Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017
""இளையராஜா அவர்களோடு நான் மீண்டும் இணைந்து பணியாற்றக் காரணமாயிருந்தவர் ராமராஜன்தான் அதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது என்பதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

எல்லா உதவி இயக்குநர்களும் இயக்குநராகும்போது... தான் முன்பு பணியாற்றிய பிரபலங்களின் அரவணைப்போடுதான் அரங்கேறுவார்கள் ஆனால் என் நிலை வேறாகிப்போனது.

"வடிவங்கள்' படத்திற்கு பாட்டெழுதப் போய் பிறகு அந்தப் படத்திற்கே இயக்குநர் ஆனதால், இசையமைப்பாளரை நான் தீர்மானிக்க இயலாத சூழல். "மெட்டி' படத்தில்கூட இளையராஜா இசையில் பாட்டெழுதி அவருடன் கூடவே பவனிவந்தவன். கேட்டிருந்தால் ராஜா முதல் படத்திற்கு இசை அமைத்திருப்பார். சூழல் என்னைச் சிக்கவைத்ததால்...

சந்திரபோஸ் நான் இயக்கிய முதல் படத்தின் இசையமைப்பாளர் ஆனார். இளையராஜாவிடம் கேட்கவே தேவையில்லாமல் போனது.

"யார்' படத்தின் தொடக்க வேலைகள் துரிதமாக நடக்கக் காரணமே இளையராஜா கூறிய அந்த வார்த்தைகள் என்பதால், ""நரசிம்மனின் நாதமழையில்'' என்ற வசீகரிக்கும் வாசகத்தையும் விடாமல் எல்லா விளம்பரங்களிலும் போட்டு அமர்க்களப்படுத்தினார் தாணு சார்...

இரண்டாவது படத்திலும் இளையராஜா இல்லை "யார்' படத்தை அடுத்து மோகன், அமலாவை வைத்து தொடங்கப்பட்ட "உன்னை ஒன்று கேட்பேன்' படத்திற்கும் வி.எஸ். நரசிம்மன் அவர்களே, "யார்' வெற்றியால் இசையமைப்பாளர் ஆனார்.

அந்தப் படத்தின் ஒரு பாடல் படமாக்கப்பட்டு அந்தப் பாடலே சாஜ்புரடக்ஷன்ஸ் "கண்ணே கனியமுதே' படத்தைத் தொடங்க காரணமாயிருந்தது...

"மலரே மலரே' என்ற அந்தப் பாடலில்... "கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம் கண்களோ அந்த மலருக்கே பொருத்தம்' என்று சரணத்தில் எழுதியிருந்தேன். ஒளிப்பதிவு மேதை அசோக்குமார் ஒளிப்பதிவில் அமலாவின் அழகு முகத்தை "ஸ்டில்ஸ்' ரவி பல கோணங்களில் வண்ணப் படங்களாய் வார்த்தெடுத்த "ஆல்பம்' பார்த்த உடனே சாஜ் புரடக்ஷன்ஸ் சாஜன் எங்களை அழைத்துப் பாராட்டி "கண்ணே கனியமுதே' படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். ஆனால் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்தான் என்றும்  உறுதிசெய்ததால் இளையராஜா இல்லை என்றாயிற்று. "உன்னை ஒன்று கேட்பேன்' படத்திற்கு ஒரு நண்பனாய் யாரை அடுத்து தொடங்கப்பட்ட "உன்னை ஒன்று கேட்பேன்' படத்துக்கு ஒரு நண்பனாய் இருந்து கால்ஷீட் கொடுத்த மோகன் ஓர் இசைப்பிரியன்... நாங்கள் ஏற்கெனவே அவருக்குச் சொன்ன "க்ரைம்' கதை வேண்டவே வேண்டாம் என்று எங்களிடம் போராடியும் நாங்கள் கேட்கவில்லை. கதை விவாத நேரத்தில் கலந்துகொண்டு ஹிந்தியில் ஷம்மிகபூர் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸான "ப்ரஃபஸர்' கதையை நகைச்சுவையோடு செய்யலாம்... என ஆணித்தரமாக விவாதித்தும்.. அதை
அலட்சியம் செய்தோம். மோகன் நடிகன் மட்டுமல்ல... ஓர் உண்மையான நண்பன் என்பதையும் நம் நலம் விரும்பி என்பதையும்... நான் உணர்ந்து அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்தாலும் என் உடனிருந்த "சக்தி' அவர்கள், ஒரு நடிகன் சொல்லி நாம் கேட்க வேண்டுமா? என என்னிடம் எதிர்வாதம் செய்து என் எண்ணத்துக்கு தடைபோட்டு விட்டார். மோகன் ஆசைப்பட்ட அந்த புரபஸர் கதை பி.வாசு இயக்க "நடிகன்' என்ற பெயரில் சத்யராஜ், குஷ்பு, மனோரமா நடித்து வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. நாங்கள் மோகனை வைத்து உருவாக்கிய "உன்னை ஒன்று கேட்பேன்' பெரும் வெற்றியோ பேரோ பெற்றுத்தரவில்லை.

நண்பனாய் நடிகர் மோகன் சொன்னது சரிதான் என்றானது... அதுபோலவே அந்தப்பட நேரத்தில் அடுத்துத் தயாரான "கண்ணே  கனியமுதே' கதையும். விமலாரமணி அவர்கள் எழுதிய உலாவரும் உறவுகள் என்ற மாத நாவல் ஒன்றை என் கையில் கொடுத்த தயாரிப்பாளர், "விநியோகஸ் தர்கள் விரும்பும் புதினம் இது... இதையே படமாக்குவோம்,' என்றார்... ஒரு அலுவலகத்தில் டைப் அடிக்கும் பெண் அலுவலக வேலை பார்க்கும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தையும் நான் கடற்கரை ஓரம் இருக்கும் ஒரு கலாசாலைக்கு மாற்றினேன். நடனப்பயிற்சி... இசை... பாரதியாரின் நின்னையே ரதியென்று என்று எல்லா வண்ணக்கலவைகளையும் வாரி இறைத்து உழைத்தும்... ஒரு தவறு நேர்ந்தது. அவ்வளவு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தும், அவசர அவசரமாக படப்பிடிப்பை குறுகிய நாட்களில் நடத்திமுடித்ததும்... சரியான திறமைசாலியான ரசனை உள்ள உதவியாளர்களை வைத்துக்கொள்ளாததும் மிகப்பெரிய தவறு. எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் ஒருவர்தான் அந்தப் படத்தில் ஒரு விவரமான உதவியாளர்.

அருமையான பாடல்கள் கையில் பதிவாகி வைத்திருந்தும் அவசரம் அவசரமாக படமாக்கியது மாபெரும் தவறு. ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலைப்பிடிக்க ஓடுகிற மாதிரி எந்தப் படப்பிடிப்பையும் நடத்தக்கூடாது என்று அந்தப் படம் வெளியாகி எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தது.

"உன்னை ஒன்று கேட்பேன்', "கண்ணே கனியமுதே' இரண்டு படத்திலும் "நான் எழுதிய பாடல்கள்' -படங்கள் பெரும்வெற்றி பெறாத காரணத்தால் மக்களுக்கு சரியாகப் போய்ச்சேரவில்லை... இயக்குநர் கண்ணன் தன்னுள் இருக்கும் பாடலாசிரியர் கவிஞர் கண்ணனுக்கு இழைத்த அநீதி இது! மாபெரும் துரோகம் இது என்றுதான் சொல்லவேண்டும்.

""உனது பெயரைக் கரையில் எழுதும்
கடல்நீர் இனிக்கும்...
உலகம் முழுதும் காதல் என்றால்
உனையே நினைக்கும்...
இரவுகூட பனியின் உருவில்
கண்ணீர் வடிக்கும்... நீ
இல்லை இல்லை இல்லை என்றே
இதயம் துடிக்கும்...''

""புதிய பயணம் தொடங்கும் நேரம்
சிறகினைப் பறித்தாய்...
புன்னகையும்... பூவிழியும்...
கனவென உரைத்தாய்
மயங்க வைக்கும் உனது பாடல்
மரணத்தின் ராகம் -நீ
மறுபடியும் பிறந்து வந்தால்
மறைந்திடும் சோகம்'' -என்ற சரணங்களை
உள்ளடக்கிய
""வருகிறாள் என் தேவதை...
வழியில் எங்கும் பூவிதை...
நெடிய வானம் கடலின் கானம் நெஞ்சை அள்ளுதே- உன்
நினைவு வந்து விழிவந்து கதைகள் சொல்லுதே...

என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடலை கேட்டுப்பாருங்கள்.

பாடலாசிரியர் கண்ணனுக்கு விரோதி வெளியில் வேறு யாருமல்ல... இயக்குநர் கண்ணன்தான் என்பது தெரியும்.

"கண்ணே கனியமுதே'விலும் எம்.எஸ்.வி. இசையில் அற்புதமான பாடல்கள்...

""அகிலம் திரு நடனமிடும்... அற்புதம் நம்நேரில் வரும்''
""ஒரு பிள்ளை அழைத்தது என்னை -நான்
பேர் சொல்ல முடியாத அன்னை''
""தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு-                 நால்வர்
தோள்தரும் நேரமும் ஓர் பாட்டு''
""உலகமெலாம் காதல்விழா எடுப்போம்
உரை எழுத கன்னமதைக் கொடுப்போம்.''

80-களின் மையத்தில் உலகம் முழுக்க காதல்விழா பின் நாளில் நடக் கும் என்று முன்சொன்ன தீர்க்கதரிசிப் பாடலாசிரியர் கண்ணன்.

மேற்சொன்ன இரண்டு படங்களுக்குப் பிறகு ஓர் இடைவெளி ஏற்பட் டது... என்னுடன் இருந்தவர்களை, பணியாற்றியவர்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல். படம் செய்தாக வேண்டும்... என்ன செய்யலாம் என்று தனி ஒருவனாக அலைந்தபோதுதான் நண்பர்கள் சிறுமுதலீடு செய்ய முன்வந்தார்கள். அப்போதுகூட வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் நல்ல வசதியாக மிகப்பெரிய பணபலத்தோடு இருந்த உறவினர்கள் யாரும் உதவமுன்வரவில்லை. நாம் நல்ல நிலைக்கு வந்தால் கொண்டாடுவார்கள்... நம் பெயரை உச்சரிப்பார்கள் அவர்கள் என்று காலம் பாடம் சொல்லிக்கொடுத்தது அப்போது...

நண்பர்கள் ஆளாளுக்கு கொஞ்சம் பணம் போட்டார்கள்... ஓர் இசை யமைப்பாளர் தான் பதிவு செய்து வைத்திருந்த பத்து பாடல்களோடு பங்குதாரர் ஆனார். அதிலிருந்து ஐந்தாறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து கதையோடு காட்சியில் பொறுத்தி ஒரு பெரும் வெற்றிபெற்ற வெள்ளிவிழா படம் கொடுத்தேன். அந்தப் படம்தான் "நம்ம ஊரு நாயகன்'

ஆக இந்தப் படத்திலும் இளையராஜா இல்லை என்று ஆனது. இந்தச் சூழ லில்தான் ராமராஜன் நடித்து குறைந்த செலவில் கூட்டுறவு முயற்சியில் தயாரான நம்ம ஊரு நாயகனின் பெரும்வெற்றி ராமராஜனின் அடுத்தடுத்த படங்களை நான் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

ராமராஜனுக்கும் இளையராஜாவுக்கும் இணக்க இணைப்பும் பிணைப்பும்... வேரூன்றி இருந்த காலம் அது ஆதலால்....

ராமராஜன், இளையராஜா இசையில் நான் பணிபுரிய ஒரு பாலமாக இருந்தார்... "நம்ம ஊரு நாயகனை' அடுத்து ராமராஜன் அவர்களை வைத்து நான் இயக்கிய படம் "அன்புக் கட்டளை' நீண்ட நெடிய கால இடைவெளி... 3 ஆண்டுகளுக்குப் பிறகு நான் மீண்டும் அவரைச் சந்தித்தபோது... அந்தப் பழைய கசந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லை... தவறான பதிவுகளுக்கான தடயங்கள் ஒன்றுகூடத் தென்படவில்லை. முன்பைவிட அதிக அன்பாய் இருந்தார்... பாடல் கம்போஸிங்குக்காக கோவை அருகில் உள்ள ஆழியாறு  அணைக்கட்டு சென்றோம். ஒரு பாதிப்பகலில் கம்போஸிங் வேலை முடிந்தது.

மதிய சைவ உணவு இருவரும் அருகருகே அமர்ந்து வாழை இலைபோட்டுப் பரிமாறப்பட, பழைய கதைகள் பல பேசியபடியே சாப்பிட்டோம்... ""உங்களுக்கு யார் பாட்டு எழுதினால் நன்றாயிருக்கும் என்று தோன்றுகிறதோ அவர்களை வைத்து எழுத வையுங்கள்.. நீங்களே எழுதினாலும் நன்றாக இருக்கும்'' என்று உள்ளம் திறந்து பேசி வாழ்த்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். என்றாலும் நாம் இயக்குநராக மட்டுமே இந்தப் படத்தில் பணியாற்றுவோம் பாடலாசிரியர் பதவி வேண்டாம் என்றுதான் மனதில் முடிவெடுத்தபடி சென்னை திரும்பினேன்.

எனக்குப் பிடித்த ஒரு நல்ல சிச்சுவேஷன் பாடலை அவர் பாடவேண்டும் என்றேன். சரி என்றார். அந்தப் பாடலைக்கூட நான் எழுதாமல் பிறைசூடனை எழுத வைத்தேன்... பாடல் பதிவின்போது பிறைசூடன் வரவில்லை. என்னை அருகில் வைத்துக்கொண்டு வரிகளை இசைக்கேற்ப கதைக்கேற்ப மாற்றி அமைத்து... வார்த்தைகளை என்னிடமே பதிவு அறையில் வாங்கி... திருத்தி எழுதிக்கேட்டு அந்தப் பாடலை உணர்வோடு நூறு சதவீத அர்ப்பணிப்போடு, மேன்மையோடு பாடி முடித்துவிட்டு "கதைக்கு எல்லா வரிகளும் மிகச்சரியாக பொருந்தி இருக்கிறதா... ஏதாவது மாற்றம் வேண்டுமா வேண்டுமென்றால் சொல்லுங்கள்...' என்று எளிமையாக இயல்பாகப் பேசியது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அதன்பிறகு எனக்கு யார் யாரெல்லாம் அட்வான்ஸ் கொடுத்தார்களோ... அத்தனைபேரையும்  இளையராஜா அவர்களுக்கும் அட்வான்ஸ் கொடுக்கவைத்தேன்.

ராமராஜன் அவர்கள் "நம்ம ஊரு நாயக'னில் நடித்த போது- நேரந்தவறாமல் வருவார். எவ்வளவு நேரம் ஆனாலும் விடியவிடிய படப்பிடிப்பில் நடிப்பார் கஷ்ட நஷ்டம் உணர்ந்தும் நடிப்பார். இயல்பாக இருப்பார். "கரகாட்டக்காரன்' வெற்றிக்குப்பிறகு அவருடன் எப்போதும் அருகில் இருந்த ஒரு ஜால்ராக்குழு அவரது நல்ல தன்மைகளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சித்து வெற்றிபெற்றார்கள்.

அர்ச்சனை, ஆலாபனை, வழிபாடுகளில் அவரை என்னிடம் இருந்தும் அந்நியப்படுத்திவிட்டார்கள்.
மிகமிக நல்லவராய் இருக்கும் ஒருவரை உடனிருப்பவர்கள் முயற்சிசெய்தால் எப்படியும் மாற்றலாம் என்பதைநான் என் கண்முன்னே கண்டேன். பொதுவான அமைப்புகளிலும் திரைப்படத்துறை சார்ந்த சங்கங்களிலும்கூட இந்த மாதிரி ஜால்ராக்கள் இப்போது பெருகிவிட்டனர். நல்லவராய் இருக்கும் ஒருவரை வேறுவேலை எதுவும் இல்லாத நான்கைந்துபேர் எப்போதும் சூழ்ந்து கொண்டு தங்களது வழிபாட்டு வளையத்திற்குள் சிக்கவைக்கின்றனர் தங்கமான குணமுடைய வர்களைத் துதிபாடி துதிபாடி கட்டிவைத்து தங்கள் அன்றாட சுயதேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் அவலம் இன்றும் நடக்கிறது... என்ன பிழைப்போ இது!

""இளையராஜா, ராமராஜன், யார் கண்ணன் என மூவரின் பெயரிட்டு ஏழெட்டுப்பட விளம்பரங்கள். ராமராஜன் அவர்கள் பிறந்தநாள் ஒன்றில் தினசரிகளில் வந்தன. சாலிகிராமத்தில் ராமராஜன் வீடு இருந்த வீடு அருகில் இருந்த தெருக்கள் எல்லாம் மக்கள் வெள்ளத்தில் ஆரவாரித்து ஆர்ப்பரித்ததை நான் அன்று கண்டேன்... வந்தவேகத்தில் எல்லாம் தலைகீழாய்ப்போனது. பலரிடமும் ராமராஜன் அவர்கள் வாங்கிக் கொள்ளச் சொன்னதால் நான் முன்பணம் வாங்கிய சுமை இன்னும் என் மனதை அழுத்துகிறது... தேவர் ஃபிலிம்ஸ் தண்டாயுதபாணி அவர்களிடம்கூட ராமராஜன் அவர்களை வைத்து இயக்குவதற்காக நான் முன்பணம் வாங்கினேன். எத்தனையோ பேருக்கு வாழ்வளித்து ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட மிகப்பெரிய நிறுவனம் அல்லவா அது?

அட்வான்ஸ் வாங்கினோமே என்ற அடையாளத்தை வெளியில் காட்டாமல் பல ஜாம்பவான்கள் பிரபலங்கள் மௌனமாய் இருக்கிறார்கள். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனக்கு ஒரு குற்ற உணர்வுமட்டும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது... வாய்ப்புக் கிடைக்கும்போது ஏதாவது ஒருவகையில் அவர்களுக்கு வேலைசெய்து கொடுத்தாவது அதை ஈடுகட்ட வேண்டும் என்று மனசாட்சி உறுத்துகிறது. அவர்களுடைய பணத்தை வேலை எதுவும் செய்யாமல் செய்து கொடுக்காமல் செய்துகொடுக்க நினைக்காமல் வைத்திருப்பது எந்த வகையில் நியாயமாகும்? தர்மமாகும்?

பல பிரபலங்கள் யோகம், ஞானம், தர்மம், நீதி நேர்மை எல்லாம் பேசுகிறார்கள்- எழுதுகிறார்கள்... ஆனால் வாங்கிய பெரும் முன்பணத் தொகையில் ஒரு சிறுபகுதியையாவது உரியவர்க்கு திரும்ப வழங்கினால் சிரமப்படும் பல சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கொஞ்சமாவது பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுபட முடியும்... மனசு

வரணுமே...

"மனம்' என்று பார்க்கிறபோது தமிழ்மனசு நல்ல மனசு; மற்ற மொழிக்காரர் கலைஞர்களுக்கு நல்ல மனசு இல்லை என்றும் ஒதுக்கிவிட முடியாது. மனிதநேயம் கரடுமுரடான தோற்றத்துக்குள் இருந்ததா என்று ஆராய்ந்த நிகழ்ச்சி ஒன்று என் நினைவிற்கு வருகிறது...

"தேவிகா' என்ற ஒரு நடிகை கலையுலகத்தில் இருந்ததும், "கனகா' என்ற அவரது வாரிசுதான் கரகட்டக்காரன் கதாநாயகி என்பதும் நினைவிருக்கலாம். 80-களின் இறுதியில் நான் "கனகா' கதாநாயகியாக நடிப்பதற்காக தேவிகா அவர்களிடம் ஒரு தயாரிப்பாளரின் தொகையை முன்பணமாகக் கொடுத்தேன்... படத்தயாரிப்புக்கு காலதாமதமானது. தயாரிப்பாளருக்கு உடல்நலக் குறைவு. மருத்துவச் செலவுக்கு கையில் பணமில்லை அவரிடம்!... ""தேவிகாவிடம் கேட்க முடியுமா முன்பணத்தை?'' என்றார் தயாரிப்பாளர். கண்கலங்கியது அவருக்கு!

தேவிகா அவர்கள் கரடுமுரடாய்ப் பேசி "கல்மனம்' படைத்தவராக தோற்றமளித்த காலம் அது. உடன் வேலை செய்யும் எல்லோரையும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து தெலுங்கில் திட்டிக்கொண்டே இருப்பார். பாவ மன்னிப்பு, வானம்பாடி போன்ற பல படங்களில் பார்த்த அழகு முகமா இப்படி இரக்கமில்லாமல் அரக்கத்தனமாக நடந்துகொள்கிறது என்று அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும். அவர் முகம் கறுத்து உடல் பருத்து தோன்றினார்...

தன் பெண்ணை பொத்திப் பொத்தி பத்திரமாக பாதுகாத்து பக்கத்திலேயே வைத்திருப்பார்... பார்க்கும் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்... பணம் பேசுவதிலும் அதை வசூலிப்பதிலும் கவனமாக கறாராக இருப்பார். கரகாட்டக்காரனுக்குப் பிறகு... ரஜினிசார் முதற்கொண்டு அத்தனை நாயகர்களோடும் நடித்தவர் கனகா... அதனால் அதிகபட்ச கர்வம் கனகா வின் அம்மாவிற்கு... எனக்கூறி அவர் அருகில் போகவே அஞ்சிய காலம் அது! அவரது கணவர் இயக்குநராக இருந்தவர். தேவிகா வம்பு... வழக்கு என்று கணவரை விட்டுப் பிரிந்து தனியாகவே மகளுடன் வாழ்ந்தவர். என் தயாரிப்பாளரின் நெருக்கடியில் நான் தேவிகா அவர்களைப் பார்த்து அட்வான்ஸ் தொகையை திரும்பக் கேட்கப் போன போது கர்ணகடூரமாக வீட்டின் முன் நின்றுகொண்டிருந்த ஸெக்யூரிட்டியை திட்டிக்கொண்டே என்னைத் திரும்பிப்பார்த்தார்...

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :