Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17
மேஷம்

இந்த மாதம் கிரக நிலைகள் உங்களுக்கு இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கின்றன. அட்டமத்துச்சனி- ஆறாமிடத்து குரு இவர்கள் இருவரும் உங்களுடைய வளர்ச்சியில் தளர்ச்சியை ஏற்படுத்துவார்கள். அதனால் எந்த ஒரு செயலிலும் தீர்க்கமான, திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்துவதில் குழப்பம் உருவாகும். அ.தி.மு.க.வில் எது அம்மா கட்சி- எது சின்னம்மா கட்சி என்று தெரியாத நிலையில், மூன்றாவது தீபா கட்சியும் தோன்றி அம்மாவையும் எம்.ஜி.ஆரையும் முன்னிலைப்படுத்தி உரிமை கோருவதுபோல ஒரு சூழ்நிலை. இதைத்தான் இரண்டும் கெட்டான்நிலை என்று எழுதினேன். மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்ததுபோல, உங்களுக்கு ஆதரவாக வருகிறவர்களையும் சிலர் திசை திருப்புவார்கள். ஒருசில பெண்களுக்கு மாமியார்- மருமகள் பிரச்சினை ஈகோவாக இருக்கும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபம் (நெய் தீபம்) ஏற்றி வழிபடவேண்டும். இதனால் சங்கடங்களிலிருந்து விடுபடும் சூழல் உருவாகும்.

ரிஷபம்

இந்த மாதம் ஆரோக்கியத் தில் முன்னேற்றம் காணப்படும். தேக சுகம் தெளிவாக அமையும். தொழில் முயற்சியில் சிறுசிறு தடைகளும் சங்கடங்களும் காணப்பட்டாலும் உங்களுடைய விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு நம்பிக்கையூட்டும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் வீண் அலைச்சலும் விரயச்செலவும் உண்டாகும். புதிய இடத்தில் உணவு, மற்ற அசௌகர்யங்களினால் நிம்மதியின்மையும் மகிழ்ச்சிக்குறைவும் ஏற்படும். அதேபோல புதியவர்களைத் திருப்திப்படுத்துவதிலும், அவர்களோடு இணக்கமான உறவு ஏற்படுத்துவதிலும் பிரச்சினை உண்டாகும். பொருளாதாரத்தில் பற்றாக்குறையோ நெருக்கடியோ இருக்காது என்றாலும் வரவும் செலவும் சரியாக இருக்கும்; சேமிப்புக்கு இடமிருக்காது. அரசு வங்கி அல்லது இன்சூரன்ஸ் மூலமாக எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும். கடன் நிவர்த்திக்கு திருச்சேறை சென்று வழிபடலாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீசம் என்றாலும், உச்சம் பெற்ற சுக்கிரனோடு சம்பந்தம். வீடு கொடுத்த குருவோடு பரிவர்த்தனை என்பதால் பாதிப்பு இல்லை. உடல் ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். வைத்தியச்செலவுகள் இருக்காது. இயற்கை மாறுதலாலும் உணவுப் பழக்க வழக்கத்தாலும் சிறுசிறு தொல்லைகள் காணப்பட்டாலும், எளிய வைத்திய சிகிச்சையால் முழுமையான குணம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளும் முன்னேற்றத்திற்கான திட்டங்களும் வெற்றியடையும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும், மற்றவர்களின் உதவியால் அதை சரிக்கட்டலாம்; சமாளிக்கலாம். சிலசமயம் வெளியில் கடன் வாங்கும் கட்டாயம் ஏற்பட்டாலும், குறைந்த வட்டிக்கு கிடைக்கும். அல்லது வட்டியில்லாத கடன் உதவியாக அமையும். குடும்பத்தில் நல்ல காரியம், சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். நீண்டகாலமாகப் பிரிந்திருந்த உறவினர்களும் ஒன்றுகூடி மகிழலாம். சிலருக்கு மறைமுக சத்ரு தொல்லை அல்லது எதிர்ப்பு, இடையூறு ஏற்படலாம். சத்ருசங்காரவேல் பதிகம் பாராயணம் செய்யலாம். முருகன் கைவேலுக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

கடகம்

இரண்டாமிடத்திலுள்ள ராகு உங்களை காரணமில்லாமல் உணர்ச்சி வசப்படச் செய்யும்; கோபப்படச் செய்யும். அதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்- உங்களையும் அறியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுவீர்கள். அது உங்கள்மேல் அபிமானம் உள்ளவர்களையும், உங்கள் நலம் விரும்பிகளையும், ரத்தபந்த சொந்தங்களையும் காயப்படுத்தும்; ரத்தக்கண்ணீர் வடிக்க வைக்கும். சிலசமயம் யானை தன் தலையில் குப்பைகளை அள்ளிக் கொட்டிக்கொள்வதுபோல, உங்களுக்கு வரவிருந்த நன்மைகளைக் கெடுத்துக்கொள்வீர்கள். அதனால் "எண்ணித் துணிக கருமம்' என்று வள்ளுவர் சொன்ன வாக்கை நினைத்து செயல்படவேண்டும். "சொல்லுக- சொல்லின் பொருளுணர்ந்து சொல்லுக' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். நிதானம் வெற்றியின் அறிகுறியாகும். "மறப்போம்- மன்னிப்போம்' என்பது இரு சாராருக்கும் பொருத்தமானது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை வழிபடவேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 8-ல் முக்கியமான கிரகங்கள் மறைவதும், ஜென்ம ராசியில் ராகு நிற்க, 6-க்குடைய சனி பார்ப்பதும் நல்லதல்ல. தேவையற்ற பழிச்சொல்லும் வீண் அபவரதங்களும் ஏற்படலாம். யாரை மலையென நம்புகிறீர்களோ அவர்கள்தான் மறைமுகமாக உங்கள் வீழ்ச்சிக்கு திட்டம் வகுப்பார்கள். சிலருடைய அனுபவத்தில், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற மாதிரி ரெட்டை வேடம் போடும் நிலை காணப்படலாம். வசதி வாய்ப்புகளும் தகுதிக்கு மீறிய செல்வச் சேர்க்கையும் இருப்பவர்களுக்குத்தான் மேற்கண்ட வேதனையும் சோதனையும். கடுமையாக  உழைப்பவர்களுக்கும், பற்றாக்குறை சம்பளம் வாங்குகிறவர்களுக்கும், நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் பாதிப்புக்கு இடமில்லை. தொழில், வேலை, உத்தியோகத்தில் சங்கடம் இல்லை. வருமானம்- செலவு என்று சராசரி வாழ்வாக இயங்கும். சோதனையும் இல்லை- சாதனையும் இல்லை. லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

கன்னி

ஜென்ம குரு- ராசிநாதன் புதனோடு பரிவர்த்தனை யோகம்! குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் வகையில் நல்லவை உண்டாகும். கல்வி, வேலை, திருமணம், வாரிசு யோகம் போன்ற பலன்களை அனுபவிக்கலாம். ஒருசிலர் கடல் கடந்துபோய் பணியாற்றலாம். பணம் சம்பாதிக்கலாம். வேண்டியவர்களுக்கும் சிபாரிசுசெய்து அழைத்துப்போகலாம். 9-ல் செவ்வாய்; அவருக்கு குரு பார்வை. தந்தை, தாய் உறவு திருப்தியாக அமையும். சகோதர வகையில் சிலருக்கு சலனங்களும் சஞ்சலங்களும் சங்கடங்களும் ஏற்பட்டாலும், சகோதர காரகன் செவ்வாயை குரு பார்ப்பதால் தோஷம் இல்லை. செவ்வாய், சனி பார்வையால் சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் ஏற்பட இடமுண்டு. தகாத சம்பந்தமாகத் தெரிந்தால் காமோகர்ஷண ஹோமம் செய்துகொள்ளலாம்.

துலாம்

துலா ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். 6-ல் உச்சம் என்பதால் கடன் ஏற்படும் என்றாலும், அதை சுபக்கடனாக ஏற்றுக்கொள்ளலாம். தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம் தான் (9-ஆம் இடம்) ராசிக்கு 6-ஆம் இடம். எனவே, தொழில், வாழ்க்கை இதற்காக சுபக்கடன் வாங்கலாம். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்கு கடன்வாங்கிப் போகலாம். வெளிநாடு போனவர்கள் வீட்டுக்காக கடன் வாங்கலாம். (என்.ஆர்.ஐ.) கடனைப் பற்றிக் கவலை வேண்டாம்; கலக்கம் தேவையில்லை. 4-க்குடைய சனி 2-ல் நின்று 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பொதுவாக ஆரோக்கியத்தில் கேடு கெடுதியில்லை. அதாவது பாவாதிபதி பாவகத்தைப் பார்க்க பாவகபுஷ்டி. (பலம்). அவர் சனியாக இருந்தாலும் சரி; செவ்வாயாக இருந்தாலும் சரி- கவலைப்பட வேண்டாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் நரம்புத்தளர்ச்சி சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். தன்வந்திரி பகவானை வழிபடலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஜென்மச்சனி நடந்தாலும், ராசிநாதன் செவ்வாய் சனியைப் பார்ப்பதால் சனியின் தாக்கம் குறையும். சனி 3-ஆம் இடம், 7-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 10-ல் ராகு நிற்கிறார். திருமணத்தடை அல்லது திருமணம் ஆனவர்களுக்குள் பிரச்சினை, குடும்பப் பிரிவு போன்ற பலன்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். என்றாலும் 7-ஆம் இடத்தை 2, 5-க்குடைய குரு பார்ப்பதால், குரு பார்க்க கோடி தோஷம் விலகும். பிரிவு என்பது இடைக்காலப் பிரிவு- தற்காலிகப் பிரிவுதான். நிரந்தரப் பிரிவு ஏற்படாது. தொழில், வாழ்க்கை, உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். சிலருக்குப் பணி மாற்றம் ஏற்படலாம். யோகமான தசாபுக்திகள் நடந்தால் பதவி உயர்வோடு இடமாற்றம் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமான பள்ளி மாற்றத்துக்கும் வாய்ப்புண்டு. பிள்ளைகள் மேற்படிப்புக்காக ஹயக்ரீவர் ஹோமம் அல்லது வழிபாடு செய்யலாம்.

தனுசு

மாதம் முழுவதும் ராசிநாதன் குரு 10-ல் பலம் பெறுகிறார். மாதத்தொடக்கத்தில் 5-ல் உள்ள புதன் வக்ரமாகி 4-ல் மாறி நீசபங்கமாக இருப்பார். அதேசமயம் குரு- புதன் பரிவர்த்தனை யோகம் தொடரும். தொழில், வேலை, உத்தியோகம், வாழ்க்கை, குடும்ப சூழ்நிலை, மனைவி மக்கள், உறவு எல்லாம் திருப்திகரமாக அமையும். சிலருக்கு வீடு மாற்றம், சிலருக்கு பிள்ளைகளின் பள்ளி மாற்றம் அமையும். பிள்ளைகளின் கல்விக்காக பள்ளி அருகிலேயே வீடும் அமையும். ஆரோக்கியம் மிகத் தெளிவாக இருக்கும். பொருளாதாரத்திலும் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. வரவு- செலவு வழக்கம்போல இயங்கும். பணி நெருக்கடியைச்  சமாளிக்க சிலர் சொந்த பந்தங்களிடம் கைமாற்றுக்கடன் வாங்கலாம். அல்லது ஓவர் டைம் வேலை பார்த்து சம்பாதிக்கலாம். சிலர் வங்கி அல்லது இன்சூரன்ஸ் வகையில் லோன் வாங்கலாம். திருவண்ணாமலை அருகில் ஆதி திருவரங்கம் சென்று ஆதிரங்கநாதரை வழிபடலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 11-ல் நின்று தன் ராசியைப் பார்ப்பதோடு, 9-ல் நிற்கும் குருவும் ராசியைப் பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். அதேசமயம் ராசிநாதன் சனியே 4, 11-க்குடைய செவ்வாயைப் பார்ப்பதால், சிலருக்கு பிளாட் போட்டு விற்பதில் கூட்டாளிகள் உங்களுக்குத் தெரியாமலேயே சில இடங்களை விற்று காசாக்கி அனுபவிப்பார்கள். அதாவது வரவேண்டிய லாபம் நஷ்டமாகிவிடும். முதலீடு நஷ்டம் என்பது வேறு; வரவேண்டிய லாபம் நஷ்டம் என்பது வேறு. 4-ஆம் இடத்துக்கு குரு 6-ல் மறைவதும் ஒரு காரணம். எனவே, எந்த ஒரு காரியத்திலும் பெருந்தன்மையாகவும் தயவு தாட்சண்யமாகவும் இருந்தால்- தாட்சண்யம்  தன நாசம் என்பது விதி. அதையே நினைத்துக் கவலைப்பட வேண்டாம். ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும். உடம்பு முழுவதும் விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு ஆற்று மணலில் உருண்டு உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டுமே தவிர அளவு மீறி ஒட்டாதல்லவா! "நாழி முகவாது நாநாழி!' அதாவது கால்படி உழக்கு முக்கி முக்கி எடுத்தாலும் கால்படிதான் கொள்ளும். அரைப்படி கொள்ளாதல்லவா! செவலூர் பூமிநாத சுவாமியை வழிபட்டால் நட்டம் சரிக்கட்டப்படும்.

கும்பம்

கும்பத்துக்கு 8-ல் 2, 11-க்குடைய குரு மறைவது நல்லதல்ல. குடும்பம், பொருளாதாரம், தொழில் லாபம் எல்லாவற்றிலும் உங்களுக்கு சோதனைக் காலம்; வேதனைக் காலம்தான். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால், அங்கே இரண்டு கொடுமை ஜிஞ்சுக்க ஜிஞ்சுக்க என்று ஆடிக்கொண்டிருந்ததாம். நிழலுக்கு மரத்தடியில் ஒதுங்கினாலும் கெட்ட நேரம் நடந்தால் கொப்பு ஒடிந்து தலையில் விழுமாம். சிலர் குடும்பத்தில் தாயாரை நம்பி வாழ்ந்தவர்களுக்கு தாயார் மறைவுக்குப் பின்பு தனிமரமாகி தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல; பொது வீட்டில் இருந்து உங்களை வெளியேற்ற கூட்டணி சேர்ந்து சதி தீட்டுவார்கள். கிட்டத்தட்ட ஓ.பி.எஸ். நிலைதான். இருந்தாலும் குரு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், இந்த மடம் இல்லாவிட்டால் சந்தமடம் என்று, வழிபிறக்கும். மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். ஏன் மயங்க வேண்டும்? அன்றே கண்ணதாசன் பாடிவிட்டார். "மயக்கமா தயக்கமா?' என்று. யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க- என் காலம் வெல்லும் வென்ற பின்னே  வாங்கடா வாங்க என்று தைரியமாக இருங்கள். சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடலாம்.

மீனம்

மீன ராசிநாதன் குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 9-ல் சனி நிற்க, அவரை 9-க்குடைய செவ்வாயும் பார்க்கிறார். இது உங்களுக்கு அனுகூலமான கிரக அமைப்புதான். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பணவரவும் தாராளமாக அமையும். தொழில் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும். ஆனாலும் நீச புதனும், 8-க்குடைய சுக்கிரனும், 6-க்குடைய சூரியனும் ஜென்ம ராசியில் நிற்பது உங்களுக்கு வீட்டுக்குள்ளேயே- குடும்பத்திலேயே எதிர்ப்புகள் இருப்பதை உணர்த்தும். வெளியில் எங்கும் விரோதிகள் இல்லை. எனினும் நீரடித்து நீர் விலகாது; குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதை நினைவில் கொண்டு நிதானமாக யோசியுங் கள். நிதானமாக செயல்படுங்கள். ஒரு தத்து வத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மூன்றாவது நபருக்கு உதவுவதையும்- மூன்றாவது நபர் அனுபவிப்பதையும்விட தன் சொந்தபந்த  ரத்த சம்பந்தம் அனுபவிப்பது தவறல்லவே!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :