Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17கோவை ஆறுமுகம்

"நம் வாழ்க்கை என்னும் வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் சரியான திசையில் செல்லவேண்டுமென்றால், அந்த வாகனத்திற்கு நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டு சக்கரங்கள் அவசியம். அவநம்பிக்கையும் அவசரமும் நம்மை அவதிப்பட வைக்கும். பூரண நம்பிக்கையும் பொறுமையும் புகழ்பெற வைக்கும்' என்று சொன்னார் அப்துல் கலாம்.

மனதில் எந்த எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறதோ அது நிச்சயமாக நிறைவேறும். நல்ல எண்ணத்தை ஆழமாகப் பதியவைத்தால் வாழ்க்கையில் நல்லவை நடக்கும். இதற்காகவே பிரார்த்தனை, பஜனைப் பாடல்களில் நல்ல வாழ்க்கைக்கான கோரிக்கை வாசகங்களை இணைத்து, அவற்றைப் பலமுறை பாராயணம் செய்யச்சொல்கிறது நம் ஆன்மிகம். "அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளைப் பொறுப்பாய் ஐயப்பா' என்ற சபரிமலை விரதப் பிரார்த்தனைக்கும் இதுவே அடிப்படை.

ஒருசமயம் பார்வதியும் பரமேஸ்வரனும் ஆகாய மார்க்கமாக உலா சென்று பூமியின் காட்சிகளைப் பார்த்தனர். அப்போது கங்கை நதியில் பலர் நீராடிக் கரை ஏறுவதைக் கண்ட பார்வதி, ""நாயகரே! கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கி சொர்க்கம் போவார்கள் என்கிறீர்கள். ஆனால் சொர்க்கத்தில் குறைவான பேர்தான் உள்ளனர். பல்லாயிரக்கணக்கில் கங்கையில் குளிக்கிறார்களே! இத்தனைப் பேரும் சொர்க்கத்தில் அல்லவா இருக்கவேண்டும்'' என்று கேட்டாள்.

தேவியின் சந்தேகத்தை அகற்ற பரமன் ஒரு நாடகம் நடத்தினார்.

இருவரும் வயோதிகத் தம்பதிகளாக மாறினர். பரமசிவன் கங்கையில் தவறி வீழ்ந்தார். ""என் கணவரைக் காப்பாற்றுங்கள்'' என்று பார்வதி கூச்சலிட, பலரும் முன்வந்தனர். அவர்களைப் பார்த்த மூதாட்டியான பார்வதி, ""பாவம் செய்யாத வர்கள் மட்டுமே என் கணவரைக் காப்பாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டாள்.

வந்தவர்கள் எல்லாரும் பின்வாங்க, ஒரு இளைஞன் குதித்தான். காப்பாற்றிக் கரைசேர்த்தான். ""நீ பாவமே செய்யாதவனா?'' என்று எல்லாரும் கேட்க, ""பாவங்களை அடியோடு போக்கும் கங்கையில் குதித்துதானே நான் இவரைக் காப்பாற்றினேன்! அதனால் நான் பாவம் தீர்ந்தவன்தானே?'' என்றான்.

பார்வதியிடம் பரமேஸ்வரன் சொன்னார். ""இவனிடம் இருக்கும் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லாததால்தான் சொர்க்கம் குறைவான நபர்களையே கொண்டிருக்கிறது.''மனநிறைவான நல்ல வாழ்க்கை அமைய நல்லெண்ணம் அவசியம். மனநிறைவென்றால் "நடப்பவை நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே தீரும்' என்ற ஞானப்பக்குவம். அத்தகைய பக்குவத்தைத் தரவல்லதொரு திருத்தலம்தான் அந்தநல்லூர் ஸ்ரீவடதீர்த்தநாத சுவாமி திருக்கோவில்.

இறைவன்: வடதீர்த்தநாதர், ஆலந்துறையப்பர்.

இறைவி: பாலசௌந்தரி.

புராணப்பெயர்: திருஆலந்துறை.

ஊர்: அந்தநல்லூர்.

தலவிருட்சம்: கல்லால் எனும் ஆலமரம்.

தீர்த்தம்: காவேரி தீர்த்தம், தல கிணறு.

கல் திருப்பணிரீதியாக, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது இவ்வாலயம். காவேரி தென்கரைத் தலங்களில் பாடல் பெற்றிருந்தாலும், வைப்புத்தலமாகவே திகழ்கின்ற ஆலயம். 21 தலைமுறை தோஷங்களைப் போக்கவல்லதொரு திருத்தலம்.

'மலை மகளை யொருபாகம் வைத்தானை மாலவனும்
அலைமகளும் பூசித்தஎம் புண்ணியனை பொங்கரவம்
விளையாடும் புலித்தோலு டையானை அந்தவ நல்லூர்
காவிரி தென்கரையில் வடபதியாய்க் கண்டேனே.'

-திருஞானசம்பந்தர்

தல வரலாறு

7-ஆம் நூற்றாண்டில் கொடும்பாளூரை (மணப்பாறை) தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த சிற்றரசன் இருகுவேளிர் குலத்தைச் சார்ந்த செம்பியன். ஒருசமயம் அவன் தன் மனைவியர் சிங்கன் நிம்மடிகள், தேவி நிம்மடிகள் ஆகியோருடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தான். அப்பொழுது இங்கு மகாவிஷ்ணு, மகாலட்சுமியால் மணலாலும் சுண்ணாம்புக் கலவையாலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தைக் கண்டு, தங்களது மனக்கவலையை போக்க தியானம் செய்தனர். அப்பொழுது இறைவன் அசரீரியாக, "ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதமிருந்து எனக்குப் பூஜைகள் செய்தால் உங்களது மனக்கவலைகள் நீங்கி, 21 தலைமுறை பித்ரு தோஷமும் நீங்கும்' என்றார்.

அதைக்கேட்டு அரசனும் அவனது மனைவியரும் செய்வதறியாது நின்றனர்.

அச்சமயத்தில்  இத்தல இறைவனைப் பூஜிப்பதற்காக வந்த அந்தணர் ஒருவர், அரசனும் அவனது மனைவியரும் திகைத்து  நிற்பதைக் கண்டு விவரம் கேட்க, அவர்கள் தாங்கள் அசரீரியாகக் கேட்டதைக் கூறினர்.

அதைக்கேட்ட அந்தணர், ""இங்குள்ள ஈசனே உங்களை அஷ்டமி விரதத்தினை மேற்கொள்ளச் சொல்கிறார். அதன் சிறப்பு என்னவெனில், 21 தலைமுறை பித்ருக்கள் திருப்தியடைந்து சிவபதம் அடைவர். மேலும் எண்ணற்ற யாக வேள்விகள் செய்த பயனையும், பதினாறு பேறுகளையும், நாட்டை ஆளும் யோகத்தையும் அடைவர். மகளிருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். இவ்விரதம் ஈசனின் புதல்வன்  முருகப்பெருமானே அனுஷ்டித்த பெருமை வாய்ந்ததாகும்'' என்று கூறியவர், அவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய முறையையும் கூறினார்.

தேவர்களின் பிரம்ம முகூர்த்த மாதமாகிய மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் விநாயகரை வணங்கி, ஈசனுக்கு சங்கல்பம் செய்து, அபிஷேகம் செய்வித்து, வில்வம், அரளி, நந்தியாவட்டை, மல்லிகை போனற மலர்களாலும் இலைகளாலும் அர்ச்சனை செய்வித்து, சிவாச்சாரியாரையும் சிவனடி யார்களையும் கௌரவித்து, ஈசனைத் தியானித்து வழிபடவேண்டும். இவ்வாறே ஒவ்வொரு மாத அஷ்டமியிலும் பூரண ருத்ர யாகம், அஸ்த்ரஜபம், விரதமிருந்து, கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலை வேளையில் ருத்ர யாகம், அஸ்த்ரஜபம், ருத்ராபிஷேகம் செய்து, இவ்விரதமிருக்கும் அன்பர் பூரண உபவாசம் இருந்து, பசுந்தயிர் மட்டும் உட்கொண்டு, மறுநாள் ஈசனின் நிர்மால்ய தரிசனம் பெற்றால் மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் நிச்சய மாய்க் கிடைக்கும்.

இவற்றைக் கேட்ட அரசனும் அவனது மனைவியரும் 12 மாதங்கள் தேய்பிறை அஷ்டமி திதியில் விரதமிருந்து, ஈசனின் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெற்று, இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியமைத்து மகாகும்பாபிஷேகம், திருவிழாக்கள் செய்து, மேலும் நித்ய பூஜைக்கு நிலங்களை தானம் கொடுத்துள்ளதாக தல புராணம் சொல்கிறது.

அஷ்டமி விரதம்

இவ்விரதம் மேற்கொள்ளும் அன்பர்கள் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத் தன்று மாலை 5.00 மணிக்கு இவ்வாலயத்தில் நடைபெறும் மகாசங்கல்பத்தில் கலந்து கொண்டு மஞ்சள்நூல், நல்லெண்ணை, பால், மாதத்தின் சிறப்பு அபிஷேகப் பொருட்கள், வில்வம், அரளி, நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலர்கள், இரண்டு தேங்காய், வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம், நெய், ஊதுவத்தி ஆகியவற்றுடன் வழிபாடு மேற்கொண்டால் இறைவனின் அருளை முழுமை யாய்ப் பெறலாம்.

சிறப்பம்சங்கள்

✶ காவேரி தீர்த்தத்தில் நீராடி, பழைய ஆடையை விட்டுவிட்டு புத்தாடையணிந்து, வடதீர்த்தநாத சுவாமிக்கு வில்வார்ச்சனை செய்தால் உடற்பிணி நீங்கி உன்னத வாழ்வு பெறுவர்.

✶ செவ்வாய்க்கிழமை யன்று இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து வணங்கினால் ரத்தக் கொதிப்பு சம்பந்தப்பட்ட நோயிலிருந்து விடுபடலாம். அடிக்கடி கோபப்படுபவர்கள் சாந்தமடைவதும், சுறுசுறுப்புடன் இயங்குவதும் கண்கூடு.

✶ பாலசௌந்தரி அம்மன் பாலாரிஷ்ட தோஷம் போக்குபவள்.

✶ முருகப்பெருமானின் நட்சத்திரமான கார்த்திகை, விசாக நட்சத்திரத் தன்று சிறப்பு அபிஷேகம் உண்டு.

✶ துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகுகால பூஜை உண்டு.

✶ அமாவாசையன்று சிவ வழிபாடு செய்தால் என்ன பயன் கிடைக்குமோ இத்தலத்தில் அப்பயன் எல்லா தினத்திலும் கிடைக்கும். பித்ருக்கள் மகிழ்ச்சியடைவர்.

கோவில் அமைப்புகாவேரிக்கரையின் ஓரத்தில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையை ஒட்டி முகப்பு வளைவு அழகுற காட்சி தருகிறது. அதனையடுத்து கிழக்கு நோக்கிய நுழைவாயில். ஆலயத்தைச் சுற்றிலும் வயல்வெளிகள், நீரோடைகள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி அருள்கிறார். லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாலிங்கம் உள்ளது. க்ஷேத்திர விநாயகர் சந்நிதி, வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. துர்க்கை, சண்டிகேஸ்வரரும் அருள்புரிகின்றனர்.ஈசானிய திக்கில் நவகிரகங்கள், கால பைரவர், சூரியனும் சந்திரனும் அருகருகில் அருள்புரியும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். மூலவர் வடதீர்த்தநாத சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் பாலசௌந்தரி தெற்கு நோக்கியும் அருட்காட்சி தருகிறார்கள்.

ஈசனே அசரீரி வாக்கு கொடுத்த அற்புதத் தலமான அந்தநல்லூரில், அல்லல்களைப் போக்கி, பித்ருதோஷம், பிரம்மஹத்தி தோஷம், 21 தலைமுறைக்குண்டான பாவங்களை நீக்குகின்ற புண்ணியனாம் ஸ்ரீவடதீர்த்தநாதரை மனதார வழிபடுவோம். மகிழ்வுடன் வாழ்வோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 5.00 மணிமுதல் 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத்தொடர்புக்கு: பி. சுப்பிரமணிய குருக்கள்,அலைபேசி: 99445 22690.

ஸ்ரீவடதீர்த்தநாத சுவாமி திருக்கோவில்,
அந்தநல்லூர் போஸ்ட், (திருஆலந்துறை)
ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம்- 639 101.
கணக்கர்: எஸ். மாதவன், அலைபேசி: 98425 23242.

அமைவிடம்: திருச்சி- கரூர் நெடுஞ் சாலையில் திருச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அந்தநல்லூர் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்மூலம் அந்தநல்லூர் பஞ்சாயத்து அலுவலக பஸ் நிறுத்தத்தில் இறங்கி எளிதில் கோவிலை அடைய லாம்.

படங்கள்: போட்டோ கருணா

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :