Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
......................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
......................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
......................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
......................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
......................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
......................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
......................................
காலத்தின் கொடை : இன்குலாப்
......................................
சொல்ல மறக்காத கதை - 7
......................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
......................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
......................................
கவிதைகள்
......................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
......................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
......................................
01-01-2017கவாழ்க்கையில் தூய்மை. பொதுவாழ்க்கையில் நேர்மை. இந்த இலக்கணத்துக்கு தகுதியான சமகால கவிஞராக ஒருவரைத் தேடும்போது முன்னால் நிற்பவர் இன்குலாப். தனது வாரிசுகளுக்கு இன்குலாப் சேர்த்த ஒரே சொத்து நேர்மைதான்.

வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாத கவிஞர் இன்குலாப். கவிதை, உரைநடை, நாடகம் அனைத்திலும் தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர். வாழ்க்கையில் பலருக்கும் போராட்டம்  இருக்கலாம். ஆனால் போராட்டமே வாழ்க்கையாகிப் போனவர். எளிமையைத் தனக்கு அலங்காரமாக்கிக் கொண்டவர். எளிமையை தனக்கு அலங்காரமாக்கிக் கொண்டவர்.  எளிமையை வாழ்க்கை முறையாக வரித்துக்கொண்டவர். எளிமையை தனது கேடயமாக மாற்றியவர்.

நிறுவன அதிகாரம் தனது கோரமுகத்தைக் காட்டும்பொழுது நாம் உக்கிரம் கொள்ளவேண்டிய தருணங்கள். அந்தத் தருணங்களில் நாம் பின்வாங்கக்கூடாது என்றார் இன்குலாப். நிறுவன எதிர்ப்பு மனநிலையை உருவாக்குவதன் பண்பாட்டுச் செயல்வடிவம்தான் படைப்பு என்று கருதியவர்.

கல்லூரி மாணவனாக இருக்கும்போதே ஆண்டு மலரில் "வெயில்' என்ற கவிதை எழுதினார்.

சுரண்டிக் கொழுப்பவர்கள் உன்
சூட்டில் பொசுங்கவில்லை
சுரண்டப் படுபவர்தாம் உன்
சூட்டில் பொசுங்குகிறார்
ஆகையினால் வெய்யிலே
ஏழை ஆவி பிரிந்தவுடன்
வேகையில் மட்டும் சுடு
அவரை வீணில் பொசுக்காதே!

என தி.மு.க.வில் இருந்த அந்த காலகட்டத்திலேயே சிவப்பு சிந்தனைதான் அவரது அடையாளமாக இருந்தது.

ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே நாடகம் எழுதி நடித்தார். பி.யு.சி. படித்தபோது, பேராசிரியர் கவிஞர் மீரா அவர்களின் வழிகாட்டுதல்படி கவிதை எழுத ஆரம்பித்தார். இளவேனில் நடத்திய "கார்க்கி', "வெம்மை', "மனிதன்' போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார். 1975 அவசரநிலை காலகட்டத்தில் "வெம்மை'யில் இவர் எழுதிய எழுத்துகள் காரணமாக காவல்துறையினரால் தேடப்படும் நபராகவும் இருந்தார்.

விருதுகளுக்கும் மாபெரும் அங்கீகாரங்களுக்கும் அவர் வளைந்து கொடுக்கவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையை மத்திய-மாநில அரசுகள் முறையாக கையாளத் தவறியதன் காரணமாக ஈழத்தமிழர் வஞ்சிக்கப்பட்டுவிட்டனர். இக்காரணத்திற்காக தனக்கு தமிழக அரசு வழங்கிய "கலைமாமணி' விருதை திரும்ப அனுப்பிவிட்ட இன்குலாப் சுயமரியாதைமிக்க, சமரசமற்ற, போராட்டகுணம் மிக்க ஆளுமையுடையவராக விளங்கினார்.

எதிர்ப்பின் குரலாக கவிதை வெளிப்படும்போது அழகியலைவிட்டு விலகுவதாக தோற்றமளிக்கக்கூடும். ஆனால் சமூகப் பொறுப்பு வாய்ந்தவனாக இருக்கும் ஒரு கவிஞன் கலைக்கும் பொறுப்பானவனாக இருந்தால், கலைமையை விட்டு விலகும் ஆபத்து இருக்காது என்றார் இன்குலாப்.

ஒரு படைப்பாளி என்கிற வகையிலும் அரசியல் ஆர்வம் கொண்டவர் என்கிற தன்மையிலும் எந்தச் சூழலிலும் நம்பிக்கை இழக்கக்கூடாது. இன்று நமக்கு எதிராக மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது ஏகாதிபத்தியம் பாசிச வடிவம் எடுத்துள்ளது என்பதாகும். முந்தைய காலகட்டத்தில் பாசிசம் தனியாகவும் முதலாளித்துவ அணி தனியாகவும் பிரிந்துநின்றது. இன்றைக்கு முதலாளித்துவமே பாசிசமாயிற்று.

""ஓர் அடிப்படையான உண்மையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் தமிழனாக இருக்கிறேன். அதனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன் என்பதல்ல. இந்த தமிழ்த்            தேசியம் ஒரு பெரும்பான்மையான தேசிய இனமாக இருந்து அது ஏனைய தேசிய இனங்களை ஒடுக்குமேயானால் நான் நிச்சயமாக தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்கமாட்டேன்'' என்ற இன்குலாப்பின் குரல் எந்த தேசிய இனமும் ஒடுக்கப்படக்கூடாது என்பதுதான்.

""பல்வேறு உணர்வுத் தளங்களில் நாடகத்தைப் படைக்கிறேன். கவிஞனாக இருந்து நான் கவிதை படைக்கிறபோது காட்சியை மட்டும்தான் படைக்கிறேன். நாடகம்னு வருகிறபோது எனக்கு எதிரானவர்களையும் நானே படைக்கிறேன். அவர்களோடு நான் உடல்மொழியாலோ அல்லது மொழியாலோ ஒரு உரையாடலை நிகழ்த்துகிறேன்'' என்ற இன்குலாபின் கருத்து குறிப்பிடத்தக்கது.

தமிழின் சமகால கவிஞர்களில் எனக்குத் தெரிந்து அதிகமாக கவிதைக்கோட்பாடுகளை முன்வைத்தவர் இன்குலாப் மட்டுமே.

தஞ்சாவூரில் ராஜராஜன் சிலையை திறக்கிற பிரச்சினை வந்தபோது, சென்னை புதுக்கல்லூரிக்கு எதிரில் உள்ள பீட்டர்ஸ் சாலை நடைபாதையில் ஒரு பெண் குளிரில் விறைத்து இறந்துபோனாள்.
அதுகுறித்து கேட்டபோது...

"வரலாற்றில் நான் ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக நுழைந்து பார்க்கிறேன். எனக்கு வரலாறு என்பது மன்னர்களின் பீடுகளும் பெருமைகளும் அல்ல. ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சும் கண்ணீரும் கோபமும் போராட்டமும்தான். அதைப் பார்க்கும்போது ராஜராஜன் பெருமையோடு என்னால் ஒன்றி   நிற்க முடியல. அந்தப் பெருமையில் என்னால் பங்கேற்க இயலவில்லை. அவன் படையெடுப்பின் மூலமாக ஜாவாவையும் சுமத்ராவையும் இலங்கையையும் வென்றான் என்று சொல்லும்போது அவனுடைய படைவீரர்களின் வெற்றிக்களிப்பல்ல... என்னுடைய களிப்புங்கிறது. மாறாக, அவனால் தோற்கடிக்கப்பட்ட மக்களின் எல்லா ஆதங்கங்களும் என்னுடைய ஆதங்கம். தமிழன்கிறதால எந்த ஆதிக்கத்தையும் என்னால தலையில வெச்சுக் கொண்டாடமுடியாது. அந்த ஒரு கண்ணோட்டத்துலதான் நான் கண்மணி ராஜத்தை எழுதினேன்' என்றார்.

போராட்டத்தின் குரலாகவே ஒலித்தவர் கவிஞர் இன்குலாப். பல ஆயிரம் குரல்கள் சேர்ந்த ஒரே தொனியை அவரது கவிதைகளில் கேட்க முடியும். போராட்டத்தையும் அழகியலையும் இணைக்கும் முயற்சி, இன்குலாப்பின் வழியாக தமிழ்ச் சமூகத்தில் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

கவிஞன் கிரீடம் அணிந்து திரிவதிலும் ஓர் அரியணையில் அவன் அமர்ந்திருப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை என்று உரக்கச் சொன்னவர் இன்குலாப்.

ஆணதிகாரம் என்பது எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளது. தமிழ்மொழி, ஆண்களின் வசதிக்காக கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கிறது.  காலம் காலமாகப் படிந்த அழுக்கை களையவேண்டுமென்றால் ஜெர்மானிய மொழியைச் சலவை செய்யவேண்டும் என்றார் பிரக்ட். அதுபோல் தமிழ்மொழியை வெள்ளாவிப் பானையில் போட்டு அவித்து எடுக்க வேண்டும் என்றார் இன்குலாப்.

இன்குலாப், முற்போக்கு முகாமைச் சேர்ந்த முழக்க கவிஞர். கோஷம் போடுவார், கூக்குரலிடுபவர் என்று குற்றம்சாட்டுபவர்கள், அவரை முழுமையாகப் படிக்காதவர்கள். இந்தப் புலிநகச் சுவடுகளுக்குள்ளே ஒரு பொன்னிக்குருவி இருக்கிறது என்பதை வேண்டுமென்றே கண்டுகொள்ளாதவர்கள்.

மகிழம்பூ காய்ந்து சருகான பின்புதான் அதிகம் மணக்கிறது. பொதுநலனுக்காக இடையறாமல் இயங்கியவர்களுக்கு வாழும்போதுள்ள வரவேற்பைவிட சாவுக்குப் பிறகுதான் சரித்திரப்புகழ் கிடைக்கும்.

பின்தலையை புகழால் அலங்கரி
ஏனென்றால்
மகுடங்கள் தலைமாறக் கூடியவை
என்கிறார் அப்துல்ரகுமான்.
டாஸ்டாவ்ஸ்கி தன்னுடன் பேசிக்கொண்டவன், கார்க்கி மக்களுடன்  பேசியவன், இன்குலாப் மனுஷங்களுடன் பேசியவர்.
ஒவ்வொரு மனிதனும் தீவல்ல என்றார் கவிஞர் ஜான்டன்.
ஒவ்வொரு மரணமும் என்னை
சிறிதாக்குகிறது, அதனால் யாருக்காக
மணி ஒலிக்கிறது என்று தேடாதீர்கள்
உனக்காகத்தான் ஒலிக்கிறது

என்றார் அவர்.

1940-ல் ஹெமிங்வே தனது நாவலுக்கு "மணி ஒலிப்பது யாருக்காக' எனும் தலைப்பைத் தேர்ந்தெடுத்தது ஜான்டனிடமிருந்துதான்.

வீர்யமிக்கவனே... கவிஞன் எழுத்தை ஒரு மனோதர்மக் கருவியாகக் கொண்டவனே எழுத்தாளன். இன்குலாப் தாழக்கிடப்பவரைத் தற்காப்பதே தர்மம் என்று வாழ்ந்தவர்.

உலகின் எந்த மூலையில்
விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே
எதிரொலி கேட்கும்

என்ற இன்குலாப்பின் வரிகள் அவர் யாருடன் நிற்கிறார் என்பதைக் காட்டுகிறது. கவிதை மூலமாக கனல் மணக்கும் பூக்களை வழங்கியவர் இன்குலாப்...

யாரை பயங்கரவாதி என்கிறாய்?
பருந்தை எதிர்க்கும்
தாய்க் கோழியையா?
தப்புதற்குரிய வழிகளை அடைத்துப்
பூனையை எதிர்கொள்
புலியைக் காண்பாய்
என்ற கவிதை, காலங்கடந்து நிற்கும் நிகழ்கால கவிதை.
அகிம்சை கூடாது என்று
உபதேசித்தவன்
வாயிலிருந்து தெறித்தது
எச்சிலல்ல...
என் தோழனின் இரத்தம்

இதுபோன்ற சாகா வரிகள் எக்காலத்திலும் இன்குலாப் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :