Add1
logo
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு! || மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி || பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்! || பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல - கமல்ஹாசன் || ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் || பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் பெருவாரா? சந்தேகம்தான் -வைகைசெல்வன் || மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர் || பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது || பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது || ஸ்டாலினுடன் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு (படங்கள்) || எந்தவிதத்தில் நியாயம்? திருமாவளவன் ஆர்ப்பாட்டம் || 7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் ||
Logo
ஓம்
மீண்டும் அவதரிப்பாரா ராகவேந்திரர்?
 ................................................................
மங்களம் பெருக்கும் மணநாள்!
 ................................................................
அதிசயம் புரிந்த பரதேசி சித்தர்!
 ................................................................
இறந்தவர்களை உயிர்ப்பித்த பம்பலேஸ்வரி தேவி!
 ................................................................
ஏப்ரல் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பிதுர் சாபம் நீக்கி பிரம்ம ஞானம் அருளும்
 ................................................................
ராம தரிசனம் பெற்ற துளசிதாசர்!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசி யோகம்!
 ................................................................
ஏப்ரல் மாத ராசிபலன்கள்
 ................................................................
கடவுளைத் தேடி...
 ................................................................
ஜனக நந்தினி ஜானகி!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
சர்வக்ஞ மூர்த்தி சங்கரர்!
 ................................................................
01-04-17சங்கர ஜெயந்தி 30-4-2017
முனைவர் இரா. இராஜேஸ்வரன்


லக அளவில் கிறிஸ்துவ சமயத்தை ஏறத்தாழ 33 சதவிகித மக்களும், இஸ்லாம் சமயத்தை 22 சதவிகித மக்களும், இந்து சமயத்தை 14 சதவிகித மக்களும் பின்பற்றி வருகிறார்கள் என சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் முன்பு தோன்றியது இந்துசமயம். பழமையான இந்த சமயத்திற்கு முன்பு "சனாதன- வைதீக தர்மம்' (சமயம்) என்று பெயர். ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் "இந்து சமயம்' என்கிற பெயர் வந்தது. யாரால்- எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது எனக்கூற முடியாதது இந்து சமயம். இந்து சமயத்தின் ஆணிவேர் வேதங்கள். "ஸத்யம் வத; தர்மம் சர' என்பது வேத வாக்கியம். இங்கு தர்மம் என்பதற்கு கடமை எனப் பொருள் கூறலாம். அதாவது- வேதத்தில் எது சொல்லப்பட்டதோ அதை அனுஷ்டிப்பதுதான் தர்மம். அதற்கு நேர்மாறாக செய்தால் அது அதர்மம்.

கலியுகத்தில் வேத தர்மத்திற்கும்- குறிப்பாக இந்து சமயத்திற்கும் ஒரு காலகட்டத்தில் சோதனை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரின் கோரிக் கையை ஏற்று, பரமசிவனே கேரள மாநிலத்திலுள்ள காலடி எனும் கிராமத்தில் "சங்கரர்' எனும் பெயரில் அவதரித்தார். வேதங்களை போதிக்கும் சனாதன தர்மத்திற்கு விரோத மான மதங்கள் தோன்றி, அவற்றின் பிரச்சாரத்தினால் மக்கள் மயங்கிக் குழப்பமடைந்தபோது சரியான வழிபாட்டு முறைகளும் கைவிடப் பட்டன. தர்மநெறியைக் காக்க தானே அவதரிப்பேன் என,

"பரித்ராணாய ஸாதூநாம்
விநாசாயச துஷ்க்கிருதாம்
தர்ம ஸம் ஸ்தாபநார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே'
(கீதை: 4:8)

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ண பரமாத்மா சொல்லியதற்கேற்ப, கடந்த திரேதா, துவாபர யுகங்களில் இராமாவதாரம், கிருஷ்ணவதாரம் என எடுத்தது போன்று, கலியுகத்தில் "சங்கரர்' எனும் பெயரில் சிவபெருமான் அவதாரம் எடுத்து தர்மநெறியைக் காப்பாற்றினார்.

"முக்த்வா மௌனம் வடவிடபிநோ
மூலதோ நிஸ்ஸரந்தீ
சம்போர் மூர்த்திச்சரதி
புவனே சங்கராசார்ய ரூபா.'

"கல்லாலின் கீழ் நால்வருக்கு சின் முத்திரையால் மௌன உபதேசம் செய்த பரமகுருவே (தட்சிணாமூர்த்தி) இப்போது சங்கராச்சாரியராக (ஆதிசங்கரர்) உலாவுகிறார்' என ஸ்ரீமத் சங்கர திக்விஜயத் தில் ஸ்ரீவித்யாரண்யர் கூறுகிறார்.

இன்றைக்கு இந்து சமயம் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியுள்ளது. இப்படிப் பல நூற்றாண்டு காலமாக இந்துசமயம் அழியாமல் இருப்பதற்கு ஸ்ரீஆதிசங்கரரே காரணகர்த்தா எனக் கூறலாம். அவருக்குப் பின்பு ஸ்ரீஇராமானுஜர், ஸ்ரீமத்வர் உள்ளிட்ட பல சமய குருமார்கள் தோன்றி சமயத்தை நல்வழியில் நடத்தினர்.

ஸ்ரீஆதிசங்கரர் ஐந்து வயது இளம்பாலகனாக இருந்த காலத்தில், ஓர் ஏழை இல்லத்தரசியின் வறுமையை "கனகதாரா ஸ்தோத்திரம்' மூலம் போக்கினார். இந்த ஒரு சம்பவமே பின்னாளில் உலக மக்களின் துயரைத் துடைக்க எத்தகைய காரியங்களைச் செய்வார் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

ஸ்ரீஆதிசங்கரரின் அவதார நோக்கத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. நலிந்த இந்து மதத்தை சீர்படுத்தி மறுமலர்ச்சியடையச் செய்தது.

2. பாஷ்யங்கள், தோத்திரங்கள் இயற்றியது.

3. மடங்களை நிர்மாணித்தது.

நர்மதை நதிக்கரையில் தவம் செய்துகொண்டிருந்த கோவிந்த பகவத்பாதரிடம் இளம் பாலகனான சங்கரர் முறைப்படி சந்நியாசம் பெற்று, வேதாந்த தத்துவத்தை குருவிடம் உபதேசம் பெற்றார்.

பிற மதங்களின் வளர்ச்சியாலும் அதன் ஆதிக்கத்தாலும் இந்துசமயம் சற்று நலிவடைந்தது. வேதத்திற்கும், தர்ம நெறிக்கும் விரோதமான செயல்களில் மக்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் பக்தி உணர்வைப் பரப்பி, இந்த அவல  நிலையை முற்றிலும் போக்க வேண்டிய பொறுப்பு ஆதிசங்கரருக்கு இருந்தது.

பல்வேறு விதமான வழிபாட்டு முறைகள், மதச்சடங்குகள் என இருந்ததால் இந்துக்கள் குழப்பமடைந்தனர். இதைத் தீர்க்க பரமசிவனை வழிபடுவோர் (சைவம்), மகாவிஷ்ணுவை வழிபடுவோர் (வைணவம்), கணபதியை வழிபடுவோர் (காணாபத்யம்), சக்தியை வழிபடுவோர் (சாக்தம்), முருகனை வழிபடுவோர் (கௌமாரம்), சூரியனை வழிபடுவோர் (சௌரம்) என ஆறுவகையான சமயப்பிரிவினை வழிபாட்டுக்காக ஸ்ரீஆதிசங்கரர் ஏற்படுத்தினார். இதனால் அவரை "ஷண்மத ஸ்தாபகர்' எனச் சொல்வதுண்டு.

இந்தியா முழுவதும் பாதயாத்திரை சென்று ஆங்காங்கு கோவில்களை நிர்மாணம் செய்தல், முந்தைய கோவில்களில் இருந்த வழிபாட்டு முறையை சீர்திருத்துதல், அங்கு ஸ்ரீ சக்கரம் மற்றும் யந்திரங்களை ஸ்தாபனம் செய்தல் போன்ற திருப்பணிகளைச் செய்தார். இதன்மூலம் மக்களை சன்மார்க்கத்தில் நடக்கத் தூண்டினார்.

தவறான வழியில் சென்று கொண்டிருந்த மக்களை நல்வழிப்படுத்தி சரியான வழிக்குக் கொண்டுவந்தார்.

சர்வக்ஞ மூர்த்தி யும், பிரம்ம ஞானியுமான ஸ்ரீஆதிசங்கரர் வேதங்கள், உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட அத்வைத தத்து வத்தை எளிய முறையில் எடுத்துரைத் தார். பிற மதவாதி களை தன்னுடைய வாதத்திறமையால் வென்று அத்வைத சித்தாந்தத்தை நிலை பெறச் செய்தார். மேலும் காஷ்மீரிலுள்ள சர்வக்ஞ பீடத்தில் ஏறி அத்வைத சித்தாந் தத்தை உலகறியச் செய்தார்.

இரண்டாவதாக பகவான் வேதவியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கும், கிருஷ்ண பகவான் உபதேசித்த பகவத் கீதைக்கும், முக்கியமான சில உபநிஷத்து களுக்கும் பாஷ்யம் (உரை) எழுதினார்.

பிரம்ம சூத்திரத்திற்கும் பகவத் கீதைக்கும் உரை எழுதுவதென்பது அவ்வளவு  எளிதான காரியமல்ல. நன்கு படித்த ஒரு ஞானியால்தான் வேதாந்த கருத்துகளை எளிமை யாக்கி அனைவருக்கும் புரியும்படி எழுதமுடியும். இந்த அரிய செயலை ஆதி சங்கரர் சுமார் 16 வயதிலேயே செய்து முடித்து விட்டார். இது தவிர "விவேக சூடாமணி', "ஆத்ம போதம்' உள்ளிட்ட நூல்களில் வேதாந்த சாஸ்திர நுட்பங்களை உள்ளடக்கி எழுதினார்.

மக்கள் இறைவழிபாட்டின்மூலம் நற்கதியடைய எல்லா மூர்த்திகள் பேரிலும் பல ஸ்தோத்திரங்களை இயற்றினார். அவற்றை இறைவனின் நற்குணத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமாக அமைத்தார். கணேச பஞ்சரத்னம், சுப்ரமண்ய புஜங்கம், சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம், அன்னபூர்ணா ஸ்துதி, மீனாட்சி பஞ்சரத்னம், காலபைரவாஷ்டகம், லட்சுமி நரசிம்ம பஞ்சரத்னம், சிவானந்த லஹரீ, கிருஷ்ணாஷ்டகம், கோவிந்தாஷ்டகம் உள்ளிட்ட பல ஸ்தோத்திரங்களை நித்திய பாராயணத் திற்காக இயற்றியுள்ளார். அதேபோன்று அம்பிகையின் துதியான சௌந்தர்ய லஹரியைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அளித்தார்.

மூன்றாவதாக ஸ்ரீஆதிசங்கரர் தமது காலத்திற்குப் பிறகும் இந்து சமயமும், வேத சாஸ்திரங்களும் தொடர்ந்து காப்பாற்றப் பட வேண்டும் என்கிற நோக்கில், இந்தியா வின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை உருவாக்கினார். அவரால் நிறுவப்பட்ட மடங்கள் இன்றுவரை நிலைத்திருந்து ஆதிசங்கரர் காட்டிய வழியில் நடந்துகொண்டே இருக்கின்றன. வருங்காலத்தைப் பற்றிய தொலைநோக்குடன் அவர் மடங்களை உருவாக்கினார்.

தேசிய ஒற்றுமையை வளர்க்க, அன்றே ஆதிசங்கரர் அக்கறை காட்டியுள்ளார். கிழக்கு, மேற்கு திசைகளில் அவர் தோற்றுவித்த மடங்கள் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளன. அதேபோன்று வடக்கு, தெற்கு திசைகளில் தோற்றுவித்த மடங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. வட இந்தியாவில் பிறந்த ஸ்ரீசுரேஸ்வரர் தென்பகுதியில் இருக்கும் சிருங்கேரி மடத்திற்கு அதிபதியாகவும், தென்னிந்தியாவில் பிறந்த ஸ்ரீதோடகரை வடபகுதியான பத்ரிமடத்திற்கு அதிபதியாகவும் நியமித்தார்.

இந்த மூன்று மகத்தான பெரிய காரியங்களை ஸ்ரீ ஆதிசங்கரர் குறுகிய 32 வயது காலத்தில் செய்ததால், உலகம் அவரை இன்றும் போற்றி வணங்குகிறது. இந்து சமயத்திற்கு ஓர் விடிவெள்ளியாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரரால் இந்து சமயத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது.

ஸ்ரீஆதிசங்கரர் அவதரித்து 1,200 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையில் ஒரு தேசியக்குழுவை 1988-ல் நியமித்தது.

அவ்வருடமே இந்திய அரசு தபால்துறை மூலம் ஸ்ரீஆதிசங்கரரைப் போற்றும்  வகையில் ஒரு சிறப்பு தபால்தலையை வெளியிட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :