Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || வடபழனி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் || ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ.வாக வருவேன்: தங்கதமிழ்ச்செல்வன் || பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! || ரவுடிகளை விரட்டிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை || ஆரணி அருகே போலி மருத்துவர் கைது || நெல்லையில் கடத்தப்பட்ட சிறுமி 2 மணிநேரத்தில் மீட்பு || 450 கோடி ஊழலில் சித்தராமையா ஈடுபட்டுள்ளார்: எடியூரப்பா குற்றச்சாட்டு || கிராம மக்கள் எதிர்ப்பு: ஆய்வு செய்யாமல் திரும்பிய ஆளுநர் || போபர்ஸ் ஊழல்: மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்கும் சி.பி.ஐ. || இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் 4 பேரை கைதுசெய்தனர் || தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் இருந்து ஆட்களைச் சேர்த்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது || இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17கான் ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரரின் அற்புதங்கள் அளவிற்கடங்காதவை.

அவர் தனது ஆத்மார்த்த பக்தர்களை எங்கிருந்தாலும் சட்டென்று ஒரு சந்தர்ப்பத்தினில் ஒருங்கிணைத்து அற்புதம் நிகழ்த்துவதே தனிச்சிறப்பு.

பிறர் மூலமாகவும் சூசகமாகவும் சூட்சுமமாகவும் முக்கிய செய்திகளை கால நேரம் நிர்ணயித்து (எப்போதோ நடந்த நிகழ்வானாலும்) தேவையான நேரத்தில் வெளிப்படுத்துவார். இதை ஸ்வாமிகளின் தீவிர பக்தர்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டிருக்கின்றனர். அடியேனுக்கும் சிறிது நாட்களுக்கு முன்பு நடந்த அத்தகையதொரு அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கடந்த 22-2-2017அன்று எனது குடும்பத்துடனும் சில நண்பர்களுடனும் மந்த்ராலயத்திற்கு பயணப்பட்டேன். வருடம் மூன்று அல்லது நான்கு முறை ஔஷத சேவை (மருந்து காணிக்கை) செய்யும் வழக்கப்படி, சொற்பமாய் 36 பெட்டி மருந்துகளை நாங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியிலேயே ஏற்றிச் சென்றுகொண்டிருந்தோம். எங்களுக்கு அருகில் 80 வயது முதியவரும் இருந்தார். சாப்பிடுகையில் எவ்வளவோ வற்புறுத்தியும் எந்த உணவும் ஏற்க மறுத்தார்.  சிவராத்திரி உபவாசம் இருக்கும் அந்த ஒற்றை நாடி முதியவரின் வைராக்கிய பக்தி வியப்பாயிருந்தது. வெகுநேர வற்புறுத்தலுக்குப்பிறகு ஒரே ஒரு வாழைப்பழம் பெற்றுக்கொண்டார். எங்களிட மிருந்த மருந்துப் பெட்டிகளைப் பற்றி அவர் விசாரித்தபோது, "மந்த்ராலய மடத்தின் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்' என்றோம். அதைக் கேட்டதும் அவருள் ஒரு சிலிர்ப்பு. சுந்தரம் என்னும் அந்தப் பெரியவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தைக் கூறத் தொடங்கினார்.""சுமார் 45 வருடங்களுக்கு முன்பாக தஞ்சை நடுநாடு பாப்பா நாடு என்ற சிற்றூரில் ஒரு வங்கியில் நான் பணிபுரிந்தேன். அவ்வூரில் எனக்கு சிநேகிதமானவர் ஏழை ஆசிரியரான அருணாசல ஐயர். சிறந்த அதிதீவிர ராகவேந்திர பக்தர்.

அமாவாசைகளில் அவர் தன் வீட்டைவிட்டு வெளியில் வந்து அண்ணாந்து வானம் பார்த்தபடி இருப்பார். பின்னர் வானம் பார்த்து வணங்கி வெட்டவெளி பார்த்துப் பேசுவார். "ஆகட்டும் ஸ்வாமி. அப்படியா? ஆஹா! பாக்கியம். நல்லது ஸ்வாமி. அப்படியே செய்கிறேன். சொல்லிவிடுவேன். இல்லை. நேரில் சொல்கிறேன் ஸ்வாமி... பெரிய பேறு' என்று ஓரிரு வார்த்தைகளில் அவரின் உரையாடல் இருக்கும். தூக்கி வணங்கும் கரங்கள். கண்களில் ஈரமும் பக்தியும். தேஜோமயமான முகப்பொலிவு. மெல்ல மெல்ல இயல்பு திரும்பும். வெட்டவெளியில் யாருடன் பேசிக்கொண்டிருந்தார் என்பது பல நாட்களுக்குப் பிறகே தெரிந்தது பலருக்கு. வானமார்க்கமாக ஸ்ரீராகவேந்திரர் செல்கையில், அந்த அமாவாசைகளில் மட்டுமே அருணாசலத்திடம் பேசுவார். சிலர் அவரை பைத்தியம் என்றனர். ஆனால் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஐயர் கொடுத்த தீர்வுகள் அற்புதமானவை.

ஒருமுறை வங்கியில் பணப்பரிவத்தனையில், எனது பொறுப்பிலிருந்த ஒரு பெருந்தொகையினை ஒருவர் போலி கையெழுத்திட்டு எடுத்துக்கொண்டு தலைமறைவானார். அதனால் என் வேலைக்கும், பணத்தை இழந்தவரால் என் உயிருக்குமே ஆபத்து வரும் சூழல் உண்டானது. பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நான் அருணாசலத்தை அணுகி, "ஏனப்பா என்னுடைய பிரச்சினை யினை ராகவேந்திரரிடம் கூறி தீர்வு கொடுக்கக் கூடாதா?' என்றேன். "இன்றிலிருந்து அமாவாசை எட்டாம் நாள். அது கழித்து வா' என்றார். நானும் சொன்னபடிக்குக்குச் சென்றேன்.

"வா சுந்தரம். உனது பிரச்சினை இரண்டு நாளுக்கு முன்பே முடிந்துவிட்டிருக்குமே' என்றார். எனக்கு வாரிப்போட்டது. உண்மைதான். போலி கையெழுத்திட்டவன் மகன் என்பதினால், தகப்பன் என்னிடம் நேரில் வந்து சமாதானம் பேசிப் போனதை நான் யாரிடமும் கூறவில்லை. "ஸ்வாமியிடம் நான் கேட்டபொழுது இதைத்தான் கூறினார்' என்ற அருணாசல ஐயர்மீது இன்னும் மரியாதை அதிகமானது. அன்றிலிருந்து மந்த்ராலயம் சென்று வரலானேன். பலபொழுது பல நல்லவையும் பல தீர்வினையும் ராகவேந்திரர் எனக்கருளினார்.

ஒருமுறை ஐயரிடம் "இந்த அற்புதசத்தி உமக்கு எப்படி வாய்த்தது' என கேட்கையில், மௌன சிரிப்பு மட்டுமே பதிலாய் அமைந்தது.

அவரிடம் மேலும் பணிந்து வேண்ட, அவர் உலகம் முழுக்க பரவி இருக்கும் ராகவேந்திரர் பக்தர்களுக்கான மாபெரும் அற்புத விஷயத்தைக் கூறினார். ஆம்; ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர் "600 வருடங்கள் கழித்து இன்னொரு பிறவி எடுப்பேன். அப்போது அருணாசலம், நீ என்னோடிருப்பாய்' என திருவாய் மலர்ந்தருளினார் என்று சொன்னார்.'' பெரியவர் சுந்தரம் ரயில் பயணத்தில் என்னிடம் கூறிய விவரத்தை மேலே தெரிவித்துள்ளேன். அவரிடம் உரிய அனுமதி பெற்று அவரின் அடையாள அட்டையை கைப்பேசியில் படமெடுத்து அதையும் இங்கே இணைத்துள்ளேன்.

ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர், 600 வருடத்தில் இன்னொரு பிறவி எடுப்பார் என்ற தகவலை எனக்காகவே காத்திருந்து பெரியவர் மூலம் சொல்லியதாகவே எனக்குப் படுகின்றது. எப்பேர்ப்பட்ட கருணை இது. மாபெரும் வாத்சல்யம் இது.

நம்பினார் கெடுவதில்லை என்பது நிதர்சனம்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :