Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17



ம்முடைய மதம் இங்கு வாழ்தலைப் பற்றிப் பேசுகிறது. வாழ்தலுக்குப் பிறகு? மறுபடியும் வாழ்தல்தான். அந்த வாழ்தலுக்குப் பிறகு அது அவரோடு ஒன்றுதல். அவரை சூன்யம் என்று சொல்வதில்லை. அவரை ஒருமை என்று சொல்கின்றன. மிகச்சிறந்த விஷயத்தோடு நீ ஒற்றுமை ஆகிவிடுகிறாய். மிகச்சிறந்த விஷயத்திலிருந்துதான் நீ பிரிந்து வந்தாய். அங்கிருந்துதான் பல படிகள் தாண்டி உன்னதமான ஒரு பிறவிக்குப்போய், அந்தப் பிறவியிலிருந்து உன்னதத்தை அடைந்து, அதனோடு சேர்ந்து ஒன்றுமில்லாமல் கலந்து, பிறகு பிறவி இல்லாமல் ஆகிறாய். அதுவரை பிறக்க வேண்டியதுதான். கர்மா என்பது செயல். செயல் என்பதனுடைய விளைவு இன்னொரு செயல் என்று தத்துவம் முடிவடைகிறது.

விவாதங்கள் முடிவு பெறுகின்றன. தேடல்கள் நின்றுபோய்விடுகின்றன. உச்சகட்டமான வயதில், எண்பத்தைந்து, தொண்ணூறு வயதில் என்ன இருக்கும். எந்தவித முனைப்பும் இருக்காது. எல்லா முனைப்புகளையும் உதிர்த்து விட்டு, தான் வெறும் ஆத்மா, வெறும் சக்தி என்று வாழ்வதற்கு ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.

இல்லையே. இந்த வயதிற்குப் பிறகும் வாழ்வு பற்றி, போர் பற்றி, ஜெயிப்பது பற்றி, படைபலம் பெருக்குவது பற்றி மக்கள் சிந்திக்கிறார்களே. கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அல்லது தவறாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். முள்வேலியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். முள்ளை எடுத்தால்தான் வெளியே வரமுடியும். எடுக்கும்படியாக, விலக்கும்படியாக முள் இல்லை. நெஞ்சு உயரத்திற்கு முள்வேலி படர்ந்திருக்கிறது.

எனவே, அங்கிருந்தபடியே கூக்குரலிடுவதுதான் இனி நல்லதாகப் போகும். எனவே, முள் குப்பையிலிருந்து "வாழ்க, ஒழிக' என்று கூச்சலிடுவது அவர்கள் வாழ்க்கையாகப் போயிற்று. அதை நாம் கவனிக்கவேண்டிய அவசியம் இல்லை. நான் யார்? நான் எங்கிருக்கிறேன்? என்னுடைய இடம் என்ன? எனக்கு என்ன தெரியும்? என்ன தெரியாது? என்னுள் என்று நான் நினைக்கிற அந்த என்னுள் எது என்று யோசிக்கத் துவங்க, உள்ளுக்குள்ளே மிக அற்புத மான வெளிச்சம் பரவும்.

இதுதான் இறுதியா. நான் சொல்வதுதான் பதிலா. இதுதான் விதியா. இதற்குப் பிறகு ஒன்றும் இல்லையா. யார் சொன்னது. நான் கை காட்டினேன். அவ்வளவே. நீ எந்த திசையிலும் போகலாம். உன்னைப் பற்றி எப்படியும் எடைபோட்டுக்கொள்ளலாம். எந்த தொழிலும் செய்யலாம். செய்யாது இருக்கலாம். அது உன் இஷ்டம்.

உந்திப் போ. மேற்கொண்டு யோசி. தனித்திரு என்றுதான் நான் சொல்கிறேன். தனித்திருத்தலில், யோசிப்பதில், தவம்செய்வதில் ஏதேனும் ஒன்று கிடைக்கும். அதுவே உன்னுடைய உன்னதம். அதைப் பிடித்துக்கொண்டு போ. இவ்வளவுதான் என்னுடைய பேச்சு. இவ்வளவுதான் என் சொல். உன்னை நீ ஊன்றி கவனித்தபடி இரு. வெற்றி என்பது எளிது என்பதும், அந்த வெற்றியின் உச்சியில் உன்னை அறிவது பலப்படும் என்பதும் என்னுடைய விவரிப்பு. நான் சொல்லும் நீதி.

இதுவரை சொன்ன விஷயங்களை ஒன்றாக்கி சுருக்கமாகச் சொல்வதற்கு முயற்சிக்கிறேன். கூறியது கூறல்போல இருக்கும் என்றாலும், வேறு வழியில்லை. நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். மறுபடி மறுபடி நான் நாடிசுத்தி பற்றியே அதிகம் வலியுறுத்துகிறேன்.



நாம் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். பெரும் குரலில் அழுகிறோம். முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறோம். வாழ்க்கையே மோசம் என்று முடிவுக்கு வருகிறோம்.

எது நமது பிரச்சினைகள் என்று பார்த்தால், பல அறிஞர்கள் நம்முடைய தவறான கணிப்புகளையே முதன்மை யாகச் சொல்கிறார்கள். அடுத்தவரைப் பற்றிய எடை போடல், அதில் ஏற்படும் தவறு, தன்னைப் பற்றிய அபத்தமான அவநம்பிக்கை, அதனால் ஏற்படும் கோபம், ஆத்திரம், பொறாமை போன்றவையே நம் பிரச்சினைகளுக்கு பெரிதான காரணமாக இருக்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் நம் பிரச்சினைகளுக்கு நாமே, நம் சிந்தனையே காரணம். மற்ற எவரும் இல்லை.

உண்மையில் அப்படி இல்லையே. என் தகப்பனால், என் புருஷனால், என் மகனால், என் நண்பர்களால் என் வாழ்க்கை கெடுகிறதே. இருக்கலாம். இது உலகில் வாழும் சகலருக்கும் ஏற்படலாம்.

ஆனால் பிரச்சினை அவர்களல்ல. அவர்கள் செய்யும் பிரச்சினையை எதிர்கொள்ளத் தெரியாத தன்மை.

தகப்பனையோ, புருஷனையோ, பிள்ளையையோ திடமாக எதிர்க்க முடியாத வலுவின்மைதான் காரணம். அந்த வலுவின்மைக்கு என்ன காரணம் என்றால், தன்னைப் பற்றி சுயநம்பிக்கை இல்லாதிருப்பதே காரணம். அந்த சுய நம்பிக்கை இல்லாதிருப்பதற்குக் காரணம் என்னவென்றால் தான் யார் என்றும், தன் வலிவு என்னவென்றும் தெளிவாக யோசனை செய்ய முடியாததே காரணம். ஏன் தெளிவாக யோசனை செய்ய முடியவில்லை என்றால், மூச்சு சரியாக இல்லை.

மூச்சு மிகக் குழப்பமாக இருக்கிறது. சிந்தனையினால், குழப்பத்தினால் மூச்சு தடுமாறுகிறது. மூச்சு தடுமாறுவதால் சிந்தனையில் குழப்பம் ஏற்படுகிறது. இது இரண்டும் நெருக்கமானது.

கடுமையானவரை எதிர்க்க என்ன செய்யவேண்டும். நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் இவர் இல்லாது போனால் என்ன என்ற நிலைமையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். "சீ போ' என்று புருஷனைத் தூக்கி எறிய முடியாதபோது, நீங்கள் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகத்தான் நேரிடும். உலகம் என்ன சொல்லுமோ என்று பயந்தால் நீங்கள் உங்களைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருக்கவில்லை யென்றே அர்த்தம். உங்களை விட உலகம் உயர்ந்தது என்று அர்த்தமா. இல்லை. உலகம் உங்கள் காலடியின் கீழ்தான் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்தே போய்விட்டீர்கள்.

காலின்கீழ் இருக்கின்ற உலகத்தை தலையின்மீது வைத்துக்கொண்டு தள்ளாடுகிறீர்கள். எல்லா உறவுகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். அந்த உறவு களைச் சார்ந்துதான் நீங்கள் வாழவேண்டும் என்றால் உங்கள் அவஸ்தைகள் நியாயமானவையே. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளாத ஒரு மனது, பிரச்சினைகளை எதிர்க்க வும் செய்யாது. பிரச்சினைகள் என்னவென்று ஆராய்கின்ற திறமை உங்களுக்கு இல்லையெனில், ஏற்கவோ எதிர்க்கவோ இயலாது. ஆராயும் தெளிவு, ஆராயும் நிதானம், ஆராயும் அறிவு வெகுநிச்சயமாக நாடிசுத்தியினால்தான் வரும். உதாரணத் தோடு பேசினால்தான் உங்களுக்குப் புரியும்.

உங்களைவிட வலுவுள்ளவராயின் ஒதுங்கிவிடுவது- உங்களுக்கு இணை உள்ளவராக இருந்தால் வலுவைப் பிரயோகிப்பது. வலுவைப் பிரயோகிப்பது என்பது அடிதடி ரகளை அல்ல. அது அவரை ஒரு இடத்தில் உட்கார வைப்பது. அது காவல்துறை சார்ந்ததாகவோ, அல்லது கடுஞ்சொல்லாகவோ இருக்கலாம். அவர் கூச்சலுக்கு பயந்து கதவை சாற்றிக் கொண்டிருந்தால் அவரே ஜெயித்துவிட்டார் என்றுதான் அர்த்தம். கதவைத் திறந்து பதிலுக்கு பெரும் கூச்சல் போடுகிறபோது அவர் அடங்குவார். கைநீட்டினால் முந்திக்கொண்டு கை நீட்டவும் நீங்கள் முயல வேண்டும். இது கோர்ட் விவகாரம் ஆனாலும் வா என்று வரிந்துகட்டிக் கொள்ள வேண்டும். இதற்கு வேண்டுவது அதீத திடம்.

"துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பதும் ஒரு நல்ல பழமொழிதான். ஆனால் இதில் ஏதாவது ஒன்றை உங்கள் மனம் உடனடியாக முடிவெடுத்தாக வேண்டும். இரண்டும் அல்லாது வெறுமே குமைந்து கொண்டிருப்பதில்தான் உங்கள் வாழ்வு சக்தி விரயமாகிறது.

அதுதான் உடல்நல சீர்கேட்டிற்கும் காரணமாகிறது. செயலற்று வெறுமே பொசுங்குவதில் என்ன லாபம்.

நாடிசுத்தி உடனடியாக பிரச்சினையைத் தீர்வு செய்துவிடுமா. இல்லை. பிரச்சினையை தீர்வுசெய்வதற்குண்டான மனோபலத்தை, தெளிவை, நிதானத்தை, கூர்த்த மதியைக் கொடுக்கும். இவையெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. செயல்முறைக்கு உதவாது என்று சொல்வீர்களாயின், உங்களிடம் வைராக்கியம் இல்லை என்பதே பொருள். வைராக்கியம் அற்றவர்களுக்கு வாழ்வு வேதனைதான். வைராக்கியம் கைக்கொள்ள முடியாதவர்களுக்கு எது செய்தாலும் அது தவறாகத்தான் முடிவடை யும். வைராக்கியமாக இருக்கவும் நாடிசுத்தி உதவி செய்கிறது.

"தினம் ராத்திரி பத்து பக்கம் படிச் சுட்டுதான் தூங்கணும்னு நினைக்கிறேன். புத்தகம் கையில் எடுத்தவுடனே தூக்கம் வந்துவிடுகிறது. நாளைக்கு சேர்த்து படித்துக்கொள்ளலாமென்று படுத்துவிடுகிறேன். இப்படி ஆறு நாள் சேர்ந்து போச்சு. அறுபது பக்கம் எங்கே படிப்பது. போ என்று விட்டுவிட்டேன்.' இதுதான் மானம் கெட்ட பிழைப்பு. எல்லா நல்லவையும் கூரையைப் பிய்த்துக்கொண்டு கிடைக்கவேண்டும் என்ற பேராவல். அதீத ஆசை. ஒருவேளை அப்படிக் கிடைத்தாலும் அதை அனுபவிக்க இம்மாதிரி ஆட்களுக்குத் தெரியாது. கிடைத்த சந்தோஷத்திலேயே செத்துப்போவார்கள்.

உணவை, நடனத்தை, காமத்தை, ஊர் சுற்றுவதை அனுபவிக்கக்கூட பொறுமையும், தெளிவும், நிதானமும் வேண்டும். முகத்தில் அடிக்கின்ற குளிர் காற்றை அனுபவிக்க ஒரு மௌனம் வேண்டும். "ஐயோ குளிருதுடி ஐயோ குளிருதுடி' என்று சொல்வதில் குளிர் உணரப்படவில்லை. மாறாக எதிர்க்கப்படுகிறது. "அலைபோல தென்றல் மலைமீதிலே விளையாடும் இன்பத்தைப்போல்' என்று பாட்டு வருமாயின் அப்போதும் அந்த அனுபவம் குறைவே. இது வேறுவகையான கூச்சல். மௌனமாக தோல் உணருவதை மனம் உணர்ந்து, உள் மனம் வரைக்கும் போய் கவனித்து, என்ன நடக்கிறது முகத்திற்கும் காற்றுக்கும் என்று ஒரு வினவலோடு
அமைதியாக இருப்பின், அந்த வினவலுக்கு ஒரு பதில் கிடைக்கும். தென்றல் நான் என்ன செய்கிறேன் என்று சொல்லாது சொல்லும். இதுவே வாழ்தல்.

மனைவியோடு படுக்கையில் சுகிப்பதற் கும், குழந்தையை மடியிலிட்டுக் கொஞ்சு வதற்கும், நண்பரோடு கடற்கரை வெளியில் சம்பாஷிப்பதற்கும் இந்த நிதானம் தேவைப் படுகிறது. சந்தோஷமான விஷயத்திற்கே நிதானம் தேவைப்படுகிறது என்றால், தகராறான விஷயங்களுக்கு இன்னும் எவ்வளவு நிதானம் வேண்டும். இந்த நிதானத்தை வெகு நிச்சயம் நாடிசுத்தி என்கிற மூச்சுப் பயிற்சி தரும். இந்த நாடிசுத்திக்கு எப்படிப் போவது?

வெறுமே இந்த கட்டுரை படித்துவிட்டு உட்கார்ந்தால் போதாது. உங்களைச் சுற்றி அதற்குண்டான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

"நம்ம தம்பி தினம் மூக்கைப் பிடிச்சிட்டு உட்கார்ந்துடறாரு. ஏன், அவுங்க வீட்டுல டாய்லெட் சரியா கழுவலையா' என்ற கேலியான நண்பர்கள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக அகற்றுவதுதான் உங்களுக்கு நல்லது.

வாசனையை அறுக்க உதவுவதுதான் நாடிசுத்தி. ஆனால் மூக்கு வாசனையை அல்ல. பிறப்பு வாசனையை அறுக்க உதவுவது. இதற்கு கேலி செய்பவனை நண்பனாகவோ மனிதனாகவோ கொள்ள இயலாது.

"இப்படி ஸ்வாமி படத்துக்கு முன்னாடி மூக்கை பிடிச்சிக்கிட்டு உட்காராதீங்கோ. எனக்கு பயமா இருக்கு. நீங்க சன்யாசியாயிட்டேள்னா என் கதி என்ன' என்ற அசட்டு மனைவி இருப்பின், நாடிசுத்தியை வேறு எங்கேனும் வைத்துக் கொள்வது நல்லது. நண்பனை விலக்கலாம். மனைவியை விலக்க முடியுமா?

நாடிசுத்தி செய்கிறபொழுது இரண்டு வயது குழந்தை தொடையில் ஏறி பிறகு கழுத்தில் உட்கார்ந்து இறங்கும்போது, இரண்டு தொடைக்கு நடுவே கால் வைத்துக்கொண்டு இறங்கினால் உயிர் போகும். மூச்சுப்பயிற்சி செய்யவே முடியாது. குழந்தை மிதித்த அதீத வலியில் பேசவே முடியாதபோது நாடி சுத்தி எப்படி செய்ய முடியும். நண்பனை விலக்கலாம். குழந்தையை விலக்க முடியுமா. அது உங்கள் சொத்து.

நாடிசுத்தி செய்ய நிச்சயம் ஒரு நல்ல இடம் தேவை. தனிமை தேவை. இதைப் பற்றி அறிந்தோர் நட்பு தேவை. அல்லது எதிர்க்காத மனிதர் தேவை. குறுக்கீடு செய்யாத உறவுகள் தேவை. "ஐய்யோ ஐய்யோ. நான் இருக்கும்போது இன்னொருத்தியோட எப்படி உறவு வைச்சுண்டேள்' என்கிற தொலைக்காட்சி அலறல் இருப்பின், நாடிசுத்தி என்ன- சரியாக உணவுகூட உட்கொள்ள முடியாது. ஒரு காபிகூட நிதானமாய் குடிக்க முடியாது. ஆகவே தொலைக்காட்சி சத்தம் இல்லாத, பாட்டு கேட்காத, மனிதர்களின் பேச்சுக்குரல் கேட்காத இடத்தில் மூச்சு இழுத்து, மூச்சுவிட்டு செய்வது நன்றாக இருக்கும்.

மூச்சுப் பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் குளுமையைத் தரக்கூடியது. உடம்பில் சூடு அதிகம் இருப்பின், அந்த சூட்டை நாடிசுத்தி குளுமையாக்குகிறது. நாடிசுத்தி செய்துகொண்டே உடல் சூட்டையும் அதிகரித்துக்கொண்டே போனால் அதில் எந்த லாபமும் இல்லை. உணவினால் உடம்பை சூடாக்கிக்கொண்டு நாடிசுத்தி செய்யும்பொழுது இரண்டும் நேர் எதிரே முட்டிக்கொள்கின்றன. நல்ல பயன் விளைவதற்கல்லாது தீய பயன் விளைவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மற்ற ஆசனங்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஹடயோகம் உடம்பை சீராக வைப்பதற்குண்டான ஒரு பயிற்சி முறையே தவிர மனம் பற்றிய அக்கறை ஹடயோகத்தில் இல்லை. உடல் நலம் சரியாக இல்லையென்றால் மனம் அமைதி பெறாது என்று ஒரு வாதத்தை வைப்பார்கள். உடல்நலம் சரியாக இருந்தால் மனம் அமைதியாக இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி.

மனம் உடம்பால் கட்டிப் போடப்படவில்லை. அது மிக சுதந்திரமானது. ஆரோக்கியம் இருக்கிறதோ இல்லையோ, அது பாட்டுக்கு தன் வேலையை செய்துகொண்டுதான் இருக்கும். தன்னை அறிவது என்பதை உற்சாகத் தோடு அறிய, தன்னை அறிவதே கடவுள் தேடல் என்பது புரிய நாடிசுத்தியே மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவுக் கட்டுப்பாடுகளால் கொதிப்புகள் குறைகின்றன. கோபமும் ஆக்ரோஷமும் நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருக்கும்போது நாம் கடவுள் பாடல் பாடிக்கொண்டிருக்க முடியுமா. அதேபோல உணவுகளாலும் உணர்வுகளாலும் உந்தப்பட்டு உடம்பு தவிக்கிறபோது சிந்தனைகள் நிச்சயம் ஒருமுகப்பட முடியாது.

மனம் ஓயாது சிந்திக்கின்ற தன்மை யைப் பெற்றிருக்கிறது. தேவையோ தேவையில்லையோ, அது பாட்டுக்கு ஏதேனும் உரக்க கத்திக்கொண்டிருக்கிறது. ஏதேனும் உள்ளே ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கையிலிருந்து தப்பித்துக்கொள்ள சிலவற்றை கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்பது பெரியோர் அபிப்ராயம். நாடகம், தொலைக்காட்சி பார்க்காது இருத்தல், பாட்டு கேட்காது இருத்தல், அதிகம் உண்ணாது இருத்தல், சொற்பொழிவு கேட்காது இருத்தல், வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருத்தல், துப்பறியும் கதைகள் போன்றவற்றைப் படிக்காது இருத்தல், "உயிரே குலுங்குகிறது இந்த இசை, கண்ணில் நீர் வரவழைக்கிறது அந்த இசை' என்று சொல்பவர்கள் அவ்வளவு தெளிவானவர்கள் அல்ல. தன்னை இழப்பவர்கள்.

எதிலும் தன்னை இழக்காது இருத்தலே உத்தமமான விஷயம். அன்பு, பாசம், காதல், காமம் எதிலும் தன்னைக் காணாமல் போக்கடிக்காமல், மிக நிதானமாக உள்ளுக்குள் அடங்கியிருப்பதே நல்ல ஸ்திதி. வாழ்க்கை அனுபவிப்பதற்காக மட்டுமே என்றால் நீங்கள் புற உலகில் மட்டுமே இருக்கிறீர்கள். அக உலகு உங்களுக்குத் தெரியவில்லை. இந்த அனுபவிப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், "போதும் இசை, போய் மாடு ஓட்டு. குமாஸ்தா வேலை பண்ணு. காசு கொண்டு வா. எப்போ பார்த்தாலும் காதுல எதையோ மாட்டிண்டு' என்று எவரும் இடித்துரைத்தால் உங்களுக்கு கண்ணீரல்லவா வரும். அது முன்சொன்ன கண்ணீராக இருக்குமா அல்லது சோகப் பாட்டாக இருக்குமா. மிகப்பெரிய அவமானம் என்றும் அசிங்கப்படுத்தப்பட்டு விட்டோம் என்றும் ஒரு குமுறல் வருமே. துக்கம் வெகுநாள் நீடிக்குமே. அப்பொழுது அந்த துன்பியல் நாடகத்திற்கு யார் காரணம். சொன்னவரா அல்லது நீங்களா?

வாழ்க்கையில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யம்.  நாடிசுத்தி இது எதுவும் வராமல் தடுத்துவிடும் என்று எவரும் சொல்ல மாட்டார்கள். வாழ்க்கையில்  பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். உங்களை எதிர்க்கத்தான் செய்வார்கள். உங்களிடமிருந்து பொருட்களை அபகரிப்பதும், உங்களை அவமானப்படுத்துவதும் வாழ்வு என்ற விஷயத்தில் ஒரு பங்கு. வெறும் சுகம் மட்டுமே ஒருநாளும் வாழ்வாகாது. சுகத்தை எதிர்கொள்ளவும் துன்பத்தை எதிர் கொள்ளவும் நாடிசுத்தி சொல்லித் தருகிறது.

ஒரு கோடி ரூபாய் பணம் வந்துவிட்டால் எப்படியெல்லாம் ஆடுவீர்கள். என்னவெல் லாம் பேசுவீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படி ஒருவேளை ஒரு காசு வரும்போது அதை அனுபவிக்க உங்களுக்கு நாடிசுத்தி சொல்லித் தரும். நிச்சயம் உதவி செய்யும்.

மகளின் திருமணம். மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டு, என் ஆசையைவிட அதிகமான ஒரு பரப்பில் பலரும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்வி டேஷன் எடுத்து ஹெலிகாஃப்டரிலிருந்து என் மகள் பூவாய் தூவிக்கொண்டிருக்கிறாள். கல்லூரியில் பேராசிரியை.

எனவே பெரும் ஜனக்கூட் டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஐந்நூறு என்று ஆரம்பத்தில் நினைத்தோம். எழுநூறு என்று பிறகு கணக்குப் போட்டோம். தொள்ளாயிரம் நிச்சயம் வரும் என்று தயாராக இருந்தோம். ஆயிரத்து இருநூறு என்று அசைத்தது. கடைசியில் எனக்கும், என் இரண்டு மனைவி யருக்கும், என் மகனுக்கும் சாப்பாடு இல்லையென்று சொல்லிவிட்டார்கள். அப்படி ஒரு கூட்டம். இதற்குமேல் சமைத்துப்போட முடியாது. வெளியே எங்கேனும் போய் சாப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று கரண்டியை சமையல்காரர் கீழே போட்டுவிட்டார். ஏனெனில் நீங்கள் சொன்னதற்கும் வந்ததற்கும் நானூறு இலை வித்தியாசம் இருந்தால் எந்த சமையல்காரர் தாக்குப்பிடிப்பார்.

திருமணத்தில் உண்டான பதட்டங்கள் தவிர என்னைச் சுற்றி பல்வேறு பதட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒரு அறைக்குப் போய் அமர்ந்து பதினைந்து நிமிடங்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு, யாரும் தொந்தரவு செய்யாதிருக்க, இருபது நிமிடம் நாடிசுத்தி செய்து, பத்து நிமிடம் தியானம் செய்து, அரைமணி நேரம் கழித்து வெளியே வந்து ஒவ்வொரு பிரச்சினையாக மிகத் தெளிவாகத் தீர்த்தேன். யாரையும் கோபித்துக்கொள்ளவில்லை. திருமண வீட்டில் கத்துவதும், ஒருவரை ஏசுவதும் அபத்தம். சந்தோ ஷம்தானே திருமணம். அது எப்படி எரிச்சல் மிகுந்ததாகவும், இழிச்சொல் மிகுந்ததாகவும் நடக்க முடியும். இப்போது சொல்லும்போது மிக எளிதாகத் தோன்றுகின்ற அந்த விஷயங்கள், திடும் திடுமென்று வந்து நிற்க மிகப் பெரிய கலவரங்களைக் கொடுத்தது. நாடிசுத்தியால் நான் ஜெயித்தேன். இது ஒரு உதாரணம்.

அந்த நேரத்தில் நாடிசுத்தி எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி வரலாம். உங்களைச் சுற்றி அத்தனைப் பேரும் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, தனியே போய் எப்படி ஒருவரால் உட்கார முடியும் என்று உங்களுக்குள் ஒரு கோபம் வரலாம். நாடிசுத்தி செய்து செய்து பழக்கப்பட்டு விட்டால் இப்படி உட்கார வேண்டும் என்று தோன்றிவிடும். உட்காருவதற்கு வழியும் கிடைக்கும். திடீரென்று அந்த நேரத்தில் நாடிசுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் துவங்கினால் நிச்சயம் செய்ய முடியாது. உட்கார உங்களுக் குத் தோன்றாது. உட்காரவும் முடியாது.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :