Add1
logo
ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி || நாகூர் அருகே கிருஸ்தவ ஆலயத்தின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்கள் சாலை மறியல் || வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 6-வரை நீதிமன்றக்காவல் || சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார் || ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள மது விற்பனையையும் ஒழிக்க பெண்கள் முடிவு || குளமங்கலம் மாரியம்மன் கோயில்கள் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது || காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து பெண் தற்கொலை || கடலூர் மாவட்டத்தில் புதிய தாலுகா - ’திருமுட்டம்’ உதயம்! || ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
......................................
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
......................................
மாசி மக மகத்துவம்!
......................................
மார்ச் மாத ராசி பலன்கள்
......................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
......................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
......................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
......................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
......................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
......................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
......................................
யாதுமாகி நின்றாள்!
......................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
......................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
......................................
01-03-17காவிஷ்ணு, பூலோகத்தில் சில தலங்களில் நேரில் காட்சி கொடுத்து கோவில் கொண்டதாக ஐதீகம் உள்ளது. அவற்றுள் திருப்பதி (வேங்கடாசலபதி), குருவாயூர் (குருவாயூரப்பன்), குணசீலம் (பிரசன்ன வேங்கடாசலபதி) ஆகிய மூன்றும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. இந்த மூன்றில் தமிழகத்தில் அமைந்துள்ள தலம் குணசீலம்.

தௌமிய முனிவர் நீலவனத்தில் (தற்போது திருப்பைஞ்ஞீலி) ஆசிரமம் அமைத்து தவம்புரிந்து வந்தார். அவரின் சீடர்களுள் ஒருவரான குணசீலர் குருநாதருக்குப் பணிவிடை செய்துவந்ததுடன் வேதம், புராணங்களையும் கற்று வந்தார். ஒருசமயம் குருவின் ஆசியுடன் இமயமலைக்குச் சென்ற குணசீலர், கங்கை உள்பட பல புனித நதிகளில் நீராடியதுடன் வியாச முனிவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். இமயமலையிலிருந்து திரும்பி வரும்போது திருவேங்கடமுடையானை தரிசித்து மகிழ்ந்த அவர், குணசீலத்திலுள்ள தங்கள் ஆசிரமத்தில் எழுந்தருள வேண்டுமென்று திருமலைவாசனிடம் வேண்டினார். அதற்குப் பெருமாள், கலியுகம் முடியும்வரை தாம் திருமலையிலேயே இருக்க எண்ணியுள்ளதாகவும், ஆசிரமத்திற்குச் சென்று தவத்தைத் தொடரும்படியும் கூறினார்.

ஆசிரமம் திரும்பிய குணசீலர் பெருமாள் உரைத்ததை குருநாதரிடம் சொன்னார்.தனது தவவலிமையால் பெருமாள் கூறிய தன் உட்பொருளை உணர்ந்த தௌமிய முனிவர், ""பகவான் உமது கோரிக்கையை ஏற்று ஸ்ரீதேவியுடன் எழுந்தருள திருவுளம் கொண்டுள்ளார். ஆகவே, பகவான் கூறியபடியே தவத்தைத் தொடர்வாயாக...'' என்றார்.

அதன்படியே தவத்தில் ஈடுபட்டார் குணசீலர். முனிவரின் தவத்தின் வலிமை கண்டு, தமது பதவிக்கு ஆபத்து நேருமோ என்றஞ்சிய இந்திரன் காற்று, இடி, மின்னல், மழைமூலம் இடையூறுசெய்து தவத்தைக் கலைக்க முயன்றான். இந்திரனின் செயலைக் கண்ட பிரம்மா, ""குணசீலர் மாலவனைக் குறித்தே தவத்தில் ஆழ்ந்துள்ளர். இதனால் உனக்குக் கெடுதல் எதுவுமில்லை. அவரைத் தொந்தரவு செய்யாதே!'' என்றார். இந்திர னும் இடையூறு செய்வதை நிறுத்தினான்.

குணசீலரின் கடுந்தவத்திற்கு மகிழ்ந்த மாலவன், ஸ்ரீதேவியை மார்பில் தாங்கி நின்ற கோலத்தில் குணசீலரின்முன் தோன்றினார். வைகுண்டவாசன் தன்முன் நிற்பதைக் கண்டு உள்ளம்பூரித்த குணசீலர் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ""பகவானே! இந்த ஆசிரமத்தில் கோவில்கொண்டு தங்களிடம் பிரார்த்திப்பவர்களின் வேண்டுதலை நிறைவேற்றியருள வேண்டும்'' என்று வேண்டினார்.

""அவ்வாறே ஆகுக! கலியுகம் முடியும்வரை யாம் இங்கு அர்ச்சாவதாரத் திருமேனியில் எழுந்தருளி பக்தர்களின் குறை போக்குவோம். இனி உமது குருநாதருடன் நைமிசாரண்யம் செல்க'' என்று கூறினார்.

வைகுண்டநாதன் குணசீல முனிவருக்கு நேரில் காட்சியளித்த நாள் கிருதயுகத்தில் திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை, மதிய வேளை என்று புராணங்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து ஆசிரமப் பணிகளை தமது சீடர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு குணசீலர் நைமிசாரண்யம் சென்றார்.

வனவிலங்குகளின் தொல்லையால் ஆசிரமத்தில் பூஜைசெய்த சீடர் ஓடிவிட்டார். காவேரி நதியில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆசிரமம் அடையாளமின்றிப் போனது. பகவான் மட்டும் தம்மைச் சுற்றி புற்றை உருவாக்கி அதனுள் இருந்தார். யுகங்கள் கடந்தன. புற்றிலிருந்த பகவான் வெளிப்படும் காலம் வந்தது.

நிகளாபுரியை தலைநகராகக் கொண்டு (தற்போது திருச்சி- உறையூர்) ஆட்சி செய்து வந்தான் ஞானவர்மன் என்ற சோழ மன்னன்.

அரண்மனைப் பசுக்கள் மேய்ச்சலுக்காக இப்பகுதிக்கு வந்தன. ஒருநாள் கறந்து வைத்த பால் குடங்கள் காலியாகக் கிடந்தன. இதைக்கண்டு இடையர்கள் வருந்தியபோது, அவர்களுள் வயதுமுதிர்ந்த ஒருவருக்கு அருள் வந்தது. அவர், ""பிரசன்ன வேங்கடாசலபதியாக அருகிலுள்ள புற்றுக்குள் வீற்றிருக்கும் யானே பாலை அருந்தினேன். இதை உங்கள் அரசனிடம் கூறுங்கள்'' என்று அருள்வாக்கு சொன்னார். இடையர்கள் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறினர்.

புற்றிருந்த இடத்துக்கு விரைந்தான் ஞானவர்மன். அப்போது எதிரே வந்த வைணவப் பெரியவர் ஒருவர் அரசனிடம், ""இந்தப் புற்றை பால் ஊற்றிக் கரைத்தால் பெருமாளைக் காண்பீர்கள். உமக்கு எல்லா பாக்கியமும் கிட்டும்!'' என்று கூறி மறைந்துவிட்டார். பெரியவராக வந்தவர் எம்பெருமாளே என்று நம்பிய அரசன், புற்றில் குடம்குடமாக பாலை ஊற்றிக் கரைக்க உத்தரவிட்டான். புற்று சிறிது சிறிதாகக் கரைய, அங்கே நின்ற கோலத்தில் பெருமாளின் சிலை அற்புத தரிசனம் தந்தது. அனைவரும் மெய்சிலிர்த்து வணங்கினர்.அப்போது வேங்கடாசலபதி, ""குணசீல முனிவரின் தவத்தில் மகிழ்ந்து இங்கு தோன்றினோம். இவ்விடத்தில் எமக்கு ஆலயம் அமைப்பாயாக'' என்று அசரீரியாகக் கூறினார். வியந்த மன்னன், ""சுவாமி! என் பாக்கியம்! உடனடியாக கலைநயமிக்க மிகப்பெரிய ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்கிறேன். அது நல்லபடி முடிய தாங்கள் அருளவேண்டும்'' என்றான். அதற்குப் பெருமாள், ""எளிமையாக ஆலயம் அமை. வருங்காலத்தில் பக்தர்கள் விரிவுபடுத்து வார்கள்'' என்று அருள் பாலித்தார். அதன்படி சிறிய ஆலயம் அமைத்து பெரும் பாக்கியம் பெற்றான் ஞானவர்மன்.

அந்த அரசன் காலத்திலேயே, இங்கு வழிபாடு செய்த சத்துரு தேவன் என்பவருக்கு கண்பார்வை கிடைத்தது; அடுத்து பகுவி ராஜன் என்பவருக்கு முடத்தன்மை நீங்கியது; தேவதாசன் என்ற ஊமைக்குழந்தைக்கு பேச்சுத்திறன் வந்தது; காந்திமதி என்ற பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது.

வலக்கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் இந்தப் பிரசன்ன வேங்கடாசலபதியை வழிபட்டால் தீராத வினைகள் தீரும். திருமணம், மகப்பேறு, செல்வ வளம் கிட்டும்.

""மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து, 48 நாள் காவேரியில் நீராடி, உச்சிக்கால பூஜை, அர்த்தசாம பூஜையின்போது அபிஷேகிக்கப்படும் நீரை தலையில் தெளித்துக்கொண்டு அருந்தினால், பாதிப்புகள் நீங்கி பூரண சுகம் பெறலாம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் குணம்பெற, தனி விடுதி அரசாங்க உதவியுடன் இயங்கி வருகிறது'' என்கிறார் இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார்.

சென்னையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்ற பக்தர், தான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுயநினைவின்றி இருந்ததாகவும், இவ்வாலயத்திற்கு வந்து வழிபட்ட இருபதாவது நாளிலேயே பாதிப்பு நீங்கத் தொடங்கியது என்றும், 48-ஆவது நாளில் மனநிலை பாதிப்பு முழுமையாக நீங்கி, இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகவும் உள்ளம் பூரிக்கக் கூறினார்.

இங்குள்ள பெருமாள் எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலும் பக்தர்களுக்கு நேரில் வந்து அருள்பாலிக்கிறார் என்கின்றனர்.

கடலூர் மாவட்டம், கொடிக்களம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த முருகானந்தம் தனக்கேற்பட்ட பெருமாளின் அனுக்கிரகத்தை சிலிர்ப்புடன் கூறினார்.

""ஒருநாள் இரவு சுமார் பத்து மணியளவில் கோவிலுக்குச் சென்றேன். நடைசாற்றப் பட்டுவிட்டது. கடை எதுவுமில்லாததால் பசியோடு கோவில் எதிரே பகவானை எண்ணியவாறு படுத்திருந்தேன். அப்போது, திடீரென கோவிலைத் திறந்து உள்ளிருந்து வந்த அர்ச்சகர் இலையில் வைக்கப்பட்ட பொங்கல், சூடான சுண்டலை என்னிடம் தந்தார். பசி மயக்கத்திலிருந்த நான் அதை வாங்கி உண்டுவிட்டு அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் முந்தைய நாள் இரவில் அர்ச்சகர் பிரசாதம் தந்து சென்றதை ஊராரிடம் சொன்னேன். அவர்களனைவரும் வியந்தனர். இரவு பூஜை முடிந்து 8.30 மணிக்கு நடைசாற்றப்பட்ட பிறகு காலையில்தான் நடைதிறக்கப்படும் என்று சொன்னார்கள். அப்படியானால் அர்ச்சகர் உருவில் வந்து எனக்கு பிரசாதம் தந்து என் பசியைப் போக்கியது குணசீல பிரசன்ன வேங்கடாசலபதியே என்பதை நினைத்து என் உடல் சிலிர்க்கிறது'' என்று உருகினார்.

""புராணப் பெருமைமிக்க இவ்வாலயத்தை கலியுகத்தில் 5,000 ஆண்டுகள் கழித்து பக்தர்களே விரிவுபடுத்துவார்கள் என்று பெருமாள் கூறியவாரே, தற்போது (கலியுகம் 5104-ஆம் ஆண்டு) பகவானிடம் உத்தரவு பெற்று பக்தர்கள் உதவியோடு விரிவாக்கப்பணிகளில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் கும்பாபிஷேகம் நடத்தவிருக்கிறோம்'' என்கிறார் பிச்சுமணி அய்யங்கார்.

குணசீல முனிவர், ஞானவர்ம மன்னன் ஆகியோர் நேரில் தரிசனம் பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதியை நாமும் தரிசித்து நலம் பெறுவோம்.

திருச்சியிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில், நாமக்கல் செல்லும் சாலையில் குணசீலம் உள்ளது.

காலை 6.30 மணிமுதல் மதியம் 1.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் நடை திறந் திருக்கும்.

தொடர்புக்கு: தொலைபேசி: 04326-275210, 275310, செல்: 94863 04251

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :