Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
......................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
......................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
......................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
......................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
......................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
......................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
......................................
காலத்தின் கொடை : இன்குலாப்
......................................
சொல்ல மறக்காத கதை - 7
......................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
......................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
......................................
கவிதைகள்
......................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
......................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
......................................
01-01-2017க்கள் கவிஞர் இன்குலாப்பின் மரணம், இலக்கிய உலகைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்குலாப்,  உடல்தானம் செய்திருந்தார். எனவே அவரது உடல், இன்று காலை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் கண்ணீரோடு ஒப்படைக்கப்பட்டது. இன்குலாப் மரணத்திற்கு, இலக்கிய உலகினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

ஒரு போராளியின் மரணம்!
-கவிஞர் மு.மேத்தாக்கள் கவிஞர் இன்குலாப்,

தன் கடைசி மூச்சு உள்ளவரை களத்தில் நின்றவர்.

அறியாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்.

அடக்குமுறைகளை எதிர்த்து ஆர்த்தெழுந்தவர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உயிருள்ளவரை உழைத்தவர்.

கவிதை மொழியில் அவர் கணைகளை வீசினார். மக்கள் மொழியில் மக்களுக்காக  மக்களோடு பேசினார்.

இலக்கியவாதிகளில் நடிகர்களுண்டு.
அரசியல்வாதிகளில் அரிதாரங்கள் உண்டு.
இன்குலாப் அவர்களின் இலக்கியத்தில் -
இதயம் இருந்தது.
அரசியலில், நீதிக்கான உள்ளத்தின் ஆவேசம் இருந்தது.
ஈழத் தமிழர்களுக்கான  உரிமை முழுக்கம்,
இறுதிவரையில் அவரோடு
இணைந்திருந்தது.

உலக மக்களுக்கான உரிமை முழக்கமாய், இவருடைய எழுத்தும் பேச்சும் உயிர் இருக்கும் இறுதி வினாடி வரைக்கும் ஓங்கி ஒலித்தன.

இன்குலாப் அவர்களின் பாட்டுப் பணியையும் நாட்டுப் பணியையும் போற்றாத மனம் இல்லை.

அவர் புகழுக்கும் மரணம் இல்லை.

பாவலர் இன்குலாப் அவர்களின் கவிதை வரிகளிலேயே அவரைப் படம் பிடிக்கிறேன்.

"காஷ்மீர் பள்ளத்தாக்கில்
கனிமரங்களை விதைத்து விட்டு
சஹாராப் பாலைவனத்தில்
சஞ்சாரம் செய்தவர்'.


அவரைப் பாடிக்கொண்டிருக்கும்!
-கவிஞர் ஜெயபாஸ்கரன்


வானுக்கும் பூமிக்கும் சிறகை விரிக்கும்,

மானுடப் பறவைகள் பாடுகின்றோம்’ என்று இன்குலாப் பாடினார்.

மானுடத்தை நேசித்து வலியுறுத்தும் பறவைகள்,

என்றைக்கும் அவரைப் பாடிக்கொண்டே இருக்கும்.

மானுடவிடுதலைக்காகப் பாடியவர்!
-இயக்குநர், கவிஞர் பிருந்தாசாரதி


ன்னுடைய கவித்துவத்தை மானுட விடுதலைக்காகப் பயன்படுத்தியவர் இன்குலாப். எந்தவித சமரசத்துக்கும் இடம்தராதவர் என எல்லோரும் இரங்கல் செய்தியில் குறிப் பிடுவது, எந்த விருதையும்விட உயர்ந்த விருதாகும்.

பாமரர்களுக்குப் புரியும் மொழிநடையில் அவர் எழுதினாலும், கவித் துவத்தின் கம்பீரம் அதில் உட்கார்ந்தே          இருக்கும்.

அவர் அநீதிகளை எட்ட நின்று வேடிக்கை பார்த்தவர் இல்லை. களத்தில் இறங்கி அவற்றின்மீது வாள் வீசியவர். நான் பாடாவிட்டாலும் என் பாடலின் பொருளை என் தோழர்கள் புரிந்துகொள்வார்கள் என்றார். இதைத்தான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


நிமிர்வின் அடையாளம் இன்குலாப்!
-ஆரூர் தமிழ்நாடன்


விஞர் இன்குலாப், ஒடுக்கப்பட்ட வர்களின் குரலாக ஒலித்தவர்.

அடக்கப்பட்டவர்களின் கைவாளாகச் சுழன்றவர்

மானுடத்தின் காயங்களுக்கு மருந்தாக வாய்த்தவர். இலக்கியம் என்பது, பொழுதுபோக்கு பொருட்காட்சியல்ல; அது போர்க்களம் என்று அடிமன ஆவேசத்தால் காட்டியவர். அதேநேரம், தன் எழுத்துக்களை இதயத்தின் ஈரம் தொட்டு எழுதியவர்.

அவர், ஈரத்தால் பிறந்த நெருப்பு.

அவரது பூச்செடிகளில் ஆயுதங்கள் முளைத்தன. அவரது ஆயுதங்களில்  பூக்கள் மலர்ந்தன.

இன்குலாப், கால்களால் நடந்தவரல்ல; இதயங்களால் நடந்தவர். நம் இதயங்களில் நடப்பவர். காலவெளியிலும் அவர் நடந்துகொண்டே இருப்பார்.

இன்குலாப் மறையவில்லை. வாழ்கிறார்.
அவரை மரணத்தால்கூட  சாய்க்க முடி யாது.
ஏனென்றால் அவர் நிமிர்வின் அடை யாளம்.
மண்ணால்கூட அவரைத்  தின்ன முடியாது;
ஏனென்றால் அவர்  எங்கள் மண்ணின் கவிஞர்.

அவரைத்  தீயால்கூட  எரிக்க முடியாது. எனென்றால்,  அவரே இங்கு  தீயாக எரிந்தவர்.

அவரை சவப்பெட்டிகளில் அடைக்க முடியாது. ஏனெனில் அவரையும் அவரது கவிதைகளையும்  வரலாறு, தனது நினைவுப் பேழையில் நிரந்தரமாய், உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

காலத்தால்கூட அவரை செரிக்க முடியாது,  ஏனென்றால் காலத்தின் இரைப்பையைவிட,அவர் கவிதைகளின் கருப்பை, அழுத்தமானது.

கவிஞர் இன்குலாப் மறையவில்லை.

வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

போர்க் களப் பாடல்களாக - மானுடத்திற்கு ஆறுதலாக - ஈரமும் வீரமும் கலந்த கவிதையாக - நம் மத்தியில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :