Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17""உன் வயதொத்த மாணவனை நீயே தேர்ந்து விளக்கமளிக்க வை. அவன் தருகின்ற விளக்கம் திருப்தி இல்லையெனில் பிறகு யாம் கூறுவோம்'' என்றார் சுதீந்திரர். ஆனால் குருவுக்கு நிச்சயம் தெரியும்- அவன் யாரை வம்புக்கு இழுப்பானென்று.

சசிதரன் கை உயர்ந்தது. அவனின் சுட்டு விரலானது காற்றில் சிறிது நேரம் அங்குமிங்கும் யோசனை பாவனையில் பாசாங்காய் வட்டமிட்டு, சட்டென்று வேங்கடநாதனிடம் நின்றது. வேங்கடநாதன் மெல்ல எழுந்து நின்றார். தனது பொறுப்பை உணர்ந்து குருவை நோக்கிப் பணிவாய் வணங்கி மௌனமாகவே நின்றார்.

""என்ன வேங்கடநாதா.. உன்னால் இறை தரிசனம் பற்றிய விளக்கம் கூற இயலுமா?'' என்றார் குரு சுதீந்திரர்.

""தங்களின் அனுமதியுடனும், ஸ்ரீஹரியின் ஆசியுடனும் முயற்சிக்கிறேன் குருவே.''

வகுப்பு நிசப்தமானது. எல்லாரின் பார்வையும் குருவிடமும், பின் சசிதரனிடமும் தாவித்தாவி, பின் வேங்கடநாதனிடம் நிலைத்தது.

""ஏன் வேங்கடநாதா! விளக்கம் கூறலாமே...'' என்றான் சசிதரன் எக்காளமாக.

""ம்...'' என்றவர் இருகரம் குவித்து கண்மூடி ஸ்ரீஹரியினை பிரார்த்தித்துப் பேசலானார்.

""இவ்வுலகினை உண்டாக்கிய மாபெரும் சக்தியே இறைவன். சகல உயிர்களையும், உயிருள்ள அனைத்து வஸ்துக்களையும் உருவாக்கி உலவவிட்டவன் இறைவன்.

அவனே சிருஷ்டி கர்த்தா. அண்டம் பிரம்மாண்டமானது. சிருஷ்டித்தவன் ஆதி அந்தமில்லாத விஸ்வரூபி. நீர் படைத்தான், நிலம் படைத்தான், தாவரம் படைத்தான். மனிதம், விலங்கு என படைத்தான். இரண்டிற்குமான பொது உயிர் படைத்தான். ஆக, அசையும் வஸ்துக்களை மட்டுமல்லாது, கண்ணுக்குப் புலப்படாத பல லட்சோப லட்சம் உயிர்களும் படைக்கப்பட்டன.''

""என்ன வேங்கடநாதா... நான் படைத்தவனைப் பற்றிக் கேட்டால், நீ படைக்கப்பட்டவற்றைப் பற்றிக் கூறுகிறாயே... விடையினைத் தேடிக் கொண்டே தடுமாறி உளறுகிறாயோ?'' என்று சசிதரன் கேட்க, அவன் ஆதரவுகள் குபீரென்று சிரித்தன. "ஹோ ஹோ...' என்று கேலியாய் பெருங்குரலெடுத்து சப்தமிட்டனர்.

""நீர் நிரம்பவே அவசரப்படுகின்றீர். நான் விரிவாக விளக்க ஆசைப்படுகிறேன். அது எனது பொறுப்புமாகும். அடையாளங்களால் அறியப்படுவதுதான் அனைத்துமே. அதன் பரிமாணங்கள் மனதுள் ஞாபகமாகவோ, சுவையாகவோ, வலி யாகவோ, வாசனையாகவோ, ஒலி- ஒளியாகவோ பதிகின்றன. அடிப்படையில் ஒன்று விருப்பமாக அல்லது விருப்பமற்றதாக பலப்பலவற்றை பலவாறாக நாம் அடையாளப்படுத்தி உணர்கிறோம். உதாரணத்துக்கு, வாழை மரம் என்றவுடனேயே அதன் மிகப்பசுமையான- மென்மையான இலைகள், சில்லென்ற மரத்தண்டு, குருத்துகள், குலைகள், கனிகள்... பின் கன்றுகள் என்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளாக அதன் உருவம் சிந்தனையில் உட்கார்ந்துவிடுகிறது. லட்டு என்றவுடன் நேர்த்தியான மஞ்சள் நிறம், அதன் உருண்டை வடிவம் மட்டுமல்லாது, நாக்கிற்கும் அந்த இனிப்பு ஞாபகம் உடனடியாக மனக்கண்ணின் தொகுப்பில் வந்துவிடுகிறது. இப்படி பலவும் அடையாளங்களால் அறியப்படுவது போல, இறை தரிசனம் என்பதும் ஒரு உன்னத அடையாளம்தான். எனினும், அது அனுபவ அடையாளம். தேடல்களின் முடிவில் மட்டுமே வாய்க்கும் முடிவில்லாத அனுபவம்.இறை தரிசனம் என்பது முன்பே ஒருவனுக்கு வாய்த்திருந்தால்தான் அது பற்றி உணரமுடியும். சாமான்யமான ஒன்றா அது... எப்பேற்பட்ட உயரிய விஷயம். முன்ஜென்ம வாசனை, அந்தந்த ஜென்மாவில் செய்த புண்ணியங்கள், பெற்றோர் செய்த புண்ணியங்கள்... அதனாலேயே வாய்த்த ஆசிகள்... இப்படி படிப்படியான பல நல்லவை மட்டுமல்லாது, இறையை நாமும் மனப்பூர்வமாக அணுக, நமது உள்ளார்ந்த ஆன்மாவின் தேடுதல்களுக்கு மனமிரங்கி அருள் செய்யும் பொருட்டு, இறைவனே மனம் குளிர்ந்தால் மட்டுமே இறை தரிசனம் கிட்டும். மாறாக...''

""ஆக, சரீரம் தேய நாம் செய்யும் உபச்சாரங்கள் இறைவனைக் குளிர்விக்க, அவர் வருவார் என்கிறாயா?''

""இல்லை. இது சரியான புரிந்து கொள்ளல் இல்லை. பல ஜென்மம் எடுத்தும் புண்ணியங்களின் நிறைவிலும், ஆத்ம சமர்ப்பணத்திலும், தன்னலமற்ற பேதமற்ற சரணடைதலில் மட்டுமே இறைவன் நம்மை ஆட்கொள்வான். நீர் சொல்லும் அல்லது செய்யும் உபச்சாரம்- நீரெடுத்து அபிஷேகித்தல், மலரெடுத்து தொடுத்து சூட்டி, இனிப்பு படைத்து தீபம் காட்டுதல் என்பது சாமான்ய கிரகஸ்தர் அனைவரும் செய்வதல்லவா? இதற்குப் பெயர் மரியாதை. ஆம்; அதுவே பூஜை என்பதும். இதயசுத்தி இல்லாத சரீர சேவைக்கு மட்டும் இறைவன் மனமிரங்குவான் என்று எண்ணுவது முட்டாள்தனம். அல்லது மனது செய்யும் பாசாங்கு.''

""அதன்படி பார்த்தால் நிஷித்தமான சரீரம் கொண்டு செய்யும் அனைத்தும்

அபத்தமானதா?''

""அல்ல அல்ல. சரீரம் நிஷித்தமானது என்று வேதங்களே கூறினாலும், தர்மம் செய்ய சரீரம்தான் ஆதாரமே. நல்லவை பல செய்ய சரீரம்தான் ஆதாரமாக இருக்க வேண்டியுள்ளது. இறைவனின் சிருஷ்டியில் அற்புதமானது மனித ரூபமே. பிறவி வாழ்ந்து முடிக்க சரீரம் தேவை. அந்த ஆண்டவன் நமக்களித்த ஜென்மாவை, அவன் நமக்களித்த தேகத்தின் உதவிகொண்டு, நயனங்களால் நல்லவை கண்டு, செவிகளால் நல்லவை கேட்டு, நாவால் நல்லது பேசி, பின் அதை பிறருக்கும் உபதேசித்து, எத்தகைய இடர் வரினும் சத்தியத்தை விட்டு விலகாமல், தர்மம் செய்து சத்தியமாகவே வாழ்ந்து வருவது உன்னதம்.

தர்மமே சத்யம். சத்தியமே தர்மம்.

அலையலையாய் இடர் வரினும் சத்தியத்தை மட்டுமே நாம் கடைப்பிடித்தல் உத்தமம். எள்முனை அளவும் சத்தியத்தை விட்டு நகராது- நீ வேறு சத்தியம் வேறல்ல என்று- நீ சத்திய தேகமாய் சத்தியக் கொழுந்தாய் ஜொலிக்க, இறைவனே ஓடோடி வந்து உன்னை ஆட்கொள்வான். நயனம் முழுக்க இறைவன் காட்சி- நாசி முழுக்க இறைவன் வாசனை- செவி முழுக்க நாத ரூபமாய் இறைவன், நா முழுக்க கடவுளின் சுவை- எண்ணம் முழுக்க இறைவன்... இறைவன் என்ற தேகானுபவமே இறையனுபவமாக மாற, நாம் வேறு இறை வேறு என்ற பேதமில்லா நிலையில், அந்த இறைவனே தன்னோடு இணைத்துக்கொள்வான்'' என்று வேங்கடநாதனின் குரலின் திடம் உச்சம் சென்று முடிக்க, வகுப்பு முழுக்க கரவொலி எழும்பியது. அது அடங்க சற்று நேரமுமானது.
சக மாணவர்களின் கைத்தட்டலில் பூரணமான மகிழ்ச்சி இருந்தது. தேடலின் பதில் கிடைக்கப் பெற்றதும், நிம்மதி அனைவரின் முகக்குறிப்பிலும் உணர முடிந்தது. சசிதரன் மட்டும் மனதுள் அனலாய் இருந்தான். அவனின் வன்மம் நீறுபூத்த நெருப்பாய் இருந்தது. அவன் வேங்கடநாத னின் விளக்கத்தைப் பாராட்டவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. மூக்கு சிவக்க, இமைகளில் உஷ்ணம் பரவ உட்கார்ந்து கொண்டான்.

மனிதருள் பலர் இப்படித்தான் விபரீத மாகவே இருந்துவிடுகின்றனர். நல்லவற்றை அங்கீகரிக்க முனைப்புக் கொள்வதில்லை. அந்த நல்லவர்களின் புன்னகைகளைக்கூட புறந்தள்ளுவதோடு, அவர்கள் அமைதியாக ஒதுங்கி மெனம் கொண்டாலும் அதையும் பரிகசிக்கின்றனர். சசிதரன் வேங்கடநாதனைப் புறந்தள்ள அடுத்த சந்தர்ப்பத்தை எதிர் நோக்கலானான். குரு சுதீந்திரர் மிக்க மகிழ்ச்சி கொண்டார். தனக்கான இடத்திலிருந்து எழுந்து இறங்கி சீடர்கள் அமர்ந் திருந்த இடம் வந்து வேங்கடநாதனை மகிழ்ச்சியுடன் தொட்டு ஆசிர்வதித்தார்.

""உனது கண்ணோட்டமும் உனது கோணமும் ஒரே விஷயத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகின்றது. தெரிந்த விஷயமேயானாலும், தெளிந்த ஞானத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றாய் வேங்கடநாதா'' என்று மனம் திறந்து பாராட்டினார். அருகழைத்து தோள் தட்டினார்.

இத்தனை நேரமும் அத்தனை நிகழ்வினையும் உள்நுழைந்து நின்றிருந்து பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் குருராஜனையும், அடுத்து நின்றிருந்த நரசிம்மாச்சாரியரையும் ஒருசேரக் கண்டதினால் முகம் மலர்ந்தார் வேங்கடநாதன்.

""வாருங்கள் அண்ணா. வாருங்கள் மாமா. அக்காள் நலமா?'' என்று கூறிக்கொண்டே நரசிம்மாச்சாரியாரை இருகரம் கூப்பி வணங்கி தலைதாழ்த்தி நின்றார்.

தனது மாணவனும் மனைவியின் தம்பியுமான வேங்கடநாதனின் அறிவு நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரம் போன்றது மட்டுமல்ல; அது இயற்கையிலேயே சூரியனைப்போன்று பிரகாசிக்கவல்லது என்பதனை தெளிவுற நேரில் கண்டதனால் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானார்.

""என்ன வேங்கடநாதா... ஊருக்குச்சென்று வரவேண்டுமென்று தோன்றுகிறதா?'' என்று கேட்ட சுதீந்திரர் புன்னகைத்தார்.

""அப்படி ஏதுமில்லை குருவே'' என்றார் பணிவுடன்.

""இல்லையப்பா. காலம் கனிவுடன் நம்மை கைப்பிடித்து அழைத்துச் சென்று பலப்பலபொழுது பலப்பல சம்பவங்களில் நம்மை கலந்து நிற்க வைக்கிறது. சில சமயங்களில் நாமே சம்பவமாகவும் அல்லது சம்பவத்திற்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறோம். அது நியதி. நாம் அதற்குட்பட்டுதான் நடக்க வேண்டுமப்பா. சென்று வா வேங்கடநாதா. இதோ, இவர்கள் கண்டெடுத்தவரின் கரம் பிடிக்கும் நேரம் வந்துவிட்டதப்பா உனக்கு. போய் வா.''

""நான் போகத்தான் வேண்டுமா ஸ்வாமி? இன்னும் பயில வேண்டுவன அநேகம் இருக்க,

நான்...'' என வேங்கடநாதன் முடிக்கும் முன்பாகவே-

""நீ சென்று இங்கு மீண்டும் அவசியம் வருவாய் வேங்கடநாதா... சுபமஸ்து'' என்று ஆசிர்வதித்து மூவருக்கும் மந்திராட்சதை கொடுத்து அனுக்கிரகித்தார்.

அடுத்த நாள் மூலராமர் பூஜை முடித்து அந்த பெரிய மண்டபத்தில் வேங்கடநாதன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்க, சுதீந்திரரின் கண்கள் ஏனோ பனித்தன. மதிய உணவுக்குப் பிறகு யதிகளிடம் விடைபெற்று மூவரும் கிளம்பினர்.

வாலிபம் தடுமாற்ற பருவம். பெண் என்றால் வணங்கும் தெய்வம். அதே பெண்ணினை உரிய பருவத்தில், வாலிபம் விலகி வெட்கம் கொண்டு மோகம் செய்யும் வினோதமும் நடக்கும். பெரியோர்கள் இதனை நன்கு உணர்ந்தே, தெரிந்தே உரிய நேரத்தில் உரிய பருவத்தில் பொருத்தம் பார்த்து, இனம் தேடி விசாரித்து, சகலமும் ஆலோசித்து உற்றார் ஊரார் முன்னிலையில் திருமணம் முடித்து வைப்பர்.

"இவள் உனது பத்தினி. இதுநாள்வரை இன்னாருக்கு மகளாயிருந்தவள், இன்றிலிருந்து இவள் உனது சொந்தம். உன்னுடன் தர்மமாய் வாழ்ந்திருந்து நெறிகாக்கப் போகின்ற சகதர்மினி. அவள் உனது சொந்தம். குழந்தையிலிருந்து வளர்ந்து பெரியவளாகி, பல வருடங்கள் பெற்றவர் பராமரிப்பிலிருந்தவள். இதோ சகலமும் சட்டென்று உதறி நீயே கதியென்று உன் அடியொற்றி வந்துவிட்டவள். இவளை எத்தருணத்திலும் கைவிடாது உயிராய்க் காப்பாய்' என்று கணவனுக்கும்-

"பெண்ணே! அருந்ததி காண்பித்து அக்னி வலம் வந்து உன் மணாளனுடன் மாமனார் இல்லம் வந்து, மருமகள் என்ற பதத்திற்கேற்ப இன்னொரு மகளாய் இருப்பாய். உன் கணவனே உனது உயிர். அவனே சகலமும். அவன் சொல் மீறாது உனது தாய்வீட்டின் கௌரவம் காப்பாய். உனது பிறந்தகம் பற்றி போற்றிப் பேசும்படிக்கு நடந்துகொள் தாயே' என மனைவிக்கும் தன்மையான வார்த்தைகளால் வகுப்பெடுத்து தங்கள் அனுபவங்களை பெரியோர் மென்மையாகப் பூசுவர்.

வேங்கடநாதன் சிறுவயதில் பெற்றோரை இழந்ததால், அவருக்கு முறையாகச் செய்ய வேண்டியவற்றை தமையன் குருராஜனும், நரசிம்மாச்சார்யாரும் முன்னின்று அனைத்தும் செய்தனர். அவர்மீது அபரிதமான அன்பை செலுத்தினர்.  அதனாலேயே திருமணப்பேச்சினையும் வேங்கடநாதனிடம் நேரிடையாகப் பேசத் தலைப்பட்டனர்.

""பாரப்பா வேங்கடநாதா! நாங்கள் உன்னை அழைத்துச்செல்ல வந்ததன் காரணம் என்னவென்று உனக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.''

""ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது மாமா.''

""நீ ஞானம் அதிகம் பெற்றவன். நானும் இதை அனுமானித்தேன். உரிய வயது உனக்கு வந்துவிட்டதனால் உனது திருமணத்தை முடிக்கவேண்டிய கடமையிலிருக்கிறோம். மேலும் இது எங்களது பொறுப்பும்தானே.''

""இருப்பினும்... நான் கற்கவேண்டியது அநேகம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, குரு ஸ்ரீசுதீந்திர ஸ்வாமிகள் பல்வேறு சபைகளில் வாதம் செய்ய என்னையும் அழைத்துப் போக எண்ணியிருந்தார். எனக்கது இன்னும் நல்ல பயிற்சியாக இருக்கும் என்ற ஆவலில் இருந்தேன். அதையே தர்க்கம் கற்க களமாக எண்ணியிருந்தேன். அதனாலேயே...''

""மிகவும் பெருமையாயிருக்கிறது வேங்கடநாதா. வாழ்வின் ஒவ்வோர் அசைவையும் முன்கூட்டியே யோசிக்கிறாய். கல்வியில் உனது ஆழ்மை மட்டுமின்றி அடுத்த கட்டத்திற்கு நகரும் திசையையும் நீ தீர்மானித்திருப்பது துல்லியமானதுதான் என்பதனை ஒப்புக்கொள்கிறேன். நாங்கள் உனது திருமண வயதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதே என்பது பற்றி நீயும் புரிந்துகொள்ள வேண்டும்.''

""தங்கள் கருத்திற்கு மறுபேச்சு என்று தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம். இன்னும் சற்று அவகாசம் எடுத்திருந்தால்...''

""இல்லறம் என்ற நல்லறத்தையும் நீ கற்கவேண்டிய வயதிது  வேங்கடநாதா.''

""மன்னிக்க வேண்டும் மாமா. இருந்தாலும்...''

""பாரப்பா, பரத்வாஜ முனிவர் தெரியுமல்லவா. கற்றது கைமண் அளவே.

அது எவ்வளவு கற்றாலும் அதுவே. வாழ்க்கை மட்டுமே நமக்கு அநேகம் கற்பிக்கப்போகிறது என்பதனையும் நீ கருத்தில் கொள்ள வேண்டும்.''

""மன்னிக்க வேண்டும். தங்கள் மனது நோக நான் பேசியிருப்பின் தாயன் போடு என்னை மன்னிப்பீராக. எப்போதும் எனது நலனையே யோசிக்கும் உங்கள் அனைவரின் அன்பைப் பெற்றதற்கு நான் ஆண்டவனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். தங்களின் ஆசிப்படியே நடக்கட்டும். எனக்கும் சம்மதமே'' என்று சொல்லி தன்னருகே சிரம் தாழ்த்தி நின்ற வேங்கடநாதனின் பணிவில் மகிழ்ந்து, அவரின் சிரம் தொட்டு ஆசிர்வதித்தார் நரசிம்மாச்சார்யார். இருவரின் உரையாடலுக்கிடையில் மரியாதை நிமித்தமாக இடைபுகாத குருராஜனுக்கு, தம்பியின் எண்ணவோட்டத்தின் தூய்மை கண்டு பெருமையாயிருந்தது.

வேதம் முழுக்க பரிபூரணமாகக் கற்க நினைத்தார் பரத்வாஜ முனிவர். ஆயுள் போதாது என்ற நிலை வந்தபோது, பிரம்மதேவரை நோக்கித் தவமிருந்து, ஆயுள் நீடிப்பு வரம் பெற்று கற்பதைத் தொடர்ந்தார். வரம் முடிவுக்கு நெருங்குகையில், மறுபடி தவமிருந்து ஆயுள் நீடிப்பு பெற்றார். இன்னும் இன்னும் என்று கற்றும், கற்பது தொடர்ந்துகொண்டே இருந்தது. இம்முறை பிரம்மன் பொறுமை இழந்தார்.

""முனிவரே, எதற்கு மீண்டும் மீண்டும் ஆயுளை நீடிக்க வரம் கேட்கிறீர்?''

""ஸ்வாமி, நான் இன்னும் அநேகம் கற்கவேண்டியுள்ளது. பயிலப் பயில இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே, எனது நியாயமான கோரிக்கைக்கான- தவத்திற்கு நேர்மையான வரத்தைதானே நான் கேட்கிறேன்'' என்றார்.

பிரம்மதேவர் புன்னகைத்தார்.

""சரி முனிவரே. அதோ பாரும் நமக்கு முன்னால் நெடிதுயர்ந்து நிற்கிறதே...''

""விண்முட்ட எழுந்து நிற்கும் இந்த பர்வதத்தை (மலையை) சொல்கிறீர்களா ஸ்வாமி?''

""ஆம். நீர் கற்க வேண்டிய கல்வியின் அளவுதான் அது.''

""அப்படியெனில்...''

""இதோ இந்த கைப்பிடி மண்ணளவுதான் நீ இதுவரை கற்றது'' என்றவர் கைப்பிடியளவு மண்ணை அள்ளி அவர் முன்பாக தரை சிந்தினார். ""இன்னும் ஆயுள் வரம் வேண்டுமா முனிவரே உமக்கு?''

""போதும் ஸ்வாமி. தவறுணர்ந்தேன். நான் இதுவரை கற்றது கொண்டு திருப்தியுறுகிறேன்'' என்ற முனிவருக்கு அநேக வரமளித்து மறைந்தார் பிரம்மதேவர்.

தனது சகோதரன் வேங்கடநாதனின் பரத்வாஜர்போல் கற்கும் பசிக்கு நரசிம்மாச்சார்யார் முற்றுப்புள்ளி வைத்தது நிம்மதியே என நினைத்தார். ஆனால் முற்றுப்புள்ளி தற்காலிகமானது என்பதை உணர்த்த காலம் காத்துக் கொண்டிருந்தது.

நல்லதொரு நாளில், வேங்கடநாதனுடன் தமக்கை வேங்கடம்மாள் உடன்வர, நால்வரும் பெண் பார்க்க புவனகிரிக்குச் செல்லலாயினர்.

அந்த இல்லம் முழுக்க ஆண்களும் பெண்களும் நிறைந்திருந்தனர். ஒரு நிறைந்த சுமங்கலி தோள் பிடித்து அழைத்து வர, கால்கள் பின்ன நடந்து வந்தாள் அப்பெண்.

மிதமாய் கண்களுக்கு மையிட்டு மஞ்சள் பூசி, நெற்றி நடுவே மெல்லிய திலகமிட்டு, தலையில் மல்லிகை சூடி நடுக்கூடத்திற்கு வந்து மௌனமாக நின்றவளை வேங்கடம்மாள் சந்தோஷப் பூரிப்புடன் பார்த்தாள். கண்களுக்கு நிறைவாக, பொலிவாக, மென்மையாக நின்றிருந்த இவளே வேங்கடநாதனுக்கு ஏற்றவள் என்ற முடிவுக்கு வந்தாள். தனது தம்பிக்கும் பிடிக்க வேண்டுமே என்ற கவலையும் வந்தது. தனது கணவனின் நிறைவான முகத்தினையும், குருராஜனது உதட்டுப் புன்னகையும் கண்டு திருப்தியடைந்தாள்.

""உனது பெயர் என்னவென்று எங்களுக்கு நீ உரக்கச் சொல்லலாம் அல்லவா'' என்றார் நரசிம்மாச்சார்யார்.

""சரஸ்வதி பாய்'' என்று மெல்லிய குரலில் அந்தப் பெண் சொன்னது அந்த அமைதியான கூடத்தில் தெளிவாய்க் கேட்டது.

வேங்கடநாதன் மெல்ல தலைநிமிர்ந்து பார்த்தார். அந்த நடுக்கூடத்தில் சேலை யுடுத்திய மெல்லிய குத்துவிளக்கு நின்றிருப்பதாக நினைத்தார். மனதில் ஏனோ ஹரி வாயுஸ்துதி எழுந்தது. அந்நேரம் இங்குமங்கும் பறந்துசென்ற கிளிகளின் குரல்கள் "ராம் ராம்' என்பதாய் ஒலித்தன. மௌனமாய், ஆனால் அவரின் லேசான தலையசைப்பில் அவரின் இசைவை, சரஸ்வதி தனது மெல்லிய கடைக்கண் பார்வையில் யாருமறியாது சட்டென்று பார்த்து மீண்டு வெட்கத்தில் தன்னுள் கவிழ்ந்தாள்.

வேங்கடநாதனுக்கு தனது தந்தையும் தாயும் மனக்கண்முன் வந்தனர். தீர்க்கமாய் திம்மண்ணர், கோபிகாம்பாள் உருவம் பிசிறில்லால் எழுந்தது, சிரித்த கோலத்தில் கரம் உயர்த்தி வாழ்த்தி ஆமோதித்தனர்.

வேங்கடநாதருக்கு உடல் சிலிர்த்து அதிர்ந்தது. செவிக்குள் லேசாய் சிம்மத்தின் உறுமல். கண்மூடி உள்வாங்கினார்.

கி.பி. 1619-ஆம் ஆண்டு புவனகிரி ப்ராம்ணோத்தமரின் மகளான சரஸ்வதி பாயை வேங்கடநாதன் திருமணம் செய்து கொண்டார்.

(தொடரும்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :