Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
இனிய உதயம்
வீழ்ந்த திராவிடம் விழித்தெழ...
 ................................................................
இன்குலாப் பயணித்த இலக்கியத் திசைவழி!
 ................................................................
அத்தாவின் பசுங்குடில் -இளைய இன்குலாப்
 ................................................................
காதலுக்குரிய கவிஞரின் மகள்...
 ................................................................
உலகை இயக்கும் பெண்கள்
 ................................................................
இமயமலையில் தலைகீழாய் ஏறிய தமிழ்ப்பெண்!
 ................................................................
மாமனிதர்களுக்காகத்தான் மழை பெய்கிறது
 ................................................................
சிற்றிதழ்களின் உலகம் - மு. முகமது பாட்சா
 ................................................................
அறத்துக்கு எதிராக அத்துமீறல்!
 ................................................................
01-04-2017பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
என்பது வள்ளுவரின் வாக்கு.

"பண்பற்ற தீயவர்கள், நம்மை அன்பு வெள்ளத்தில் மூழ்கடிப்பதுபோல் நடிப்பார்கள். அதை நம்பாமல் அவர்களின் நட்பை விட்டொழிக்க வேண்டும்' என்பதுதான் இதன் மூலம் வள்ளுவர் தரும் எச்சரிக்கை. இந்தக் குறளை ஜெயலலிதா உணர்ந்திருந்தால், அவர் இப்போதும் இருந்திருப்பார்.

ஜெ. இருந்தவரை வாயைப் பொத்திக்கொண்டு எங்கோ பதுங்கியிருந்த ஒரு கும்பல், இப்போது தைரியமாக வெளியே வந்து ஆட்டம் போடுகிறது. அதோடு, பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் இப்போது கொடுக்கு முளைத்துக்கொண்டிருக்கிறது.   

கடந்த மாட்டுப்பொங்கல் அன்று  தஞ்சை விழா ஒன்றில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், "அ.தி.மு.க. தொடங்கப்பட்டது முதல், அதற்காக  நாங்கள்  பாடுபட்டு வருகிறோம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெ.வைத் தீவிர அரசியலுக்குக் கொண்டுவந்தவர்கள் நாங்கள்தான்' என்று  கூசாமல் மார்தட்டினார். அவர் மைத்துனர் நடராஜனோ இன்னும் ஒருபடி மேலேபோய், "கடந்த முப்பது ஆண்டுகளாக ஜெ.வுக்குத் துணையாக இருந்தவர் என் மனைவி. ஜெ.வுக்குப் பாதுகாப்பாக இருந்ததும் நாங்கள்தான். ஜெ.வை முதல்வராக்கிவிட்டு இவ்வளவுநாள் ஒதுங்கி இருந்தோம். இப்போது நாங்கள் கட்சியை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் நிச்சயம் குடும்ப அரசியல் செய்வோம்' என்று பகிரங்கமாகவே பிரகடனம் செய்தார். அந்த குடும்ப அரசியல்தான், இப்போது அ.தி.மு.க.வையும் அ.தி.மு.க. ஆட்சியையும் உருட்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. 

ஜெ.வின் மறைவுக்குப் பின், அவரது முதல்வர் பதவியைக் குறிவைத்தார் சசிகலா. இதற்காக ஓ.பி.எஸ்.சின் பதவியைப் பறித்தார். நல்லவேளையாக, சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்புவந்து, அவரை சிறைக்கு அனுப்பி தமிழகத்தை மயிரிழையில் காப்பாற்றியது. இதனால்தான் இங்கே திடீர் முதல்வரானார் எடப்பாடி.சிறைக்குப் போனாலும், ஆட்சி, அதிகாரம் தன் குடும்பத்திடமே இருக்கவேண்டும் என்று டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க.வின் துணைப்பொதுச் செயலாளராக்கினார் சசிகலா. இப்போது, தினகரன் மூலம் மீண்டுமொரு ஆபத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது தமிழகம்.கட்சிப் பதவியை ஏற்றுக்கொண்ட தினகரனிடம், "நீங்கள் முதல்வராகப் போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டார்கள். அப்போது, "இல்லை' என்று மழுப்பியவர், அந்தப் பதவியை நோக்கியே வேகமாக நகரத்தொடங்கிவிட்டார். விளம்பர வெளிச்சம் தன்மீது  விழவேண்டும் என்று கணக்குப் போட்ட தினகரன், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால்விட்டும், அவருக்குக் கண்டனம் தெரிவித்தும் தன்னை மீடியாக்கள் மத்தியில்  பிரதானப்படுத்திக்கொண்டார். ஸ்டாலினின் அரசியல் வரலாறு எங்கே? இவர் எங்கே. கட்சியில் முதல்வர் உள்ளிட்ட எத்தனையோ சீனியர்கள் இருக்க,  அமைச்சர்கள் இருக்க, அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்து கட்சியின் பவர்புள்ளி நான் மட்டும்தான் என்று காட்டும் முயற்சிதான் இது. அதேபோல் ஆர்.கே.நகரில், தன்னையே வேட்பாளராக்கிக்கொண்டார். "எதற்கு  இடைத்தேர்தலில் நிற்கிறீர்கள்?' முதல்வர் பதவியைக் குறிவைத்துதான் நிற்கிறீர்களா?என்று அவரிடம் கேட்கப்பட்டபோதும், "கட்சியின் வற்புறுத்தலால் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை' என்றவர்... அடுத்த நொடியே "ஜெயலலிதா மக்களுக்கு செய்ய நினைத்ததை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்' என்றார். இதிலேயே முதல்வராகும் ஆசை அவருக்குள் இருக்கிறது என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் வெளிப்பட்டது.

சின்னச்சின்ன கட்சிகளின் வேட்பாளர்களிடமும்  சுயேச்சைகளிடமும் ஏகக்கெடுபிடி காட்டிய அதிகாரிகள், தினகரன் வேட்புமனு தாக்கல் செய்யவந்தபோது, எந்தக் கெடுபிடியும் காட்டாததோடு ஒரு முதல்வருக்குக் கொடுக்கவேண்டிய அளவிற்கு அவருக்கு பந்தோபஸ்தையும் கொடுத்தார்கள். ஆட்சி, அதிகாரம் தன் கையில் இருக்கிறது என்ற தெம்பில் அன்றே "50 ஆயிரம்  வாக்குகள் வித்தியாசத்தில் நான் ஜெயிப்பேன்' என்று மார்தட்டினார் தினகரன் . இலைச்சின்னம் கிடைக்கவில்லை என்றபோதும் "எந்தச் சின்னத்தில் நின்றாலும் நான் ஜெயிப்பேன்' என்று கொக்கரித்தார். எப்படியும் ஜெயித்துவிடலாம். வாக்காளர்களை விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்ற தைரியம் அவருக்கு.

தினகரன் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று என்ன செய்யப்போகிறார்? தற்போது  அ.தி.மு.க.வின் பலம் சட்டசபையில் 122 ஆக இருக்கிறது.  தினகரன் வெற்றிபெற்று,  எம்.எல்.ஏ.க்களின் வரிசையில் உட்காரப்போகிறாரா?  அரசாங்கமே அவருக்குக் கட்டுப்பட்டுச் செயல்படும்போது வெறும் எம்.எல்.ஏ.வாக அவர்  எப்படி சட்டசபையில் உட்காருவார்? 

அப்படியென்றால் 30 அமைச்சர்களைக் கொண்ட எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில், அவர் 31-வது அமைச்சராக அமருவாரா? எப்படி அமருவார்? முதல்வரே தினகரனுக்குக்கீழ், கைகட்டி வாய்பொத்திச் செயல்படும்போது, அவர் எப்படி எடப்பாடியின்கீழ் அமைச்சராக உட்காருவார்? வேறு என்னதான் செய்வார்? எடப்பாடியை எழச்செய்துவிட்டு, அவர் நாற்காலியில்தான் டாம்பீகமாக உட்காருவார். 

முன்பு எப்படி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி  சசிகலாவிடமிருந்து ஓ.பி.எஸ்.சுக்கு நிர்பந்தம் ஏற்பட்டதோ, அதேபோன்ற நிர்பந்தம் தினகரன் வென்றால், அவரால் எடப்பாடிக்கும் ஏற்படப் போகிறது.

ஒருவேளை அவர் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தாலும், அ.தி.மு.க.வினராலோ, தமிழக வாக்காளர்களாலோ எதுவும் செய்யமுடியாது. எப்படி ஓ.பி.எஸ். நாற்காலியில் எடப்பாடி உட்கார்ந்தபோது தமிழகம் வெறுமனே வேடிக்கை பார்த்ததோ, அதுபோன்ற கையறுநிலையில்தான் எல்லாவற்றையும் தமிழகம் வேடிக்கை பார்த்தாகவேண்டியிருக்கும்.

எந்தவித தியாகமும் செய்யாமல், கட்சிக்காக உழைக்காமல், கட்சிக்காக உழைத்த சீனியர்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, ஜெயலலிதாவால் துரத்தியடிக்கப்பட்ட ஒருவர், ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்திற்குள்  உட்கார்ந்துகொண்டு ராஜதர்பார் நடத்துகிறார். அவர் சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம் ஏகபோகமாக அனுபவிக்கிறார். ஜெ. 32 ஆண்டுகளாகக் கட்டிக்காத்த கட்சியை விருப்பம்போல் ஆட்டிவைக்கிறார். அடுத்து முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றவும் துடிக்கிறார் என்றால்... இது எவ்வளவு பெரிய அறத்துக்கு எதிரான அத்துமீறல்.

கொல்லைப்புற வாசல் வழியாக அதிகாரக் கட்டமைப்பிற்குள் நுழையப் பார்க்கும் அவர், ஒருவேளை தமிழக முதல்வராகவே ஆகிவிட்டால், அவரைச் சார்ந்த மன்னார்குடி கும்பலில் இருக்கும் ஏறத்தாழ 200 பேர், வெளிப்படையாகவே பவர் புள்ளிகளாக மாறிவிடுவார்கள். தமிழகத்தை பகிரங்கமாகச் சூறையாடுவார்கள். அப்படியொரு நிலை வந்தால், அதைவிட மானக்கேடு தமிழர்களுக்கு என்ன இருக்கப்போகிறது?

-ஆதங்கத்தோடு,
நக்கீரன் கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :