Add1
logo
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை || வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்) || என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம் || குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது || எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவோம்: நாராயணசாமி || போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு || பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது || சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு || போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்) || நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || உ.பி.யில் கார் மீது ரெயில் மோதல் 5 பேர் பலி || நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ||
Logo
இனிய உதயம்
01-04-2017இளைய சாகுல்

லகில் உள்ள படைப்புகளிலேயே மனிதப் படைப்புதான் சிறந்த படைப்பு... நுட்பமான படைப்பும்கூட. அவர்களுக்கு அமைந்த "மூளை' என்ற வலைப் பின்னலை மிஞ்ச எந்த கருவியாலும் முடியாது என்பது திண்ணம்.

பண்பாளரும், உயர்வாளருமான ராமச்சந்திரன் போன்ற நல்ல மனிதர்களும் இவ்வுலகில் இருக்கப்போய்தான் மழை கொஞ்சமேனும் வருகிறது என சொல்லிக்கொள்வதில் எனக்கு எந்த வித கௌரவக் குறைச்சலும் வரப்போவதில்லை.

அடிப்படையில் நானொரு எழுத்தாளன். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

புத்தகம் வெளியிடும் கவிஞர்கள் விசயத்தில் காமெடியாய் ஒன்றைச் சொல்வார்கள்.

""என்னப்பா... கவிதை புத்தகமெல்லாம் வெளியிட்டியே எவ்வளவு வித்தே?'' என வழிப்போக்கர் ஒருவர் கேட்க... அதற்கு அந்த கவிஞன் சொன்னானாம்.. ""ஒரு "மா'நிலத்தை வித்தேன்'' என்று.

ஆனால் என் விசயத்தில் அப்படியெல்லாம் நடக்கலீங்கண்ணா... அதற்கு மாறாய் ஒரு "மா' நிலத்தை வாங்கினேன் என்பதே உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை...""ஆதலால் திரும்பிப்பார்'' என்ற என்னுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு வெளியீடு 2013-ஆம் வருடம் துபை, கராமா சிவஸ்டார் பவன்' மாடி அரங்கத்தில் அமீரக "நாம் தமிழர்' நண்பர்கள் மன்றம் சார்பாக சிறப்பாக நடந்தேறியது...

பொதுவாக ஒன்றைச் சொல்வார்கள் இலக்கிய சம்பந்த விழாக்களில் காற்றுத்தான் இருக்கையில் அதிகம் அமர்ந்திருக்கும் என்று...

அப்படியெல்லாம் நம்ம விசயத்தில் நடக்கவில்லை. காற்று நுழையவே இடமில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... கிட்டத்தட்ட 20,000 ரூபாய்க்குமேல் புத்தகம் விற்றது.

அந்த வெளியீட்டு விழாவில் "மிஸஸ் ராமச்சந்திரன்' என்ற ஒரு பெண்மணியும் வந்து கலந்துகொண்டார்.

அந்நிகழ்வுக்குப்பின் ஒருவாரம் கழித்து என் கைபேசி அழைத்தது. எடுத்து ஹலோ என்றவுடன் ""நான் மிஸஸ் ராமச்சந்திரன் பேசுகிறேன்'' என்று ஆரம்பித்தது... கிட்டத்தட்ட அரை மணிநேரம் என்னைப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.. குறிப்பாக நான் வெளியிட்ட அந்த கவிதைத் தொகுப்பில் "பூ' என்ற தலைப்பிலும் "மயக்கும் மருதாணிச் செடியே' என்ற தலைப்பிலும் கவிதைகள் எழுதியிருந்தேன்... அந்த கவிதை இரண்டும் அந்தச் சகோதரிக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது போலும்... அதைப்பற்றி மட்டும் பதினைந்து நிமிடங்கள் என்னிடம் பேசினார்.

அன்றிலிருந்து எனக்கு திருவாளர் ராமச்சந்திரன் அவர்களும் அவர்தம் மனைவி கோமதி ராம் அவர்களும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் போன் செய்து இருவரும் என்னை விருந்துக்கு அழைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்...  விருந்தோம்பல் முடிந்த நிலையில் என் ஊர் பற்றியும், என் குடும்பம் பற்றியும் என் வாழ்க்கை முறைபற்றியும் விசாரித்தார்கள்.வறுமையும், புலமையும்தான் ஒன்றுக்கொன்று நெருக்கமாச்சே? என்னுடைய விவரிப்பைக் கொண்டே நான் இன்று வரை வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறேன் என்பதை குறிப்பாய் உணர்ந்து கொண்டவர்கள் ""எங்களால் முடிந்த உங்களுக்கான அன்பளிப்பு'' என்றவாறு ஒரு கடித உரையை என்னிடம் நீட்டினார்கள்...

அதை வாங்கிய நான் ஒருவித குழப்பத்தோடேயே பிரித்துப் பார்க்க எனக்கோ இன்ப அதிர்ச்சி... அதன் உள்ளே 6,300 திர்ஹங்கள் இருந்தது. அதாவது இந்தியப் பணத்தில் 1 லட்சம் ரூபாய்.

அதற்குப் பிறகுதான் ராமச்சந்திரன் என்ற அந்த உயர்வாளர் இயற்கையிலேயே இரக்ககுணம் உள்ளவர் எனவும், அநாதைகளுக்கும், சேவை அமைப்புக்கும் நிறைய செய்துகொண்டிருப்பவர் என்றும் மனிதத்தை நேசிக்கும் மனிதாபிமானி என்றும், திறமையுள்ளவர்களை உடனே தட்டிக்கொடுத்து புளகாங்கிதம் அடைபவர் என்றும் எனக்குத் தெரியவந்தது.

இவருக்கு அப்படியே நேர்மாறாய் எத்தனையோ மனிதர்களை என் வாழ்நாளில் கண்டிருக்கிறேன்..
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற கவிதைப் புத்தகங்கள் வெளியாகின்றன. அதில் எத்தனை புத்தகம் தேறுகிறது என்று பார்த்தால் மிக சொற்பமே... அந்த சொற்பக் கணக்கில் என்னுடைய கவிதை புத்தகமான "ஆதலால் திரும்பிபார்' வந்திருப்பதை நினைத்து என்னால் மகிழாமல் இருக்க முடியவில்லை.

1994-ல் இலங்கை எழுத்தாளர் "மானா மக்கீன்' எழுதிய "லைட் ரீடிங்' என்ற தலைப்பிட்ட புத்தகத்தை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதன் "பின்னட்டை பிரகாசம்' என்ற பகுதியில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்...

அதாவது, ""முதல் வெளியீட்டில் இப்புத்தகத்தை "கல்ஹின்ன' ஊரின் இளையதலைமுறை அல்ஹாஜ் முஸ்லீம் முகைதீன் ஜே.பி. பத்தாயிரம் கொடுத்துப்பெற்றார்.

""இரண்டாவது வெளியீட்டை திருச்சி மாநகர் ஃபெமீனா ஓட்டல் நிர்வாகியும், இலங்கையின் மதிப்
புமிக்க தொழிலதிபரான அல்ஹாஜ் எம்.எம். இபுறாகீம் அவர்கள் தன் பங்குக்கு பத்தாயிரம் கொடுத்து மகிழ்வோடு பெற்றார்''...

இறுதியில்... ""இந்த இருவரான இரண்டு முன்மாதிரிகளையும் முறியடித்து பணமுடிப்பை பெரிதாக்கி மற்றொரு எழுத்தாளருக்கு யாராவது வழங்கவேண்டும். வரட்டும் அந்த காலம்.'' என முடித்திருந்தார்.

அதை நான் 2013-ல் முறியடித்திருக்கிறேன் என்றாலும்...

ஒரு தனி மனிதரிடம், தனிப்பட்ட முறையில் நான் பெற்ற இந்தத் தொகையைவிட அதிகமாய் யாராவது பெற்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இறுதியாக ஒன்று... என் மனம் பெற்ற சந்தோச பாதிப்பினால் அந்த உயர்வாளரை கருப்பொருளாக வைத்து ஓர் கட்டுரை எழுதலாம் என முடிவெடுத்து அவரிடம் அனுமதி கேட்டபோது...

""எனக்கு புகழ்வரவேண்டும் என்ற நோக்கில் நான் உங்களுக்கு அன்பளிப்பு செய்யவில்லை... அது
எனக்குத் தேவையுமில்லை. உங்களுடைய கவிதைத் தொகுப்பும் உங்களுடைய உண்மைத் தன்மையும் எங்களுக்கு பிடித்திருக்கிறது... தயவுசெய்து என்னைப்பற்றி எதுவும் எழுதிவிட வேண்டாம்'' என்று கேட்டுக்கொண்டார்.

ஆக அவர் பெருந்தன்மையை அவர் காட்டிவிட்டார். இதோ என் பெருந்தன்மையை நான் காட்டிவிட்டேன்எப்போதும் மேலிடம்,

மேலிடமே!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :