Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017டைப்பாளியோடு ஒரு வாசகன் நெருங்குவதெல்லாம், அந்தப் படைப்பாளியின் எழுத்து மனதை வசீகரித்து தொடர்வாசிப்புக்கு நகர்த்துதல் என்கிற மாயாஜாலத்தை செய்யும்போதுதான்! ஒரு படைப்பு இரண்டு தளத்தில் செயல்பட வேண்டும்.

வாசகனை வாசிப்பின்மீது தீரா போதையை உருவாக்கி அவனை உன்மத்த நிலையாக்கிட வேண்டும். சராசரி மனித வாழ்வின்மீது நம்பிக்கையற்றிருக்கிற வாசகனை வாழ்வின்மீது பேராசையைத் தூண்டி, வாழ்தல் எளிதுதான் என்கிற நம்பிக்கை ஒளியை உறுதிப்படுத்துதல் வேண்டும். வாழ்வில் நீ எதிர்கொள்கிற சிக்கல்கள் யாவும் உனக்கென்று மட்டும் வரமாக கொடுக்கப்பட்டவையல்ல, இந்தப் பாதையில் பயணிக்கிறவர்கள் யாவர்க்குமானது என்று போதிக்கவேண்டும்.

வாழ்வின்மீது தீராத புகார்களையும் புறக்கணிப்புகளால் புரட்டப்பட்ட துயரங்களையும் கொண்டிருக்கிற ஒருவன் எதிர்கொள்கிற வாழ்வில் கடந்து போகிற வண்ணத்துப்பூச்சியும் ஆற்றின் அசைவும் உதிர்கிற பன்னீர்ப்பூக்களும் வாழ்வின் இன்னொரு பக்கத்தை அடையாளம்காட்டும்.

இப்படியாக இரண்டு தளங்களிலும் எழுதிக்கொண்டிருக்கிற ஒரு படைப்பாளியை எதேச்சையாக எதிர்கொள்ளும்போது, அவன் அடைகிற ஆனந்தத்தின் எல்லையை எந்த அளவுகோலாலும் அளக்க இயலாதுதான்.

அப்படி நான் எதிர்கொண்ட கவிஞானத்தந்தையே கல்யாண்ஜி. அவர் சாகித்ய அகாதமி விருதுபெற்ற செய்தியை அலைபேசியில் அறிந்த அந்த மாலைப்பொழுதில் ஏன் அத்தனை மகிழ்ச்சியென்று புரியவே இல்லை. எப்போதாவது வாய்க்கிற மகிழ்ச்சியின் தருணமொன்றை அந்த மாலைப்பொழுது எனக்களித்திருந்தது.

படைப்பாளியை படைப்பின்வழியே தெரிந்து கொள்வதற்கு அப்பாலும் நேரில் சந்தித்துப்பேசுவது என்பது பெருங்கூச்சமாக என்னை ஆட்கொண் டிருந்ததால் நேரில் பார்த்தபோதுமே என்ன பேசுவதென்று தடுமாற்றமாக இருந்தது.

பொள்ளாச்சியில் சிற்பி இலக்கிய விழாவில்தான் அவ்வளவு நெருக்கமாக சந்தித்ததாக நினைவு. வாழ்க்கை இறுகி கெட்டித்து இனி உடைந்துதான் போகப் போகிறது என்கிற நிலையொன்று நேர்ந்தபோதுதான் கவிதை அறிமுகமாயிற்று. காதலும் இலட்சிய வேட்கையும் வாசிப்பின்வழியே அறிந்த சமூகம் மற்றும் கவிதை தளத்தை நகர்த்திக்கொண்டிருந்தது. இதுதான் கவிதை என்று அறியாமலே கவிதைகளாக எழுதியபடியிருந்தபோது மனதின் இன்னொரு பக்கத்தை திறக்கசெய்து வெம்பிய காலச்சூழலுக்கு மயிலிறகாக வருடச்செய்தது கல்யாண்ஜியின் படைப்புகள்.

அவரை யாரென்று தெரியவில்லை. மனதுக்கு நெருக்கமான படைப்பாளியாக உள்ளுக்குள் அமர்ந்துகொள்ள எல்லார்க்கும்போலவே எனக்கும் அவர் மனதிற்கு பிடித்தமானவராக மாறியிருந்தார். அவர் அப்படி நெருங்க இந்தக் கவிதையும் காரணமாக இருந்திருக்கலாம்.

        சூரியனை
        ஆற்றங்கரை மணலை
        தொட்டால் சுருங்கிச் செடியை
        பாசஞ்சர் ரயிலின்     
        அற்புத இரைச்சலை
        பட்டாம்பூச்சியைத்
        தொலைத்துவிட்டு
        நாற்காலிக் கால்களில்
        நசுங்கிக் கிடக்கிறது
        சோற்றுக்கலையும் வாழ்க்கை

தன் படைப்பின் வழியாக இருவழி நகர்த்தலாக நகர்த்திக்கொண்டிருக்கிறார் என்பதே இன்றைக்கும் வரை உண்மையாக இருக்கிறது.

சில எதிர்பார்ப்புகள் நம்மையும் அறியாமலே நடந்துவிடுகிறது. அவரின் கரங்களில் எனது "பறத்தலை விரும்பும் பறவைகள்'’கட்டுரை நூல் திருநெல்வேலியில் வெளியிடப்பட்டது. யுகமாயினி சித்தன் வழியாக அந்தக் கனவு நிறைவேறியது.

எப்போதாவது கிடைக்கிற தண்ணீரில் காலமெல்லாம் தாகம் தீர்த்துக் கொள்கிற கவிதைப் பறவையொன்றிற்கு அது போதும்தானே! எனினும் இன்னொரு வாய்ப்புக்கும் மனம் ஏங்கத்தான் செய்கிறது.

ஒரு தொகுப்பைக் கணக்கற்று வாசிக்க இயலும் என்பதன் அடையாளமாக "எல்லார்க்கும் அன்புடன்' கடிதங்கள் எந்தச்சூழலில் அந்தத் தொகுப்பை வாசித்தேன்…என்பதை இன் னும் நினைவில் வைத்திருக் கிறேன். இவரைப் போல கடிதங்களை எழுதி எழுதி பார்த்திருக்கிறேன். பிரியமான காலடித்தடத்தில் நாமும் நாமது காலடியை வைத்துப் பூரித்துப்போவது போன்றது. சிறுகதைகளில் வருகிற பல கதாபாத்திரங்கள் இன்றைக்கும் தெருவில் நடந்துபோவது போன்ற பிரமிப்பை தரக்கூடியவை. இவையெல்லாம் என் ஆழமான வாசிப்பில் உணர்ந்தநிலை அல்ல.

பற்றிப்படர கொழுகொம்பின்றித் தவிக்கிற ஒரு மல்லிகைச் செடி இனி பாதுகாப்பாய்ப் படரலாம் என்று உத்திரவாதப்படுத்திய எழுத்துக்களைத் தரிசித்த அனுபவம். எந்தக் கதாபாத்திரம் என்னவெல்லாம் செய்தது என்றெல்லாம் யோசிக்க வேண்டியதுமில்லை. அது அது அதனதன் நேரத்தில் என்ன என்னவோ செய்தது,…கூடவே நடந்துபோகிற உணர்வை… பேசிக்கொண்டிருக்கிற உணர்வை… இப்படி எவ்வளவோ சொல்லிக் கொள்ள இருக்கிறது. அவரது கைகளைப் பற்றிக்கொள்ளும் பேராவலும் இருக்கிறது. அப்போதெல்லாம் அவரின் கவிதைகளோடு பேசத் துவங்கிவிட வேண்டியது தான்! ஒரு கவிதையை எழுதத்துவங்கும் முன்பே இந்தக் கவிதையும் நினைவுக்கு வந்துவிடுகிறது.

    முன்பின்
    தெரிந்து கொள்ளுங்கள்
    நீங்கள் உங்களுடையது
    என எழுதும் கவிதைக்கு
    முன்பே வரிகள் இருந்தன
    நீங்கள் அமிழ்கின்ற ஆறு
    ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது
    நீங்கள் பார்க்கிற சூரியன்
    பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை
    உங்களுடைய சாப்பாட்டுத்
    தட்டில் இருக்கிற பருக்கைகளில்
    நேற்றின் எச்சில்
    உங்களுக்குப் பின்னாலும்
    வர இருக்கிறார்கள்
    நிறைய பேர்கள்
    அடித்தல் திருத்தல் அற்று!         

எல்லாப் பிரமிப்புகளையும் சட்டென நகர்த்தி இயல்பூக்க நிலைக்கு திரும்ப வைத்துவிடுகிற பேரதிசய உண்மையை உணர்த்துகிறது. வாழ்க்கையின் மென்மையான பக்கங்களை மிக மெதுவாகத் திறந்து காட்டி ஆச்சரியப்படுத்தியவை இவர் கவிதைகள். எங்காவது எனது கவிதை நகர்வு தேங்கிவிடுகிறபோது இவர் படைப்புகள்தான் மறுபடியும் நகர்த்தி ஓடச் செய்கிறது. அதனாலேயே அவரைக் கொண்டாடத்தூண்டுகிறது.

நாம் எந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக் கிறோமோ அந்த வாழ்வை நம் கைகளிலேயே தந்துவிடுகிற மனிதர் அபூர்வமானவர் அல்லவா? அவரின் சிரசில் ஒரு கிரீடம் அமர்கிறபோது அது நம்முடையதாகவே மாறிவிடுவதுதான் வாசகனும் படைப்பாளியும் ஒன்றாகிவிடுகிற பேரின்பவேளை. கடிதம் எதிர்பார்க்கிற தலைமுறையை தொலைத்த காலத்தில் ஒரு ஆவணமாக இந்தக் கவிதையை கொண்டாடிக்கொண்டே இருக்கிறது மனம்.

        தினசரி வழக்கமாகிவிட்டது
        தபால் பெட்டியைத்
        திறந்து பார்த்துவிட்டு
        வீட்டுக்குள் நுழைவது
        இரண்டு நாட்களாகவே
        எந்தக் கடிதமும் இல்லாத
        ஏமாற்றம்
        இன்று எப்படியோ
        அசைவற்று இருந்தது
        ஒரு சின்னஞ்சிறு
        இறகு மட்டும்
        எந்தப் பறவை
        எழுதியிருக்கும்
        இந்தக் கடிதத்தை!

மீனைப்போல இருக்கிற மீனை, பூனை எழுதிய அறையை, மூன்றாவது முள்ளை, ஒரு சிறு இசை யை…இன்னும் எழுத எழுத நிறையும் படைப்புகளால் ஒரு சிறு கிராமத்தின் எளிய இல்லமொன்றில் ஒரு படைப்பாளியை உருவாக்கிற பணியை செவ்வனே செய்துவருகிறது வண்ணதாசனுடைய படைப்புகள். ஒரு படைப்பால்  தன் வாசகனை எழுதத்தூண்டு வதன் மூலம், அவன் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து கிறார். தன் படைப்புகளை வாசிக்கச் செய்வதன் வழியே வாழ்வின் தருணங்களில் எதுவுமே இழந்த நிலை அல்ல என்கிற தைர்யமூட்டுகிற நேர்மையைக் கற்பிக்கிறார். இவருக்கு இது பொருத்தமான விருது என்பதற்கு வேறு எந்தச் சாட்சி தேவைப்படும்?
நீங்கள் ஒரு விதை முளைத்து வெளிஉலகம் பார்க்க, ஈரப்படுத்துதலை மௌனமாகச் செய்கிறீர்கள்…

முளைத்த செடி, வளர்ந்து விளைச்சலாக போதுமான வரமாகிறீர்கள்…நீங்கள் நீரூற்றியபடியே இருங்கள்…

 இவர் விருதுபெற்ற செய்தியினை முகநூல் பதிவில் கவிஞர் இளஞ்சேரல் பல நூற்றாண்டுகளாக கோவை இருகூரில்தான் வண்ணதாசன் வசிப்பதாக பதிவொன்றை செய்திருந்தார். அப்படியெல்லாம் இல்லை அவர் பில்சின்னாம்பாளையத்தில்தான் வசிக்கிறார் என்று பதிவிட்டேன்…

ஒரு சிறு இசை போதும்
இந்த வாழ்வின் பெருங்கொண்டாட்டத்திற்கு
இப்போது கொண்டாட்டமான மனநிலை
கொண்டாடுவோம்                  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :