Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-1720

வியாசர் ஓய்வெடுத்துக் கொண்ட நிலையில், மறுநாள் காலை ஜனமேஜெயன் எழுப்பப்போகும் கேள்விகளுக் கெல்லாம் பதில் சொல்வதற்காக தன் நித்ய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு தயாரானார். எப்போதும் சீடனே குருவைத் தேடி வரவேண்டும். அது நதி யானது கடலைத்தேடி அடை வதற்கு சமம். அந்த வகையில் ஜனமேஜெயனும் எப்போது பொழுது விடியுமென்று காத்திருந்து வியாசரை தன் பூஜா மண்டபத்தில் சந்திக்க வந்தான்.

சுகந்தமான நறுமணம் கமழ்ந்த பூஜா மண்டபத்தில் குங்கிலியப் புகை பரவிக் கொண்டிருந்தது. பன்னிரு வகை மலர்கள் அர்ச்சிக்க காத்திருந்தன. அதில் மனோரஞ்சிதமும், மல்லிகையும், பன்னீர் புஷ்பங்களும், நிஷாகந்தி மலர்களும் மணத்தில் ஒன்றோடொன்று போட்டியிட்டபடி இருந்தன.

திவ்யமான சூழ்நிலை!

வியாசரும் தன்முன் பணிவாக சம்மணமிட்டு அமர்ந்தவனைப் பார்த்து,  ""உன் சந்தேகங்களை நீ கேள்வியாகக் கேட்கலாம்'' என்றார். ஜனமேஜெயனும் வணங்கிவிட்டுத் தொடங்கினான்.

""குருநாதரே! என்னுள் ஒன்றல்ல இரண்டல்ல... நுறு நூறு கேள்விகள். இம் மட்டில் நான் எனக்கு முன்னோடியாக பிரகலாதப்பிரபுவைப் பார்க்கிறேன்.

அவரே தேவியிடம் அசுரகுலம் தொடர்பாய் எல்லாவித கேள்விகளையும் கேட்டார். அன்னையும் அதற்கு ஏற்கும் விதமாயும், மனம் தெளிவடையும் விதமாயும் பதிலளித்தாள். என்வரையில் தாங்கள் எவ்வாறு பதிலளிக்கப்போகி றீர்கள் என்பது போகப்போகவே தெரியும்'' என்று பலமான பீடிகையோடு தொடங்கிய ஜனமேஜெயன், தன் கேள்வியை நர நாராயணர்களிடமிருந்து தொடங்கினான்.

""இந்த பூவுலகில் மிகப்புனிதமானதாகக் கருதப்படும் பத்ரிகாஸ்ரமத்தில் தவம்புரிந்து வந்த நர நாராயணர்கள் வெகு அழகான தோற்றம் கொண்டிருக்க, அவர் களைக் கண்ட அப்சர தேவ கன்னிகள் அவர்களைத் தழுவி மகிழவும் காமுறவும் காரணம் என்ன? யோக நிஷ்டையில் இருப்பவர்கள்மேல் தேவகன்னிகளே இப்படி காமுறலாமா? அவர்கள் காமுற் றும் அவர்களை சபிக்காமல், "பின்னர் உங்களுக்கு வாய்ப்பளிப்பேன்' என்று நர நாராயணர்கள் கூறியது சரியா?'' என்று ஜனமேஜெயன் தன் முதல் கேள்வியை எழுப்பினான்.

""ஜனமேஜெயா... யோகம் புரிபவர் களுக்கு காமம் கூடாது. அவர்கள் அதை அடக்கினாலே யோகம் வசமாகும். யோகிகளுக்கு எது முதல் இலக்கோ அதற்கேற்ப அவர்கள் செயல்படலாம். நர நாராயணர்கள் முதலில் யோகத்தையே விரும்பினர். அதாவது புலனடக்கம். பிறகு அதன் ஆர்ப்பரிப்பான காமத்தை அவர்கள் கருதினர். தேவகன்னியர்கள் பெரிதாய் காமவசப்படமாட்டார்கள்.

