Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
பொது அறிவு உலகம்
உலக சாதனை படைத்தது இஸ்ரோ!
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை - 2016
 ................................................................
மத்திய பட்ஜெட் 2017-18
 ................................................................
தமிழக முதல்வரும் ஆளுநரும் -கோவி. லெனின்
 ................................................................
01-03-17

தமிழக முதல்வரும் ஆளுநரும் -கோவி. லெனின்

ந்திய அரசியலமைப்பில் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெறாமலும், மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படாமலும் ஆட்சியில் அதிகாரம் செலுத்தும் பதவியாக அமைந்துள்ளது ஆளுநர் பதவி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிலிருந்து முதல்வர் தேர்வு செய்யப்படுகிறார்.

அவரது தலைமையிலான ஆட்சியைக் கட்டுப் படுத்தும் அதிகாரம் கொண்டவராக ஆளுநர் இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரை மத்திய அரசு நியமிக்கிறது. அரசியல் சூழல்களுக்கேற்ப ஆளுநர் நியமனம்-மாற்றம் ஆகியவை நடைபெறுகின்றன. மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றம், மத்திய அரசுக்கும்-மாநில அரசுக்குமான இணக்கம்-முரண்பாடு இவற்றைப் பொறுத்தும் ஆளுநர் நியமனங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.

இவையெல்லாம் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் நடைமுறைகளாக சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து வருகின்றன. மத்திய அரசினர் தேர்வு செய்யும் ஆளுநரை குடியரசுத் தலைவர் முறைப்படி அந்த மாநிலத்தில் நியமிப்பார். ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் அதே மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப் படுவது தவிர்க்கப்படுகிறது.

ஆளுனர் என்பவர் அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடப்பதை உறுதி செய்பவர். அவருக்கு மூன்றுவகை அதிகாரங்கள் உண்டு :

நிர்வாக அதிகாரம்  (Executive powers) -முதல்வரை நியமிப்பது, முதல்வர் ஆலோசனையின் படி அமைச்சர்களை நியமிப்பது, இதர சில உயர் பதவிகளுக்கான (பல்கலைக்கழக துணைவேந்தர்உள்ளிட்ட வற்றுக்கு) ஆட்களை நியமிப்பது உள்ளிட்டவை.

 சட்டமியற்றும் அதிகாரம் (Legislative powers) - சட்டமன்றக் கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பது, சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, சட்டமன்றத்தையே கலைப்பது, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் தேவைப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றுவது உள்ளிட்டவை.

விருப்புரிமை அதிகாரம் (Discretionary powers) மாநில ஆட்சியாளர்கள் தமது விருப்பத்திற்கும் தேவைக்காகவும் கொண்டு வரும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பது ஆகியவை இதில் அடங்கும். இந்த விருப்புரிமை அதிகாரம் என்பதை ஆளுநர் தன் சுயவிருப்பத்திற்கேற்ப செயல்படுத்த முடியாது. மாநிலத்தின் நலன், சட்டம்-ஒழுங்கு இவற்றைக் கருதியே செயல்படுத்திடவேண்டும்.

நிர்வாக அதிகாரத்தின்படி, ஆளுநர் தான் முதல்வருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து நியமிக்கிறார். எனினும் அவர் தன் விருப்பத்திற்கேற்ப எவரையும் முதல்வராகப் பதவியேற்கச் செய்துவிட முடியாது. சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்வு செய்த தலைவரைத்தான் முதல்வராக நியமிக்க  வேண்டியது ஆளுநரின் கடமை.

தனக்குள்ள விருப்புரிமையின் அடிப்படையில், பெரும்பான்மை பலம் உள்ள கட்சியின் சட்டமன்றத் தலைவரைத் தவிர்த்துவிட்டு வேறொருவரை முதல்வராக நியமனம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

மாநிலத்தில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில்,  ஆளுநரின் பணியும் அவர் எடுக்கும் முடிவுகளும் முக்கியமானவையாகும்.

தனிப்பட்ட முறையில் அதிக இடங்களைப் பெற்றுள்ள (பெரும்பான்மைக்கு குறைவாக) கட்சியின் தலைவரை முதல்வராக நியமித்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரலாம். குடியரசுத் தலைவருக்கு நிலவரங்களைத் தெரிவித்து, மத்திய அரசின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம். ஆளுநர் தேர்வு செய்த நபரால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், வேறொருவரைத் தேர்வு செய்யும் அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கிறது. யாராலும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத சூழல் என்றால், அது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்று, சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, குடியரசுத்தலைவர் (ஆளுநர்) ஆட்சியை  அமல்படுத்தும் சூழல் அமையும்.

பெரும்பான்மை பலம் அல்லது அதிக உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட கட்சியின் சட்டமன்றத் தலைவர் என்பவர் எம்.எல்.ஏவாக இருக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.வாக இல்லாதபட்சத்தில், 6 மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்படவேண்டும். அதற்கேற்ப தேர்தலில் போட்டியிடக்கூடிய தகுதி படைத்தவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளை எடைபோட்டு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்வார். குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் பட்ட நபர்கள் முதல்வராக பொறுப்பேற்க முடியாது.

(அண்மையில் தமிழகத்தில் திருமதி. சசிகலா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகப் பதவியேற்க உரிமை கோரினார். அவர் மீதான வழக்கின் தீர்ப்பைக் காரணம் காட்டி, ஆளுநர் காலதாமதம் செய்தார். வழக்கின் தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்ததால் அவரால் முதல்வராக முடியவில்லை) பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை முதல்வராகப் பொறுப்பேற்க அழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை.

பெரும்பான்மை பலம்குறித்து உரிமைகோரு பவர்கள் சரியானமுறையில் கோருகிறார்களா என்பது குறித்து யோசித்து முடிவெடுக்க ஆளுநருக்கு காலஅவகாசம் உண்டு. அந்த கால அவகாசத்திற்கான அளவுகோல் நிர்ணயிக்கப்படாததால், ஒவ்வொரு மாநில ஆளுநரும் தமது விருப்பத்திற்கேற்ப அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

(தமிழகத்தில் சசிகலாவுக்குப் பதில் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தபோது, அவருக்குரிய பெரும்பான்மை பலம் குறித்து முடிவு செய்ய ஆளுநர் அவகாசம் எடுத்துக்கொண்டார்) முதல்வராகப் பொறுப்பேற்றவர், சட்டமன்றத்தில் தனக்கானப்  பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து முடிவு செய்வார்கள். இந்த வாக்கெடுப்புமுறை, சட்டமன்ற சபாநாயகரின் அதிகாரத்திற்குட்பட்டது. குரல் வாக்கெடுப்பு, நேரடி வாக்கெடுப்பு, ரகசிய வாக்கெடுப்பு இந்த மூன்றில் எந்த முறையில் வாக்கெடுப்பு நடத்துவது என்பது சபாநாயகரின் உரிமை சார்ந்ததாகும். சட்டமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக எடுக்கப்பட்டவையா என்பதை ஆளுநர் பரிசீலித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவார். அதனடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாநில ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்காகக் கொண்டு வரும் சட்டங்களையும் நியமனங்களையும் மறுக்கின்ற அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. அதுபோல சட்டம்-ஒழுங்கு நிலைமை சீரழிந்தாலோ, ஆட்சியில் குழப்பங்கள் நிலவினாலோ, நிதிநிலை நெருக்கடியான சூழலில் இருந்தாலோ ஆளுநர் தனது அறிக்கையின்படி சட்டமன்றத்தைக் கலைக்கவோ முடக்கவோ குடியரசுதலைவருக்கு பரிந்துரைக்க முடியும்.

தமிழகத்தில் அரசியல் சட்டப்பிரிவு 356-ன்படி ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி 4 முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அரசு கலைக்கப்பட்டது. 1988-இல் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய அ.தி.மு.க ஜானகி அணி ஆட்சி கலைக்கப்பட்டது. 1989-இல் ஆளுநர் அறிக்கை  தராத நிலையிலும், 356-வது பிரிவின் otherwise என்ற பகுதியின்கீழ் தி.மு.க அரசு கலைக்கப்பபட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

கர்நாடக முதல்வர் எஸ். ஆர். பொம்மை தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 1994-இல் அளித்த தீர்ப்பின் விளைவாக, 356-வது பிரிவைத் தன் விருப்பப்படி கையாளும் மத்திய அரசின் போக்கு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. குடியரசுத்தலைவர் ஆட்சியின்கீழ் ஆளுநரே மாநில நிர்வாகத்தை கையாள்வார். பொதுவாக, 6 மாதகாலத்தில் மீண்டும் சட்டமன்றத்  தேர்தல் நடத்தப்பட வேண்டும். சில வேளைகளில், ஓராண்டு காலம் வரை குடியரசுத்தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஆளுநரின் நிர்வாகம் நீடிப்பது உண்டு.

இந்தியாவின் உயர்ந்த பதவியை வகிக்கும் குடியரசுத்தலைவர், அரசமைப்புக்கு எதிராக செயல்பட்டார் என்றால், அவரை நாடாளுமன்றத்தால் இம்பீச்மெண்ட் (impeachment) முறையில் நீக்க முடியும். ஆனால், ஒரு கவர்னரை மாநில சட்டமன்றத்தால் நீக்க முடியாது.

ஆளுநரை நியமித்த குடியரசுத்தலைவரால்தான் அவரை நீக்க முடியும். பதவியில் இருக்கும் ஆளுநரின் நடவடிக்கைகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருவதும் எளிதன்று. இந்நிலையில், ஆளுநர் தவறிழைக்க நேர்ந்தால், குடியரசுத்தலைவரின் பரிந்துரை பெற்று ஆளுநரை பதவி நீக்கம் செய்யலாம். அல்லது அவரை பதவியிலிருந்து விலகச் செய்யலாம். அதன் பிறகே சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மத்திய அரசின் பரிந்துரைப்படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர் என்பவர் மாநில அரசின் செயல்பாடுகளைக் கண்காணித்து மத்திய அரசுக்கு உளவு அறிக்கை கொடுப்பவர் என்கிற எதிர்ப்புணர்வு நீண்டகாலமாக வெளிப்பட்டு வருகிறது. மக்களால்  தேர்வு செய்யப்படாத பதவியில் வகிக்கும் ஆளுநரின் அதிகாரங்கள், ஜனநாயகத்துக்குஎதிரானவை என்ற கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலைஆளுநர்கள், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசின் முதல்வரின் அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களாக இருக்கிறார்கள். (முழுமையானமாநில அந்தஸ்து பெறாத டெல்லி, யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றின் துணை நிலை ஆளுநர் களின் அண்மைக்கால செயல்பாடு இவற்றிற்கு உதாரணமாகும்) சுயாட்சி மிக்க மாநில அரசு, அனைத்துமாநிலங்களின் நலன்களையும் உரிமைகளையும் ஒருங்கிணைக்கும் வகையிலான மத்திய கூட்டாட்சி என்கிற நிலைக்கு இந்திய ஜனநாயகம்  வலுப்பெறும் காலம் வரை, ஆளுநர் பதவியும் அதன் சர்ச்சைகளும்தவிர்க்க முடியாதவையாகும்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :