரத்தில் இருக்கும் ராஜா சார் தான் என்னைப் போன்றவர்களுக்கு ரோல்மாடல். ஆன்மாவைத் தொடும் சக்தி அவரது இசைக்கு மட்டும் தான் உண்டு. நம்முடைய பொழுது ஆரம்பமாகும் காலையிலிருந்து முடியும் நள்ளிரவு வரை அவரின் இசையை ரசித்துக் கொண்டே இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், இசைஞானி ஒரு இசைக்கடவுள். பாடகர் எஸ்.பி.பியும் ஒரு மகா கலைஞன் தான்.

ரெண்டுபேருக்குமிடையில இப்ப வந்திருக்கிறது அப்பா-மகனுக்கிடையே, அண்ணன் -தம்பிகளுக்கிடையே, நெருங்கிய நண்பர்களுக் கிடையே ஏற்படும் தற்காலிக ஊடல் மாதிரி தான். கொஞ்ச நாளில் சரியாகி விடும்.

ராஜா சார் இப்போது எழுப்பியிருக்கும் இந்த ராயல்டி பற்றி பலருக்குத் தெரியவில்லை என்பது தான் நிஜம். அந்த நிஜத்தை அவர் சொன்னதும் ஏதோ சொல்லக்கூடாததை அவர் சொல்லிட்ட மாதிரி, ஆளாளுக்கு அவர் மீது பாய்கிறார்கள். நிச்சயமா அவருக்கு பணத்தாசை கிடையாது. இது உரிமை சம்பந்தப்பட்டது. சென்னை வெள்ளத்தின் போது, சினிமா பிரபலங்கள் பலபேர் செய்த உதவி வெளியே தெரிஞ்சது. ஆனா ராஜா சார் செய்தது யாருக்காவது தெரியுமா?

இசையும் தர்மமும் அவரோட ரத்தத்திலேயே கலந்திருக்கு. அமெரிக்காவுல ஞய்ங் உண்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய் இஹய்க் அப்படிங்கிற குரூப் ஒரே ஒரு ஆல்பம் தான் போட்டார்கள். ஆனா இன்னைக்கு வரை, அந்த ஆல்பத்தின் ராயல்டி மூலமாத் தான் பொழப்பை ஓட்டிக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் யாருக்குத் தெரியுது? உண்மையான இசைக்கலைஞன் தப்பே பண்ணமாட்டான், அதனால இளையராஜா செய்தது சரியே.

பரணி

 விஜயகாந்தின் ‘"பெரியண்ணா'’ மூலம் இசை உலகில் அடி எடுத்து வைத்தவர். “""நீ  பாத்துட்டுப் போனாலும் பாக்காமப் போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்'' இந்த ஹிட் பாடல் மூலம் பிரபலமானவர். 40 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ள பரணி, "ஒண்டிக்கட்டை' படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்துள்ளார்.

இனி பரணி பேசுகிறார்...

ஒரு பாட்டுக்கான டியூன் என்பது இசை அமைப்பாளர் உருவாக்கிய கரு. அந்தக் கருவுக்கு அவர் மட்டுமே சொந்தம், அவருக்கு மட்டுமே சொந்தம். அதே நேரம், அந்த டியூனைப் பாட ஒரு பின்னணிப் பாடகர் தேவைப்படுகிறார் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். சினிமா என்பது டீம் ஒர்க். எந்த ஒரு படைப்பும் தனிநபருக்குச் சொந்தமானதல்ல.

என்னைப் பொறுத்தவரை இளையராஜா இப்படி செய்திருக்கக்கூடாது. இதனால் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் எந்தளவுக்கு புண்பட்டிருப்பார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் பணம் மட்டுமே காரணம் இல்லை. அதையும் தாண்டி உரிமை சம்பந்தப்பட்டதும் இதில் அடங்கியிருக்கு. ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள், அதனால ஃப்ரண்ட்லியா பேசித்தீர்த்திருக்கலாம்.

இளையராஜா சொந்தமாக எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி வச்சிருந்த வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்துச்சு.

ரெண்டாவது ஐ.பி.ஆர்.எஸ். சட்டதிட்டங்களிலும் ஒரு தெளிவு கிடையாது. தியாகராஜர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்,விஸ்வநாதன் போன்ற ஜாம்பவான்களெல்லாம், இந்த ராயல்டியைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ராஜா அதை இப்போது தீவிரப்படுத்தியிருக்கிறார். இரண்டு சிகரங்கள் மோதிக்கொள்வது வருத்தமாகத் தான் இருக்கிறது. இசை என்பது கடவுள் கொடுத்தது, அதை யார் வேண்டுமானாலும் பாடலாம்.

 இப்பல்லாம் சினிமாவுல முக்கால்வாசி கம்யூட்டர்ல ஃபில்டர் பண்ணி டியூன் போட்டு பாடல்களை ரெடி பண்ணுறோம். அப்படிப்பட்ட பாடல்கள் ஏதாவது மனசுல நிக்குதா? தனித்துவமான குரலுக்குச் சொந்தமான பாடகர்கள் யாராவது இப்போது இருக்கிறார்களா? எதுவுமே இல்லை. ஆனா இசைஞானி ஒருத்தர் தான் இன்று வரை ஆர்மோனியத்தில் டியூனை உருவாக்குகிறார்.

அதனால் தான் அவரது பாடல்கள் எப்போதும் எங்கேயும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்கு அவரைப் போன்ற தங்ஹப் நர்ன்ப் தான் தேவை. அதே போல்  எஸ்.பி.பி.மாதிரியான சிங்கரை எந்த மொழியிலும் பார்க்க முடியாது.

எஸ்.எம்.அருணகிரி

டைரக்டர் விஜய்மில்டனுடன் ‘"கோலிசோடா'வில் பணிபுரிய ஆரம்பித்து, ‘"சண்டிவீரன்'’ இப்போது ரிலீசாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள, விஜய் மில்டனின் ‘"கடுகு'க்கு இசை அமைத்து வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் எஸ்.எம்.அருணகிரி.

 இளையராஜாவின் உரிமைக்குரலுக்கு ஆதரவுக் குரல் எழுப்புகிறார் அருணகிரி…

அப்பவெல்லாம் ஒரு படத்தோட ஆடியோவை வச்சுத்தான் பிஸ்னெஸே நடக்கும். இப்ப நிலைமை அப்படியா இருக்கு? எங்களுக்கெல்லாம் இசைக்கடவுள் ராஜா சார் தான். அவரு சொன்ன பிறகு தான் இந்த ராயல்டி விஷயமே எங்கள மாதிரி ஆளுகளுக்குத் தெரியுது. எங்களுக்கும் சேர்த்து தான் அவரு போராடுறாரு.

இதுல என்ன கொடுமைன்னா, அவரின் உரிமையை அவரே கேட்டு வாங்குற அளவுக்கு நாம இருப்பது தான் வெட்கக்கேடானது. ஒரு இசைக்கலைஞனுக்கும் சரி, பாடலாசிரியனுக்கும் சரி, இந்தக் காப்புரிமை தான் அவர்களின் சந்ததியினருக்கும் சோறு போடும்.

பல ஆயிரம் பாடல்களைப் பாடி மறைந்த டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் வாரிசுக்கு இப்ப ஏதாவது கிடைக்குதா? இசைக்கச்சேரி நடத்துவோர் யூனியனிடம் ஏற்கனவே ராஜா சார், இந்த ராயல்டி விஷயமாச் சொல்லியிருக்காரு. அவர்களும் அதுக்குத்தகுந்த மாதிரி நடந்துக்கிட்டு வர்றாங்க. இன்னும் சொல்லப் போனால், எங்களுடைய யூனியனான இசைக்கலைஞர்கள் சங்கம் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்து செயல்படணும்.

 இந்த ஏர்டெல் கம்பெனிக்காரன், ஒருபாட்டை காலர் டியூனை வச்சுக்கிறதுக்கு மாசத்துக்கு  30 ரூபாய் கறக்குறான். அந்தப் பாட்டெல்லாம் இவன் போட்ட டியூனா? யாரோ விதைச்சத, ஏர்டெல்காரன் அறுவடை பண்றான். மைக்கேல்ஜாக்சன் பெரிய பாப் சிங்கர் தான். ஆனா மொத்தமே 30 பாட்டுக்குள்ள தான் பாடியிருப்பாரு. ஆனா இன்னைக்கி அவரோட தங்கச்சிக்கு ராயல்டி போய்க்கிட்டிருக்கு.

பாடலாசிரியர் டாக்டர் சொற்கோ

  இசைஞானியின் இசையில் ‘"அழகி'’படத்தில் “"ஒரு சுந்தரி வந்தாளாம்' என்ற ஹிட் பாடல் எழுதி அறிமுகமானவர்.  சமீபத்தில் ரிலீசான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் அம்ரேஷ் இசையில் ""ஹரஹர மகாதேவகி'' என்னும் இவரது  பாடல் யு டியூப்பில் 1 கோடியே 65 லட்சம் பேரால் ரசிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது "பொட்டு', "கர்ஜனை', "திருப்பதி சாமி' குடும்பம் உட்பட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாடல் எழுதி வருகிறார்.

  ராஜா-எஸ்.பி.பி. சர்ச்சை குறித்துக் கேட்டதும் கவிதையாகவே பதில் தந்தார் சொற்கோ.

     பாட்டாலே பலபேரை வாழவைத்தார்!
      பாட்டாலே பலபேர்க்குப் புகழ் கொடுத்தார்!
    கேட்டாலே எலாம் கொடுக்கும் இளையராசா!
     கேளாமல் வாங்குவது ரொம்ப லேசா!
   சின்னத்தாய் ஞானத்தில் பிறந்த ஞானி
    சிறுகடுகை மேருமலை ஆக்கும் மேனி
   எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி ஏற்றும் ஏணி
     ஏமாற்ற நினைப்பார்க்குத் துன்பக்கேணி

படங்கள்: எஸ்.பி.சுந்தர்
அட்டைப்படம் உதவி: ஞானம்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : appan Date & Time : 4/26/2017 11:43:21 AM
-----------------------------------------------------------------------------------------------------
ஏன் இந்த டைட்டில் மாற்றம் ஏதும் சம்பந்தம் உண்டா
-----------------------------------------------------------------------------------------------------
Name : kumar Date & Time : 4/11/2017 11:02:14 AM
-----------------------------------------------------------------------------------------------------
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்! இந்த செய்தி இல்லையா இது ....இளையராஜா பஞ்சாயத்துனு சப்போட்டா வேண்டியது தான ?
-----------------------------------------------------------------------------------------------------