அப்படி வசப்பட்டால் அதற்குப் பின்னால் ஒரு காரியம் நிச்சயமாக இருக்கும். இங்கேயும் நர நாராயணர்களை தேவ கன்னியர் விரும்பிட, இந்திரிய சுகத்தை மறுக்காத ஒரு பிறப்பை எடுக்கும் சமயம் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதாக நர நாராயணர் கூறினர். இதில் எங்கும் பிழையில்லை. நர நாராயணர்கள் மறுத்தும் தேவகன்னியர் மயக்க முற்பட்டிருந்தால் அது பிழை. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே, இதில் முரணோ பிழையோ எங்குமில்லை'' என்றார் வியாசர்.

""ஒப்புக்கொள்கிறேன் குருவே! என் கேள்வியெல்லாம் ஒன்றுதான்... யோகத்தைப் பெரிதாகக் கருதும் நர நாராயணர் எப்போதும் காமவயப்படாமல் இருப்பதுதானே சரி. பின்னொறு தருணம் அனுபவிக்கவென்றே பிறப்போம். அப்போது பார்க்கலாம் என்றால் எப்படி?''

""நர நாராயணர்களை நீ சாதாரண மனித ஜென்மமாகக் கருதி இப்படிக் கேட்கிறாய்.

அவர்கள்தான் மகாபாரதக் காலத்தில் அர்ஜுனனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்தவர்கள். அப்போது அவர்கள் நோக்கம் நாடாள்வதும் குடிமக்களைப் பேணுவதுமாகும். இதைச்செய்திட ரஜோகுணம்தான் தேவை. ரஜோகுணத்தின் ஒரு பகுதியில் காமத்திற்கும் வீரத்துக்கும் இடமுண்டு. அது இரண்டும் இருந்தாலே ரஜோகுணம் பூரணமாகும். எனவே, அதற்கேற்ப தேவகன்னியரை அவர்கள் இப்போதே தயார்படுத்தினர் என்று இதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.''

""அப்படியானால் இந்த தேவகன்னிகள்தான் ஸ்ரீகிருஷ்ண பத்தினியர்களான பாமா, ருக்மிணி, ஜாம்பவதி, காளிந்தி மற்றும் அர்ஜுன பத்தினி களான சுபத்திரை, உலூபி போன்றவர்களா?''

""ஆம்... இதில் பாமாவும் ருக்மிணியும் பூதேவி, லட்சுமி தேவியர் அம்சங்கள். மற்றவர்களே தேவகன்னியர்களாவர்.''""அது எப்படி அடுத்து வரப்போகும் பிறப்புகளை ஒருவரால் தீர்மானமாக முன்பே அறுதியிட முடியும்?''

""நல்ல கேள்வி... ஆனால் யோகியருக்கும் ஞானியருக்கும் அது சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்...''

""சரி; நான் கிருஷ்ணாவதாரத்துக்கு வருகிறேன். இதில்தான் என்னிடம் ஏராளமான கேள்விகள்.''

""தாராளமாகக் கேள்...''

""கிருஷ்ணாவதாரத்தின் மூல நோக்கம்?''

""தர்மபரிபாலனம்.''

""என்றால் தர்மம் கெட்டுப்போயிருந்ததா?''

""அதிலென்ன சந்தேகம்...''

""அதற்கு யார் காரணம்?''

""அசுர சக்திகள்தான். வேறு யார்...?''

""அவர்களை அழித்துதான் திருத்த வேண்டுமா? அவர்கள் புத்திமதிகளைக் கேளாதவர்களா?''

""அவர்கள் குருவான சுக்கிராச்சாரியார் சொல்லியே கேட்காதவர்கள் என்பதைதான் நீ முன்பே கண்டாயே?''

""சரி... எதற்காக அப்படிப்பட்டவர்களைப் படைக்க வேண்டும்?''

""அதாவது அவர்கள் இல்லாமல் தேவர்கள் மட்டுமே உள்ள உலகமாக இந்த பூமியும் ஏனைய லோகங்களும் இருந்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்கிறாய். அப்படிதானே?''

""ஆம் குருவே.''

ஜனமேஜெயன் கேள்விமுன் சிரித்த வியாசர், ""இப்படியே போனால் "எதற்கு இரவு? பகல் பொழுதாகவே ஒரு நாள் இருந்தால் என்ன' என்றும் கேட்கத் தோன்றும். "எதற்கு கசப்பு...? இனிப்பே எங்கும் இருக்கட்டும்' என்றும் நினைக்கத் தோன்றும். இறுதியாக "எதற்குப் பிறப்பு? பிறக்கவேயில்லை என்றால் பிரச்சினையே இல்லை' என்றும் தோன்றும். சரிதானே?''

வியாசர் காட்டிய உதாரணங்கள் ஜனமே ஜெயனுக்கு ஒரு தெளிவைத் தந்தன.

""புரிகிறது குருவே... ஒன்று இரண்டாக இருந்தாலே அந்த ஒன்றைப் புரிந்துகொள்ள இயலும். அதுதானே?''

""அதுமட்டுமல்ல... தீதும் நன்றும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இரண்டும் இருக்கும். இரண்டுக்கும் போட்டியும் இருக்கும். அதுவே வாழ்வு. எதுவும் தேவையில்லையென்றால் அசையாத மலைகளைப் போல எந்த மாறுபாடுமின்றி அப்படியே கிடக்க நேரிடும்.''

""என்றால் தீமை அதிகரிக்கும்போது அதைக் குறைக்கவோ அல்லது அழிக் கவோதான் அவதாரங்களா?''

""ஆம்... காக்கும் பொறுப்பை கடமையாக அந்த ஸ்ரீவிஷ்ணுவுக்கு அந்த ஆதிசக்தி தந்திருக்கிறாள். எனவே, தனக்கான கடமையை விஷ்ணுவும் அவதாரம் எடுத்து வந்து செய்கிறார்.''

""சரி; கிருஷ்ணாவதாரத்தை விஷ்ணுவே திட்டமிட்டு நிகழ்த்தினாரா... அல்லது யாராவது காரணமா?''

""நல்ல கேள்வி. எப்போதும் நல்லவை நசுக்கப்பட்டு அதர்மம் அதிகரிக்கும்போது பூபாரம் அதிகமாகும். தர்மம் மேகத்தைபோல் லேசானது. அதர்மம் கல்லைப்போல பாரமானது...''

""என்றால் அதர்மத்தால் பூபாரம் அதிகரித் ததா?''

""ஆமாம்... பூமாதாவின் தோள்கள் இதனால் கனத்துப்போய், பூமாதா தன் பதியாகக் கருதிடும் விஷ்ணுவிடம் முறையிட்டாள். கதறி அழவும் செய்தாள். ஏன் தெரியுமா? பூவுலகம் கம்சன், ஐராசந்தன், சிசுபாலன், நரகாசுரன், சுளுவன், கேசி, வத்சகன், தேனுகன் என்று அஷ்ட அசுரசக்திகளால் எட்டு திக்கிலும் கனத்துப் போனது. இவர்கள் தவம் செய்பவர்களைத் தடுத்தனர். வேள்விகளையும் தடை செய்தனர். தேவர்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்று அறிவிப்பும் செய்துகொண்டனர். தங்களையே மேலான சக்தி படைத்தவர்களாக அறிவித்துக்கொண்டு தங்களை அவர்கள் மும்மூர்த்திகளுக்கும் மேலானவர்களாகக் கருதினர். எனவே பாரம் அதிகரித்தது. எதனால் பாரம் கூடும் என்பதை நீ தெரிந்துகொள்.

மாதர்கள் மற்றும் கன்னியர்கள் கண்ணீர் சிந்தினால் பாரம் அதிகமாகும். ரிஷிகள், முனிகள் தவம் தவறினால் பாரம் அதிகமாகும். கற்பு குலைந்தால், சத்யம் தவறினால், பொய் மலிந்தால், சுயநலம் அதிகரித்தால், கொலைகள் மிகுந்தால், உண்மை தண்டனைக்குள்ளானால், தர்மச்செயல்கள் நின்று போனால், கருணை வற்றிப் போனால், அன்பும் பண்பும் வறண்டு போனால், ஞானியர்க்கு பசித்தால், பிச்சைக்காரர்கள் அதிகமானால், பாசநேசமும் குறைந்தால் அல்லது அறவே இல்லாது போனால், அவ மரியாதைகள் மிகுந்தால், அறச்செயல்கள் நிகழாது போனால், ஆலயங்களில் பூஜைகள் நின்று போனால், திருவிழாக்கள் மறக்கப்பட்டால் பூபாரம் பல மடங்கு அதிகரித்து அதனால் பிரளயம், பூகம்பம் என்று ஏற்படும். மனித உயிர்களோடு மற்ற துணை உயிர்களும் அழியும். குறிப்பாக பசுங்கன்றுகள் பாலின்றி சுருண்டு விழுந்து மடியும்.

இதெல்லாமே பூமியில் நிகழவும்தான் பூமாதா விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு வும் தான் அவதாரம் எடுத்துவர தீர்மானித்து அதன்பிறகே கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது!''

வியாசர் கிருஷ்ணாவதார காரணத்தை ஜனமேஜெயனுக்கு மிகத் தெளிவாகப் புரியும் விதத்தில் கூறிமுடித்திட, ஜனமேஜெயனிடம் அடுத்த கேள்வி ஆரம்பமானது!

""குருவே... இப்படி பூமாதாவின் பொருட்டு நிகழ்ந்த கிருஷ்ணாவதாரம்கூட நிறைய குறைபாடுகள் உள்ள அவதாரமாகவே உள்ளதே... ஏன்?''

""நீ எதைக் குறைபாடு என்கிறாய்?''

""பிறக்கும்போதே நிறைய தடுமாற்றங்கள். பிறப்பது தெரியாமல் பிறந்து வளர்ந்தபிறகு அவதார நோக்கத்தை ஈடேற்றலாமே?

எதற்காக கம்சன் காதுகளில் அசரீரி ஒலிக்கவேண்டும். அவனும் தேவகிக்கு பிறந்த அவ்வளவு குழந்தைகளையும் ஏன் கொல்ல வேண்டும்? குறிப்பாக எதனால் தேவகிக்கு எட்டாவதாகப் பிறக்கவேண்டும். முதல் குழந்தையாக ஏன் பிறக்கவில்லை?''

ஜனமேஜெயன் இதுவரை கேட்ட கேள்விகளிலேயே இதுதான் சமர்த்தான கேள்வி. ஸ்ரீபாகவதம் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்கூட இந்த கேள்விகள் எழும்பியிருக்கக்கூடும். ஆனால் காரண மில்லாமல் காரியமில்லை; இருக்கவும் முடியாது என்பதுதானே பரமனின் நியதி. வியாசரும் பதில் கூறத் தயாரானார்.

""ஜனமேஜெயா! எப்போதும் கேள்விகள் அறிவை வளர்த்துக்கொள்ள துணை செய்வதாக இருக்கவேண்டும். சந்தேகத்தோடும், அவசரத்தோடும் கேட்கக்கூடாது. தான் ஒரு மகாபுத்திசாலி என்கிற கர்வத்தோடும் கேட்கக் கூடாது. நீ இங்கே தெளிவுபெற கேட்டிருப்பதாகவே கருதுகிறேன். ஸ்ரீகிருஷ்ணனை மட்டும் மையப்படுத்தி சிந்தித்தால் இப்படி எல்லாம் கேள்விகள் எழும்பும். அது இயற்கையே!

ஸ்ரீவிஷ்ணு தன் பரிபாலனத்தின் பொருட்டு நீண்டகால திட்டமுடையவர். ஒரு தோட்டக்காரன் ஒரு மரக்கன்றை நடும்போதே அது எப்போது கனி தரும் என்பதைக் கணித்தே வைத்திருப்பான்.

அதுபோன்ற செயல்பாடே ஸ்ரீவிஷ்ணு விடமும்... முன்பே பிருகு முனிவரிடன் சாபம் காரணமாக பூலோகத்தில் பல பிறப்புகள் எடுத்து மானுடர்கள் அனுபவிக்கும் எல்லா இன்பதுன்பங்களையும் ஸ்ரீவிஷ்ணு அடைய வேண்டுமென்று ஒரு கணக்கு உள்ளது. ஒரு முனிவரின் சாபம் என்பது மும்மூர்த்தியரைக்கூட பாதிக்கும் என்பதற்கு அந்த சாபமே ஒரு செய்தியாகிவிட்டது. இது முதல் விளைவு. இரண்டாவது விளைவே மானுடப் பிறப்பு. அதன்படியே விஷ்ணு தேவகி வயிற்றிலும், அர்ஜுனன் குந்தி மூலமாகவும் மானிடப் பிறப்பு எடுத்தனர்.

அதற்குமுன், தேவகி வயிற்றில் விஷ்ணு கிருஷ்ணனாகப் பிறப்பதற்கு முன் பிறந்த ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டதன் பின்புலத்திலும் ஒரு சாபத்துக்குரிய சம்பவமுண்டு. ஹிரண்யகசிபு எனும் அசுரனுக்கு ஆறு பிள்ளைகள் இருந்தனர்.

இவர்கள் தங்கள் தந்தைபோல் அசுர புக்தியோடு இல்லாமல் தேவகுணம் கொண்டிருந்ததோடு, பிரம்மாவை நோக்கி தவம் செய்து பல அரிய வரங்களையும் பெற்றுக்கொண்டனர். இதையறிந்த ஹிரண்யகசிபு தன் பிள்ளைகளை அழைத்துக் கடிந்து கொண்டான். "உங்களுக்கு என்ன குறை என்று நீங்கள் பிரம்மாவைக் குறித்து தவம் செய்தீர்கள்?' என்று கேட்க, அவன் பிள்ளைகளும், "அவரல்லவா மும்மூர்த்திகளுள் ஒருவர்.

அவரால்தானே வரமருள முடியும். உங்களுக்கு அழிக்கும் சக்திதான் உண்டு. ஒன்றை ஆக்கும் சக்தி இல்லையே தந்தையே' என்றனர். இதனால் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு தன் சக்தி அவ்வளவையும் திரட்டி தன் பிள்ளைகளுக்கு சாபமளிக்கத் தயாரானான்.

"எனக்குப் பிறந்தும் என் மகிமை தெரியாத நீங்கள் இப்போதே இறந்து பாதாள லோகத்தில் கிடந்து உழலுங்கள். அப்படியே பூவுலகில் என் ஆட்சியின் தொடர்ச்சியை மேற்கொள்ளும் கம்சன் என்பவனின் காலத்தில் பிறந்தவுடனேயே ஒருநாள்கூட வாழ்ந்திடாதபடி வெட்டியும் கொல்லப்படுவீர்கள். இந்த சாபம் பலிக்கும்போது தெரியும்- அசுர சக்திக்கும் வரம்தரும் ஆற்றல் உண்டு என்பது'' என்றான்.

இப்படி தேவகி வயிற்றில் பிறந்த குழந்தைகள் வெட்டிக்கொல்லப்படுவதன் பின்புலத்தில், ஸ்ரீகிருஷ்ணனுக்கு எப்படி பிருகுமுனியின் சாபமோ, அது போல ஹிரண்ய கசிபுவின் சாபமும் இருந்துள்ளது'' என்ற வியாசரை ஜனமேஜெயன் பெரிதும் வியப்போடு பார்த்து, ""குருவே... ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு சரியான காரணம் இருக்கிறதே... அடேயப்பா.

என்ன ஒரு திட்டமிட்ட செயல்பாடு. இதிலிருந்து நன்மை- தீமை என இரண்டும்கூட ஒரு விதிக்குக் கட்டுப்பட்டே நிகழ்த்தப்படுவதாகக் கருதலாமா?'' என்று கேட்டான்.

""ஆம்... எல்லாமே விதிக்கு உட்பட்ட வையே... தீதோ, நன்றோ... அதன்பின் ஒரு காரண காரியம் இருந்தே தீரும். மணமிகு உணவே நாற்றமிகு மலமாகிறது.  அவ்வாறு ஆகாவிட்டால் உணவும் மணக்காது- நாற்றமும் இருக்காது. இருளும் ஒளியும் போன்றதே சகல செயல்பாடுகளும்...''

வியாசரின் பதிலால் ஓரளவு தெளிந்தான் ஜனமேஜெயன். ஆயினும் அவன்முன் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் பொருட்டு அறிய வேண்டிய விடைகள் ஏராளமாக இருந்தன.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :