Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017டலினும் ஆழமானதாய், வானினும் உயர்ந்ததாய், விரிந்து பரந்த பரப்பினை உடைய தமிழிலக்கியத்தில் சித்தர்கள் யாத்த இலக்கியங்கள், சிந்தனைக்கு ஒளியூட்டுவதாகவும், சீர்மிகு ஞானத்தேடலுக்கு வழிகாட்டுவதாகவும் திகழ்கின்றன.

உடலை வருத்தி உயர்நெறி அடைந்த சித்தர்களின் பாடல்கள் பரவிய அளவுக்கு, அவர்களைக் குறித்த ஆதாரப்பூர்வமான வரலாறுகள் பரவவில்லை, பதியப்படவும் இல்லை.

பதினெண் மேற்கணக்கு என சங்க இலக்கியமும், பதினெண் கீழ்க்கணக்கு என சங்கம் மருவிய காலத்து அற இலக்கியமும் குறிப்பிடப்படுவதுபோல, சித்தர்களின் பாடல்களும் பதினெண்சித்தர் ஞானக் கோவை என்று தொகுக்கப்பட்டுள்ளன.

பாமரர்களுக்கும், ஞானப் பாதை காட்டுவதாய், குழந்தைகளையும் ஈர்ப்பதாய், உரையாசிரியர்களின் உதவியின்றியே அணுகத்தக்கதாய் விளங்குவது சித்தர் பாடல்களின் சிறப்புகளில் ஒன்றாகும்.

கடவுளைக் காணமுயன்றோர் பக்தர் என்றும், கடவுளருளைக் கண்டு தெளிந்தோர் சித்தர் எனவும் தேவாரம் குறிப்பிடுகிறது.

சித்தர்கள் ஓகத்தையும் (யோகம்) மருத்துவ நெறியையும் வளர்த்துள்ளனர்.  மதங்களைக் கடந்தவர்களாக வாழ்ந்துள்ளனர்.

எண்வகைப்பேறுகள்


சித்தர்களுக்கு உரிய இலக்கணம் அட்டமாசித்திகள் எனப்படும் எட்டுவகைப் பேறுகளைப் பெற்றிருத்தல் என்பர்.

அணுவைப் போல் சிறிதாதல் (அணிமா)
மலையைப் போல் பெரிதாதல் (மகிமா)
காற்றைப்போல் லேசாதல் (இலகுமா)
பொன்போலப் பளுவாதல் (கரிமா)
அனைத்தையும் ஆளுதல் (ப்ராப்தி)
அனைத்தையும் வசப்படுத்தல் (வசித்துவம்)
கூடுவிட்டு கூடு பாய்தல் (பிராகாமியம்)
விரும்பியதைச் செய்தல் (ஈசத்துவம்)

இத்தகைய தன்மைகள், சாதாரணமாக மனிதர் களுக்கு அமைவது மிகவும் சாத்தியமற்றதே. இறைவனின் தன்மைகளை எந்த மனிதராலும் பெறமுடியாது. அதேநேரம், மனித நிலையிலிருந்து தன் மனதின் மேம்பாட்டினால் உயர்ந்த பேறுகளை ஒருவர் எய்திட இயலும்.

நன்மனத்தின் வேட்கைகளாகவும், ஞானத்தின் பாட்டைகளாகவும் திகழும் சித்தர் பாடல்கள் சிலநேரம் புரட்சி முழக்கங்களாகவும், கலக இலக்கியமாகவும் தோற்றம் காட்டுவதுண்டு.

சிவயோகியரில் தலைசிறந்தவர் என்று தாயுமானவரால் குறிப்பிடப்படும் சிவவாக்கியச் சித்தரின் பாடல்கள் பக்தி, ஆன்மிகம் என்பவற்றின் பெயரால் மனித குலத்தில் வேர்கொண்ட மூடச்சடங்குகளுக்கும், மூர்க்கமிகு பேதங்களுக்கும் எதிரான கலகக் குரல்களாகத் திகழ்கின்றன என்றால் மிகையில்லை.  அதேநேரம், இவை ஞானம்ததும்பும் பாடல்களாகவும் ஒளிர்கின்றன.

உருவ வழிபாடு, சாதிப் பாகுபாடு, சாரமற்ற சடங்குகள் இவற்றிற்கு எதிராக முழக்கமிடும் சிவவாக்கியரின் பாடல்கள் தமிழுலகில் பெரும் ஈர்ப்பையும் கவனிப்பையும் பெற்றவை. இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்பர்.சடங்குகளுக்கு எதிரான சங்கநாதம்


வெறும் சடங்குகள் மட்டுமே இறை வழிபாடு ஆகாது.  சாரத்தை விட்டு விட்டு சக்கையை மட்டுமே சிக்கெனப் பிடித்திருப்பது சீர்கேடு என்பதைத் தனது பாடல்கள், மூலம் பறைசாற்றுகிறார் சிவவாக்கியர்.

ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும்
பிரளி பாரும் பாருமே

என்று பாடும் சிவவாக்கியர், கடவுளின் பேரால் நிகழ்த்தப்படும் சாரமற்ற சடங்குகளைக் கண்டிக்கிறார்.

வேதங்களை விளங்கியுணர்ந்து அதன்படி நடக்கமுயலாமல், வெறும் மந்திரங்களாக மட்டுமே உச்சரித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை,

சாத்திரங்கள் ஓதுகின்ற
   சட்டநாதப் பட்டரே....
வேர்த்து, இரைப்பு வந்தபோது,                      
   வேதம்வந்து உதவுமோ

என்ற வரிகளால் சாடுகிறார்.

சமயச் சடங்குகள், ஆசார அனுட்டானங்கள், தலயாத்திரை, தீர்த்தமாடல், யாகங்கள் முதலியவற்றை ஏற்காமல் இடித்துரைக்கும் சிவவாக்கியர், "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று திருமூலர் முழங்கிய நெறியை வழிமொழிவதோடு, "உள்ளமே கோவில், ஆத்ம லயிப்பே தேவானந்தம்' என்ற தத்துவத்தையும் தனது சிவவாக்கியத்தில் செம்மையுற எடுத்துரைக் கிறார்.
பாபம் செய்யாதிரு மனமே -   

நாளை
கோபம் செய்தே யமன்  
கொண்டோடிப் போவான்
என்றுகருவெளிச் சித்தர் தரும் எச்சரிக்கையும்,
வெட்டவெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி
என்று குதம்பைச் சித்தர் கொடுக்கும் குரலும்,
ஆதிக்கு முன்னம் அநாதியும் என்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா....!

என்று தக்கலை பீர்முஹம்மதப்பா எழுப்பும் ஞானமும் சித்தரின் பாடல்கள்
மெய்ம்மையைத் தேடும் விழைவைக் கொண்டவை என்பதற்குச் சான்று களாகும்.

சாதிபேத எதிர்ப்பு


பிறப்பினடிப்படையில் மனிதர்களிடையே பேதத்தையும், ஏற்றத்தாழ்வையும் கற்பிக்கும் கொடுமையை சிவவாக்கியச் சித்தரின் பாடல்கள் கடுமையாக எதிர்த்துக் கலகம் செய்கின்றன.

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டி ருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுந்துபாரும் உம்முளே

என்ற பாடலும்,

சாதியாவ தேதடா சலம்திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம்ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையே
என்ற பாடலும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மறுபிறப்பு தத்துவத்தை மறுத்தல்


ஏழேழு ஜென்மங்கள் உண்டென்றும், இப்பிறப்பில் செய்யும், பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறப்பு அமையும் என்றும், இப்பிறப்பில் நாம் அடையும் இன்ப, துன்பங்களுக்கு பூர்வஜென்ம பலன்களே காரணம் என்றும் கூறப்படுகிற மறுஜென்மக் கோட்பாட்டை சிவவாக்கியர் அறவே மறுதலிக்கிறார்.

கறந்தபால் முலைப்புகா  
   கடைந்தவெண்ணெய் மோர்புகா,
உடைந்துபோன சங்கின் ஓசை    
   உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும்
   மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை
   இல்லை இல்லை இல்லையே

உருவ வழிபாட்டை மறுத்தல்


கடவுளுக்கு உருவம் கற்பித்து, சிலையாகச் செய்து அல்லது ஓவியமாக வரைந்து வணங்குகின்ற உருவ வழிபாட்டு முறையை சிவவாக்கியர் அடியோடு மறுக்கிறார்.

ஓசை உள்ள கல்லைநீர்
   உடைத்து இரண்டாய்ச் செய்துமே
வாசலில் பதித்த கல்லை
   மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
    பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல்
    எந்த கல்லு சொல்லுமே...
என்று வினா தொடுப்பதோடு,
நட்ட கல்லைத் தெய்வமென்று     
   நாலுபுட்பம் சாற்றியே
சுற்றிவந்து மொண மொணென்று    
    சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ?
    நாதன்  உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்றும் பகுத்தறிவைத் தட்டி எழுப்பி, பரமனை அடைவதற்கான மெய்ஞ்ஞான பாட்டை குறித்து விழிப்பூட்டுகிறார்.

மெய்ஞ்ஞான விழிப்புகள்


சடங்குகளின் கிடங்குகளாய் மனதை ஆக்கி அதனுள் முடங்குகின்ற போக்கை முற்றும் எதிர்க்கும் சிவவாக்கி யர் மனதையே ஆலயமாக்கும் மகோன்னத நிலை குறித்துப் பாடுகிறார்.

கோயிலாவது ஏதடா    
   குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும்
   கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே
  குளங்களும் மனத்துளே
ஆவதும், அழிவதும்,
  இல்லை இல்லை இல்லையே
என்றும்,
சிட்டர் ஓது வேதமும்
  சிறந்த ஆக மங்களும்
நட்ட காரணங்களும்
  நவின்ற மெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம்    
   கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே    
   பிரானையான் அறிந்தபின்...

என்றும் சிந்தனையைத் தூண்டுகிறார். சத்தியத்தின் தரிசனம் கண்டோர்க்கு சடங்குகள் பொருட்டல்ல என்பதை மீண்டும் மீண்டும் சிவவாக்கியரின் பாடல்கள் எடுத்தோதுகின்றன.

தன்னுள்ளே உண்மையைத் தரிசிக்கும் பான்மையை சிவவாக்கியத்தில் பல இடங்களிலும் பார்க்கமுடிகிறது.

கோயில் பள்ளி ஏதடா
     குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற   
    மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில்
      நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில்
      காணலாம் இறையையே

என்று பாடும் சிவவாக்கியர்

தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்த்தி டாமல் ஒன்றே தெய்வம் என்ற கருத்தை உரத்து முழங்குகிறார்.

ஆதி 'ஹூ'வென்றே உரைத்த    
  அட்சரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர் கோடி    
   உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு
   பொங்குமங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே
   இருப்பர்கோடி கோடியே....
என்று ஏகத்துவம் பாடுவதோடு,
என்னிலே இருந்தஒன்றை
   யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை
   யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை
    யாவர்காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து    
    யான்உணர்ந்து கொண்டனே

என்று மெய்ஞ்ஞானச் சாறு பிழிந்துதருகிறார்.

உரையாசிரியர்களின் உதவி இல்லாமலேயே சராசரி மக்களும் படித்து சாரத்தை உள்வாங்கிக் கொள்ளும் வகையில், ஒன்பதாம் நூற்றாண்டிலேயே பகுத்தறிவைக் கிளறிவிடும், புரட்சிக் கருத்துகளை சிவவாக்கியர் பாடியிருப்பது சிந்தனைக்குரியது.

சிவவாக்கியரின் அனைத்துப் பாடல்களையும் ஆய்ந்து, தோய்ந்து படித்தால், சிந்தனை எழுச்சியை
யும், மெய்ஞ்ஞான மலர்ச்சியையும் நாம் உள்வாங்க முடியும்...!தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :