Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017டைப்புகள் படைப்பாளனை நோக்கி வாசகனை ஈர்க்கின்ற வசீகர காந்தங்கள். கலைநுட்பமும், செய்நேர்த்தியும் கை வரப்பெற்ற படைப்பாளிக்கு செய்கிற படைப்பில் காலம்தோறும் செழுமை கூடுவது இயற்கை. படைப்பில் தோய்ந்து, படைப்பாளியை அறிந்து கொள்ளும் வாசகருக்கு, படைப்பின் மீதான ஈர்ப்பு கூடுவதுபோலவே, படைப்பாளி மீதான ஈர்ப்பும் அன்பும் நாளுக்கு நாள் கூடுகிறதா என்பது வினாக்குறியே?

தனித்துவம் தொனிக்கும் தனது படைப்புகள் வாயிலாகத் தமிழ் கூறும் நல்லுலகைத் தன்பால் திருப்பிய மக்கள் கவிஞர் இன்குலாபை அறிந்து கொண்டவர்கள், அவரது படைப்புகளை விடவும், அவரை அதிகம் நேசிக்கத் தொடங்கினார்கள்.

எழுச்சியும் புரட்சியும் அவரது எழுத்தாகின என்பதைவிட, இரண்டும் இன்குலாபில் தன்னை எழுதிக் கொண்டன என்றால் மிகையில்லை. அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியில் இளம் வணிக ஆட்சியியல் முடித்து, பட்ட மேற்படிப்புக்காக முதுகலைத் தமிழைத் தேர்வு செய்தபோது, அதை வியப்பாகப் பார்த்தோர் சிலர், தற்கொலை முடிவுபோல கருதியோர் பலர்.

தமிழ் பயில நான், சென்னை புதுக்கல்லூரியை தேர்ந்தெடுக்க முதன்மைக் காரணம், அங்கு கவிஞர் இன்குலாப் பணியாற்றுவதை அறிந்ததுதான். நான் இணைந்த ஆண்டில் என் பேரன்புக்குரிய இனமான கவிஞர் ஈரோடு தமிழன்பன் பணி ஓய்வு பெற்றிருந்தார்.

இன்குலாபை சந்தித்தால் கொடுப்பதற்கு ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன். யார் இன்குலாபாக இருக்கலாம் என தமிழ்த்துறையின் அன்பு முகங்களை ஆய்வுசெய்தேன்.

முதன்முதலில், இன்குலாப் என்ற பெயரை ஒரு வார இதழில், "அறைகூவல்' என்ற கவிதையில், பள்ளிப் பருவத்தில் வாசித்தேன்.

பள்ளி மேல்நிலை வகுப்பு முடித்திருந்த காலத்தில், திருவாரூரில், அண்ணன் கவிமாமணி ஆரூர் தமிழ்நாடனின் கவிதையும், கவிசார்ந்ததுமான இல்லத்தில்தான் எமது பெரும் பொழுதும், சிறுபொழுதும் போகும். கவியுணர்தலும், உணர்தல் நிமித்தமும் அங்கு உரிப்பொருள் ஆகும்.

ஒருமுறை இன்குலாபின் கட்டுரைத் தொகுப்பான "நமது மானுடம்' என்ற நூலை வாசிக்கத் தந்தார் அண்ணன் தமிழ்நாடன். அந்த நூல் அவருக்கு திருமணப் பரிசாக வந்த நூல். அந்த நூலைப் படித்தேன். இன்குலாப் என்னை இழுத்துக்கொண்டார். அக்காலகட்டத்தில் பொதுவுடைமை இயக்கம் என் புத்தியை ஈர்த்தது. வ.சோ.ஆ. மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், அன்புத் தோழருமான எஸ்.தியாகராஜன் என்னும் எஸ்.டி. மார்க்சியத் தோழர்களோடும் என்னை நெருக்கமாக்கி வைத்தார்.

இன்குலாபின் எழுத்துக்கள் அக்காலத்தில் என்னைப் பெரிதும் ஈர்த்தமைக்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வன்முறை
கூடாதென்றவனின்
வாயில் தெறித்தது
எச்சில் அல்ல
என் தோழனின் ரத்தம்

இன்குலாபின் இத்தகைய வரிகள் இதயத்தை அவர்பால் ஈர்த்தன. அவரது உணர்வை எனக்குள் வார்த்தன.

புதுக்கல்லூரி முதுகலைத்தமிழ் ஆடய்வியல் துறையில், என் கற்பனைக்குத் தொடர்பே இல்லாதிருந்தவரைக் காட்டி இவர்தான் இன்குலாப் என அறிமுகம் செய்தனர். கல்லூரியில் அவர் பெயர் எஸ்.கே.எஸ். எஸ்.கே.ஷாகுல் ஹமீது என்பதன் சுருக்கம். அவரைப் பற்றி எழுதிய வெண்பாக்களைக் கொடுத்தேன்.

அந்த ஈழக்கரை மேல் அக்கறை நாளும் கொண்ட
கீழக்கரைக்காரர்- இவர் வீரர்

என்ற வரிகளைக் கொண்ட காவடிச் சிந்தையும் கொடுத்தேன்.

புன்மை மரபுகளைப் போர்க்குணத்தோடு எதிர்த்த அந்த புரட்சிப் போக்குடையவர்க்கு, மரபுக் கவிதை எழுதும் மாணவர் அமைந்ததில் மகிழ்ச்சிதான்.

அவரது தனிக்கவனம் என்ற வெளிச்சம் என் மீது விழுந்தது. என் மனம் எழுந்தது.

முதுகலைத் தமிழ் படித்துக்கொண்டே, "உணர்வு' வாரஇதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தேன். டிச.6 பாபரி மஸ்ஜித் இடிப்பு நாள் நெருங்கும் வேளையில், காவல்துறை முஸ்லிம் இளைஞர்களை சகட்டு மேனிக்கு கைது செய்த காலம். வார இதழ் பணி முடித்து அண்ணாசாலை சர்ச் பார்க் பள்ளி நிறுத்தத்தில் 11 ஏ பேருந்திலிருந்து இறங்கிய என்னை ஒரு காவல் வாகனம் கடத்திச் சென்றது.

அந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு காவல்துறை உயரதிகாரி ஒருவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில், மாணவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். சரிகாஷா என்ற மாணவி ஈவ்டீசிங் கொடுமையில் உயிரிழந்ததை முன்னிட்டு நடத்தப்பட்ட அக்கருத்தரங்கில் கல்லூரி பிரதிநிதிகளாக வெகுசொற்ப ஆண்களும், மிகப்பெரும்பான்மையாக பெண்களும் இருந்தனர். அங்கிருந்த மாணவர்கள்தான் குற்றமிழைத்தவர்கள் போன்ற தொனியில் அந்த அதிகாரி பேச கூட்டத் தலைவரிடம் வாய்ப்பு கேட்டு, மாணவர்கள் சார்பில் நான் பேசினேன்.

""எங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று கூறிய அதிகாரி அவர்களே, திரைப்படங்களில் ஆபாசமாகப் பாடல் எழுதுகிற, நடிக்கிற நடனத்தை அமைக்கிற, தயாரிக்கிற, திரையிடுகிற நபர்களை உங்களால் இரும்புக் கரம் கொண்டு ஏன் அடக்கமுடியவில்லை?'' என்று நான் கேட்டவுடன் மாணவர்கள் பெரும் ஆரவார வரவேற்பு கொடுத்தனர். என்னைத் தொடர்ந்து பேசிய சட்டக்கல்லூரி மாணவர் ஆப்ரஹாம் லிங்கனும் கண்டனத்தைப் பதிவு செய்தார். அந்த அதிகாரி கூட்டத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகுதான் மேற்படி கடத்தல் பரிசு.

நீண்ட நேரம், அம்பாசிடர் காரின் பின்னிருக்கை இடுக்கில் அமுக்கி வைத்து வர்மத் தட்டுகள் தட்டி, கடைசியாக இன்றைய குளேபெல் மருத்துவமனை இருக்கின்ற இடத்தில் (அன்று தமிழ்நாடு மருத்துவமனை) தூக்கிப் போட்டுவிட்டுப் போனார்கள்.

அந்த இருட்டிரவில் ஒரு தானி (ஆட்டோ) ஓட்டுநர், பாதையில் கிடந்த என்னை மீட்டு, புதுக்கல்லூரி விடுதிக்கு கொண்டுவந்து சேர்த்தார். சக மாணவர்களிடம் நடந்ததைச் சொல்லிவிட்டுப் போனார்.
அவ்விரவே புதுக்கல்லூரி விடுதி சுடு தீயானது...

நள்ளிரவில் தொலைபேசியில் இன்குலாபை எழுப்பினோம். (நள்ளிரவில் பேராசிரியருக்கு தொலைபேசும் விவேக் நகைச்சுவை வராத காலம்) பரிவோடு கேட்டுக் கொண்டு, "அமைதியாக இருங்கள். நாளை துறைக்கு வாருங்கள் பேசுவோம்' என்றார்.

மாணவர் பேரவை நிர்வாகிகளும், விடுதி மாணவர்களும் இன்குலாபை சந்தித்ததும், முதல்வர் மேஜர் மு.ஜெய்லானியிடம் அழைத்துச் சென்றார்.

அப்போதைய காவல்துறை ஆணையர் காளிமுத்து அவர்களை சந்தித்து புகார் அளிப்பது என முடிவெடுத்து, ஆணையர் அலுவலகத்துக்கு மாணவர் பேரவை நிர்வாகிகளைப் பேசச் சொன்னார். ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் நேரம் தரமுடியும் என பதில் கிடைத்ததாக பேரவையினர் சொன்னார்கள். ""நீங்கள் சென்று பார்க்க நேரம் கேட்டீர்கள். தரவில்லை. அவர் உங்களை வந்து பார்க்கவையுங்கள்'' என்றார்.

எனக்கு கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், இன்குலாபும் மூத்த பேராசிரியர்களும் ராயப்பேட்டை மருத்துவமனையில் என்னை அனுமதித்தனர்.

ஒரு தந்தையைப்போல, தலைமாட்டில் நின்றார் இன்குலாப். மாணவர் பட்டாளம் வேலைநிறுத்தம் செய்து வீதியில் திரண்டது. கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. பல பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது. காவல்படை குவிந்தது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த காவல் அதிகாரிகள் அம்மாணவருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று எழுதுமாறு மருத்துவர்களிடம் கூறியதும், இன்குலாபை ஒரு போராளியாக அங்கு பார்த்தேன்.

"அவங்களையே அப்படி எழுதிக்கச் சொல்லுங்க' என்றார். "நீங்க யார் சார்?' என்றார் காவல் அதிகாரி, "உங்ககிட்ட கச்ச கட்ட நான் வரல. உங்ககிட்ட பேச வேண்டிய அவசியமும் இல்லை' என்று வெடித்தார். மருத்துவர்கள் உள்ளதை உள்ளபடி எழுதிவிட, மாணவர்களுக்கு மேலும் ஆவேசம் கூடியது.

அதன்பிறகு, பல்வேறு வடிவங்களில் காவல்துறையும், விடுதி துணைக்காப்பாளரும் நெருக்கடி தந்த வேளைகளில் இன்குலாபும், மேலூர் மு.ஜெய்லானியும், கம்பம் சாகுல் அமீது உள்ளிட்ட துறைப் பேராசிரியர்கள் அனைவரும் எனக்கு தோள்கொடுத்தனர்.

"தேனீக்கள்' என்ற கலை இலக்கிய அமைப்பை நடத்தினோம். இன்குலாப் அதன் நெறியாளர். தலைவர், செயலாளர் பதவியெல்லாம் இல்லை. ஒருங்கிணைப்புப் பணியை ஒரு குழுவாக செய்வோம்.

திசையெங்கும் எம் சிறகுகள்
கலைச்செல்வம் எம் வரவுகள்

 என்ற முகப்பு வாசகத்தை இன்குலாப் தந்தார்.

எஸ்.வி.ராஜதுரை, கார்மேகம், வலம்புரிஜான், ஹைதர்அலி என இலக்கிய முன்னோடிகளையும், களச் செயல்பாட்டாளர்களையும் அழைத்துப் பேச வைத்துள்ளோம்.

ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக, இன்குலாப் கனடா சென்றார். அப்போது புதுக்கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் "உமறுப்புலவர் தமிழ்ப் பேரவை'ச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிடுமாறு நண்பர்கள் வலியுறுத்தினர்.

சுமார் ஐயாயிரம் பேர் பயிலும் புதுக்கல்லூரியில் அதிகம் பேர் படிக்கும் துறையைச் சேர்ந்த இளங்கலை மாணவர்களே இப்பொறுப்பிற்கு வெற்றி பெற்றுள்ளனர். அப்படி வெற்றி பெற்ற மாணவர் ஒருவர் உமறுப்புலவர் பேரவை இலக்கிய விழாவுக்கு உமறுப்புலவரையே விருந்தினராக அழைக்கலாமா? என்று கேட்டதை பேராசிரியர்கள் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். (ஜெயலலிதா பேரவை போலென்று அம்மாணவர் நினைத்துள்ளார்)

நான் தேர்தலில் போட்டியிடுவதை இன்குலாப் விரும்புவாரா? என்று யோசித்தேன். 21 பேர் மட்டுமே பயிலும் முதுகலைத் தமிழ் மாணவர் எப்படி இதில் வெற்றி பெற முடியும் என்றும் வினாக்குறி?

விடுதி மாணவர்களின் விறுவிறுப்பான தேர்தல் பணியாலும் பரவலாகக் கிடைத்த அறிமுகத்தாலும் வெற்றி வாய்ப்பு கிட்டியது. புதுக்கல்லூரியில் முதுகலைத் தமிழ் மாணவர், இளங்கலை மாணவர்களின் பேராதரவோடு வெற்றி பெற்றது அதுவே முதல் முறையும், கடைசி முறையும் ஆகும்.

கனடாவிலிருந்து திரும்பியபின் இன்குலாப் திட்டுவார் என எதிர்பார்த்தேன். வாழ்த்தினார்.

தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவாளரான இன்குலாபுக்கு ஏராள நெருக்கடிகள். வெளிநாடு சென்று வந்த நேரத்தில், தமிழின விடுதலைக்காக கடல் கடந்து கனடா சென்று வந்த இன்குலாபுக்கு மாணவர்கள் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்தோம்.

முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்பிலேயே இவ்விழாவை எழுச்சியோடு நடத்தினோம். அண்ணன் அறிவுமதி எங்களை ஊக்கப்படுத்தினார்.

சங்க இலக்கியங்களை இன்குலாப் நடத்தும்போது அவர் வெளிப்படுத்தும் ஆழத்தை மிகவும் ரசிப்போம். நாங்கள் பயின்ற காலத்தில்தான் "அவ்வை' நாடகத்தை எழுதி முடித்தார். பேரா.மங்கை அதை அரங்கேற்றினார்.

சில கசப்பான அனுபவங்கள் காரணமாக அவர் மேற்கொண்ட நிலைப்பாடு எனக்கு ஏற்புடையதாயில்லை. முரண்பட்டு வாதிட்டாலும் அனுமதிப்பார். ஆமாம், சாமிகளை உருவாக்கும் ஆசிரியராக அவர் இருந்ததில்லை. மாச்சர்யம் களையும் அவர் ஆசிரியம் கண்டு ஆச்சரியம் பூச்சொரியும்.

நேர்மையும், போர்க்குணமுமே வடிவாய் இருந்த இன்குலாபின் மகன் பேரா.முனைவர் சா.இன்குலாப் அமைதியே வடிவானவர்.

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இன்குலாப்  குடும்பத்திற்கு ஏதாவதொரு வகையில் உதவிட வேண்டும் என்ற நோக்கோடு, சா.இன்குலாபுக்கு நிரந்தரப் பணியிடத்தில் வாய்ப்பளித்தார். காயிதே மில்லத்தின் பேரனும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி செயலாளருமான தாவூத் மியாகான். எம் கல்லூரி தமிழ் மன்றத்திற்கு சிறப்புரையாற்ற வருகை தந்த இன்குலாப், ""இரண்டு பிள்ளைகள் இங்கே பணி செய்கிறார்கள். ஒருவர் நான் பெற்ற பிள்ளை, இன்னொருவர் என்னிடம் கற்ற பிள்ளை'' என்றார்.

இறப்பதற்கு ஓரிரு தினங்கள் முன்பு மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். எழுப்ப வேண்டாம் என்றேன். அவரே கண்விழித்தார். சா.இன்குலாப் பேத்தியும் அவர் எழுந்து உட்கார உதவினர். ""அடுத்தமுறை உங்களை சந்திக்க வரும்போது உடல்நலத்தோடும், உற்சாகத்தோடும் இருப்பீர்கள். இன் ஷா அல்லாஹ்'' என்றேன்.

புன்னகைத்தார்...

அது நினைவுகளின் கல்வெட்டாய் நிற்கிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :