Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17


கத்தியர் முதலான சைவத்தமிழ்ச் சித்தர்கள் பதினெட்டு பேரும் தாங்கள் அனுபவத்தில் அறிந்து, மனித உடலின் ஒவ்வொரு பாகமும் தன் இடைவிடாத செயலால் தளர்ச்சியடையாமல், சரீர சக்தி குறையாமல், தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, நோயில்லாமல், இளமை மாறாமல் இருக்கவும்; உடலிலுள்ள கழிவுப்பொருட்கள் அன்றாடம் வெளியேறவும் நமக்குக் கூறப்பட்டதுதான் யோகாசன முறை.

யோகாசனம் என்று நாம் கூறுவது உடற்பயிற்சிதான். மனிதன் உட்காருவது, நிற்பது, உழைப்பது, விளையாடுவது என எல்லாமே யோகாசனம்தான். அன்றாடம் விவசாயிகள் வயலில் செய்யும் அனைத்து வேலைகளும் யோகாசனம் தான்.

வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மாவு ஆட்டுதல், அம்மி அரைத்தல், கிணற்றில் நீர் இறைத்தல், கோலம் போடுதல், துணி துவைத்தல் போன்ற இன்னும் பல வேலைகளைச் செய்வது யோகாசன முறைதான்.

பொதுவாக யோகாசனம் என்பது உடம்பிலுள்ள எலும்பு, நரம்பு, ரத்தம், தசை என அனைத்து பாகங்களையும் வளைப்பது, சுருக்குவது, விரியச் செய்வதுதான்.

சித்தர்கள் மனித சரீரத்திலுள்ள நோய்கள் நீங்க மூலிகை மருத்துவத்தையும், சத்தான சரியான உணவுகளையும், யோகாசன உடற்பயிற்சி முறைகளையும் தெளிவாக நமக்குக் கூறியுள்ளார்கள். இதனை அறிந்து, சத்தான உணவினை உட்கொண்டு, சரீரத்திற்குப் பயிற்சி கொடுத்து, தொழிலைச் செய்துவந்தால் போதும். நீண்டநாள் வாழலாம். இதற்கு அடுத்த நிலைதான் வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கும் வாசி யோகம்!

சைவத்தமிழ்ச் சித்தர்கள் இந்த பூமியில் காற்றின் முக்கியத்துவத்தையும் சக்தியையும் அறிந்து, சுவாசக் காற்றினை வாசியோக முறையில் கட்டுப்படுத்தி அஷ்டமா சித்திகளைப் பெற்றனர். அன்றாடம் நாம் செய்யும் செயல்களில் வெற்றி அடையவும், அளவற்ற ஆற்றலைப் பெறவும், மரணத்தை வென்று வாழவும் வழிகாட்டியுள்ளனர்.அவர்கள் காற்றினைக் கட்டி ஆற்றலைப் பெற்ற வழிமுறைகளை பாடல் மூலம் நமக்குக் கூறியுள்ளனர்.

"தானென்ற சித்தர் முதல் முனிவர் ரிடிகள்
    தன் மயமே தானாகத் தவமே செய்து
ஊனென்ற உடல் வெறுத்துப் பசியடக்கி
    உதித்த கலை வாசியென்ற தாரகத்தால்
வானென்ற ஆகாச வெளியிற் சென்று
    மகத்தான சோதியுடன் சோதியானார்.'
ஒரு மனிதனுக்குள்ளே மறைந்திருக்கும்

அளப்பரிய சக்தியினை வெளிக்கொண்டுவரும் வழிமுறைதான் வாசியோக முறை என்ற உண்மையை இந்தப் பாடல்மூலம் நம்மால் அறியமுடிகின்றது. "தவம்' என்ற சொல் கண்ணை மூடி, கையை நீட்டி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதல்ல. தவம் என்ற சொல் நாம் ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற லட்சியத்தையும், அதை அடைய மேற் கொள்ளும் தளராத முயற்சியையும் குறிப் பிடுகின்றது. தானம், தர்மம், தவம் என்ற சொற்களுக்கு சித்தர்கள் சைவ சித்தாந்தத்தில் கூறியுள்ள உண்மையான விளக்கத்தை பின்வரும் இதழ்களில் விளக்கமாக அறியலாம்.

வாசியோக முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்த பூமியில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், சரியான பயிற்சிமூலம் நிச்சயமாய் நன்மைகளை அடைய முடியும்; வாழ்வில் தோல்விகளைத் தடுக்கமுடியும்.

வாசியோக முறையை சித்தர்கள் இரண்டு பிரிவாகப் பிரித்து தனித்தனி வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.

இல்லறத்தில் உள்ளவர்கள், துறவு நிலையில் உள்ளவர்கள் என இரண்டு பிரிவு மக்களுக்கும், அவரவர் சுவாசக் காற்றின் நிலையறிந்து செயல்பட வேண்டிய வழிகளைக் கூறியுள்ளார்கள்.

முதலில் இல்லறத்தில் உள்ள மனிதர்களின் வாசியோக நிலைபற்றி அறிவோம். பின் துறவிகள், யோகி, ஞானி, மகான்களுக்கு உண்டான வாசியோக வழிமுறைகளை விளக்கமாக அறியலாம்.

நமது மூக்கின்மூலம் சுவாசிக்கும் காற்று, நமது மூக்கின் வலது, இடது என இரண்டு துவாரங்களின் வழியாக மாறி மாறி உள்ளே சென்று, நம் உயிரை நிலை நிறுத்தி நம்மை இயங்கச்செய்து வாழச்செய்கிறது.

மனிதனின் சுவாச நிலையில் நமது மூக்கின் உள்ளே போகும் காற்று "சக்தி' ஆகும். வெளியே வரும் காற்று "சிவம்' ஆகும். இந்த காற்றின் இயக்கநிலையையே "சிவசக்தி தாண்டவம்' என சித்தர்கள் கூறியுள்ளனர்.

ஒரு மனிதனின் மூக்கின் வலப்பக்கம் உள்ள துவாரம் வழியாக மட்டும் சுவாசம் நடைபெறுவது "பிங்கலை சுவாசம்', "சூரிய கலை சுவாசம்' என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதனின் மூக்கின் இடப்பக்கம் மட்டும் சுவாசம் நடைபெறுவது "இடகலை சுவாசம்', "சந்திரகலை சுவாசம்' என்று கூறப் படுகிறது.

ஒருவரின் சுவாச நிலையில், அவரின் இரண்டு மூக்கு துவாரங்களிலும் ஒரே சமயத்தில் காற்று செயல்பட்டு சுவாசம் நடைபெறுவதை "சுழுமுனை சுவாசநிலை' எனக் கூறப்படுகின்றது.

தினமும் மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மூக்கின் வலப்பக்க துவாரத்தில் மட்டும் சுவாசம் நடைபெறும். அப்போது இடப்பக்க மூக்கு துவாரத்தில் காற்று உள்ளே செல்லாது, வெளியே வராது- இயக்கமின்றி இருக்கும். இந்த சுவாச காலம் சூரிய கலை சுவாசமாகும். அதுபோல இடப்பக்க நாசி துவாரத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட மணியளவு சுவாசம் நடைபெறும். அப்போது வலப்பக்கம் காற்று உள்ளே செல்லாது; வெளியே வராது. இது சந்திர கலை சுவாச நிலை நேரமாகும்.

இந்த இரண்டு நிலைகளையும், நமது சுவாசக் காற்றின் போக்கை கவனித்துப் பார்த்தால் நன்கு புரிந்துகொள்ள முடியும். இனி இந்த சுவாசக் காற்றின் நிலையை அறிந்து, அந்த சமயத்தில் நாம் செய்யவேண்டிய அன்றாட செயல்களைப் பற்றி சித்தர்கள் கூறியுள்ள விளக்கத்தைக் காணலாம்.

இன்றைய நாளில் மக்கள் ஏதாவது ஒரு காரியம் செய்ய முயலும்போது, நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, சந்திராஷ்டமம், கரிநாள், கௌரி பஞ்சாங்கம், சகுனம் என்று திதிகளையும், நட்சத்திரங்களையும், ராசி, லக்னம் என பஞ்சாங்கம் மூலம் பார்த்து அல்லது ஒரு ஜோதிடரைக் கேட்டு நல்ல நாள், நேரத்தை அறிந்து காரியம் செய்யத் தொடங்குகிறோம் அல்லது காரியம் செய்யாமல் தவிர்த்து, நல்ல நாள் வரும் வரை காத்திருக்கிறோம். இந்த பஞ்சாங்கம், ஜோதிடம், சகுனம் என்ற வழிமுறைகள் உலகிலுள்ள அனைவருக்கும் பொதுவானதாகவே கூறப்பட்டுள்ளது.

சைவத்தமிழ்ச் சித்தர்கள் கூறியுள்ள வாசியோக முறையானது, ஒவ்வொரு தனிமனிதனும், அவரவர்க்குரிய நல்ல நேரம், கெட்ட நேரம் அறிந்து காரியம் செய்யும் முறையாகும். சுவாசக்காற்று இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று மூன்று நிலைகளில் நடக்கும்போது நாம் செய்ய வேண்டிய செயல்களை அறிந்துசெய்தால் வெற்றி காணலாம்.

சந்திர கலை என்ற இடகலை சுவாசம் நடக்கும்போது நாம் எந்த காரியத்தைச் செய்தாலும் வெற்றி கிட்டும்.

சூரியகலை என்ற பிங்கலையில் சுவாசம் நடக்கும்போது நாம் எந்தெந்த காரியங்களைச் செய்தாலும் வெற்றி கிட்டும்.

இரண்டு மூக்கு துவாரங்களிலும் சுவாசக் காற்று ஓடும் சுழுமுனை காலத்தில் எந்த செயல்களைச் செய்ய வேண்டும் என சித்தர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

சித்தர்கள் எந்த நிலையிலும், சைவ சித்தாந்த வாழ்வியல் முறையில் அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான வழிமுறையைக் கூறியதில்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவரவர் விதி நிலை, சரீர நிலை, சுவாச நிலை அறிந்து, அவரவர்க்குரிய ஊழ்வினைப் பதிவுகள், முற்பிறவி பாவ- சாப- தோஷங்களைத் தடுத்து, வெற்றியையும் செல்வத்தையும் அடையத்தக்க வழிமுறைகளைக் கூறியுள்ளனர். கூட்டமாக எதனையும் அடைய முடியாது என்பது சித்தர் வாக்கு.

சந்திர கலை

இல்லறத்தில் உள்ளோர் அவரவர் மூக்கின் இடப்பக்க துவாரத்தில், சந்திர கலையில் மட்டும் காற்று சென்று வரும் சுவாச காலங்களில், காரியம் தீர்மானம் செய்தல், விவசாய வேலை செய்தல், யாத்திரை தொடங்குதல், வீடு, சத்திரம், கோவில் கட்ட ஆரம்பித்தல், மனை, வீடு வாங்கும் முயற்சி, பிறருக்கு ஆலோசனை கூறுதல், பொருட்களை சேகரித்தல், திருமணம் செய்தல், குளம், கிணறு வெட்டுதல், புது ஆடைகள், நகைகள் அணிதல், மருந்துண்ணல், மருந்து செய்தல், மருத்துவம் பார்த்தல், நண்பர்களைக் காணுதல், வீட்டிற்கு தானியம் கொண்டுவருதல், வீடு குடிபோதல், விதை விதைத்தல், பஞ்சாயத்து சமாதானம் செய்தல், வேட்டைக்குக் கிளம்புதல், ஆடல், பாடல் என கலைகளைத் தொடங்குதல், கலைகள் கற்றல், உறவுகளைக் காணுதல், தூது அனுப்புதல், தானே தூது போதல், வேலையாட்களை பணியில் அமர்த்துதல், பொருள் வாங்குதல், மற்றவர் பகை, வெறுப்பு நீங்கி சமாதானம் செய்தல், ஆசிரியரிடம் கல்வி கேட்டல், மரம் வைத்தல், நிலத்தை உழுதல், வாகனம் ஏறுதல், சுரம் தீர்த்தல் என இன்னும் நமது அன்றாடச் செயல்களை,
அதாவது நமக்கு வரவு தரக்கூடிய அனைத்து செயல்களையும் இடகலை இயங்கும்போது செய்தால், இக்காரியங்களில் உண்டாகும் தோல்வியைத் தடுத்து வெற்றியை அடையலாம்.

நமது வம்சத்தில் முன்னோர்கள் காலத்தில், நமது முற்பிறவிகளில் பெண்களுக்கு செய்த பாவம், இப்பிறவியில் நமக்கு மேற்சொன்ன செயல்களில் தடைகளைத் தந்து, நமக்கு வரவேண்டிய வருமானங்களைத் தடுத்து, குடும்பத்தில் நிம்மதியைக் குலைக்கும். செயல்களில் தடைகளைத் தந்து எதனையும் அனுபவிக்கவிடாமல் செய்துவிடும். சந்திர ஆதிக்கம் கொண்ட "சக்தி' சுவாசக் காற்று  இயங்கும்போது, நாம் இக்காரியங்களைத் தொடங்கிச் செய்தால் பெண் சாபத்தடை செயல்படாது; காரியம் வெற்றி பெறும் என்பது சித்தர்கள் வாக்கு.

இடகலை, பிங்கலை, சுழுமுனை என மூன்று வித சுவாசக்காற்று நிலையில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? துறவு நிலை வாசியோக முறையை எப்படி கடைப்பிடிப்பது? சக்தியை, சித்தியை எப்படி அடைவது? வாசியோக மந்திரச்சொற்கள் எவை? அவற்றைப் பிரயோகிப்பது எப்படி என வாசியோக முறை பற்றிய அனைத்து விளக்கங்களையும் தெளிவையும் அடுத்தடுத்த இதழ்கள்மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். வாசியோக முறையில் செயல் பட்டு வாழ்ந்து, சித்தர்கள் அருளைப் பெறுவோம். வளமான வாழ்வை அடைவோம்.

ஐம்புலனை வென்றவர் வீரமே வீரம்
கடவுள் ஒன்றென்று தெளிந்த பேரறிவே அறிவு
பிறர் ஏவாமல் உண்பதே உணவு
தான் சாகாமல் இருப்பதே நற்கல்வி.

(மேலும் சித்தம் தெளிவோம்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :