Add1
logo
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் || எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின் ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு. இதை பல்வேறு மூத்த தமிழ் அறிஞர்கள் ஏராளமான வரலாற்றுச் சான்றுகளுடன் நிரூபித்துள்ளனர். "நித்திரையில் இருக்கும் தமிழா, சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு' எனப் பாடியுள்ளார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழ்ப்பெருங்குடி களின் ஆலோசனையையும் வேண்டுகோளையும் ஏற்று, தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என அரசாணையே வெளியிட்டார் 2006-ல் ஆட்சிக்கு வந்த  முதல்வர் கலைஞர்.

ஆனாலும் சிலர் சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என முரண்டு பிடித்து, அதைக் கொண்டாடியும் வருகின்றனர்.  இந்த நிலையில் பண்ணைப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து, சினிமாவில் புகழ்க் கொடியை பட்டொளி வீசிப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் சொந்தத் தம்பியான கங்கை அமரனை, தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நேர்காணலுக்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் "இனிய உதய'த்திற்காக சந்தித்தோம்.

 முதலில் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் இசை அமைப்பாளராகி, அதன் பின் இயக்குனராகி என பலதுறை வித்தகராக திகழும் கங்கை அமரன், தனது இளம்பிராயத்து தைப் பொங்கல் நாள் நினைவுகளையும் கிராமத்து மணம் மாறாமல் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

குலவைச் சத்தமும் குக்கர் விசிலும்


அது ஒரு அழகிய நிஜக்காலம் கண்ணா. தேனி, உத்தமபாளையம் பக்கத்துல இருக்குற எங்க பண்ணைப்புரம் பக்கா கிராமம்னு சொல்ல முடியாது, பெரிய நகரம்னு சொல்ல முடியாது. காரை வீடு இருக்கும், மச்சு வீடு, ஓட்டு வீடு இருக்கும், குடிசைவீடுகளும் இருக்கும். எனக்கு ஆறேழு வயசு இருக்கும்போதே அப்பா தவறிட் டாரு. அதுக்கப்புறம் எனக்கு எல்லாமே எங்கம்மாதான். வெள்ளைக்காரங்களோட எஸ்டேட்ல எங்க அப்பா வேலை பார்த்ததால எங்க குடும்பத்துக்கு எங்க ஊர்ல தனி மரியாதை.

கிராமங்கள்ல பொதுவா காலையிலயும் மத்தி யானத்திலயும் பழைய சோறு தான், நீராகாரம்தான். காடு, கரைக்கு வேலைக்குப் போய்ட்டு வந்ததும் பொழுது சாஞ்சதுக்கப்புறம்தான் சுடுசோறு ஆக்குவாக. இட்லி, தோசை சுட்டா அன்னைக்கு தீபாவளின்னு நினைச்சுக்க வேண்டியதுதான். அதுமட்டும் தான் தீபாவளிய ஞாபகப்படுத்தும். மத்தபடி பொங்கல் அன்னைக்குதான் ஊரே களைகட்டும்.

மச்சு வீடோ, குடிசை வீடோ, எந்த வீடா இருந்தாலும் சரி, வீட்டுக்கு வெள்ளையடிச்சு, நாலு விரல் அகலத்துல காவிக் கலரை பட்டை அடிச்சுப் பார்த்தா அந்த வீடோட அழகே தனிதான். பொங்கலுக்கு மொத நாள், போகி அன்னைக்கு வீட்ல இருக்குற பழசு படையையெல்லாம் நெருப் புல போடு எரிச்சுட்டு, பிரண்டைத் தண்டு, ஆவாரம்பூ, வேப்பங்கொழுந்து இதையெல்லாம் சேர்த்துக்கட்டி மஞ்சள் தடவி, வீட்டு முகப்புல சொருகனதுமே பொங்கல் களை பொங்க ஆரம்பிச்சிரும்.

பொங்கல் அன்னைக்கு வீட்டு வாசல்ல, சூரியனைப் பார்த்து அடுப்பை வைத்து மண்பானை யில் பொங்கல் வைக்கிறது எதுக்காகனு நினைக்கிறீக. நமக்கு எல்லாமுமாக இருக்கும் பஞ்சபூதத்திற்குத் தெரியணும்கிறதுக்காகத்தான். மண்பானையில் நீர் ஊற்றி, அடுப்பைப் பற்ற வைத்தால் நெருப்பு உண்டாகும்.  பொங்கல் பொங்குற ஆகாயத்துக்குத் தெரியணும், பொங்கும்போது கிளம்பும் ஆவி காற்றில் கலக்கும். மம்பானையை இறக்கி மண் தரையில் வைத்து, வாழை இலையில் பொங்கலை வைத்து கடவுளைக் கும்பிடுவோம். இப்படி நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, பூமி என்ற பஞ்சபூதங்களுக்கும் சேர்த்துதான் பொங்கல் வைப்போம். இந்தத் தத்துவார்த்த உணர்வெல்லாம் இப்ப இருக்குற பயலுகளுக்கு எங்க தெரியப் போகுது?

இப்ப நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களி லும் கூட நாலு சுவத்துக்குள்ள இருக்குற கிச்சன்ல, க்யாஸ் ஸ்டவ்வைப் பத்த வச்சு, குக்கர்ல பொங்கல் வச்சு, குக்கர் விசிலுக்குத் தக்கன அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுறோம். மண்பானையில பொங்கும் பொங்கலை அகப்பையால கிண்டி, குலவை போட்டு இறக்குன காலமெல்லாம் கண்ணுக்குள்ளேயே நிக்குது கண்ணா. வாழை இலையில சுடச்சுட சர்க்கரைப் பொங்கலை வச்சு, தேங்காய்ச் சில்லைக் கடிச்சுக்கிட்டு சாப்பிடுறது இருக்கே, அடடா…அடடடா.

ஜல்லிக்கட்டு தமிழனின் சொத்து

உழவனுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளைக் கௌரவப்படுத்தும் நாள்தான் மாட்டுப் பொங்கல். இத பட்டிப் பொங்கல், கன்றுப் பொங்கல்னுகூட சொல்லுவாக. மாட்டுத் தொழு வத்தை நல்லா சுத்தம் பண்ணி, மாடுகளைக் குளிப் பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, நெத்தியில சந்தனம், குங்குமம் பூசி, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வச்சு, மாடுகளுக்கும் திண்ணக் கொடுத்துட்டு, அத சாப்பிடுறதப் பார்த்துட்டு மனசெல்லாம் பூரிப்பா இருக்கும் விவசாயிக்கு. நானு, பாஸ்கர் அண்ணன், இளையராஜா அண்ணன், மற்ற கூட்டாளிகளெல்லாம் சேர்ந்து எங்க வயசுக்கு ஒரு கன்னுக்குட்டியக் குளிப்பாட்டி, அத அலங்கரிச்சு அப்படியே ஊர்த்தெருவுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போவோம். அன்னைக்கி நம்மளோட வீர விளையாட்டும் பரம்பரைச் சொத்துமான ஜல்லிக் கட்டு நடக்கும் பாருங்க, அதைப் பார்க்க கண் கோடி வேண்டும். இப்ப யார் யாரோ என்னென்னமோ சொல்லிக்கிட்டு, ஜல்லிக்கட்டை தடை பண்ணனும்கிறாங்க. 

அப்புறம் பண்டிகை நாளுக்கே உண்டான கட்டாயப் பொழுதுபோக்கு சினிமா. ஒரு படம் ரிலீசாகி எங்க ஊரு டெண்ட் கொட்டாயிக்கு அந்தப் படம் வர்றதுக்கு ஆறு மாசமோ, ஒரு வருஷமோ ஆகும். சினிமா மேல எனக்கு இருந்த பைத்தியத்தால தியேட்டர் வாசல்ல, வெள்ளைத் துணியில, ஊதாக்கலர்ல சினிமா பேர் எழுதியிருக் கேன். அந்தத் தியேட்டர்ல ஓடும் படத்தைப் பத்தி வௌம்பரப்படுத்துறதுக்கு ஊர் ஊருக்கு ஒரு வண்டி போகும். அந்த வண்டியில ஏறிப்போயிருக்கேன். அப்படித்தான் ஒரு பொங்கல் அன்னைக்கி தலைவரின் ‘"நாடோடி மன்னன்'’ படப்பெட்டியை தலையில தூக்கிக்கிட்டு ஊர்வலமா தியேட்டருக்குப் போனேன். ரிலீசான புதுப்படம் பார்க்கணும்னா தேனி இல்லேன்னா போடிக்குத்தான் போகணும்.

 பாஸ்கர் அண்ணன், ராஜா அண்ணன், பாரதிராஜா அண்ணன் இந்த மூணு பேரும் கூட்டுக் களவாணிக. அவுக மூணு பேரும் ஒரே சைக்கிள்ல போடிக்கு படம் பார்க்கப் போயிருவாக.

அதே மாதிரி எங்க ஊரைச் சுத்தி இருக்கும் பதினெட்டுப்பட்டி ஜனங்களும் முளைப்பாரி வளக்க எங்க அம்மாவைத் தேடி வருவாக. இம்புட்டுக்காணு வெளிச்சம்கூட இல்லாத இருட்டு அறையில வளரும் அந்த முளைப்பாரி. தினமும் கையில ஒரு சின்ன விளக்கப் பிடிச்சுக்கிட்டு அந்த அறைக்குள் வளரும் முளைப்பாரிக்கு தண்ணீர் ஊற்றும் எங்க அம்மா. பச்சப்பசேல்னு வளர்ந்த முளைப்பாரியைத் தூக்கிட்டுப் போயி கோவிலில் வச்சு,பெண்களெல் லாம் சுத்தி நின்னு கும்மி யடிக்க, எங்க அம்மா பாட்டுக் கட்டன்னு அது ஒரு கனாக்காலம் கண்ணா. அதே மாதிரிகாணும்

பொங்கல்அன்னைக்கி ஆணும் பெண்ணும் புதுத்துணி கட்டிக் கிட்டு அன்பைப் பரிமாறுனதெல்லாம் இப்ப பழங்கதையா கிப் போச்சு. தீபாவளிக்கு புதுத்துணி எடுக்குற அளவுக்கு பொங்கலுக்கு யாராச்சும் எடுக்குறமா?

அப்பல்லாம் ஊர்ப் பொதுக் கோயில்னு இருந் துச்சு. ஆனா இப்ப சாதிக்கு ஒரு கோயில், வம்சத் துக்கு ஒரு கோயில்னு ஆகிப்போச்சு. விவசாயி நசிஞ்சு போனது ஒரு பக்கம்னா, விவசாயமே மறந்து போச்சுங்கிறதுதான் உண்மை. உழவு மாடும் போச்சு, உழுகுற கலப்பையும் ஏரும் எங்கே போச்சு. களத்து மேட்டுல குனிஞ்சு கதிர் அடிக்கிறது காணாமப் போச்சு. எல்லாத்துக்கும் மிஷின் வந்துச்சு, மனுசப்பய எந்திரமாயிட்டான்.

மகத்துவம் தெரியாத எனது மகன்கள்
நான் இன்னும் எங்க கிராமத்தை மறக்காம அடிக் கடி அங்க போய்ட்டு வருவேன். சொந்தம் சுறுத்து, நண்பர்கள் வீட்டு நல்லது கெட்டதுகள்ல கலந்துக்கு வேன். தேக்கடிக்குப் பக்கத்துல எங்க அம்மா சமாதி இருக்கு. தீபாவளியை ஒட்டி வர்ற அமாவாசை அன்னைக்கு எங்க குடும்பத்தோட அங்க போயி, அம்மாவை நினைச்சு வணங்கிட்டுத் திரும்புனா மனசுல இருக்கிற பாரம் எல்லாம் இறங்கிரும். எங்க ஊருக்குப் பக்கத்துலேயே விவசாய நிலம் வாங்கிப் போட்டிருக்கேன். இந்த சென்னை மாநகரத்தின் டென்ஷன் குறைக்கிறதுக்காக அப்பப்ப அங்க போயிருவேன். அந்த மண்ணுல காலாற நடந்தாலே மனசுக்குள் புத்துணர்ச்சி பொங்கிப் பாயும்.

அந்த கிராமத்து மண்ணை மிதிங்கடான்னு என் மகன்கள் வெங்கட் பிரபுகிட்டேயும் பிரேம்ஜி கிட்டேயும்  அடிக்கடி சொல்லுவேன். அவய்ங்க என்னமோ ஷுட்டிங்கிற்கு லொகேஷன் பார்க்கப் போற மாதிரி போயிட்டு  வந்துட்டு, “டாடி ரியலி சூப்பர்னு சொல்லுவாய்ங்க. அப்பன் பொறந்த ஊரு, தாத்தா இருந்த பூமி, ஆச்சி ஆண்ட மண்ணுன்னு கொஞ்சமாவது உணர்வு அவய்ங்களுக்கு வேண் டாமா? அந்த மண்ணோட மகத்துவம் என்னோட மகன்களுக்குத் தெரியலங்கிறத நினைச்சா வருத்தமாதான் இருக்கும். என்ன பண்றது… 

 நானும் கூட பொங்கலன்னைக்கி ஊர்ல இருக்கணும்னு நினைப் பேன். ஆனா பட்ட ணத்துப் பொழப்பு நம்மள போகவிடமாட் டேங்குது. ஒவ்வொரு பொங்கலன்னைக்கும் சன் டி.வி.யில லைவ் டெலிகாஸ்ட்ல இருக்க வேண்டியிருக்கு. எல்லாருக்கும் காசு மேல ஆசையாப் போச்சு.

இப்பக்கூட

என் பேத்தி என்கிட்ட கேப்பா. ""தாத்தா என்னோட டாடி உன்கிட்ட பேசும்போது, ஹாய் டாடி, ஹவ் ஆர் யூ டாடின்னு பேசுறாரு. ஆனா நான் அவரை அப்பான்னு கூப்பிடணும்னு சொல்றாரு. இது ஏன்''னு கேட்டா.

ஆத்தா எங்க காலத்துல எங்க புள்ளைங்க டாடி, மம்மின்னு கூப்பிடுறத பெருமையாவும் கௌரவமா வும் நினைச்சோம். ஆனா இப்ப ஒங்கப்பன் தாய் மொழிய மறந்துரக்கூடாதுன்னு அப்பா-அம்மான்னு கூப்பிடச் சொல்றான். இப்ப அவன் சொல்றது தான் சரி. தமிழ்தான் நமக்குப்பெருமை, தமிழால் தான் நமக்குப் பெருமைன்னு சொல்லிப் புரிய வச்சேன். 

இந்த மண்ணின் பெருமையை, தைத்திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டின் அருமையை நம் சந்ததிக்கு சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

இனிய உதயம் வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :