Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
பொது அறிவு உலகம்
உலக சாதனை படைத்தது இஸ்ரோ!
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை - 2016
 ................................................................
மத்திய பட்ஜெட் 2017-18
 ................................................................
தமிழக முதல்வரும் ஆளுநரும் -கோவி. லெனின்
 ................................................................
01-03-17

மத்திய பட்ஜெட் 2017-18

*    நாடாளுமன்றத்தில் 2017-18-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார், மத்திய நிதி துறை அமைச்சர் அருண் ஜேட்லி, 2017-18-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒட்டுமொத்த செலவு ரூ.21.47 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்தார். செலவில் திட்டமிட்ட-திட்டமிடாத என்ற பிரிவுகள் நீக்கப்பட்டதால், தற்போது வருவாய் மற்றும் மூலதன செலவினத்தில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்தார். 2017-18-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2%-ஆக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில் அதாவது 2018-19-இல் 3% என்ற அளவை எட்ட முடியும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார். அதன் முக்கிய விவரம் வருமாறு.நடப்பு நிலை


* கடந்த இரண்டரை ஆண்டுகளில் நிர்வாகம் தன்னிச்சையான, சுய விருப்பப்படியான என்ற அடிப்படையிலிருந்து அமைப்பு மற்றும் வெளிப்படை தன்மை அடிப்படையிலான நிலைக்கு மாறியுள்ளது.

* பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் ஜூலை 2016-இல் ஆறு சதவீதத்திலிருந்து டிசம்பர் 2016-இல் 3.4 சதவீதமாக குறைந்தது.

*    பொருளாதாரம் உயர் வளர்ச்சி பாதையில் நகர்ந்து செல்கிறது. இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை சென்ற ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திலிருந்து  03 சதவீதமாக 2016-17 முதல் பாதியில் குறைந்தது. அந்நிய வெளிநாட்டு முதலீடு 2016-17 முதல் பாதியில் 36 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது உலகளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் 5 சதவீதம் குறைந்த நிலையிலும் எட்டப்பட்டது. 2017 ஜனவரி 20-இல் அந்நிய செலாவணி கையிருப்பு 36100 கோடி அமெரிக்க டாலர் அளவில் இருந்தது.

*        கருப்பு பணத்திற்கு எதிரான போர் தொடங்கப்பட்டுள்ளது.

*    அரசு நிதி ஒருங்கிணைப்பு பாதையில் தொடர்ந்து செல்கிறது. அதேசமயம் பொதுமுதலீட்டை விட்டுகொடுக்கவில்லை.

*     இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது. மிதமான அதிர்ச்சி மற்றும் சர்வதேச பண நிதிய முன்னறிவிப்பு ஆகியவற்றை மீறி 2017 இந்தியா மிக விரைவாக வளரும். பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகியுள்ளது.

சவால்கள்

*     உலக பொருளாதாரம் குறிப்பிடத்தக்க நிலையில்லா தன்மையை எதிர்கொண்டுள்ளது.

* அமெரிக்காவின் இருப்புகள் 2017-இல் கொள்கை வீதங்களை உயர்த்தும் நோக்கம் ஆகியவை குறைந்த மூலதன வளர்ச்சிக்கும், உயர்ந்த அளவு பண வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

*     பொருள் விலைகளில் நிலையற்றத் தன்மை, குறிப்பாக கச்சா எண்ணெய். இதனால், வளரும் பொருளாதாரங்களில் நிதிநிலைமையின் மீது தாக்கம்.

* பொருட்கள், சேவைகள், மக்கள் ஆகியவற்றை உலக மயமாக்களிலிருந்து பின்வாங்கும் அறிகுறிகள்,  தற்காத்துக்கொள்ளும் தாக்கங்கள் காரணமாக ஏற்பட்டவை.

சீர்திருத்தங்கள்

* சரக்குகள், சேவைகள் வரிக்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்  மற்றும் அதனை தாக்கல் செய்வதற்கான முன்னேற்றம்.

*     உயர் மதிப்புள்ள நோட்டுகளை மதிப்பிழக்க செய்த     நடவடிக்கை.

* திவால்கள் நெறிமுறைகள் இயற்றப்பட்டன. ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தத்தின் மூலம் பணவீக்கம் இலக்காக்கப்பட்டது.  நிதி மானியங்கள் மற்றும் பயன்களை வழங்குவதற்கு ஆதார் மசோதா நிறைவேற்றப்பட்டது.

* 2017-18 பட்ஜெட்டில் 3 பெரிய சீர்திருத்தங்கள் அடங்கியுள்ளன. முதலாவதாக பட்ஜெட் தாக்கல் செய்வது பிப்ரவரி முதல் தேதிக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு அரசு அமைச்சகங்கள் எல்லா நடவடிக்கைகளையும் நிதியாண்டு தொடக்கத் திலேயே ஆரம்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

* இரண்டாவதாக ரயில்வே பட்டஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு ரயில்வே துறை மத்திய அரசின் நிதி கொள்கை மத்திய நிலைக்கு கொண்டு வரப்பட்டது. மூன்றாவதாக திட்டம் மற்றும் திட்டமில்லாத செலவின பாகுபாடு அகற்றப்பட்டது. இதனால், துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு ஒதுக்கீடுகள் குறித்த ஒட்டுமொத்த கருத்து கிடைத்தது.

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு

*  வரி ஏய்ப்பு மற்றும் இணை பொருளாதாரம் ஆகிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தைரியமான உறுதியான நடவடிக்கைகள்.

* ஊழல், கருப்பு பணம், போலி நோட்டுகள், பயங்கரவாத நிதி அளிப்பு ஆகியவற்றை அகற்ற அரசின் உறுதிபாடு.

* குறைந்த ஊழல், அதிகப்படியான டிஜிட்டல் மயமாக்கல். நிதி சேமிப்பு அதிகரித்தல், பொருளாதாரத்தின் அதிகப்படியான முறைசார்புத் தன்மை ஆகியன நீண்டகால பயன்களை உருவாக்கும்.* புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு விடுவது அதிகரித்துள்ளது. இது விரைவில் அனைவரும் விரும்பும் நிலைக்கு வந்துவிடும்.

* வங்கி முறைகளில் உள்ள உபரி பணம், கடன் வாங்கும் கட்டணங்களை குறைத்து கடன் கிடைக்கும் நிலையை அதிகப்படுத்தும்.

* பிரதமர் 2016 டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்த கீழ்கண்ட திட்டங்கள் நமது பொருளாதாரத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும். ஏழைகளுக்கு வீட்டுவசதி, விவசாயிகளுக்கு நிவாரணம், குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு ஊக்குவிப்பு, கருவுற்ற பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு உதவி, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மகளிர் ஆகியோருக்கு முத்ரா திட்டத்தில் முன்னுரிமை.

திட்ட வரைபடமும், முன்னுரிமைகளும்


* 2017-18-ன் அலுவல் திட்டம் மாற்றியமைத்தல், வலுவூட்டல், தூய்மையான இந்தியா (Transform, Energise, Clean India (TEC))

*    TEC இந்தியா கீழ்க ண்டவற்றை அடைய முயற்சிக்கிறது.

* ஆளுகையின் தரத்தையும், மக்கள் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றியமைத்தல்.

*    சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சக்தி அளித்தல். குறிப்பாக இளைஞர்களுக்கு, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆற்றல் அளித்து, அவர்களை அவர்களது அதிகபட்ச திறனை அடையசெய்தல்.

*    ஊழல், கருப்பு பணம், வெளிப்படையற்ற அரசியல் நிதி அளிப்பு ஆகிய கொடுமைகளிலிருந்து நாட்டை தூய்மைப்படுத்துதல்.

*     இந்த விரிவான அலுவல் பட்டியலை வளர்க்க பத்து தெளிவான மையக் கருத்துக்கள்

*    விவசாயிகள்- ஐந்தாண்டுகளில் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதி.

*    கிராமப்புற மக்கள்- வேலைவாய்ப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குதல்.

*     இளைஞர்கள்- கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மூலம் அவர்களுக்கு ஆற்றல் அளித்தல்.

* ஏழைகள் மற்றும் வசதிகள் அற்றோர்- சமூக பாதுகாப்பு, சுகாதாரம், கட்டுப்படியாகும் விலையில் வீட்டுவசதி ஆகியவற்றுக்கான அமைப்புகளை வலுப்படுத்துதல்.

* அடிப்படை வசதி- திறமை அதிகரித்தல், உற்பத்தி திறன் மேம்பாடு, வாழ்க்கைத் தர உயர்வு ஆகியவற்றுக்காக.

* நிதித்துறை- வளர்ச்சி மற்றும் நிலைத்தத் தன்மையை வலுவான நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்துதல்.

* டிஜிட்டல் பொருளாதாரம்- விரைவு, பொறுப்பேற்கும் தன்மை, ​வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுக்காக.

*    பொது சேவை- திறம்பட்ட ஆளுகை மற்றும் சேவைகளை மக்கள் பங்கேற்பு மூலம் திறம்பட மேற்கொள்ளுதல்.

* அறிவார்ந்த நிதி நிர்வாகம்- வளங்களை அதிகபட்சம் பயன்படும் வகையில் வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் நிதி நிலைத்தத் தன்மையை பாதுகாத்தல்.

*    வரி நிர்வாகம்- நேர்மையானவர்களுக்கு மரியாதை செலுத்துதல்.

விவசாயிகள்


*    சிறு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்ய தொடக்க ​வேளாண் கடன் சங்கங்கள் 63 ஆயிரத்தை கணினிமயமாக்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் கோர்வங்கி அமைப்பின் மூலம்  ஒருங்கிணைக்க நபார்டு வங்கிக்கு அரசு ஆதரவு அளிக்கும். இது அடுத்த மூன்றாண்டுகளில் 1900 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

கிராமப்புற மக்கள்

* கோடிக் குடும்பங்களை ஏழ்மை நிலையிலிருந்து உயர்த்தவும் 2019-க்குள் 50,000 கிராமப் பஞ்சாயத் துகளை ஏழ்மையற்றவர்களாக மாற்றவும் இவற்றை 2019-இல் காந்தியின் 150-வது பிறந்த ஆண்டுக்கு முன் நிறைவேற்றவும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 5 லட்சம் பண்ணைக் குட்டைகளுக்குப் பதிலாக 10 லட்சம் பண்ணைக் குட்டைகள் 2017 மார்ச்சுக்குள் நிறைவேற்றப்படும். 2017-18-இல் மேலும் 5 லட்சம் பண்ணைக் குட்டைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

*    இந்த திட்டத்தில் மகளிர் பங்கேற்பு 48 சதவீதத்திலிருந்து 55 ஆக உயர்ந்துள்ளது.

*    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்ட ஒதுக்கீடு 2017-18-இல் மிக உயரிய அளவான ரூ. 48,000 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

*    பிரதமர் கிராம சாலைத் திட்டத்தின்படி 2016-17-இல் நாளொன்றுக்கு 133 கி.மீ. சாலை அமைக்கும் வகையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2011-14-இல் சராசரியாக நாளொன்றுக்கு 73 கி.மீ சாலையே போடப்பட்டது.

*    பிரதமர் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த ஒன்றியங்களில் 100 பேருக்கு மேல் வசிக்கும் இடங்களுக்கு சாலை இணைப்பு வழங்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய இடங்கள் அனைத்தும் 2019-குள் சாலை வசதி பெறும். இந்த திட்டத்துக்கு மாநிலங்களின் பங்கினையும் சேர்த்து 2017-18 ஒதுக்கீடு ரூ. 27,000 கோடி.

*    பிரதமர் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் ஒதுக்கீடு 2016-17-இல் பட்ஜெட் மதிப்பீட்டின் படி இருந்த ரூ. 15,000 கோடியிலிருந்து 2017-18-இல் ரூ. 23,000கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 2019-க்குள் 1 கோடி வீடுகளை வீடு இல்லாதவர்களுக்கும் குடிசைகளில் வசிப்பவர்களுக்கும் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* 2018- மே முதல் தேதிக்குள் மூன்று சதவீத கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்துதரும் இலக்கு அடையும் தருவாயில் உள்ளது.

* பிரதமர் வேலைவாய்ப்பு உற்பத்தி திட்டம் மற்றும் கடன் ஆதரவுத் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

*    கிராமப்புற இந்தியாவில் தனிநபர் கழிவறை அமைப்பது 2014 அக்டோபரில் 42 சதவீதமாக இருந்து தற்போது 60 சதவீதத்தை அடைந்துள்ளது. திறந்தவெளி மலக்கழிப்பு இல்லாத கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

*    தேசிய ஊரக குடிநீர்த் திட்டத்தின் துணை திட்டத்தின் பகுதியாக ஆர்சினிக் மற்றும் ஃபுளூரைடு பாதித்துள்ள 28,000 குடியிருப்புக்களுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.

*    கிராமப்புற மக்களுக்கு புதிய திறன்களை வழங்க 2022 வாக்கில் 5 லட்சம் பேருக்கு கொத்தனார் பயிற்சி வழங்கப்படும்.

*    முடிவுகளை நோக்கிய மனிதவள சீர்திருத்தம் என்ற திட்டம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுக்காக 2017-18-இல் தொடங்கப்படும்.

*    கிராமப்புற, விவசாய, அவை தொடர்பான துறைகளுக்கு மொத்த ஒதுக்கீடு ரூ. 1,87,223 கோடி ஆகும்.

இளைஞர்கள்


*    நாட்டின் பள்ளிகளில் மாணாக்கரின் ஆண்டு கற்றல் அடைவுகளை அளப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்படும்.

*    இடைநிலைக் கல்வியில் புதுமைப் படைப்பு நிதியம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் 3479 கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி வசதி கிடைக்கச் செய்தல் பாலின வேறுபாட்டை அகற்றுதல், தர மேம்பாடு ஆகியன ஊக்குவிக்கப்படும்.

*    நல்ல தரமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு மேலும் அதிகமான நிர்வாக மற்றும் கல்வி தன்னாட்சி உரிமை அளிக்கப்படும்.

*    சுவயம் என்ற தகவல் தொழில்நுட்ப மேடை குறைந்தது 350 ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுடன் துவங்கப்படும். மிகச் சிறந்த ஆசிரியர்கள் போதிக்கும் பயிற்சிகளை மாணவர்கள் மின்னணு முறையில் பெறுவதற்கு இது உதவும்.

*    உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை சுய ஆட்சி உரிமைபெற்ற முன்னணி அமைப்பாக உருவாக்கப்படும்.

*    நாடெங்கும் மேலும் 600 மாவட்டங்களுக்கு பிரதமர் மகளிர் மையங்கள் விரிவுபடுத்தப்படும். நாடெங்கும் 100 இந்தியா சர்வதேச திறன் மையங்கள் உருவாக்கப்படும்.

*    திறன் பெறுதல் மற்றும் வாழ்க்கைக்கான அறிவு விழிப்புணர்வு மேம்பாட்டுத் திட்டம் சங்கல்ப்
ரூ 4,000 கோடி செலவில் தொடங்கப்படும். சங்கல்ப் அமைப்பு 3.5 கோடி இளைஞர்களுக்கு சந்தை தேவைக்கு ஏற்ற பயிற்சியை வழங்கும்.

*    தொழிலியல் மதிப்பு மேம்பாட்டுக்கான திறன் வலுப்படுத்துதல் திட்டத்தின் அடுத்த கட்டம் 2017-18-இல் ரூ. 2,200 கோடி செலவில் தொடங்கப்படும்.

*    ஜவுளித்துறையில் இருப்பதைப் போன்று தோல் மற்றும் காலணித் தொழில்துறையிலும் வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு திட்டம் தொடங்கப்படும்.

*    சுற்றுலாவையும் வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் வகையில் உலகெங்கும் நம்ப இயலாத இந்தியா 2.0 இயக்கம் நடத்தப்படும்.

ஏழைகள் மற்றும் வசதிகள் அற்றோர்

*    14 லட்சம் ஐ.சி.டி.எஸ் அங்கண்வாடி மையங்களில் ரூ. 500 கோடி ஒதுக்கீட்டில் மகளிர் சக்தி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் கிராமப்புறப் பெண்களுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, டிஜிட்டல் எழுத்தறிவு, சுகாதாரம், ஊட்டச் சத்து ஆகியவற்றில் ஆதரவு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும்.

* மகப்பேறு பயன்கள் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் பேறுகாலம் பார்த்து குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைப் போடும் பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் தலா ரூ. 6000 செலுத்தப்படும்.

*    கட்டுபடியாகும் விலையிலான வீட்டு வசதி திட்டங்களுக்கு அடிப்படை வசதி அந்தஸ்து வழங்கப்படும்.

*    தேசிய வீட்டு வசதி வங்கி தனிநபர் வீட்டு வசதிக் கடன்களை 2017-18-இல் சுமார் ரூ. 20,000 கோடி அளவுக்கு வழங்கும்.

*    2017-ஆம் ஆண்டில் காலா - ஆசார் மற்றும் யானைகால் நோயையும் 2018-இல் தொழுநோயையும் 2020-இல் மீசில்ஸ் அம்மை நோயையும் 2025-இல் காச நோயையும் முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயிப்பதற்கான செயல்திட்டத்தை அரசு தயாரித்துள்ளது.

*    பிறக்கும்போது குழந்தைகள் இறக்கும் வீதத்தை 2014-இல் இருந்த 39-இல் இருந்து 2019-இல் 28 ஆக குறைக்கவும் பேறுகாலத்தின் போது அன்னையர் இறக்கும் வீதத்தை 2011-13-இல் இருந்த 167-இல் இருந்து 2018-2020-இல் 100 ஆக குறைக்கவும் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

*   இடைநிலை மற்றும் மூன்றாம் நிலைச் சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதற்கான போதுமான சிறப்பு மருத்துவர்களை உருவாக்கும் வரை ஆண்டுக்கு 5000 கூடுதல் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்.

*    ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் இரண்டு புதிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனங்கள் அமைக்கப்படும்.

*    இணக்கமான தொழிலாளர் சூழ்நிலையை வளர்க்க தற்போதுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் 4 சட்டங்களாக எளிமையாக்கி, ஒருங்கிணைக்கப்பட்டு சட்டச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். ஊதியங்கள், தொழிலியல் உறவுகள், சமூகப் பாதுகாப்பு மற்றம் தொழிலாளர் நலம், பாதுகாப்பு மற்றும் பணி நிலைமை என்ற நான்கு துறைசார்ந்த சட்டங்களாக இது அமைக்கப்படும்.

*    மருந்துகள் மற்றும் அழகுப் பொருட்கள் விதிகள் திருத்தி அமைக்கப்படும். மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதையும் மூல மருந்துகள் ஊக்குவிப்பதையும் இது உறுதி செய்யும்.

*    தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு 2016-17 பட்ஜெட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான ஒதுக்கீடு ரூ. 31920 கோடி அளவுக்கும் சிறுபான்மையினர் ஒதுக்கீடு ரூ. 4195 கோடி அளவுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

*    மூத்த குடிமக்களுக்கு அவர்களது ஆரோக்கியவிவரங்கள் அடங்கிய ஆதார் அடிப்படையிலான ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும்.

அடிப்படை வசதிகள்

*    ரயில், சாலை, கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட மொத்த போக்குவரத்து துறைக்கும் 2017-18-இல்
ரூ. 241387 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*    2017-18-இல் ரயில்வேக்கு மூலதன மேம்பாட்டுச் செலவினம் ரூ. 1,31,000 கோடி என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசு வழங்கும் ரூ. 55,000 கோடியும் அடங்கியிருக்கும்.

*    பயணியர் பாதுகாப்பிற்கென தேசிய ரயில்பாதுகாப்பு நிறுவனம் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான நிதியளிப்பு ரூ. 1 லட்சம் கோடி.

*    அகல ரயில் பாதைகளில் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் 2020-க்குள் அகற்றப்பட்டு விடும்.

*    பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். புனித பயணம், சுற்றுலா செல்பவர்களுக்கு தனியாக ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

*    2017-18-இல் 3500 கி.மீ ரயில் பாதைப் பணிகள் தொடங்கப்படும். 2017-18-இல் குறைந்தது 25 ரயில் நிலையங்கள் நிலைய மறு மேம்பாட்டிற்கான விருதுகளைப் பெறும்.

*    500 ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் -நகரும் படிகள் வசதியைப் பெறும்.

*    7000 ரயில் நிலையங்களில் நடுத்தரக் காலத்திட்டமாக சூரியசக்தி மின்சக்தி வழங்கப்படும்.

*    குறுஞ்செய்தி அடிப்படையிலான என் பெட்டியை சுத்தப்படுத்துக என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது.

*    ஒரே இடத்தில் ரயில் பெட்டி தொடர்பான புகார்கள் தேவைகளைப் பதிவு செய்யும் கோச் மித்ரா என்ற திட்டம் தொடங்கப்படும்.

*    2019-இல் இந்திய ரயில்வேயின் அனைத்துப் பெட்டிகளிலும் உயிரி கழிவறைகள் பொருத்தப்படும். செலவுகள் சேவைத்தரங்கள் இதர போக்குவரத்து அமைப்புகளின் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் ரயில்வேக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

*    புதிய மெட்ரோ ரயில் கொள்கை அறிவிக்கப்படும். புதுமையான அமலாக்க மற்றும் நிதியளிப்பு புதுமை மாதிரிகள் இதில் முக்கியத்துவம் பெறும். வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களைப் தரப்படுத்தி உள்நாட்டில் தயாரிப்பதும் இதில் முக்கியத்துவம் பெறும்.

*    புதிய மெட்ரோ ரயில் சட்டம் இயற்றப்படும். தற்போதுள்ள சட்டங்களை ஒருங்கிணைத்து இது இயற்றப்படும். இதன் மூலம் ரயில்வே அமைப்பு மற்றும் நடைமுறைகளில் தனியார் பங்கேற்பு அதிகரிக்கும்.

*    சாலைத்துறையில் 2016-17-இல் இருந்த பட்ஜெட் மதிப்பீடான ரூ. 57,976 கோடியிலிருந்து 2017-18-இல் ரூ. 64,900  கோடியாக உயர்த்தப்படும்.

*    2000 கி.மீ. கடலோர இணைப்புச் சாலைகள்அமைப்பதற்கும், மேம்பாட்டிற்கும் திட்டமிடப் பட்டுள்ளது. 2014-15 முதல் நடப்பு ஆண்டு வரை பிரதமர் கிராமப்புற சாலை திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் மொத்தமாக 140000 கி.மீ. சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.

*    இரண்டாம் நிலை நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்கள் தனியார் பொதுத்துறைப் பங்களிப்பு முறையில் அமைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

*    2017-18 இறுதியில் உயர்வேக பிராட் பாண்ட் ஒளியிழை கேபிள் மூலமான இணைப்பு பாரத் நெட் அமைப்பின் கீழ் 150000 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு கிடைத்துவிடும். தொலைதூர மருத்துவம், கல்வி, திறன்கள் ஆகியவை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வழங்குவதற்கான டிஜிகோவன் திட்டம் தொடங்கப்படும்.

*    ஒடிசா மாநிலம் சாந்திஹோல் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் ஆகிய இடங்களில் மேலும் இரண்டு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கச்சா எண்ணெய் இருப்பு நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நமது கச்சா எண்ணெய் இருப்புத்திறன் 15.33 மில்லியன் மெட்ரிக் டன் அளவை எட்டுகிறது.

*    கூடுதலாக 20000 மெகாவாட் திறனுக்கான 2-வது கட்ட சூரியசக்தி பூங்கா மேம்பாட்டுத் திட்டம் வழங்கப்படும். இந்தியாவை மின்னணு உற்பத்தியின் உலக மையமாக மாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்த 2017-18-இல் ரூ. 745 கோடி செலவிலான ஊக்குவிப்புத் திட்டம் அமலாக்கப்படும்.

*    ஏற்றுமதி அடிப்படை வசதியை நோக்கமாகக் கொண்ட புதிய சீரமைக்கப்பட்ட மத்தியத்திட்டம் ஏற்றுமதிக்கான வர்த்தக அடிப்படை வசதித் திட்டம் என்ற பெயரில் 2017-18-இல் தொடங்கப்படும்.

நிதித்துறை

*    அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் 2017-18-இல் அகற்றப்படும். அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மேலும் தாராளமயமானதாக மாற்றுவது பரிசீலிக்கப்படுகிறது.

*    வேளாண்துறையில் ஸ்பார்ட் சந்தை மற்றும் டெரிவேட்டிவ் சந்தை ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைமுறை சாத்தியமான சட்ட கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும். மின்னணு தேசிய வேளாண் சந்தை இந்தக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.

*    சட்ட விரோத டெபாசிட் திட்டங்களை அகற்றுவதற்கான மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும். நிதி நிறுவனங்களைக் கலைத்து விடுவது தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படும். இவை நமது நிதி அமைப்பின் நிலைத்த தன்மைக்கும் மீட்டெழுச்சி நிலைக்கம் உதவியாக அமையும்.

*    அடிப்படை வசதிகள் தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தங்கள், பொதுத்துறை, தனியார்துறைத் திட்டங்கள் மற்றும் பொது உபயோகத் துறை ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஏற்படும் தாவாக் களுக்கு தீர்வுகாண  நிறுவன அமைப்புக்களை சீரமைக்கும் நடவடிக்கை 1996-ஆம் ஆண்டு மத்தியஸ்த மற்றும் தாவா தீர்ப்பு சட்டத்தின் திருத்தமாக அறிமுகப்படுத்தப்படும்.

*    நிதிதுறைக்கான கணிணி அடிப்படை அவசரகால நடவடிக்கை குழு உருவாக்கப்படும்.

*    ஒருங்கிணைந்த பொதுத்துறை மாபெரும் எண்ணெய் நிறுவனம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச மற்றும் உள்நாட்டு தனியார்துறை எண்ணெய், வாயு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் அமைக்கப்படும்.

*    பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் இதர அரசு பத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட புதிய பரிவர்த்தணை வர்த்தக நிதியம் 2017-18-இல் தொடங்கப்படும்.

*    இந்திரதனுஷ் காலக்கெடு திட்டத்தைப் போன்று வங்கிகள் மறு முதலீட்டுக்கென ரூ. 10000 கோடி 2017-18-இல் வழங்கப்படும்.

*    பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ்  கடன் வழங்கும் இலக்கு ரூ. 2.44 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்படும். இதில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

டிஜிட்டல் பொருளாதாரம்

*    இதுவரை பீம் செயலியை 125 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். பீம் செயலி பயன்பாட்டை மேம்படுத்த அரசு 2 திட்டங்களைத் தொடங்க உள்ளது. தனி நபர்களுக்கு பரிந்துரை போனஸ் திட்டம், வியாபாரிகளுக்கு ரொக்கம் திரும்ப வழங்கும் திட்டம் ஆகியன இவை.

*    ஆதார் உதவியுடனான செலுத்துகை அமைப்பின் வர்த்தக பதிப்பான ஆதார் பே என்ற அமைப்பு விரைவில் தொடங்கப்படும்.

*    2500 கோடி டிஜிட்டல் பர்வர்த்தனை என்ற இலக்குடன் இயக்கம் ஒன்று 2017-18-இல் யு.பி.ஐ. யு.எஸ்.எஸ்.டி. ஆதார் பே, ஐ.எம்.பி.எஸ்,  டெபிட் அட்டைகள் மூலமாக உருவாக்கப்படும்.

*    குறிப்பிட்ட தொகைக்கு கூடுதலான அனைத்து அரசு ரசீதுகளையும் டிஜிட்டல் அமைப்புகள் மூலம் கட்டாயமாக வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

*    2017 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் புதிய விற்பனை முனையங்களை அறிமுகப்படுத்த வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2017 செப்டம்பருக்குள் ஆதார் அடிப்படையிலான விற்பனை முனையங்களை அறிமுகப்படுத்த வங்கிகள் ஊக்குவிக்கப்படும்.

*    ரிசர்வ் வங்கியில் தற்போதுள்ள செலுத்துகைகள் தீர்வுகளுக்கான கட்டுப்பாட்டு மேற்பார்வை வாரியத்திற்குப் பதிலாக செலுத்துகை கட்டுப்பாட்டு வாரியத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை


*    பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்முதல் செய்வதற்கான அரசு மின்னணு சந்தை தற்போது செயல்பட்டு வருகிறது.

*    தலைமை அஞ்சல் அலுவலகங்களைப் பாஸ்போர்ட் சேவை வழங்குவதற்கான முன்னிலை அலுவலகங்களாகப் பயன்படுத்தும் திட்டம்

*    மத்தியமாக்கப்பட்ட பாதுகாப்பு பயண அமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் பயணச் சீட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.

*    பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு  நேரடித் தொடர்பு அடிப்படையிலான ஓய்வூதிய விநியோக அமைப்பு  வெப் அடிப்படையில் உருவாக்கப்படும்.

*    நடுவர் மன்றங்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்தி சாத்தியமான இடங்களில் நடுவர் மன்றங்களை ஒன்றாகச் சேர்த்தல்.

*    சம்பாரன், கோர்தா புரட்சிகளை ஏற்ற வகையில் நினைவு கூர்தல்

அறிவு சார்ந்த நிதி நிர்வாகம்


*    மூலதன செலவின் ஒதுக்கீட்டை 25.4 சதவீதம் உயர்த்துதல்

*    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்ட மொத்த ஆதாரங்கள் 2016-17 பட்ஜெட் மதிப்பீடு அளவான ரூ. 3.6 லட்சம் கோடியிலிருந்து ரூ. 4.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.

*    முதன் முறையாக அனைத்து அமைச்சகங்கள் , அனைத்து துறைகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பட்ஜெட்டில் இதர பட்ஜெட் ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்படுகிறது.

*    அடுத்த 3 ஆண்டுகளுக்கு 3 சதவீத நிதிப்பற்றாக்குறையை எப்.ஆர்.பி.எம் குழு பரிந்துரை செய்துள்ளது.

*    கடன் இலக்கு பொது முதலீட்டுக்கான அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 2017-18 ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசு வரும் ஆண்டில் 3 சதவீத நிதிப்பற்றாக்குறையை அடைவதில் உறுதியுடன் உள்ளது.

*    அரசின் நிகர சந்தை கடன் பெறுதல் ரூ. 3.48 லட்சம் கோடியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது ரூ. 4.25 லட்சம் கோடியாக இருந்தது.

*    2016-17-ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டின் 2.3 சதவீத வருவாய்ப் பற்றாக்குறை மறுமதிப்பீட்டில் குறைக்கப்பட்டு 2.1 சதவீதமாக உள்ளது. அடுத்த ஆண்டுக்கான வருவாய்ப் பற்றாக்குறை 1.9 சதவீதமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின்படி இது 2 சதவீதமாக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

*    சிறிய மற்றம் நடுத்தர வரிசெலுத்துவோருக்கு அனுமான வருமான திட்டத்தின்படி மொத்த வியாபாரம் ரூ. 2 கோடிவரை இருக்கும் போது தற்போதைய 8 சதவீத அனுமான வருமானம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது.

*    ரூ. 3 லட்சத்துக்கும் கூடுதலான எந்தப் பரிமாற்றமும் ரொக்க அடிப்படையில் அனுமதிக்கப்பட மாட்டாது. இதில் சில விதி விலக்குகளும் உண்டு.

தேர்தல் நிதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை

*    இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் முறையைத் தூய்மைப்படுத்துவது அவசியமாகிறது.

*    அதிகபட்ச ரொக்க நன்கொடை தனிநபரிடமிருந்து ஒரு அரசியல் கட்சி பெறும் அளவு ரூ. 2000 ஆகும்.

*    அரசியல் கட்சிகள் நன்கொடைகளை காசோலை அல்லது டிஜிட்டல் முறைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

*    தேர்தல் கடன் பத்திரங்களை வழங்குவதற்கான ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் திருத்தம் மத்திய அரசு ஏற்படுத்தும் திட்டத்தின்படி கொண்டுவரப்படும்.

*    அரசியல் கட்சிகள் அனைத்தும் வருமான வரிக் கணக்குகளை வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

*    வருமானவரி செலுத்துவதிலிருந்து அரசியல் கட்சிகளுக்கு தற்போதுள்ள விலக்கு இந்த நிபந்தனைகள் நிறைவு செய்யும் நிபந்தனையின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரி

* தற்போதுள்ள தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு வருமானம் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத் திற்கு தற்போதைய வரிவீதம் 10 சதவீதம் என்பது ஐந்து சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

* ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை ஆண்டு வரி செலுத்தக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்களுக்கு கூடுதல் வரி 10 சதவீதம் வீதம் விதிக்கப்படும்.

*    ரூ.5 லட்சம்வரை வரி செலுத்தக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்கள் ஒருபக்க வருமான வரி படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இது வர்த்தக வருமானத்துக்கு அப்பாற்பட்ட தனிநபர் வருமானத்துக்கானது.

* வருமான அளவு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உள்ள இந்திய குடிமக்கள் மிகக் குறைந்த வருமான வரியான 5சதவீத வரியை செலுத்தி தேசிய கட்டுமானப் பணிக்கு பங்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொருட்கள் மற்றும் சேவை வரி


* பொருட்கள் சேவைகள் வரி சபை 9 கூட்டங்களை நடத்தி அவற்றில் ஏற்பட்ட கருத்து ஒருமைப்பாட்டு அடிப்படையில் ஏறத்தாழ அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.

* பொருட்கள் சேவைகள் வரிக்கான தகவல் தொழில்நுட்ப அமைப்பு தயாரிப்பு அதன் கால கெடுவுக்கு ஏற்ப நடைபெற்று வருகிறது.

*  இந்த வரி தொடர்பான விரிவான வர்த்தகம் மற்றும் தொழில்து​றையினர் தகவல் அளிப்பு 2017 ஏப்ரல் முதல் தேதி முதல் தொடங்கும். இதனால் புதிய வரி முறை குறித்து அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.

*    RAPID (வருவாய், பொறுப்பேற்கும் தன்மை, செயல்பாட்டில் தூய்மை, தகவல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல்)

*    வரும் ஆண்டில் மின்னணு மதிப்பீடு நடவடிக்கைகள் அதிகப்படியாக்கப்படும்.

*     குறிப்பிட்ட தவறுகள் இழைக்கும் வரித்துறை அதிகாரிகள் மீது மீண்டும் அதிகமான பதில் சொல்லும்  நிலை அமலாக்கப்படும்.

பட்ஜெட் பார்வை

*    பட்ஜெட் மதிப்பீடுகளை எளிதாக புரிந்துகொள்ள வசதியாக இந்த பிரிவான பட்ஜெட் பார்வை வெளியிடப்படுகிறது. இந்த ஆவணத்தில் வரவினங்களும், செலவினங்களும் கொடுக்கப் பட்டுள்ளன. கூடவே, நிதி பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை, திறம்பட்ட வருவாய் பற்றாக்குறை,தொடக்க நிலை பற்றாக்குறை ஆகியனவும் தரப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தில் வரவுகளின் ஆதாரங்கள் உரிய அட்டவணைகள், வரைபடங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆவணத்தில் மாநிலங்களுக்கு மாற்றித் தரப்பட்ட ஆதாரங்கள் பெரிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் ஆகியனவும் அடங்கியுள்ளன.

*     நிதி பற்றாக்குறை என்பது வருவாய் வரவுகள், கடன் அல்லாத மூலதன வரவுகள் ஆகியவற்றுக்கும் மொத்த செலவினத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடாகும். அனைத்து ஆதாரங்களிலிருந்தும் அரசுக்கு தேவைப்படும் மொத்த கடன்களையும் இது குறிக்கிறது. வருவாய் பற்றாக்குறை என்பது வருவாய் செலவினங்களுக்கும், வருவாய் வரவுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடு.

திறம்பட்ட வருவாய் குறைபாடு என்பது வருவாய் குறைபாட்டுக்கும் மூலதன சொத்துக்கள் உருவக்குவதற்கான மானியத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். தொடக்கநிலை பற்றாக்குறை என்பது நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி செலவினத்தை கழித்துக் கணக்கிடப்படுகிறது.

*  செலவினத்தை பட்ஜெட்டில் கொண்டுவரும்போது, திட்டச் செலவினம், திட்டம் சாரா செலவினம் என்ற வேறுபாடுகளை களைந்திருப்பது, நிதியமைச்சர் 2016-17 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. இது அருண் ஜேட்லி பட்ஜெட் நடைமுறையில் கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்த முயற்சியாகும். இது 2017-18 பட்ஜெட் முதல் அமலாக்கப்படும். இந்த வேறுபாடு களையப் பட்டிருப்பதால், செலவழிக்கப்பட்ட தொகைக ளுக்கும், அதனால் கிடைக்கப்பெற்ற பலன்களுக்கும் இடையேயான இணைப்பு மேம்பட்டு முழுமை யாகவும், முக்கிய கவனத்துடனும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* விவசாயம், சமூகத் துறைகள், அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு முதலீட்டை அதிகரிப்பதில் அரசின் வலுவான உறுதிப்பாட்டை 2017-18-ஆம் ஆண்டு பட்ஜெட் பிரதிபலிக்கிறது. அதேசமயம், நிதியை ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்தும் பாதை பின்பற்றப்படுவதற்கும் அது உறுதி கூறுகிறது. இது 2016-17 மறு மதிப்பீட்டுக்கும் கூடுதலாக ரூ. 1,32,328 கோடி அதிகரித்திருப்பதும், அதேசமயம் நிதி பற்றாக்குறை இலக்கான 3.2 சதவீத அளவை மனதில் கொண்டதாகவும் அமைந்திருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

* 2016-17 மறு மதிப்பீட்டில் மொத்த செலவினம் ரூ. 20,14,407 கோடி என்று அளவிடப்பட்டிருந்தது. இது 2016-17 பட்ஜெட் மதிப்பீடுகளைவிட, ரூ. 36,347 கோடி கூடுதலாகும். அதன்படி, நிதி பற்றாக்குறை 2016-17க்கான இலக்கான 3.5 சதவீதம் அடையப்பட்டுள்ளது. அதேசமயம் மறு மதிப்பீட்டு நிலை செலவினத்தில் குறைவு ஏதுமின்றி அடையப்பட்டுள்ளது.

*    2015-16 முதல் வரி வசூலில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட பங்கு பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த போக்கை தொடரும் வகையில், வரிகள், மானியங்கள், கடன்கள், மத்திய அரசு திட்ட வழங்குதல்கள் ஆகியவற்றில்  மாநிலத்திற்கு பகிர்ந்து  அளிக்கப்படும் பங்கு உள்ளிட்ட மாநிலங்களுக்கான ஆதாரங்கள் 2017-18 பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.10,85,075 கோடி. இது 2016-17 மறு மதிப்பீட்டைக்காட்டிலும் ரூ. 94,764 கோடி கூடுதலாகும். 2015-16-ஆம் ஆண்டு உண்மை நிலவரத்தைவிட, இது ரூ.2,50,592 கோடி கூடுதலாகும். இந்த உண்மைகள் அரசின் கூட்டுறவு சமஸ்டித்தன்மை மீதான உறுதிப்பாட்டையும், மாநிலங்கள் வளரும்போது நாடு வளர்கிறது என்ற கொள்கையில் மத்திய அரசின் வலுவான நம்பிக்கையையும் வெளிபடுத்துகின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :