Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017கரங்களின் கதைகளைப் படிப்பதில் நான் தீராத வேட்கையுடையவன். வரலாறுநெடுக பிரம்மாண்டமான நகரங்கள் எழுப்பிய கனவுகளும் அழிந்த நகரங்களின் சிதிலங்களும் நிரம்பியிருக்கின்றன. நான் அந்தக் கதைகளின் வேட்கைப் பெருமூச்சுகளையும் குருதி வாசனைகளையும் மிக அந்தரங்கமாக உணர்ந்திருக் கிறேன். தோற்கடிக்கப்பட்ட நகரங்கள், எரிந்த நகரங்கள், நீரில் மூழ்கிய நகரங்கள் என அழிந்த நகரங்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது காலம். ஆனால் நான் ஒருபோதும் நினைத்ததில்லை, நானும் ஒரு நகரத்தின் அழிவுதினக் கதைகளை எழுதுவேன் என்று. அதுவும், அவை எனது நகரத்தைப் பற்றிய கதைகளாகவே இருக்கும் என்று.

2015, அக்டோபர் 8 வடகிழக்குப் பருவமழை துவங்கியபோது நாங்கள் அதைக் காலம் காலமாக கடந்து செல்லும் இன்னொரு மழைக் காலம் என்றுதான் நம்பினோம். நான் எல்லா மழைக்காலங் களிலும் இச்சைகள் ததும்புகிற மழைக்காலக் கவிதைகளை எழுதிவந்திருக்கிறேன். மழை துவங்கிய முதல் நாள் காலையில் தலைக்குமேல் துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு வேகவேகமாக சாலையில் நடந்துசென்ற ஒரு பெண்ணைக் கண்டேன். ஒரு ஆளுயர மழைத்துளி சாலையில் நடந்துசெல்கிறது என்கிற             ஒரு படிமம் மனதில் தோன்றி கிளர்ச்சியடைய வைத்தது.

பிறகுவந்த நாட்களில் மழையின் வாசனையில் சஞ்சலமூட்டும் எதையோ உணரத்தொடங்கினேன். என் மனம் ஒரு விலங்கினுடைய மனம். அது எப்போதும் தீமைகளை முன்னறிந்து பதற்றமடையத் தொடங்கிவிடும். இந்த மழைக்காலம் நல்லதல்ல என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்வு என்னை வாட்டத்தொடங்கியது. கடுமையான மழைப்பொழிவுகள் குறித்த செய்திகள் வரத்தொடங்கின. இந்த நகரம் தண்ணீரால் அழியும் என்ற வாக்கியம் திரும்பத் திரும்ப அதிரத்தொடங்கியது. நவம்பர் 16-ஆம் தேதி "இறந்த நதிகளின் ஆவிகள் வீடுதிரும்பிக்கொண்டி ருக்கின்றன' என்ற நெடுங் கவிதையை எழுதினேன். அது துர்சகுனங்களின் கவிதை. இந்த நகரம் நீரால் வேட்டையாடப்படும் காட்சியை அந்தக் கவிதை விரிவாக முன்மொழிந் தது. டிசம்பர் 1-ஆம் தேதி வெளிவந்த "உயிர்மை' இதழில் இடம்பெற்ற அந்தக் கவிதையைக் கண்டு வாச கர்கள் வியந்தார்கள். ஏனெனில் அந்தக் கவிதையில் சொல்லப் பட்ட எல்லா காட்சிகளும் டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் அரங்கேறியது. இந்த நகரம் நீரால் சூழப்பட்டது. நீரால் வேட்டையாடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி முன் னறிவிப்பின்றித் திறக்கப்பட்ட டிசம்பர் 2 -ஆம் தேதி நாங்கள் நீரால் முற்றுகையிடப் பட்டோம். ஒரே இரவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீர் அகதிகளாக மாறினார்கள். மக்கள் புகலிடம் தேடி ஓடிக்கொண்டேயிருந்தார்கள். குடியிருப்புகளுக்குள் இரண்டுமாடி உயரத்துக்கு நிரம்பிய தண்ணீரைக் கண்டு ஏராளமானோர் மனப்பிறழ்வுக்கு ஆளானார்கள். லட்சக்கணக்கான வீடுகளில் இருந்த அத்தனை பொருள்களும் தண்ணீரில் குப்பையாக அடித்துச்செல்லப்பட்டன. குடிதண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் மொத்த நகரமும் ஒரு போர்க்கால விளிம்பிற்குச் செலுத்தப்பட்டது. ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லை. செல்போன்கள் வேலைசெய்யவில்லை. பெட்ரோல் கிடைக்கவில்லை. கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம்.கள் வேலைசெய்யவில்லை. கடைகள் மூடிக்கிடந்தன. பால் கிடைக்கவில்லை. மாற்றுத் துணி இல்லை. போக்குவரத்து முடங்கியது. அரசு என்ற ஒன்று இருப்பதற்கான தடயம் எங்கும் இல்லை. வேறொரு நாடாக இருந்தால் பெரும் கிளர்ச்சி வெடித்திருக்கும். ஆனால் மக்கள் வேறொரு முடிவெடுத்தார்கள். தாமே அரசாக மாறினார்கள். ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். முதன்முதலாக ஒரு குடிமை சமூகத்தின் எழுச்சி ஒன்றை இந்த நகரத்தில் கண்டேன். நானும் அதன் ஒரு பகுதியாக இருந்தேன். இந்த நகரத்தை அழிப்பது எவ்வளவு சுலபம் என்பதை நான் கண்டதுபோலவே, இந்த நகரம் எந்த அழிவிலிருந்தும் மீண்டுவரும் என்பதைக் கண்ட தினங்கள் அவை. ஒரு மகத்தான துயரத்தின்மேல் ஒரு மகத்தான பேரன்பு இந்த நகரத்தின்மேல் படிந்தது. வண்ணமயமான எனது நகரம் திடீரென ஒரு நாள் வெறும் போர்வைகளையும் ப்ரெட் துண்டுகளையும் தண்ணீர் பாட்டில்களையும் தவிர வேறு எதுவும் இல்லாததாக மாறியதைக் கண்டு மனம் உடைந்து அழுதேன்

நகரம் முழுக்க பிசாசுகளைப்போல அழிவின் கதைகள் எங்கெங்கும் உலாவத் தொடங்கின. தண்ணீருக்கு அடியிலிருந்து பிணங்கள் வருவதுபோல எண்ணற்ற கதைகள் மேலேவரத் தொடங்கின. அவை நாம் அதுவரை கற்பனை செய்திராத மனித அவலத்தின் கதைகள், தண்ணீரில் கரைந்தவர்களின் கதைகள், எல்லாவற்றையும் இழந்தவர்களின் கதைகள், அவமானத்தில் குன்றிப்போனவர்களின் கதைகள், சொல்லவந்து வார்த்தை இல்லாமல் தொண்டையிலேயே நின்றுவிட்ட கதைகள்.

நான் அவற்றை எழுதவிரும்பினேன். ஒரு குடிமை சமூகம் அடைந்த பேரவலத்தின் சித்திரங்களைக் கடல்கொண்ட நகரத்தின் வழியே உருவாகிவந்த ஒரு கவிஞன் என்ற வகையில் அவற்றை அழியாத நினைவுகளாக மாற்ற விரும்பினேன். நாங்கள் எதையெல்லாம் பின்வந்த நாட்களில் சுலபமாக மறந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதற்காவது, அதையெல்லாம் எழுத நினைத்தேன். உண்மையில் எனக்கு எழுதுவதற்கு இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. அதையெல்லாம் இந்தக் கவிதைகளில் இன்னும் சொல்லிமுடிக்க இயலவில்லை. இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் கடுமையான நோய்மையை அடைந்தேன். உணர்ச்சிவசத்தால் ஒரு கிண்ணத்தில் உள்ள தண்ணீரைப்போல எந்நேரமும் தளும்பிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் எழுதுவதன்மூலம் இந்த நினைவுகளில் இருந்து வெளியேறிவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவை அந்த நினைவுகளின் காயத்தை நிரந்தரமாக்கிவிட்டன. அந்த வகையில் இந்தக் கவிதைகள் சென்னைவாசிகளின் கூட்டுமனதின் சொற்கள்.

டிசம்பர் 2 ஆம் தேதிக்குப் பின் இன்றுவரை தினமும் அதிகாலை 2 மணிக்கு விழிப்புவந்து விடுகிறது. மழைச்சத்தம் கேட்பதுபோன்ற உணர்வு. ஜன்னலைத் திறந்துபார்க்கிறேன். பிறகு தூங்கமுடிவதே இல்லை. இந்தக் கொடுங்கனவு வாழ்நாளெல்லாம் அழியப்போவதே இல்லை. நாம் இதை மறக்கலாகாது. நமது நிலத்திற்கு, நமது மக்களுக்கு என்ன நடந்தது என்பதை மறக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த அழிவுகளின் நினைவுகளும் பாடங்களும் நம்மை வழிநடத்தும். அந்தவகையில் எந்த நிலையிலும் நாம் வலிமைமிக்கவர்களாகவும் மீட்பிற்கான வைராக்கியமுள்ளவர்களாகவும் இருப்போம். இதுதான் ஊழியின் தினங்கள் நமக்குச் சொல்லும் பாடம்.

நீர் சூழ்ந்த தினங்களில் என்னைத் தங்கள் சொற்களாலும் கரங்களாலும் பாதுகாத்த என் நண்பர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் அன்பு உரித்தாகட்டும். குறிப்பாக புவனேஸ்வரி, தமிழச்சி தங்கபாண்டியன், குமரகுருபரன், ஆத்மார்த்தி, சரவணன் மற்றும் என் மறதியை மன்னிக்கக்கூடிய நண்பர்கள்.

இன்றும் ஊழியின் தினங்களில் கண்ட தண்ணீரின் ஆழ்ந்த மண்வாசனை என் நுரையீரலில் நிரம்புகிறது. அந்த வாசனை இன்னும் நகரவீடுகள் பலவற்றின் சுவர்களைவிட்டுப் போகவேயில்லை. அது ஒரு      நாளும் இங்கிருந்து போகப்போவதில்லை என்றே தோன்றுகிறது.

("ஊழியின் தினங்கள்' மனுஷ்யபுத்திரனின் கவிதை நூலின் முன்னுரையிலிருந்து)

உயிர்மை பதிப்பகம்
விலை ரூ.90
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,
சென்னை-18
தொலைபேசி: 9144 24993448

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :