Add1
logo
இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்க வெங்கைய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை || வனப்பகுதியில் கடும் வறட்சி, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் பரிதவிப்பு (படம்) || என் உயிரை கொடுத்தாவது மருத்துவகல்லூரி திட்டத்தை நிறைவேற்றுவேன்: செந்தில்பாலாஜி ஆவேசம் || குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த இரு பெண்கள் மூன்று குழந்தைகளுடன் கைது || எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவோம்: நாராயணசாமி || போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு || பிளஸ்-1 மாணவியை கடத்திச் சென்ற இரு குழந்தைகளின் தந்தை கைது || சென்னை - ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு || போராட்டத்தை கைவிட்டு, தமிழகம் திரும்ப வேண்டும்: முதல்வர் வேண்டுகோள் (படங்கள்) || நீட் தேர்வு - கனவுகளையும், வாய்ப்புகளையும் அடியோடு மறுக்கும் படுபாதகச் செயல்! சீமான் கண்டனம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || உ.பி.யில் கார் மீது ரெயில் மோதல் 5 பேர் பலி || நெடுவாசல் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
......................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
......................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
......................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
......................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
......................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
......................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
......................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
......................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
......................................
கடவுளைத் தேடி...
......................................
ஜனக நந்தினி ஜானகி!
......................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
......................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
......................................
01-04-17ராமநவமி 5-4-2017
பி. ராஜலஷ்மி


ஸ்ரீமத் ராமாயணத்தில் ராமபிரானுக்கு குலகுருவான வசிஷ்டர்தான் ராமன் என்ற திருநாமத்தை சூட்டுகிறார். எல்லாரையும் ரமிக்கச் செய்கிறவன் என்ற பொருளில் காரணப்பெயராக இந்த நாமத்தை சூட்டி மகிழ்கிறார். அதற்குப்பிறகு ராமன் எத்தனையோ காரணங்களால் காரணப் பெயர் கொண்டு பிரகாசிக்கிறான்.

ராமனைப்போலவே சீதா தேவிக்கும் பல திருநாமங்கள் காரணப் பெயராக அமைந்தன. மிதிலா மன்னனின் மகளானதால் "மைதிலி' என்றும், விதேக முக்தியைப் பெற்ற ஜனகனின் குமாரியாததால் "வைதேகி' என்றும், மேழியின் (கலப்பை) நுனியில் தானாகத் தோன்றியதால் "சீதா' என்றும், ஜனகரை தந்தையாகப் பெற்றதால் "ஜானகி' என்றும் பல நாமங்கள் சீதா தேவிக்கும் உண்டு.

ஜனகன் விதேக முக்தியைப் பெற்றவன். அதாவது ஜீவன் இருக்கும்போதே உடல்மேலுள்ள ஆசையைத் துறந்தவன். இந்த உடல் ஒரு நாள் மண்ணோடு மண்ணாகிவிடும் என்ற உண்மையை உணர்ந்தவன். உயிருள்ளபோதே பிரம்மத்தோடு ஐக்கியமானவன். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதும்போது இந்த விதேக முக்தியைப் பற்றி அழகாகச் சொல்கிறார்.

ஜனக மன்னன் யாகம் இயற்றுவதற்காக யாக சாலையை கலப்பையைப் பிடித்து உழும்போது, கலப்பையின் நுனியில் அந்த மகாலட்சுமியே குழந்தையாக மின்னும் எழிலோடு தோன்றுகிறாள். ஜனகன் பெருமகிழ்ச்சியோடு குழந்தையை வாரி யெடுத்து ராஜமாதாவிடம் கொடுக்கிறான். "சீதா' என்று நாமம் சூட்டி ஆனந்தம் அடை கிறார்கள். எல்லாரும் சீதையை சீராட்டி வளர்த்து வருகிறார்கள். ஜனக மன்னனுக்கு மட்டும் மனதில் ஒரு நெருடல். சீதா என்றால் வளர்ப்புப் பெண் என்று அந்நிய பாவம் வந்துவிடுமோ என்று தவிப்பு. சீதை ஜனகனின் மகள் ஜானகியாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு உடமையாக்கிக் கொண்டான். ஜனகனுக்கு ஜானகி என்ற திருநாமம்தான் பிடித்தமானது. தேவி ஜனக நந்தினியாகத்தான் இருக்க வேண்டுமென்ற பேராவல். அம்பிகைதான் ஜானகியாக அவதரித்து வந்துள்ளாள் என்ற உணர்வு ஜனக மன்னனுக்கு எப்போதுமே உண்டு.

ஜனகன் வேதாந்திகளின் அரசன். லௌகீகத்தில் வாழ்ந்த பரதத்துவ ஞானி. மண்ணுலகத்தை ஆண்டாலும் "மண்' அவன் ஆத்மாவில் ஒட்டவில்லை. ஜனகனின் ஆச்சாரியர் பரமஞானியான யாக்ஞவல்கியர். குருவால் சீடனுக்குப் பெருமை. சீடனால் குருவுக்கு மகத்துவம். ஆத்ம தத்துவம் அரசனின் அன்றாட அனுஷ்டானம்.

இந்த தேவியான ஜானகியை பரமாத்வான ராமனோடு சங்கமிக்கச் செய்யவேண்டு மென்று ஜனகன் எப்போதும் தவம் கிடந்தான். தந்தையின் ஞான நிலையைப் பற்றி மகள் ஜானகியும் நன்கு அறிந்திருந்தாள். ஜனக நந்தினியாகத் திகழவேண்டி ஜானகியும் தவமியற்றுகிறாள். பரமாத்மாவான ராமனை அடைய வேண்டித் தவிக்கிறாள்.

விசுவாமித்திரரின் யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டு, பிரம்ம தேஜஸ்வியான ராமன் மிதிலா நகருக்குள் பிரவேசித்தவுடனேயே ஜானகி துடிக்கிறாள்.

அருணாச்சல கவிராயர் என்ற ராம பக்தரும், "அந்தநாளில் சொந்தம்போல வந்து' என்றுதானே உருகிப்பாடுகிறார். சீதா கல்யாணம் என்ற நிகழ்வால் பரமாத்வான பரம்பொருளோடு ஜீவாத்மாவான சீதா சேர்ந்துவிடுகிறாள். சீதா கல்யாணத்தின் போது ஜனக மன்னன் "இயம் சீதா மம சுதா' என்று கன்னிகையை தானம் செய்யும்போது கண்கள் குளமாகிறது. பின்னர் நிகழப்போகும் சம்பவங்களை எல்லாம் அவனால் அறிய முடிகிறது. "ஹே அக்னியே! இந்த குழந்தை ஜானகி பலவிதமான சிரமங்களை அனுபவித்து உன்னிடம் தஞ்சமென்று வரும்போது நீ அவளை சுடாமல் குளிர வைக்க வேண்டும்' என்று மனம் கசிந்து பிரார்த்திக்கிறான்.

அன்னை கைகேயியின் ஆணையினாலும், தந்தை சொல்லைக் காக்க வேண்டியும் கானகம் செல்கிறார் ஸ்ரீராமன். பெற்ற தாய், தந்தை, நாடு, நகரம், ராஜயோகம் என எல்லாவற்றையும் துறந்து மகிழ்ச்சியோடு வனத்திற்குச் செல்லும்போது, ஜானகியும் சற்றும் முகம் சுளிக்காமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு கணவனோடு காட்டிற்குச் செல்கிறாள்.

இங்குதான் அன்னை ஜானகி ஜனக நந்தினியாகப் பிரகாசிக்கிறாள். ஜனகனின் வளர்ப்பாயிற்றே. மண், பொன் என்ற ஆசை எதுவுமில்லாமல் மகாலட்சுமி கல்லிலும் முள்ளிலும் வனவாசம் செய்கிறாள்.

அன்னை ஜானகியின் அவதாரம், நம்மைப்போன்ற ஜீவன்கள் உய்ய வேண்டு மென்ற பரம கருணையால்தான் நிகழ்ந்தது. ஜீவாத்மாவான நாம் உலகப்பொருள்களில் ஆசை வைத்தால் அவதிப்படவேண்டும் என்று உணர வைத்தாள். மாயமான்மீது பற்று வைத்ததால், ராமனைப் பிரிந்து அல்லல்பட்டு அசோகவனத்தில் சிறை இருக்கிறாள். ஆத்மா, பரமாத்மாவைப் பிரிந்து தவிக்கிறது.

அன்னை ஜானகி அசோக வனத்தில் சிறையிலிருந்து வேதனையால் துடிக்கிறாள்.

ஸ்ரீராமனைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் அப்படி ஒரு தவம் புரிகிறாள். ராமநாமம் தவிர வேறெந்த சிந்தனையையும் அண்டவிடாமல் மனம் லயித்து, உடல் உருகி செய்த தவம். ஜானகிக்கு தவம், தியானம் எல்லாம் தந்தையான ஜனகன்மூலம் கற்ற அப்பியாசம். ஆத்மானந்தம் பற்றி வழிகாட்டியவன் ஜனகன்.

பக்தியினால் உருகியுருகி கண்ணீர் சிந்தி இறைவனை அடைந்துவிட வேண்டுமென்று நமக்கு உணர்த்துகிறாள் அன்னை.

ஆயாசம் மேலிட, தன்னையே அழித்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. அப்போது, "ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்' என்ற அமுதக் குரலைக் கேட்டு சிலிர்க்கிறாள் பிராட்டி.

அனுமன் வடிவில் அமிர்த வாரிதி. சாவு தவிர்க்கும் சஞ்சீவி. ஆஞ்சனேயர் வாயிலாக தாரக நாமம் கேட்டுப் பரவசமாகிறாள். ஆஞ்சனேயர் கணையாழியைக் கொடுத்து அன்னையைத் தேற்றுகிறார். பரமாத்மாவின் தரிசனம் கிடைத்துவிடும் என்று பரமானந்தம்.

அந்த மோதிரத்தை கண்ணிமைக்காமல் பார்த்து ஆனந்தம் அடைகிறாள். அன்னை மோதிரத்தைப் பார்க்கும் நிகழ்ச்சியை கவி ப்ரேக்ஷேமானா, "பர்த்து கரவிபூஷணம்' என்று அழகாக வர்ணிக்கிறார். ராமனையே தரிசனம் செய்ததுபோல பேரானந்தம். வால்மீகியின் வார்த்தையின் அழகு சொல்லில் அடங்காது.
கணையாழியைக் காணும் காகுத்தன் பத்தினிக்கு, அதை முதலில் அணி செய்த அழகு விரல், அந்த விரலுடன் கூடிய புஜம், பிறகு அந்த புஜத்தோடு கூடிய ஸ்ரீராமபிரானின் திவ்யமான சரீரம் மனதில் தோன்றுகிறது. மேலும், சுந்தர காண்டத்தில் வால்மீகி ரிஷி "ஜானகி முதிதா அபவத்' என்று "ஜனக நந்தினியான ஜானகி' என பெருமைப்படப் பேசுகிறார்.

இந்த ஆன்மானந்தத்தை ஜனக நந்தினியான ஜானகி, தன் தந்தையிடமிருந்து பெற்று இப்போது நாம் அனுபவிக்கிறோம் என்று நினைத்தாள். ஜனகனை தந்தையாக அடைந்ததை எண்ணி ஆனந்தம் அடைந்தாள். தான் ஜனகன் மகளாக இருக்க தகுதி உள்ளவள்தான் என்று பெருமிதம் கொண்டாள்.

"ஜானகி முதிதா பவத்' என்று வால்மீகி கொண்டாடும் ஜானகியின் ஏற்றத்தை உணர்ந்து நாம் உன்னத நிலையை அடைவோம். அன்னை ஜானகியால் அண்ணல் ராமனுக்கு ஏற்றம். ராம நவமியில் ஜானகி ராமனைப் போற்றி நல்லறம் காப்போம்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :