Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-201780-களின் முன்னும் பின்னும் நான் உதவி இயக்குநர் ஆனபின் ஏ.வி.எம். ஸ்டுடியோ உள்ளே உள்ள எடிட்டிங் அறை அதிக நேரம் இருக்கும் இடமாக மாறிப்போனது.

ஏ.வி.எம். முருகன் சாருக்கு சொந்தமான பகுதி அது. பிளாக் அண்ட் ஒயிட்  லேப். ஒரு ப்ரிவ்யூ தியேட்டர். வரிசையாய் எடிட்டிங் அறைகள். அங்குதான் முதன்முதலாக இயக்குநர் பீம்சிங் அவர்களின் புதல்வர் எடிட்டர் லெனின் சாரை சந்தித்தேன்.

திரைப்படத்துறையில் என்னை வசீகரித்த... வழிநடத் திய முக்கியமானவர்களில் அவரும் ஒருவர். அலங்காரப் பேச்சு... ஆரவாரச் சிரிப்பு... டாம்பீக நடை, உடை, பாவனை எதுவுமே இல்லாத எளிமையான இயல்பான ஒரு கலைஞர். எடிட்டிங் என்றால் அவர் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. அவரிடமிருக்கும் பல சிறப்பு அம்சங்கள் விசேஷ குணநலன்கள் பலபேருக்குத் தெரியாது. முறைப்படி இசை பயின்றவர். இசைஞானம் மிக்கவர். பாரம்பரியம்மிக்க திரைப்படக் குடும்பத்தில் சகோதரர்கள் இருதயநாத் தயாரிப்பாளர். கண்ணன் ஒளிப்பதிவாளர். கோபி டி.வி. சீரியல்களில் புகழ்பெற்றவர். தந்தை பீம்சிங் தலைசிறந்த இயக்குனர் என்றாலும்... லெனின் சார் பஸ்ஸில்தான்  பயணிப்பார். 12பி பஸ்ஸில் வடபழனி பஸ்நிலையம் வந்திறங்கி நடந்து ஏ.வி.எம். நுழைந்து, எடிட்டிங் அறைக்குள் நுழைந்து வெள்ளி விழா படங்களுக்கு வேலை செய்வார். அவர் வண்ண வண்ண உடையணிந்து நான் பார்த்ததே இல்லை. காலை உணவாக காரட் போன்ற காய்கறிகளை அப்படியே கடித்துச் சாப்பிடுவார். வேதாத்திரி மகரிஷியின் படத்தை அவர் எடிட்டிங் அறையில்தான் முதன்முதலாகப் பார்த்தேன்.

"பல்லவி... அனுபல்லவி...' என்ற கன்னடப் படத்தையும் "உணரு' என்ற மலையாளப் படத்தையும் மணிரத்னம் அவர்கள் இயக்கிய தொடக்க காலம் அது... அவரும் அங்கிருப்பார்.

"மூவியாலா' என்ற நிறுவனத்தின் படத்தொகுப்பு சாதனத்தின் ஒலி எல்லா எடிட்டிங் அறைகளிலும் எதிரொலிக்கும்.  "எஃப்.சி.பி. ஆவிட்' எல்லாம் அப்போது இல்லை. மூவியாலாவில் லெனின் சார் அமரும் ஒவ்வொரு வேளையும்... எடிட்டிங் செய்யப்படும் திரைப்படம் புதுப்பொலிவு பெறும். எடிட்டிங்கிற்கு பயன்படுத்த ஷூட்டிங் சமயத்தில் ஷாட் ஸீன், டேக் விவரங்களோடு ஒரு குறிப்பெடுப்போம். பெரும்பாலும் அந்த வேலையை, நான்தான் என் இயக்குனர் மகேந்திரன் சாருக்கு செய்துகொண்டிருந்தேன். எடிட்டிங் அறையில் பின்பற்றப்படும் அந்தக் குறிப்பு நோட்டின் உபயோகிக்காத பக்கங்களில் நிறைய்ய்ய்ய கவிதைக் கிறுக்கல்களும் இருக்கும். அதைப்பார்த்து படித்துதான் என்மீது அன்பும் தனிக்கவனமும் காட்டத் தொடங்கினார் லெனின் சார்.

எடிட்டிங்  இடைவேளைகளில் அறைக்கு வெளியே வராந்தா பெஞ்சுகளில் வந்து அமர்வோம். கவிதை, இலக்கியம், பத்திரிகை, ஜெயகாந்தன் என பலவற்றையும் பேசுவோம்.

குறிப்பாக, ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிப் பேச பல காரணங்கள் உண்டு. அந்த எடிட்டிங் அறையில்...  "சில நேரங்களில் சில மனிதர்'களுக்குப் பிறகு உருவாக்கிய "புதுச்செருப்பு கடிக்கும்' படச்சுருள்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ரீலாக எடுத்து ஓய்வு நேரத்தில் பார்ப்போம். திரு. எம்.பி. சீனிவாசன் இசையில் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய "சித்திரப் பூஞ்சோலை... சீனிக்கரும்பு' என்று தொடங்கும் ஒரு பாடல் இன்னும் என் நினைவில் இருக்கிறது. நாயகியை வர்ணித்து
மீன் கடிக்கும் செவ்வாயை
நான் கடிக்க மாட்டேனா...
என்று சரணத்தில் எழுதியிருப்பார்.

"அவள் சேலை கட்டும்போது நான் சுவராக இருக்கக்கூடாதா? அவள் படியேறும்போது நான் படியாக இருக்கக்கூடாதா?' என்று சரணத்தில் அற்புதமாக ஆழ்வார்களின் கற்பனையை காதலாக்கி யிருப்பார் அமரர் ஜெயகாந்தன். பாடலைப் பார்த்துவிட்டு வெளியில் வந்ததும், நான் ஆழ்வார்கள் பாசுரத்தைச் சொல்லி என் உடனிருப்போர்களை அசத்துவேன்.

இதனால் லெனின் சாருக்கு கவிஞனாக, எழுத்தாளனாக நான் தோற்றமளித்தேன். "கரு...', "காத்திருக்க ஒருத்தி' -இரண்டு ஜே.கே. நாவல்களையும் இணைத்து "எத்தனை கோணம் எத்தனை பார்வை' என்று தலைப்பிட்டு ஒரு திரைப்படத்தை லெனின் சார்தான் இயக்கினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடைசியாக நடித்த "மகரிஷி'யின் கதையான "நதியைத் தேடிவந்த கடல்' திரைப்படத்தை லெனின் சார்தான் இயக்கினார்.

இளையராஜாவிடம் ஆன்மிக யோக ஞான விஷயங்களைப் பேசியபடி... ஏற்ற இசைக்  கோர்வையை, திருத்தங்களை பின்னணி இசை சேர்ப்பின்போது செய்வார் லெனின் சார்.

"நண்டு' படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக மகேந்திரன் சார் "லக்னோ' சென்றதால் பாடல்பதிவு செய்யும் பொறுப்பு லெனின் சாருக்கு வந்தது. நான் முதன்முதலில் இளையராஜா இசையில் பாடல் எழுதும் சூழல் அது.  சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது மகேந்திரன் சாரும் லெனின் சாரும்தான். பாடல் பதிவு நாளும் வந்தது.

பாடுதம்மா ஆற்றின் அலைகள்... அந்த நாட்களைத்
தேடுதம்மா காற்றில் இலைகள்...
வாழும் குயில்நாதம் வண்டின் ரீங்காரம்...
என்ற பல்லவி... பழைய நினைவுகளை அசைபோட்டு நாயகன் நாயகிக்கு தனது பிறந்த ஊரைச் சுற்றிக்காட்டும் சுகமான சூழல் அது.

செங்கதிர்கள் தீட்டும் ஓவியம் வானம்
சேதிசொல்லும் காற்றில் சேர்ந்தது ஞானம்
பள்ளிசென்ற சாலை... -அந்நாளை...
இன்று எண்ணும்போது -பொன்வேளை!
சோகநிலை மாறும்... சொந்தம் இனிச்சேரும்...
ஞானவிதை தூவும் நேரங்களே...
என்பது ஒரு சரணம்.

லெனின் சார் முன் இருக்க, நான் பாட்டெழுத, புதிய பாடகர் சுரேஷ் என்பவர் பாட, பாடலை ஒலிப்பதிவு செய்தார் இளையராஜா.

"லக்னோ'வில் இருந்து திரும்பிய மகேந்திரன் சார், சென்னை திரும்பியதும் முதல் வேலையாக பாடலைக் கேட்டார்.

அவர் முகம் சற்றே மாறியது. ""பாடல் எனக்குப் பிடிக்கவில்லை ராஜா... வேறு ஒரு ட்யூன் இந்த சிச்சுவேஷனுக்கு இருந்தால் நன்றாக இருக்கும்'' என்று இளையராஜாவிடம், சற்றும் தாமதிக்காமல் கூறிவிட் டார். ராஜாவிடம் மாற்றுக் கருத்துச் சொல்ல பலர் பயந்த காலம் அது. அவர் செய்தால் சரியாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கைப் பதிவு ஏற்பட்டிருந்த சமயத்தில் துணிவாக, தோழமையுடன் மகேந்திரன் சார் சொன்ன தும் அருகிலிருந்த தயாரிப்பாளர் தட்சிணாமூர்த்தி, நான்... மற்ற உதவியாளர்கள் என எங்கள் யூனிட்டே அதிர்ச்சியடைந்த நேரத்தில்... சிரித்துக்கொண்டே இளையராஜா ""அதற்கென்ன இப்பவே இன்னொரு ட்யூன் போட்டுட்டாப் போகுது. உட்காருங்க.... போட்டர்லாம்...'' என்று கொஞ்சம்கூட கோபப்படாமல் ஹார்மோனியத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். வழக்கம்போல் லெனின் சார் ஏதோ ஒரு முடிவில் அமைதியாக புன்னகையுடன் இருந்தார். "ஹம்'பண்ணி ராஜா சார் முதல் ட்யூன் போட்டதுமே... "இது ஓ.கே.' என மகேந்திரன் சார் கூற... பதிவு செய்த ட்யூன் கேஸட்டை கையில் கொடுத்தார் ராஜா.

பிரசாத் ஸ்டுடியோ வெளியே வந்ததும் அம்பாஸிடர் காரின் முன்ஸீட்டில் அவர் அமர்ந்தார். நாங்கள் பின்னால் அமர்ந்தோம். கார் புறப்பட்டது. ட்யூன் கேஸட்டை கார் ஸ்டீரியோ பிளேயரில் போட்டு ஆன் செய்தார் டைரக்டர். ராஜாவின் குரலில் ட்யூன் கார் முழுவதும் கமகமத்தது. பின்னால் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து ""கண்ணன் இந்த ட்யூனுக்கு பல்லவி சொல்லுங்க இப்ப'' என்றார், சற்றும் எதிர்பாராமல்! தத்தகாரம் வார்த்தைகளாய் மாறியது.

அப்பொழுது உடனடியாக பேப்பர், பேடு எதுவும் தொடாமல் உடனடியாக சொல்லப்பட்ட பல்லவிதான்...

அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா

இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது... படமாக்கியபோது நானும் "லக்னோ'வில் உடன் பணிபுரிந்து சென்னை திரும்பியதும் எடிட்டிங் அறையில் இறுதிக்கட்ட படத்தொகுப்பு முடிவடையும் நேரம்.

நான் கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்காத ஒன்றைச் சொன்னார். செய்தும் காட்டினார். அள்ளித்தந்த பூமி பாடலுக்கு முன் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் பாடலை "நண்டு' படத்தின் "டைட்டில் ஸாங்'காக பயன்படுத்திவிடலாம் என்ற யோசனையே அது. தயாரிப்பாளருக்கும் அந்தப் பாடலுக்கான செலவு வீணாகவில்லை. பாட்டெழுதிய எனக்கும் ஒரு திருப்தி. அளவற்ற ஆனந்தம்.
ஒளிப்பதிவு மேதை அசோக்குமாருடன் இணைந்து எங்களுடன் நான்கைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சுஹாசினி மணிரத்னம் அவர்களை கதாநாயகியாகவும் பெங்களூர் எம்.எம்.வி. பாடகராக இருந்து கன்னடப் படம் நடித்த மோகனை கதாநாயகனாகவும் மாற்றி எங்கள் இயக்குநர் உருவாக்கிய படம் "நெஞ்சத்தைக் கிள்ளாதே', "கொஞ்சும் சலங்கை', "அழியாத கோலங்கள்' போன்ற படங்களைத் தயாரித்த சென்னை தேவி திரையரங்க உரிமையாளர்கள் தயாரித்த படம் அது? "பருவமே புதிய பாடல் பாடு' -பாடல் பலருக்கு நினைவிருக்கலாம்...

அந்தப் பாடல் காட்சி அந்தக் காலத்திலேயே ஒரே சமயத்தில் மூன்று கேமராக்கள் எல்லாம் வைத்து விடிகாலை நான்கு மணியிலிருந்து காத்திருந்து படமாக்கப்பட்டது. பின்னணி இசை சேர்ப்புக்குமுன் அந்தப் படத்தை முழுதுமாகப் பார்த்த தயாரிப்பாளர், இயக்குனரிடம் "படம் திருப்தியாக வரவில்லை' என்று பெரும் வாக்குவாதத்துடன் சண்டையிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போய் படுத்துவிட்டார். இந்த இக்கட்டான சூழலில் வேறு கலைஞர்கள் என்றால் சும்மா இருந்திருப்பார்கள் அல்லது சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்திருப்பார்கள். லெனின் சார் என்ன செய்தார் தெரியுமா? நேராக தயாரிப்பாளரைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து ஓய்வெடுக்கச் சொல்லி ஆறுதல் கூறிவிட்டு... ""படத்தைப் பின்னணி இசை சேர்ப்பு செய்தபின் பாருங்கள்'' என்று தைரியம் ஊட்டி 100% பாஸிட்டிவ்வாக பேசிவிட்டு எடிட்டிங் வந்தார். இயக்குநருடன் கொஞ்ச நேரம் "டு பி டேக்கன்' எனப்படும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள், ஷாட்டுகள் பற்றி விவாதித்து தானும் ஒரு அஸோஸியேட் இயக்குனராக களமிறங்கினார். இரவு பகலாக எடிட்டிங்கில் அமர்ந்து "டபுள் பாஸிட்டிவ்'வை ஒரு சிற்பியைப் போல் மூவியாலாவில் எங்களுடன் இணைந்து செதுக்கினார். படம் பின்னணி இசைக்காக இளையராஜா அவர்களிடம் சென்றது. அவ்வளவுதான்... தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த அந்தப் படம் சென்னையில் ஓராண்டு போல ஓடி பெரும் வெற்றிபெற்றது. வசூலை தயாரிப்பாளருக்கு அள்ளிக் கொடுத்தது.

அந்தச் சமயத்தில்தான் எனக்கு ஒரு தனிச்சுற்றுக்கான பத்திரிகை தொடங்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. "அகராதி' கலை இலக்கிய மன்றம் என்ற ஒன்றை ஏற்படுத்தினோம். "அகராதி' என்ற பெயர் வைத்து ஓர் இதழைத் தயாரித்தேன். சினிமாக்காரர்கள் கதை, கவிதைக் குறிப்பு, துணுக்கு எழுதினால் போதும் என நினைத்தேன். "அகராதி' லெனின் சார் உடனிருக்க உருவானது.

குறிப்பிடப்படாத நேரத்தில் குறிப்பிடப்படாத ஓர் இடத்தில் "இவர்' வெளியிட... "இவர்' பெற்றுக்கொள்வார் என்ற குறிப்பை தலைப்பு அருகே வைத்தேன். "குறத்தி மகன்' ஹீரோ மாஸ்டர் ஸ்ரீதர், நடிகர் செந்தாமரை சார், கவியரசு வைரமுத்து என ஒவ்வொருவரிடமும் படைப்பைக் கேட்டு வாங்கினேன். அப்போது இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் இரண்டாவது, மூன்றாவது படம் செய்துகொண்டிருந்தார். அவரிடமும் ஒரு கவிதை கேட்டு வாங்கினேன்.  அதை நினைவில் வைத்து அடுத்த  சந்திப்பில் "இதழ் வந்துவிட்டதா?' என ஏ.வி.எம். சி ஒலிப்பதிவுக் கூடத்தில் ஆவலோடு கேட்ட பாக்யராஜ் சார், இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகும் பத்திரிகை ஆசிரியராய் பரிமளிக்க காரணம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன்.

"அகராதி' இதழ் அச்சிட பணம் தேவைப்பட்டது. லெனின் சார் ஓர் அருமையான ஆலோசனையும் சொன்னார். பெரும்வெற்றி பெற்று ஓடிக்கொண்டி ருக்கும் "நெஞ்சத்தைக் கிள்ளாதே' தயாரிப்பாளரிடம், ""கண்ணன் வருவார் ஒரு விளம்பரம் கொடுங்கள்'' என்றார். தேவி திரையரங்கம் சென்றேன். விளம்பர பிளாக் (அப்போதெல்லாம் அதுதான்) மரக்கட்டையில் தகடு பதித்து என் கையில் கனத்தது. அச்சிடத் தேவையான பணத்தையும் கொடுத்தார்.

""நெஞ்சத்தைக் கிள்ளாதே' விளம்பரத்துடன் "அகராதி' இதழ் வெளிவந்தது.

என்னைவிட லெனின் சாருக்கு என் "அகராதி' வெளிவந்ததில் மகிழ்ச்சி. அடுத்தடுத்து பட வேலைகள்.

பிறகு "மெட்டி'யிலும் இளையராஜா இசையில் பாட்டெழுதினேன். "கொள்ளி போட' என்றொரு வார்த்தைக் கோலம் அந்தப் பாடல் வரிகளில் வந்து விழுந்துவிட்டது. பாடல் பதிவாகும் நேரத்தில் இளையராஜா அவர்களிடம் அந்த வார்த்தையை மாற்றிவிடுகிறேன் என்றேன். ""என்ன கண்ணன்... இருந்துட்டுப் போகட்டும்... வார்த்தைதானே... நீங்களுமா இப்படி?'' என்றதும், அமைதியாகிவிட்டேன். அந்தப் பாடல் பதிவாகி ஒருசில நாட்களில் "கொள்ளி' அறச்சொல் என்று பயந்தபடி நான் இயக்குனரை விட்டுப் பிரியும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இயக்குநர் மகேந்திரன் அவர்களிடம் என்னைக் கொண்டுசேர்த்த அவரது மைத்துனர் சேகரன் அவர்கள் என்னை அன்போடு அழைத்து "வடிவங்கள்' என்ற ஒரு படத்தை நீ இயக்கி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பற்றி ஆலோசிக்கலாம் என்றார். திரைப்படத்துறையில் சேர்த்துவிட்டவரின் அன்பாணையை மீறமுடியாமல் லெனின் சாரிடம் ஆலோசனை கேட்டேன்.

""நான் உடன் இருக்கிறேன் கண்ணூôô'' என்று ஆசிர்வதித்தார். "கண்ணூôô' என்றுதான் அழைப்பார் அவர். இந்த "வடிவங்கள்' படத்திற்காக நான் ஏற்கனவே ஒரு பாடலை சந்திரபோஸ் அவர்களே பாட பதிவும் செய்யப்பட்டிருந்தது.

நிலவென்ன பேசுமோ
இளங்காற்று வீசுமோ
விழியோடு உறவாடும் மொழி என்ன மௌனமோ

என்ற பல்லவியுடன் அந்தப் பாடல், ஒரு "டேப்' இசை -பாடல் முழுவதும் ஒலிக்கப் பதிவானது.

தெருப்பாடகன் ஒருவன் இரவில் "டேப்' தட்டியபடி பாடிக்கொண்டு வரும் பாடல் அது.

குளிர்காலக் கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்குத் தீமூட்டும் நியாயங்களோ...
கரைஏறி வாருங்கள்
இமைசிந்தும் பூக்களே
இரைதேடித் தேடி இங்கு ஏமாற்றமோ
என்ற சரணத்தோடு...
புதிருக்கு... விடையில்லை
போருக்கு... பகையில்லை

தெருப்பாடல் ஆஸ்தான சபை ஏறுமோஎன்று தொடங்கும் சரணமும் அந்தப் பாடலில் இடம்பெற்றது.

"வடிவங்கள்' படத்தை இயக்க ஒத்துக்கொண்டதுமே மதுக்கூர் கண்ணன் என்ற பெயரில்தான் விளம்பரம் மற்றும் செய்திகள் வரவேண்டும் என அப்பா ஆசைப்பட்டார்கள். அதனால் அப்படியே செய்தேன். ஏற்கனவே ஒருவர் எழுதி வைத்திருந்த கதை. இன்னொருவர் இயக்குவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரால் இயலவில்லை. விலகிவிட்டார். நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இறுதி நேரத்தில் நான் ஒப்புக்கொண்டது என் மாபெரும் தவறு. அந்தநேரத்து அறியாமை. நான் நம்பர்ஒன் உதவி இயக்குனர் அப்போது. ஆனால் இயக்குனராகும் மெச்சூரிட்டி  அப்போது வரவில்லை. கமர்ஷியல் அடிப்படை எதுவும் இல்லாத ஒரு படத்தை சூழ்நிலையால் ஏற்றுக்கொண்டேன்.

எனக்காக நடிகர், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, சாருலதா, வனிதா, சாருஹாசன், தியாகராஜன், சிவச்சந்திரன் என பலரும் உதவினார்கள். லெனின் சார் பழைய கதாநாயகி சரோஜாதேவி வீட்டில் (அன்பாலயா பிரபாகரன் அவர்களுக்குச் சொந்தமானது அப்போது) நடந்த தொடக்க நாள் பூஜை முதல் உடனிருந்தார். அவரையே நான் எழுதிய பாடலின் தெருப்பாடகனாக நடிக்கச் சொன்னேன். அதற்கும் சம்மதித்து நடித்தார். படம் வேலைகள் முடிந்து முதல் பிரதி எடுக்கப்பட்டு வியாபாரம் ஆகாமல் அலைந்து திரிந்தோம். அப்பா ஊரில் இறந்துவிட்டார்... எல்லா கவலைகளும் ஒன்று சேர்ந்துகொண்டன.

வடிவங்கள், பயணங்கள் முடிவதில்லை இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. நுகர்வோருக்கான எந்த சிறப்பம்சமும் வடிவங்களில் இல்லை. ப.முடிவ தில்லை படத்தில் நடித்த மோகன், நான் கேட்டால் கால்ஷீட் தந்திருப்பார். "நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம் மூலம் நெருங்கிய நண்பர்களாய் இருந்தோம். நான் பயன்படுத்தியது புதுமுகம். சில விநியோகஸ்தர்களின் விளையாட்டில் வடிவமற்றுப் போனேன். சற்று இடைவெளியில் "கை கொடுக்கும் கை' படம் தொடங்கப்பட்டது. என்னை இயக்குனர் மீண்டும் வேலை செய்ய அழைத்தார். ரஜினி சார், ரேவதி நடிக்க... இளையராஜா இசை, அசோக்குமார் ஒளிப்பதிவு... லெனின் சார் எடிட்டிங்... நடிகர் விஜயகுமார் தயாரிப்பு. நானும்  லெனின் சாரிடம் "வந்துவிட்டேன் மீண்டும்' என்று கூறி வேலை செய்யலானேன். அந்தப் படத்தில் தான் எதிர்பாராத ஆபத்தும் திருப்பமும் காத்திருந்தது.

(இன்னும் இருக்கிறது)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :