Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
இனிய உதயம்
என் நினைவுகளில் இன்குலாப்!
 ................................................................
சொல்லமறக்காத கதை
 ................................................................
சித்தர்கள் பாட்டில்
 ................................................................
ஒரு மழை வந்து...
 ................................................................
புரட்சிக் கவிஞரின் தோட்டத்துப் பூ
 ................................................................
கைம்பெண் ஓர் அட்சதைச் சொல்!
 ................................................................
பரிதாப பாவனா! -அதிர வைக்கும் ஆபத்துக்கள்!
 ................................................................
உலகை அதிரவைத்த தற்கொலைப் பாடலும்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
குற்றத்தை அங்கீகரிப்பதும் குற்றம்!
 ................................................................
01-03-2017ந்த நாட்டின் விடுதலைக்கும், வளர்ச்சிக்கும் நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் மூட்டை மூட்டையாக சொற்கள் தேவைப்படுகிறது. காய்ந்த மரக்கட்டைகளை விரைவில் சூடேற்றிவிட முடியும். ஆனால் வெறும் பொழுதுபோக்குகளுக்குள்ளும், சராசரியான சுயநலத்தேவைகளுக்குள்ளும், முடங்கிப்போன தேசத்திற்கு சொற்களைக் கண்டுபிடிப்பவர்கள் ஓராயிரம் பேர் அவசியப்படுகிறார்கள். அவர்களின் சொற்களால்தான் மாற்றங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன. பதுக்கி வைக்கப்பட்ட சொற்களால் எதுவுமே சாத்தியப்பட்டதில்லை.

கலையும், இலக்கியமும் இந்த மக்களுக்கான சொற்களைத் தேடிக்கொண்டேயிருக்கின்றன. துயரப்படுகிறவனுக்கு ஒரு பிடி ஆறுதலையும், அடுத்தகட்ட நகர்வுக்கான ஒரு பிடி சிந்தனைச் சொற்களையும். வெறும் சிந்தனையைக் கடந்து மாற்றத்தை உருவாக்குவதற்கான நெருப்புச் சொற்களையும் கவிதையே எப்போதும் வைத்திருக்கின்றது. தன் சொற்களை யார் மூலமாவது செலுத்திவிட கவிஞனைக் கண்டெடுக்கிறது. அப்படி கவிதை ப. செல்வக்குமாரையும் கண்டெடுக்கிறது.

"ஒரு மழை வந்து போக வேண்டும்'' தொகுப்பினை முதல் அடையாளமாக கவனப்படுத்தியிருக்கும் இக்கவிஞரின் கவிதைக்களம் கிராமம், கிராமம்சார்ந்த சாதியம், உறவு களின் மேம்பட்ட கலாச்சாரம் தொலைந்துபோன நேற்றைய பொழுதுகள், தத்துவம் இழையோடுகிற அனுபவங்கள் யாவும் சிறு கவிதைகளாகவும். கோபத்தை வெளிப்படுத்துகிற நீள்வரிகள் கொண்ட கவிதைகளாகவும் வெளிப்பட்டிருக்கின்றன.

எவ்வளவு பேர் எழுதியும் தீராத பிரச்சினைகள் ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறு வேறு துயரங்களாக வெளிப்படுவதே கவிதைக்கான புதிய புதிய கச்சாப் பொருட்களாகின்றன. கிராமத்தின் முதன்மை அடையாளங்கள் திண்ணைகள். வந்த உறவுகள் தங்களை நிதானப்படுத்திக் கொள்ளவும், உறவுகளைக் கொண்டாடுவதற்குமான அன்பின் களமாக இருந்த அதனைப் பற்றி இப்படியொரு பதிவைச் செய்கிறார்.

திண்ணை
வயதுக்கு வந்த
தங்கச்சியை அமர்த்துவதற்காக
திண்ணையைக் காலி செய்த ஆயா
வாசலில் கிடந்து
இருமிக்கொண்டே இருந்த
ஏழாவது நாளில் செத்துப் போனதால்
சாத்தி வைப்பதற்காக
தங்கச்சியும் திண்ணையைக்
காலிசெய்ய வேண்டியதாயிற்று

கவிஞன் தன்வழியாக, வாழும் காலத்தின் அடையாளங்களையும், முந்தைய காலத்தின் பழக்க-வழக்கங்களையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்கிற அரிய பயணியாக இக்கவிதை.

கிராமங்களின் இன்றைய துயரங்களையும் இச்சமுதாயம் நகரவேண்டிய நிலையையும், பொருளாதாரப் புள்ளிகளைக் கொண்டும், பணவீக்கப் புள்ளிகளாலும் தேசப் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கிடுகிற புள்ளி விவரக்காரர்களின் தேசத்தில், வெடித்துக்கிளம்பியிருக்கிற கவிதை

பாவாடை
ஆறரை டவுனுபஸ்சு வந்திடுவான்
சீக்கிரம் கௌம்பு
போன புதன்கிழமை அப்படித்தான்
பஸ்ச வுட்டுபுட்டு
பத்துமணிக்கு மேல
ஓபி சீட்டு வாங்கி
ரெண்டு மணிநேரமா
வரிசையில நின்னா
நேராச்சுன்னு டாக்டர் போயிட்டாரு
சுருக்கா கிளம்புறன்னு
நாடா இல்லாத
பாவாடையைக் கட்டுட்டு வந்து
ஊசி போடுறப்ப
நர்சம்மாகிட்டே பாட்டு வாங்காத
கீழ கிழிஞ்சிருந்தாலும் தேவலாம்
இருக்கிறதுல
நல்லதா பார்த்து கட்டிட்டு வா

கவிதைக்கென்று வலிய சொற்களை இழுத்துவரவில்லை. பூடகமில்லை. தொலையாத சொற்களால் கவிதை பத்திரப்பட்டிருக் கிறது.

கவிதையென்பது நேற்றையும், இன்றையும் அடையாளம்காட்டும். சூழ்நிலையை வசப் படுத்தும். வாழும் சமுதாயத்திற்கு ஓர் எச்சரிக்கைக் குரலையும் கொடுக்கும். அது இச்சமுதாயத்தின் இழிநிலையையும் பறைசாற்றும். தன் மகனுக்கு எதைச் சொல்லித்தர வேண்டும் என்று கவிதையாக்கியிருப்பது யாவர்க்குமான சாட்டை வரிகள்.

சாதியறிதல்
என் மகனுக்கு
எப்படியாவது சொல்லித்தர வேண்டும்
காதல் பற்றியும்
சாதி பற்றியும்
குறைந்தபட்சம்
தண்டவாளங்களைப் பற்றியாவது

இத்தொகுப்பில் வேறுவேறு உலகை அடையாளம் காட்டும் அம்மா, அப்பா, அக்கா என்கிற உறவுகளின்
நிலை குறித்த கவிதைகள் மரபின் தொடர் நீட்சியாகவும் எதிர்கால உலகம் ஒன்றிக்கு அழைத்துச் செல்லக் கூடியதாகவும் கவித்துவமாகிறது. கிராமச் சுவடுகளாக "அக்கா வீடு', "அம்மாவும் கோழியும்' போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம். ""கொளம்பு சட்டி'' ""கொடர்ப்பு'' ""அரிசி புடைத்தல்'' ""முழுகாம இருத்தல்'' போன்ற சொற்கள் கவிதை ஆவணமாகியிருக்கின்றன.

""என் பேரு லெட்சுமிங்க...'' என்றொரு நீள்கவிதை கவிதையில் சோதனை முயற்சி என்று வகைப்படுத்தலாம். சமூக அவலமொன்றை தன் வாழ்வு மனிதர்களைக் கொண்டு, ஏழு கவிதைகளைப் படைத்திருக்கிறார். கவிதைக்கான பாடுபொருளை எங்கிருந்தும் எடுக்கலாம் என்பதற்கான ஆதாரப்பதிவாய் இடம் பிடிக்கிறது.

முதுமையின் வலியோடு இயலாமையோடு, பிடிவாத நம்பிக்கை என்று "பலிக்காத வேண்டுதல்' கவிதை.

பலிக்காத வேண்டுதல்
வீதியில் பவனி வந்த அம்மனுக்கு முன்னால்
தோளுக்குமேல் உயர்ந்த கைகளால்
முந்தானை விரித்து
சாமியாடி வரும் பொட்டுக்கண்ணா கிழவிக்கு
சாணமெழுகிய வாசல் நெடுக
ஊர்க்குடத்து நீரையெல்லாம் காலில் வாங்கியும்
விழுந்து வணங்கிய ஜனங்களுக்கு
விபூதி வழங்கியும் பலிக்கவில்லை
ஏரி வேலைக்குச் சம்பளம் கொடுக்கும் வரிசையில்
இரண்டு பேருக்கு முந்திச் செல்ல...

கவிதைக்குள் இடம் பிடித்துக் கொள்கிற நிராசையும் சொற்களற்ற துயரமும் அந்தக் கவிஞனுக்குரியது. மட்டுமல்ல. சமூகத்தின் குரலாகவே ஒலிக்கிறான். அதுவே கவிதைக்கான அடிப்படை ஈர்ப்புமாகிறது. வாடகை வீடு என்பது பலரின் சாபமாகவே இருக்கிறது. ஒரு வீட்டைச் சொந்தமாகப் பெற வாழ்வையே தொலைத்த வர்கள் பலர். ப. செல்வக்குமார் ஒரு கவிதையில் இப்படிச் சொல்கிறார்.

வாடகை வீடு
பத்து வயது மகன் கேட்டான்
அப்பா நான் எந்த வீட்டில் பொறந்தேன்!
அது வந்து
பதிலை முடிக்கும் முன்பே
கடைக்குட்டியும் கேட்டுவிட்டாள்
அப்பா நானு?
மௌனத்தால் விக்கித்து
மனைவியின் முகம் தேடினேன்
எப்பங்க சொந்தவீடு கட்டுறது?
வாடகை ஏற்றத்தால்
வருடத்திற்கொரு முறை
மாறிக் கொண்டே இருக்கிற வீடுகளில்
பதிலிறுக்க முடியாத கேள்விகளோடு
நிராசையாகின்றன
சொந்த வீடு பற்றிய கனவுகள்
யாவரின் மனதிற்குள்ளும் எரிந்தபடியிருக்கிற கனவுத்
தீயாகவே இக்கவிதை.

ஒரு கவிதையின் பணியாக பிரிந்த உறவுகளைச் சேர்ப்பதையும் செய்ய இயலும் என்பதற்கான அகச் சான்றாக பல கவிதைகள் மீட்சியளிக்கின்றன. உறவு களைப் பிரிக்க ஆயிரமாயிரம் மனக்கோளாறுகள் பிரியத்தின் இழையோடுகிற வரிகளால் இக்கோளாறுகள் சரிசெய்யப்படுவது கவிதையின் கருத்து உச்சம்.

அங்கலாய்ப்பு
கட்டிக்கிட்டவனுவ ரெண்டு பேரும்
சண்டை போட்டுக்கிட்டதனால
ஒரே ஊர்ல வாக்கப்பட்ட
அக்காளும் தங்கச்ச்சியும்
பேசிக்கிறதும் அழுவறதும்
வெளிக்காட்டுலதான்.

முதல் தொகுப்பிற்குள் கவிதைத்தளத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கடந்த காலத்தையும், தான் சார்ந்த வாழ்வியல் குறித்தும் பதிவு செய்வது தன் கடமையாக உணர்கிறார். அதனாலேயே தன் கவிதைக்கான சொற்களையும், களத்தையும் தன் மனிதர்களிடமிருந்து கண்டெடுக்கிறார். அதை கவிதையாக்கி வரலாற்றுப் பதிவாக்குகிறார்.

கவிதை நேற்றை அடையாளப்படுத்துவதோடு, அதன் வழியாக எதிர்காலத்தை நிர்ணயிக்கிற பொறுப்பையும் செய்கிறது. ப. செல்வக்குமாரை கவிதை இனி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இவர் தன்னைச் சார்ந்த மனிதர்களை நகர்த்தியிருக்கிறார். அதுவே முத்திரைக் கவிதை களுக்கான தகுதியைப் பெற்றுத் தந்துவிடுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :