Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
பொது அறிவு உலகம்
உலக சாதனை படைத்தது இஸ்ரோ!
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை - 2016
 ................................................................
மத்திய பட்ஜெட் 2017-18
 ................................................................
தமிழக முதல்வரும் ஆளுநரும் -கோவி. லெனின்
 ................................................................
01-03-17

பொருளாதார ஆய்வறிக்கை - 2016

* நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் 2016-17-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரம் வருமாறு.

*    மேம்படுத்தப்பட்ட பொருளாதாரங்களால் ஏற்கப்பட்ட நிதிச் செயல்பாடுகள், அதாவது, எதிர்-சுழற்சி கொள்கைகள் மற்றும் கடனை ஒழிப்பதற்கு குறைந்த மதிப்பளிப்பது இந்தியாவுக்கு பொருந்தாது என்பதையே இந்தியாவின் பொருளாதார அனுபவம் காட்டுகிறது.

*    ஆய்வு பொது நிறுவனங்களை, பொருளாதார நிபுணர்கள் தனியார்மயப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கும் நிறுவனங்களையும் கூட, தனியார்மயப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை ஆய்வு தெரிவிக்கிறது. இந்தப் பார்வையில் பயணிகள் விமானத்துறை, வங்கிகள் மற்றும் உரத்துறைகளை மேலும் தனியார்மயப் படுத்துவதற்கான தேவையையும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

*    சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்குவதில் மாநிலங்களின் குறைதிறன், அதிக ஊழல், விதிகள், நிர்வாக சிக்கல்கள் ஆகியவற்றையும் ஆய்வு குறிப்பிட்டுக் காட்டுகிறது. 

*    மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு மானியங்களை குறைப்பதிலும், குறிப்பாக எரிபொருள் சார்ந்த மானியங்களை குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

*    இந்தியா பொருளாதார செயல்பாட்டையும், சீர்திருத்தங்களையும் பொறுத்தவரை நீண்ட தூரம் கடந்துள்ளதை குறிப்பிட்டதோடு, பொருளாதார இயக்கத்தன்மை மற்றும் சமூகநீதியை பொறுத்தவரை இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.  இந்த தூரத்தை கடக்க நடப்பில் இருக்கும் நோக்கம்சார்ந்து மிகப்பெரிய சமூக மாற்றம் தேவை.

*    கணக்கெடுப்பு, செல்லாக்காசு அறிவிப்பு தற்காலிக இடர்களைக் கொண்டிருந்தாலும் நீண்டகால பயன்களைப் பெற்றுத்தரும் எனக் குறிப்பிடுகிறது. இடர்களைக் குறைத்தும், பயன்களைப் பெருக்குவதற்குமான செயல்பாடுகள் வேகமாக நடைபெறுகின்றன. அவற்றில் தேவைக்கேற்ப செயல்படுதல், புதிய நோட்டுகளை அச்சிடுதல்; புதிய வரி சீரமைப்புகள், நிலம் மற்றும் மனைகளை ஜி.எஸ்.டி- க்குள் கொண்டு வருதல், வரி வரம்புகள், முத்திரைத்தாள் விலைகளை குறைத்தல்; வரி வசூலிப்புகள் மீதான பதற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியன இதில் அடங்கும். இந்த நடவடிக்கைகளின் மூலம் மீண்டும் 2017-2018-இல் வளர்ச்சி திரும்பும். அப்போதுஇந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக திகழ வாய்ப்புள்ளது.

*    அறிக்கையின் படி இந்தியாவின் மக்கள்தொகை விவரங்கள் சொல்வதைப் போல வேலைசெய்யத்தக்க இந்திய மக்கள்தொகை அடுத்த முப்பது ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்க இருக்கிறது.  இது இந்தியாவின் வளர்ச்சி அடுத்த ஐந்தாண்டுகளில் உச்சகட்டத்தை எட்ட உந்துசக்தியாக அமையும்.

*    ஆய்வறிக்கை இந்தியாவை தூய்மையான, சுகாதாரமுள்ள, நீர்பாதுகாப்புள்ள நாடாக ஆக்கும் நோக்கத்துடன் செயல்படும் தூய்மை இந்தியா திட்டம் பெண்களின் அடிப்படை அகவுரிமைகளை விரிவுபடுத்தும் முக்கியமான கொள்கை முடிவாக திகழ்வதாகவும் குறிப்பிடுகிறது.*    மக்கள் இடம்பெயருவதற்கு அரசியல் எல்லைகள் தடையை ஏற்படுத்தினாலும், மக்கள் இடம்பெயரு வதற்கு மொழி தடையாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு அரசியல் எல்லைகள் தடையாக உள்ளது என்பது மாநிலத்திற்குள் இடம்பெயர் பவர்களின் எண்ணிக்கை மாநிலங்களைக் கடந்து இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. எனினும் இந்தியை பொது மொழியாகப் பகிர்ந்து கொள்ளாதது மாநிலங்களுக்கு இடையே சரக்குகள் மற்றும் மக்களின் நகர்வுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்துவதில்லை.

*    சீனாவில் அதிகரித்து வரும் ஊதிய அளவுகள் காரணமாக இந்தப் பொருட்களின் சந்தைப் பங்களிப்பை நிலைப்படுத்திக் கொள்வது அல்லது சந்தையை சீனா இழப்பதால் இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரித்துக்கொள்ளமுடியும் என்பதால், உலகளாவிய அளவில் இந்தத் துறைக்கான வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலான இந்திய மாநிலங்களில் குறைந்த ஊதியம் காரணமாக சீனாவின் போட்டித்திறன் மோசமடைந்து வருவதால் இந்தியா தன்னை சிறப்பாக நிலைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகிறது.

*     அதிக அளவில் கால்நடைகள் கொண்ட நாடாகத் திகழும் போதிலும் கால்நடை தோல் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு இந்தியாவில் இறைச்சிக்கான கால்நடைகள் குறைந்த அளவு இருப்பதே காரணம் இதுவே தோல் ஏற்றுமதி துறை சந்தித்து வரும் இன்னொரு பிரச்சினை ஆகும்.

*    நாட்டின் எட்டு பெரிய நகரங்களில் ஏற்கனவே குறையும் போக்கில் இருந்த ரியல் எஸ்டேட் விலைகள் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016 நவம்பர் 8-ஆம் தேதிக்கு பிறகு மேலும் சரிந்தன. இந்த விலைக்குறைவுப் போக்கு விரும்பத்தக்கதே.இதனையடுத்து நடுத்தர மக்களுக்கு கட்டுபடி ஆகும் விலையில் வீட்டு வசதி செய்து தர இயலும். அதிகமான வாடகை காரணமாக தற்போது தடைப்பட்டுள்ள தொழிலாளர்கள் குடிபெயர்வு  மீண்டும் மீண்டும் உயரும்.

* இந்தியப் பொருளாதாரம் குறைந்த பணவீக்கம், நிதிக்கட்டுப்பாடு மற்றும் மிதமான நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றுடன் விரிவான, நிலைத்த ரூபாய் - டாலர் பரிவர்த்தனை வீதம் ஆகியவற்றுடன் நிலைத்த வளர்ச்சி கண்டு வருகிறது.  உலகெங்கும் தொடர்ந்து பொருளாதார மந்த நிலை நிலவியபோதும், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கிறது.

* மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2016-17-இல் நிலையான சந்தை விலைகள் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 7.1 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது  2015-16-இல் 7.6 சதவீதமாக இருந்தது.  நிதியாண்டின் முதல் 7 முதல் 8 மாதங்கள் வரையிலான தகவல்கள் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் அரசின் இறுதி நுகர்வு செலவினம் பெரிய உந்து விசையாக உள்ளது.

*     நிலையான முதலீடுகள் (மொத்த நிலைத்த மூலதன அமைப்பு)  மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரம் (நடப்பு விலைகளின்படி)  26.6 சதவீதம் என 2016 - 17க்கு மதிப்பிடப்பட்டுள்ளது.  2015-16-இல் இது 29.3 சதவீதமாக இருந்தது.

*    புதிய ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவில் புழக்கத்திற்கு வரும் என்பதாலும், பணநோட்டு மதிப்பிழப்பு திட்டத்தின் தொடர் நடவடிக்கை களாலும் இது சாத்தியமாகும்.  மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரம் 2017-18-இல் 6.75 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை மீட்டெழுச்சிப் பெறும்  சாத்தியக்கூறுகள் உள்ளன.

நிதி

*  2016 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மறைமுக வரிகள் 26.9 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்தன.

*     2016 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான வருவாய் செலவினத்தின் வளர்ச்சி 7-வது ஊதியக்குழு அமலாக்கம் காரணமான ஊதிய உயர்வான 23.2 சதவீதம் ஊதிய உயர்வு மற்றும் மூலதன சொத்துக்கள் உருவாக்க மானியம் 39.5 சதவீதம் உயர்வு ஆகியவற்றால் ஏற்பட்டது.

விலைகள்

*     தொடர்ச்சியாக 3-வது நிதியாண்டாக இந்த ஆண்டும் நுகர்வோர்  விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்க வீதம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சராசரி பணவீக்கம் 4.9 சதவீதமாக 2015-16-இல் இருந்தது.  2014-15-இல் 5.9 சதவீதமாகவும், 2015 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அது 4.8 சதவீதமாகவும் இருந்தது.

*     மொத்த விற்பனை  விலைப்புள்ளி அடிப்படை யிலான பணவீக்கம் 2015-16-இல் (-) 2.5 சதவீதமாகக் குறைந்தது. அதற்கு  முந்தைய ஆண்டு அது 2 சதவீதமாக இருந்தது. 2016 ஏப்ரல் முதல் டிசம்பர்  வரையிலான காலத்தில் அது சராசரியாக 2.9 சதவீதமாக இருந்தது.

*     உணவு பொருட்கள் குறிப்பாக, பயறு வகைகள் உணவு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன.

*     நடப்பு நிதியாண்டில் நுகர்வோர் விலைக்குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் ஒரே இடத்தில் நிலைத்து சராசரியாக 5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

வர்த்தகம்

*     2016-17-இல் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) ஏற்றுமதி வளர்ச்சியில் இருந்த எதிர்மறைப் போக்கு ஓரளவு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுமதி வளர்ச்சி 0.7 சதவீதம் ஏற்பட்டு 19,880 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. அதேகாலத்தில் இறக்குமதி 7.4 சதவீதம் குறைந்து 27,540 அமெரிக்க டாலர் அளவாக இருந்தது.

*    2016-17-இல் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டு 7,650 அமெரிக்க டாலராக இருந்தது.  அதற்கு முந்தைய ஆண்டு அதே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 10,010 அமெரிக்க டாலராக இருந்தது.

*     2016-17-ன் முதல் பாதியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 0.3 சதவீதமாகக் குறைந்தது.  அதற்கு முந்தைய ஆண்டு முதல் பாதியில் 1.5 சதவீதமாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை அந்த ஆண்டு முழுமைக்குமாக 1.1 சதவீதமாக இருந்தது.

*     அந்நிய நேரடி முதலீட்டு வரத்து வலுவாக இருந்ததும், அந்நிய பங்கு முதலீடுகள் அதிகரித்தும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரிசெய்ய போதுமானதாக இருந்ததுடன், 2016-17ன் முதற்பாதி யில் அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்தவும் பயன்பட்டன.

*  2016-17-ன் முதல் பாதியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,550 கோடி அமெரிக்க டாலர் உயர்ந்தது.

*         2016-17-இல் இதுவரை இதர வளர்ந்து வரும் பொருளாதார சந்தைகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் ரூபாய் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கடன்

*     2016 செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் அளவு 48,430 கோடி அமெரிக்க டாலர் அளவாக இருந்தது. இது 2016 மார்ச் இறுதியில் இருந்த வெளிநாட்டுக் கடனைவிட 80 கோடி அமெரிக்க டாலர் அளவு குறைவாகும்.

*     2016 மார்ச்சுடன் ஒப்பிடுகையில், 2016 செப்டம்பர் நிலவரம் முக்கிய வெளிநாட்டுக் கடன் குறியீடு களைப் பொறுத்தவரை வளர்ச்சியைக் காட்டியது.  2016 செப்டம்பர் இறுதியில் மொத்த வெளிநாட்டுக் கடனில் குறுகியகால கடன்கள் பங்கு 16.8 சதவீதமாகக் குறைந்தது.  மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையில் 76.8 சதவீதம் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது.

*     இதர அந்நியக் கடன் பெற்றுள்ள வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் முக்கிய கடன் குறியீடுகள் சிறப்பாகவே அமைந்துள்ளன. இந்தியா தொடர்ந்து குறைவான பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

வேளாண்மை

*    2016-17-இல் வேளாண் துறை 4.1 சதவீதம் வளர்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16-இல் இந்த வளர்ச்சி வீதம் 1.2 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளைவிட பருவமழைப் பொழிவு மிகச்சிறப்பாக இருந்ததால், வேளாண்துறை வளர்ச்சி வீதம் உயர்ந்திருப்பது இயல்பானதேயாகும்.

*     2016 - 17-ஆம் ஆண்டுக்கான ரபி பருவ பயிரிடப் படும் நிலப்பரப்பு 13.01.2017 நிலவரப்படி 616.2 லட்சம் ஹெக்டேர் ஆகும். இது சென்ற ஆண்டு இதே வாரத்தில் இருந்ததைவிட 5.9 சதவீதம் கூடுதலாகும்.

*     கோதுமை பயிரிடப்பட்டுள்ள பரப்பை பொறுத்தவரை 13.01.2017 நிலவரப்படி சென்ற ஆண்டைக் காட்டிலும் 7.1 சதவீதம் உயர்வு காணப்படுகிறது. பயறு வகை பயிர்கள், பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு 13.01.2017 நிலவரப்படி 10.6 சதவீதம் கூடுதலாகும்.

தொழில்துறை

*  2016-17-ஆம் ஆண்டில் தொழில் வளர்ச்சி வீதம் மிதமான அளவான 5.2 சதவீதத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16-இல் இது 7.4  சதவீதமாக இருந்தது.  2016-17-இல் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில்  தொழிலியல் உற்பத்தி குறியீட்டில் 0.4 சதவீத வளர்ச்சி காணப்பட்டது.

*     அடிப்படை வசதி சார்ந்த மிக முக்கிய 8  தொழில் துறைகளாக நிலக்கரி கச்சா எண்ணெய், இயற்கை வாயு, எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகள் மொத்தமாக 2016-17 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 4.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. 2015-16 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 2.5 சதவீதமாக இருந்தது.  எண்ணெய் சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, மின்சாரம், சிமெண்ட் ஆகியவற்றின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது.

அதேசமயம் கச்சா எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் உற்பத்தி குறைந்து ​போனது. அதேகாலத்தில் நிலக்கரி உற்பத்தியும் குறைந்தது.

*     கம்பெனிகள் துறையின் செயல்பாடு (இந்திய ரிசர்வ் வங்கி, ஜனவரி 2017) பதிவின்படி விற்பனை வளர்ச்சி 2016-17 இரண்டாவது காலாண்டில் 1.9 சதவீதம் வளர்ச்சியடைந்தது. அதே ஆண்டு முதல் காலிறுதியில் வளர்ச்சி தேக்கமடைந்து 0.1 சதவீதமாக இருந்தது.  நிகர லாபத்தை பொறுத்தவரை அது 2016-17 இரண்டாவது காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவாக 16 சதவீதம் உயர்வடைந்தது.  அதே ஆண்டு முதல் காலாண்டில் நிகர லாபம் 11.2 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

சேவைகள்


*     2016-17-இல் சேவைகள் துறை 8.9 சதவீதம் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16 ஆண்டிலும் இத்துறை வளர்ச்சி வீதம் அதே அளவு இருந்தது.   பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகளில் 7-வது ஊதியக்குழு பணப் பட்டுவாடா மூலம் உயர்வடைந்து சேவைகள் துறை வளர்ச்சி வீதத்தை உயர்த்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாடு

*    2016-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மாற்றுத்திறன் கொண்டோர் உரிமை களை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்தச் சட்டம். அரசு நிறுவனங்களில் காலியிடங்களில் ஒதுக்கீடுகளை குறிப்பிடத்தக்க அளவு ஊனம் உள்ளவர்கள் மற்றும் உயர் அளவு ஆதரவு தேவைப்படுபவர்கள் ஆகியோருக்கான ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தவும் இச்சட்டம் வகை செய்கிறது.

*    சிறிய மாநிலங்களான உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் கோவா நிறைய வணிகம் செய்கின்றன.  உற்பத்திக் கூடங்களான தமிழ்நாடு, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா அதிக ஏற்றுமதி செய்கிறது.

*    விவசாய மாநிலங்களான அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை கூட குருகிராம் மற்றும் நொய்டாவின் காரணமாக உற்பத்திக் கூடங்களாக மாறி விட்டன.  ஊரக தில்லியின் வளர்ச்சியில் இவையும் ஒரு அங்கம் வகிக்கின்றன.

* மாநிலங்களுக்கிடையேயான வணிகம் 68 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நிறுவனங்களுக்கிடையேயான வணிகத்தை விட மாநிலங்களுக்கிடையேயான வணிகம் அதிக செலவு பிடிக்கிறது. 

*    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வணிகத்தையும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த ஏராளமான சுதந்திரத்தை அளித்துள்ளது.  ஒரு  மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பது ஒன்றுபட்ட பொருளாதார இந்தியாவை உருவாக்குவதை விட முக்கியமானதாகும். நீதிமன்றங்களும், பொருளாதார ஒருங்கிணைவை விட, மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தே தீர்ப்புகள் அளித்துள்ளன.

*     இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மாநில அரசுகளின் நடைமுறைகள் ஒரு காரணமாக இருந்து தொய்வை ஏற்படுத்தலாம் என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.   இது போன்ற நடைமுறை சிக்கல்கள் இருந்தன என்றால், முதலீடுகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் இந்த ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும்.  ஆனால் மாநிலங்களிடையே போட்டியை ஊக்குவித்து, வளர்ச்சியை அதிகரிக்கும் இந்த காலகட்டத்திலும் ஏன் இந்த சிக்கல்கள் நீடிக்கின்றன என்பது கேள்வியாகவே நிற்கிறது.

*   இந்திய மாநிலங்களின் வருவாயை வைத்துப் பார்க்கையில் அம்மாநிலங்களில் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது.   ஆனால் மோசமான சுகாதார சேவைகளின் காரணமாக, தாய்சேய் நலன் பாதிக்கப்பட்டு குழந்தைகள் மரணம் அதிகரித்துள்ளது.  இது கடந்த ஆண்டு ஆய்விலும் விவாதிக்கப்பட்டுள்ளது.   

* சர்வதேச அளவில் ஒப்பீடு செய்கையில் மற்ற நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை வைத்துப் பார்க்கையில் இந்தியாவில் குழந்தைப் பேறு விகிதம் குறைவாகவே உள்ளது.  இத்தகைய குறைந்த விகிதம், இந்தியாவின் மக்கட்தொகை தொடர்பான விவகாரங்களுக்கு நல்லதாகவே அமையும்.  

* ஆறு பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய திட்டங்களை ஆய்வு செய்ததில்,(பொது விநியோக திட்டம் மற்றும் உர மான்யம் தவிர்த்து) எந்த மாவட்டத்தில் இதற்கான தேவை அதிகமாக இருக்கிறதோ, அந்த மாவட்டத்தில்தான் அரசின் திறன் பலவீனமாக இருக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.   இந்த நிலை, நேரடியாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருவாய் திட்டத்தின் மூலம் நிதி உதவி செய்வதனால் சரி செய்ய முடியும் என்பதை உணர்த்துகிறது. 

* அடிப்படை வருவாய் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு இரண்டு முக்கிய தேவைகள் உள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.   (1)செயல்படக் கூடிய நிலையில் ஜன்தன் கணக்குகள், ஆதார் அட்டைகள், மற்றும் மொபைல் சேவைகள் (2) செலவுகளை பகிர்ந்து கொள்வதற்கு மத்திய மாநில அரசுகளிடையே உரிய பேச்சுவார்த்தை ஆகும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :