Add1
logo
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! || முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு! || ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு? ||
Logo
ஓம்
கடவுளைத் தேடி...
 ................................................................
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
சித்திரை 1-ல் பிறக்கும் புத்தாண்டுப் பலன்கள்!-மேஷம்
 ................................................................
மாசி மக மகத்துவம்!
 ................................................................
மார்ச் மாத ராசி பலன்கள்
 ................................................................
மங்கள விளக்குப் பரிகாரம்!
 ................................................................
ஆன்மிகவாதி என்பதே பெருமை!
 ................................................................
மார்ச் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
சிருங்கேரி ஜகத்குருவின் நூற்றாண்டு!
 ................................................................
21 தலைமுறை தோஷம் போக்கும் அஷ்டமி விரதம்!
 ................................................................
பித்தம் தெளிவிக்கும் பிரசன்ன வேங்கடாசலபதி!
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
நீதி தேவதை மாசாணி அம்மன்!
 ................................................................
தொண்டனுக்காக தூது சென்ற பெருமான்!
 ................................................................
01-03-17ழங்காலத்தில் கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கொங்குநாட்டின் தென்பகுதியான ஆனைமலை நாடும் அவற்றுள் ஒன்று. ஆனைமலை சங்க காலந்தொட்டு சிறந்து விளங்கும் புண்ணியபூமி. சங்ககால நன்னன் வாழ்ந்த பகுதி இதுவே.

ஆனைமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற ஊருக்கும் அதே பெயர் ஏற்பட்டது. சோழன் பூர்வட்டயம் என்ற நூல் "ஆனை இருளன் பதி' என்று இவ்விடத்தைச் சுட்டுகிறது. ஆனைமலையில் ஆழியாற்றங் கரையில்  சோமேசுவரர் திருக்கோவிலும், ஊரின் நடுவே காசிவிசுவநாதர் கோவிலும் உள்ளன. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது  மாசாணியம்மன் திருக்கோவில்.

பழைய வரலாறு

இது சங்க காலத்தில் உம்பற் காடான ஆனைமலையில் நடந்த கதை. இந்தப் பகுதியை நன்னன் என்ற ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங் கரையில் இருந்த தன் அரச தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம் மரத்தின் கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் ஆணையிட்டிருந்தான்.

ஒரு நாள், ஆழியாற்றில் தன் ஒத்த இளவயது பெண்களோடு நீராட வந்த இளம்பெண் ஒருத்தி, அந்த மாமரத்தில் இருந்து தானாகவே ஆற்றில் உதிர்ந்து வந்த மாங்கனியை உண்டுவிட்டாள். இது தெரிந்த நன்னன் அவளைக் கொலை செய்து விடும்படி உத்தரவிட்டான். அவளது தந்தை அந்தப் பெண்ணின் எடையளவு தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தொரு களிற்றையும் (ஆண் யானைகள்) அந்தப் பெண் அறியாது செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் மன்னன் ஏற்கவில்லை. அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டான்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணை மயானத்தில் சமாதிப்படுத்தி அதன்மீது அந்தப் பெண் போன்ற ஓர் உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபட்டார்கள். மயானத்தில் சயனித்த நிலையில் இருந்த அப்பெண் நாளடைவில் மாசாணி என அழைக்கப்பட்டாள்.

பெண் கொலை புரிந்த அந்த நன்னனை, கொங்கிளங்கோசர்கள் படையெடுத்து வந்து தண்டித்து, அவனது மாமரத்தையும் வெட்டி விட்டனர் என்பது பின்னர் நடந்த வரலாறு.

தமிழ்ப்புலவர்கள், பெண் கொலை புரிந்த அந்த நன்னர் மரபினரைக்கூட பிற்காலத்தில் பாட மறுத்துவிட்டனர். பெயர் தெரியாத இந்த ஆனைமலைப் பெண் பின்னர் கொங்கு நாடு முழுவதும் வழிபடும் தெய்வமானாள். பக்தர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கே வந்து இந்த மயான தேவதையை வழிபடுவது வழக்கமாயிற்று.

தமிழர்களின் முதல் மாதமான தை மாதத்தில், தைப்பொங்கல் முடிந்தபின் அமாவாசை தொடங்கி அடுத்த 17-ஆம் நாள், நெருப்பினால் குண்டம் வளர்த்து அதில் நடந்து அந்தப் பெண்ணுக்குச் செய்த கொடுமைக்காகப் பரிகாரம் தேடினார்கள்.

ஆனைமலை ஊருக்குமேல் "பிங்கொனம் பாறை' என்ற பாறை ஒன்றுள்ளது. இதுவே அந்தப் பெண்ணைக் கொன்ற பாறை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இவ்வூரில் கிறிஸ்துவுக்கு முந்தைய 40 உரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன. ஆகவே இந்த ஊர் நீண்ட வரலாறு உடையது என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீராமர் தொடர்பு

இத்தகைய சிறப்புப் பொருந்திய ஆனைமலை பெண் தெய்வத்தை ஸ்ரீ ராமர் பூஜை செய்து வணங்கி அருள் பெற்றதாக ஒரு கதை நிலவுகிறது. இதன்படி ஸ்ரீ ராமர் பொய்மானைத் தேடிப் புறப்பட்டுபோக, தன் பெண் மானான சீதையை இராவணன் கவர்ந்து செல்லக்காரணமான பின், சீதையைத் தேடிப் புறப்பட்டார். அவ்வாறு தேடிவந்தபோது உப்பாற்றின் கரையில் இருந்த மயானத்தில் ஓர் அசாதாரணமான அற்புத சக்தி விளங்குவதை அறிந்தார். அங்கிருந்த மேடைமீது அமர்ந்து தியானித்தார். எல்லாம் வல்ல பெருங் கருணை பெருமாட்டியான அம்பிகை, பராசக்தி அங்கே அருட்கோலம் பூண்டு நிலவுவதை அறிந்தார். அந்த மேடைமீது அங்கிருந்த மயான மண்ணைக் கொண்டு, படுத்த கோலத்தில் மண் உருவம் செய்து வழிபட்டார்; அருள் பெற்றார். அதன்பின் இலங்கை தேடிச் சென்றார் என்பது அக்கதை. 

மாசாணியம்மன் சிறப்பு

மாசாணியம்மனின் சிறப்புக்குக் காரணம் மூலவுரு அமைப்பின் தனித் தன்மையே ஆகும். பொதுவாக மற்ற எல்லா திருக்கோவில்களிலும் அம்பிகை யின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும்.

அந்த திருவுருவங்கள் சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்பட்டவை. 

ஆனால் மாசாணியின் தோற்றம் அத்தகையது அல்ல. அவள் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் உள்ளாள். இது வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். உப்பாற்றின் கரையில் சுமார் 17 அடி நீளத்தில் படுத்திருக்கும் கோலத்தில் உள்ளது அம்பிகையின் மூல உரு.

மிளகாய் அரைத்தல்

மயானத்தில் வீற்றிருக்கும் மகா சக்தியினைப் பார்க்கின்ற, வணங்குகின்ற எவரும் பொய் சொல்ல முடியாது. வஞ்சகம் நினைக்கவும் முடியாது. மகா சக்தியான மாசாணியம்மன் நீதிதேவதையாக விளங்குவதால் இங்கு நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிக்கல்லின் மகிமை என்னவென்றால் பில்லி, சூனியம், மந்திரம், ஏவல், நம்பிக்கை துரோகம், மோசடி போன்ற பெரும் பகையால் பாதிக்கப்பட்டவர்களும், பொருள் திருட்டுப் போனவர்களும் மிளகாயை அரைத்துக் கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றனர். தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால் தவறு செய்தோர் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகின்றனர். இங்கு மிளகாய் அரைத்து நீதி வேண்டியபின் தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு நடத்திவிடவேண்டும்.

உதிர மாலை

இந்தப் பெண் தெய்வம் பெண்களின் காவல் தெய்வம். அதனால் பெண்களின் தீராத வயிற்றுவலி, மாதாந்திர துன்பங்கள் நீங்க உதிர மாலை வாங்கி சாற்றினால், நோய் நிவர்த்தியாக பச்சிலை மருந்து தரப்படும். இந்த மருந்தை சாப்பிட்ட பெண்கள் பயனடைந்து சந்தோஷப்படுவது இந்த அம்மனின் மற்றொரு சிறப்பாகும்.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அம்பிக்கையின் திருமுன் வந்து குறிப்பிட்ட வாரங்களுக்கு வேண்டி குழந்தைச் செல்வம் பெற்று, தாயும் சேயுமாக வந்து வழிபாட்டை நிறைவேற்றிச் செல்வது இக்கோவிலின் மற்றொரு வழக்கமான காட்சியாக உள்ளது.

இங்கு நடக்கும் குண்டம் திருவிழா மிகச்சிறப்பு வாய்ந்தது, இவ்வாண்டு 27-1-2017 முதல் 14-2-2017 வரை மிகச் சிறப்பாக நடந்தேறியது.

கோவை மாவட்டம். பொள்ளாச்சி வட்டத்தில் உள்ளது ஆனைமலை மாசாணியம்மன் ஆலயம்.

ஆலய தொடர்புக்கு, தொலைபேசி: 04253 282337தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :