Add1
logo
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் || எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின் ||
Logo
இனிய உதயம்
கொண்டாட்டத்தை பரிசாக்குபவர் -க.அம்சப்ரியா
 ................................................................
ஜனநாயக மகாராணி! -ஜெயலலிதாவின் அரசியல் பாதையும் பயணமும்!
 ................................................................
நீர்மையின் பாதைகள் -மனுஷ்யபுத்திரன்
 ................................................................
ஒடுக்கப்பட்டவர்ளுக்கு குரல் கொடுத்தவர்!
 ................................................................
சஹாரா பாலைவனத்தில் சஞ்சாரம் செய்தவர் இன்குலாப்!
 ................................................................
ஆச்சரியமான ஆசிரியர் -ஆரூர் புதியவன்
 ................................................................
செம்பறவையாக எல்லை கடந்த இன்குலாப்
 ................................................................
காலத்தின் கொடை : இன்குலாப்
 ................................................................
சொல்ல மறக்காத கதை - 7
 ................................................................
கவிக்கோ அப்துல் ரகுமான்
 ................................................................
கங்கை அமரன் சிறப்பு நேர்காணல்
 ................................................................
கவிதைகள்
 ................................................................
வாசல் வரும் தைப்பாவை! -ஆருர் தமிழ்நாடன்
 ................................................................
'ஜெ'வின் பரிதாபப் பக்கங்கள் -நக்கீரன் கோபால்
 ................................................................
01-01-2017ரு நாடு எப்படி இருக்கவேண்டும்?

பகைக் குழுக்கள் இல்லாதிருக்கவேண்டும். அரசியலில் கொலைகாரர்களின் ஆதிக்கம் இல்லா திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அது நாடு’ என்று பளீர் பதிலைப் பக்குவமாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு (735).
இதுதான் அதற்கான குறள்.

வள்ளுவரின் இந்த இலக்கணம் மீறப்பட்ட நிலையில் தமிழ்நாடு தவிக்கிறது.

அரசியல் அதிகாரத்தை கிரிமினல்கள் ஆட்டிப் படைக்கிறார்கள். மக்களின் வரிப் பணத்தை பல்வேறு வகைகளில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், அவர்களின் உறவினர்களும், பினாமிகளும் ஒன்றுசேர்ந்து சுரண்டிக் கொழுக்கிறார்கள். வள்ளுவரின் இலக்கணத் தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்நாடு நாடாக இல்லை. சுடுகாடாக மாறிக்கொண்டி ருக்கிறது. சொல்லப்போனால், இருட்டிலும் குழப்பத் திலும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

ஜெயலலலிதாவின் மர்ம மரணம் -அ.தி.மு.க. வினரிடம் திடீரென்று மாயமான  ஜெ. விசுவாசம் -சசிகலாவின் அதிகாரத் தாண்டவம் - ஊமை  முதல்வர் - அடிமை மந்திரிகள் -டெல்லித் தாண்டவம் -  கள்ளப் பணம் -  ஊழல் அதிகாரிகள் -இப்படி ரணகளப்பட்டுக் களேபரமாய்க் காட்சியளிக்கிறது தமிழ்நாடு.

தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள்? இங்கே முதலமைச்சர் ஓ.பி.எஸ்.ஸா? சசிகலாவா என சோழி உருட்டிப் பார்க்கவேண்டிய நிலை. அதிகாரிகளுக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் திகிலிலும் குழப்பத்திலும் தத்தளிக்கிறார்கள்.

காரியம் சாதிக்கத் துடிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளே, அமைச்சர்களைப் பார்ப்பதா? மன்னார்குடி சொந்தங்களைப் பார்ப்பதா என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில், அ.தி.மு.க.வினரைப் போலவே, சில அரசியல் கட்சித் தலைவர் களும், ஊடகத்துறையினரும், கல்வியாளர் களாக வலம்வரும்  சந்தர்ப்பவாதி களும், போயஸ்கார்டனில் கால் கடுக்கக் காத்திருந்து, சசிகலாவைச் சந்தித்து, ஜெ.’மறைவிற்கு ஆறுதல் கூறி, "சசிகலாவே, தலைமைப் பொறுப்புக்கு வாருங்கள். நீங்கள் இல்லை என்றால் இங்கே கிழக்கு விடியாது.  தமிழ்நாட்டில்  யாராலும் சுவாசிக்கமுடியாது'’என்றெல்லாம் மன்றாடுகிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு மத்தியில், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் மத்திய வருமான வரித்துறை, ரெய்டு நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான ஆவணங்களையும் கிலோ கணக்கில் தங்க  நகைகளையும், ஏறத்தாழ 40 லட்ச ரூபாய் அளவிற்குப் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள். இதுவரை வரலாற்றிலேயே இல்லாதபடி, தலைமைச் செயலகத்திற்குள் ளேயே  துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அதிரடியாய் நுழைந்து, தலைமைச் செயலாளரின் அறைக்குள் ரெய்டை நடத்தி, அங்கும் ஏகப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதைவிட தலைக்குனிவு தமிழகத்திற்கு உண்டா?

திருப்பதியில் எந்த சேகர் ரெட்டியோடு சேர்ந்து மொட்டை போட்டுக்கொண்டு, தங்கள் நட்பின் நெருக்கத்தை போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஓ.பி.எஸ். பகிரங்கப்படுத்தினாரோ, அந்த சேகர்தான் பலகோடி ரூபாய் பதுக்கல் பணத்தோடு கைதாகியிருக்கிறார். மந்திரிகளின் பினாமிகளான உறவினர்களும் நண்பர்களும், மக்களிடம் சுருட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்களோடு, வருமான வரித்துறையினரிடம் ஒவ்வொருவராய் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்."நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு'’ என்ற பாரதியின் காறித் துப்பலுக்கு பொருத்தமான முகங்கள்தான், நம்முன் சைரன் கார்களில் வெள்ளையும் சொள்ளையுமாய் பவனி வந்துகொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கருப்பு மனிதர்களால்... ரெய்டும் கைது நடவடிக்கை களுமாக, தமிழகம் சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

தமிழகத்துக்கு என்ன நேர்ந்தது? தந்தை பெரியார், அண்ணா, காமராஜரைப் போன்ற மாபெரும் தலைவர்களால், கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நடந்த தமிழகம்தான் இப்போது, ஒருதரப்பு அரசியல் கூடாரத்தால் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாநிலத்தின் முதல்வரே, சந்தேக மரணத்திற்கு ஆளாகியிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

செப்டம்பர் 22-ந் தேதி இரவு ஜெயலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தகராறு நடந்ததாகவும், இதன்பின்னரே ஜெயலலிதா நினைவிழந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் என்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளே பகிரங்கமாகப் பேசிக்கொள்கிறார்கள். அப்படியென்றால் மக்கள் சந்தேகக் கேள்விகளை எழுப்பமாட்டார்களா?

ஜெயலலிதா, தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க.வையும், அதன் தொண்டர்களையும்  ராணுவக் கட்டுப்பாட்டோடு வழி நடத்தியவர். அவர் கையாண்ட அரசியல் நெறிமுறைகள் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் இருக்கலாம். நக்கீரனுக்கும் அவருக்குமிடையே ஏகப்பட்ட முள்வேலிகள் முளைத்திருக்கலாம். இருப்பினும், அவர் மிகப்பெரிய துணிச்சல் பெண்மணி என்பதில் எவருக்கும் எள்ளளவும் சந்தேகம்  இருக்க முடியாது.  அவரது மரணம், தமிழக மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் திடுக்கிட வைத்திருக்கிருக்கிறது. அவரது அரசியல் எதிரிகளையே கலங்கவைத்த மரணம் அவருடையது.

தமிழக முதல்வராய் பலமுறை பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் அந்திமக் காலம் மிகமிகப் பரிதாபத்துக்குரியது. ஒரு மோசமான  சிறைக் கைதியைப்போல், அப்பல்லோ மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட நிலையிலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறார் ஜெயலலிதா.

அவருடன் இருந்த சசிகலா, ஜெயலலிதாவை மட்டுமல்ல; அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனையையும், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களையும் தனது அதிகாரப் பிடிக்குள் வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்த, நிகழ்த்தப்பட்ட எல்லாவற்றையும் மறைத்தார்.ஒரு மாநில அரசின் நிர்வாகத்தையே அப்பல்லோ மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு ஆட்டிப்படைத்தார். ஜெ. படுக்கவைக்கப்பட்டிருந்த அப்பல்லோவைச் சுற்றி, ஒரு இரும்புக் கோட்டை முளைத்தது. அதன் ரகசியச் சுவர்களுக்குள் சிக்கிக்கொண்டு, மரணத்தை நோக்கிப் பரிதாபமாக  நகர்ந்தார் ஜெ.

செப்டம்பர் 22-ஆம் தேதி மாலை அதிகாரிகளோடு காவிரி விவகாரம் பற்றி, தனது போயஸ் தோட்டத்தில் ஆலோசித்துக் கொண்டிருந்த ஜெ. தான், அன்று நள்ளிரவு நினைவிழந்த நிலையில் ரகசியமாக அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டார். அப்படி அட்மிட் செய்யப்பட்டபோது, ஜெ.வின் அமைச்சரவை சகாக்களோ, கட்சியின் சீனியர்களோ, அதிகாரி களோ, ஜெ.வின் ரத்த சொந்தங்களோ ஒருவர்கூட அருகில் இல்லை. எல்லோரிடமிருந்தும் ஜெ.அப்போது தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அப்பல்லோவில் அட்மிட்டான பிறகு, ஜெ.’வெளியுலகத்தையே பார்க்க வில்லை. அவரையும்  வெளியில் இருந்து யாரும் பார்க்கவில்லை. ஜெயலலிதாவை மட்டுமல்ல; அவருக்கு சிகிச்சையளித்த  டாக்டர்கள் டீமைக்கூட யாரும் பார்க்கமுடியவில்லை அவர்களோடு யாரும் பேசமுடியவில்லை. அவர்களாலும் யாரிடமும் பேசமுடியவில்லை. சிறைவைக்கப்பட்டதுபோல ஆகிவிட்டார்கள்.  வெளிநாட்டிலிருந்து வந்த ரிச்சர்ட் பீலே போன்ற டாக்டர்கள்கூட,  சிறைக் கைதிகளைப் போலத்தான் ஏர்போர்ட்டிலிருந்து பாதுகாப்போடு அப்பல்லோவுக்கு அழைத்துவரப்பட்டார்கள். வந்த மாதிரியே திருப்பியனுப்பப்பட்டார்கள்.

அவர்களைக்கூட யாரிடமும் பேச அனுமதிக்க வில்லை.

இப்படி எல்லாமே மர்மமாகவே நடந்ததால் ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது? அவர் எப்படி இருக்கிறார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பதட்டமாக எழுந்தது. இதுகுறித்து, மக்களுக்கு அறிக்கை மூலம் தகவல் தரவேண்டிய அரசு, மௌனம் சாதித்தது. இதைத் தட்டிக் கேட்கவேண்டிய மத்திய அரசும், தமக்குச் சம்பந்தம் இல்லாததுபோல் ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தப்பட்ட எல்லா அநீதிகளையும் வேடிக்கை பார்த்தது.ஜெயலலிதா அட்மிட் ஆன வாரத்திலேயே, அவர் இறந்துவிட்டதாக இணையதளங்களில் எல்லாம் பரபரப்பாக வதந்திகள் கிளம்பின. அப்போதுகூட ஜெ. எப்படி இருக்கிறார் என்று  அரசாங்கம்  வாய்திறக்கவில்லை. மாறாக  வதந்தி கிளப்பினார்கள் என்று, சிலரை கைதுசெய்து  சிறையில் அடைத்து, ஜெயலலிதாவைப் பற்றி கேள்வி எழுப்பியவர்களை அச்சுறுத்த ஆரம்பித்தார்கள்.

ஜெ.வின் உண்மை நிலையைச் சொல்லமுடியாதபடி, அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளி யிட்டது.

முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள நினைப்பது, அவருக்கு வாக்களித்த மக்களின் உரிமை. அது கூட மறுக்கப்பட்டது. 

ஜெ.யின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ.வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.  ’நாங்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வில்லை. அவரைப் பார்த்தவர்களைப் பார்த்தோம்’ என்று அவர்கள் பரிதாபமாகச் சொன்னதை எல்லாம், மக்கள் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிகிச்சையில் இருக்கும் மாநில முதல்வரை, மாநில கவர்னராலேயே சந்திக்கமுடியவில்லை. இரண்டுமுறை போய், வெறுமையாகத் திரும்பிவிட்டார் கவர்னர். மத்திய அமைச்சர்கள்கூட  மன்னார்குடித் தரப்பின் கட்டுக்காவலை மீறி ஜெயலலிதாவைப் பார்க்கமுடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பினர். 

இதைத் தட்டிக்கேட்க அமைச்சர்களுக்கோ அதிகாரிகளுக்கோ தைரியமில்லை.  

ஜெயலலிதா இருந்தவரை அவரை அம்மா என்று ஆராதித்தவர்களும், அவரை தெய்வமாக்கிப் பூஜித்தவர்களும், அவரைத் துதிப்பதற்காகவே பிறப்பெடுத்ததுபோல்  காட்டிக்கொண்டவர்களும், அப்பல்லோவில் அவர் யாரோ எவரோ என்பதுபோல் அமைதியாகிவிட்டார்கள். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானபோது அழுதுபுரண்ட அமைச்சர்கள், ஜெ.’வைப் பற்றிக் கவலைப்படாமல் அமர்த்தலாய்த் திரிந்தார்கள்.

பதவி பறிபோன ஜெ.’வுக்கு பதில், முதல்வராகப் பதவி  ஏற்றுக்கொண்டபோது ஓ.பி.எஸ். அடர்ந்த தாடியோடு கண்ணீர்விட்டார். அதேபோல் அமைச்சர்கள் எல்லோரும் பதவிப்பிரமாணத்தை ஏற்கமுடியாமல் தேம்பி அழுதார்கள். கதறினார்கள்.  இதை டி.வி.யில் பார்த்து, நாடே உச் கொட்டியது. அப்படிப்பட்ட அமைச்சர்கள், அப்பல்லோவில் இருந்த ஜெ.’வுக்காகக் குரல் கொடுக்கவில்லை. அவரை எங்கள் கண்ணில் காட்டுங்கள் என்று அடம் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும்விட கொடுமை என்னவென்றால், டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30-க்கு ஜெ.வின் இறப்புச்செய்தி அறிவிக்கப்பட்டது. அந்தத் துயரத் தகவல் வந்த சில நிமிடங்களுக்குள், தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது அமைச்சரவை சகாக்களும் பதவி ஏற்றுகொண்டார்கள். இந்தமுறை .அமைச்சர்கள் எவரும் கலங்கவில்லை. கண்ணீர்விடவில்லை. அழுதுபுலம்பவில்லை. 

ஜெயலலிதாவின் உயிர்த்தோழி என்று சொல்லிக்கொள்ளும் சசிகலாவோ, ஜெ.வின் உடலருகே அமர்த்தலாக நின்றுகொண்டார். ஜெயலலிதாவால் துரத்தியடிக்கப்பட்ட, சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தனது உறவினர்களை எல்லாம், ஜெ.வின் உடலைச் சுற்றி நிற்கவைத்துக்கொண்டார்..

ஜெ.வின் உடலருகே அவரது ரத்த சொந்தங்கள் யாரும் நெருங்கி விடாதபடி  அவரது ஆட்கள் காவலுக்கு நின்றார்கள். ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவைக்கூட அவர் அருகே நிற்கவிடாமல் வெளியேற்றினர். ஜெயலிதாவின் மரணத்துக்காக பொதுமக்கள் அழுதார்கள். கட்சித் தொண்டர்கள் அழுது புரண்டார்கள். அவரது அரசியல் எதிரிகள்கூட மௌனமாய்க் கண்ணீர் வடித்தார்கள்.

ஏற்கெனவே தீட்டிவைத்த திட்டத்தின்படி, முழுதாக ஒரு நாள்கூட ஜெயலலிதாவின் உடலை அஞ்சலிக்கு வைக்காமல் அவசரக் கோலத்தில் அவரை அடக்கம் செய்துவிட்டார்கள். தமிழகத்தின் கடைக்கோடியில் இருப்பவர்கள், சென்னைக்கு வந்து ஜெ.வுக்கு அஞ்சலி செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தி விட்டார்கள்.

அடக்கம் செய்த வேகத்தில், ஜெயலலிதாவின் வீடான போயஸ் கார்டனுக்குள் புகுந்து கொண்டார் சசிகலா. அங்கிருந்தபடியே அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தினந் தோறும் வரவழைத்து, அவர்களை பவ்வியமாய்த் தன்னருகே நிற்கவைத்துக்கொண்டு, "ஆட்சி அதிகாரத்தின் லகான் என் கையில். நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு. நான்தான் அ.தி.முக.வின் அடுத்த பொதுச் செயலாளர். நான்தான் அவரது நாற்காலி யில் உட்காருவதற்குத் தகுதி படைத்தவள்...' என்று அ.தி.மு.க.வினருக்கும் நாட்டு மக்களுக்கும் காட்டிக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா இருந்தபோது, அவர் புகழைப் பாடியபடியே, தங்கள் முதுகெலும்பை வில்லாய் வளைத்து தரையோடு தரையாய்ப் படுத்திருந்த அமைச்சர்கள் எல்லாம், கொஞ்சம்கூட சங்கடமில்லாமல், அம்மாவுக்குப் பிறகு எங்களுக்கு எல்லாமே சின்னம்மாதான். கட்சியையும் ஆட்சியையும் அவரால்தான் வழிநடத்த முடியும் என்று சசிகலாவுக்குப் பாராயணம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு முன்னால் செருப்புகூட போட மாட்டேனென்று கோட்டைக்கே வெறும் காலோடு வந்த அமைச்சர்  உதயகுமார், இப்போது சின்னம்மாதான் தெய்வம். ஓ.பி.எஸ்.சுக்கு பதில் அவர்தான் முதல்வர் நாற்காலியில் உட்காரவேண்டும் என்று அவர் காலில் விழுகிறார். சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவிடம் புகார் வாசித்தவர்கள் எல்லாம் இப்போது, சசிகலாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். விசுவாசம், நன்றி உணர்வு போன்ற வார்த்தைகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்.

முதல்வரும் அமைச்சர்களும், எந்த அரசுப் பொறுப்பிலும் கட்சிப் பொறுப் பிலும் இல்லாத சசிகலாவைத் தேடிப் போய், அவரிடம் கைகட்டி நின்று, அவரது ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டு திரும்புவதை, அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவு அனுமதிக்கி றது? அவரிடம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்  கைகட்டி நிற்கும்படி யார் உத்தரவிட்டார்கள்? முதல்வர் ஜெ. மறைந்துவிட்ட நிலையில் போயஸ் கார்டனுக்கு ஏன் இத்தனை பாதுகாப்பு? என மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் இல்லை. 

ஜெ.வின் மறைவால் துக்கத்தில் மிதக்க வேண்டிய அவரது போயஸ் கார்டன், இப்போது சசிகலா தரப்பின் தர்பார் மண்டபமாக மாறிவிட்டது. அங்கிருந்தபடியே தமிழகத்தின் முக்கியப் பிரமுகர்களையெல்லாம் வரவழைத்து, சந்தோசமாக ஆசிர்வதித்துக் கொண்டி ருக்கிறார் சசிகலா.

நாம் சாமர்த்தியசாலி. ஆட்சியையே நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டோம். மந்திரிகளெல்லாம் கைப்பாவைகளாக இருப்பதால், முதலமைச்சர் நாற்காலியில் எளிதாக ஏறி உட்கார்ந்துவிடலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது அவர் தரப்பு. 

ஜனநாயகம் என்பது என்ன கேலிக் கூத்து சமாச்சாரமா? வாக்காளர்கள் எல்லோரும் இளிச்சவாயர்களா? ஜெயலலிதா ஆளவேண்டும் என்றுதான் மக்கள் இரட்டை இலைக்கு வாக்க ளித்தார்களே தவிர, அவர் நாற்காலியை சசிகலாவிடம் தாரைவார்க்கவேண்டும் என்று யாரும் வாக்களிக்கவில்லை. விருப்பப்பட்டவர்களின் கைகளுக்கெல்லாம் போக,  முதல்வர் பதவி ஒன்றும் கடலை மிட்டாய் அல்ல. அது மக்கள் மனதை வென்ற மாமேதைகள் உட்காரவேண்டிய பவர்ஃபுல் நாற்காலி. 

இந்த மண்ணில், இன்னும் நீதி செத்துவிடவில்லை.

தர்மம் இன்னும் சமாதிக்குப் போய்விடவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகக் கேள்விகள், சசிகலாவுக்கு எதிராக இன்று தானாக, விசுவரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதி, கார்டனில் எப்படி மயங்கிவிழுந்தார்? 75 நாட்கள் அவருக்கு அப்பல்லோவில் என்ன நடந்தது? நினைவிழந்த நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த அவர் எப்படி இடைத் தேர்தலுக்கான பி.பார்மில் கைநாட்டு வைத்தார்? எப்படிதேர்தலில் வாக்களிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டு, அதிலே கையெழுத்துப் போட்டார்? லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே எதற்காக வந்தார்? கவர்னர் உள்ளிட்ட பிரமுகர்கள் எவரும் ஜெ.வைப் பார்க்க முடியாத அளவிற்கு, ஜெயலலிதா என்ன நிலையிலே வைக்கப்பட்டிருந்தார்? அப்பல்லோ ஓனர் பிரதாப்  ரெட்டியே, நான் ஜெயலலிதாவைப் பார்த்து பல நாட்களாகி விட்டன என்று பகிரங்கமாக அறிவித்தாரே, அவர் கண்ணிலிருந்தும் ஜெ.வை மறைத்தது ஏன்? ஜெயலலிதா 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கார்டியாக் அரஸ்ட் என்கிற இருதய செயல்பாடு நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அப்பல்லோ ரெட்டியே தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறாரே, அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு எப்படி கார்டியாக் அரஸ்ட் வந்தது? மருத்துவக் கண்காணிப்புச் சுவர்களை எல்லாம் மீறி, சுவரேறிக் குதித்து வந்ததா கார்டியாக் அரஸ்ட்? ஜெயலலிதா எப்போது? எப்படி? என்றைக்கு இறந்தார்? அவர் மரணம் அறிவிக்கப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குளிர்பதனக் கண்ணாடிப் பெட்டி தயாரிக்கப்பட்டுவிட்டதாக, ஃப்ளையிங் ஸ்குவாட்’நிறுவன சாந்தகுமார் பேட்டி அளித்திருக்கிறாரே, இது எதனால்? ஜெ.’அடக்கத்திற்கான சந்தன மரத்தால் ஆன சவப்பெட்டியும் முன்னதாகவே அவர் பெயர் பொறித்துத் தயார் செய்யப்பட்டது என்கிறார்களே, அது உண்மையா? ஜெ. மறைவதற்கு முன்பாக அவரை அடக்கம் செய்ய எம்.ஜி.ஆர் சமாதி அருகே இடத்தைத் தேர்வுசெய்து மார்க் செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையா? அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தையும் நேரத்தையும் தீர்மானித்தது யார்?

75 நாட்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஜெ.வின் முகம், கொஞ்சம்கூட வாடாமல் வதங்காமல் நோய்வாய்ப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லாமல், ஃப்ரெஷ்ஷாக இருந்ததே அது எப்படி? அவருக்கு இந்த அளவுக்கு மேக்கப் போட்ட கைகள் யாருடையது? ஜெ.வின் முகம், இறப்பிற்குப் பின் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப் பட்டதாக வரும் தகவல்கள் உண்மையா?  

ஜெ.வின் கன்னத்தில் காணப்பட்ட அந்த துளைகள் எப்படி ஏற்பட்டன? ஜெயலலிதாவின் உடலில் கால்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது எப்படி? அவரது முன் பற்கள் உடைக்கப்பட்டதுபோல் காணப்பட்டதே, அதற்கு என்ன பதில்? அவரை விட்டுவைத்தால், ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளில் இறங்குவார் என்பதால் சசிகலாவின் உறவுக்கார மருத்துவர்கள் உதவியோடு, அவர் மருத்துவ ரீதியாக முடக்கப்பட்டாரா? சசிகலாவின் உறவினர்களான டாக்டர் சிவகுமாரும், மாதங்கியும் முதல்வரான ஜெ.வுக்கு மருத்துவம் பார்க்கும் அளவிற்கு, திறமையான மருத்துவ வல்லுநர்கள்தானா?  ஜெயலலிதா இறப்பதற்கு சில வாரங்கள் முன்னதாகவே, கார்டனில் இருந்த பொருட்கள் கன்டெய்னர்களில் எங்கோ போனதாக செய்திகள் வந்ததே, இதற்கு பதில் என்ன? இது குறித்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்கட்சித் தலைவர்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு பதில் எங்கே? ஜெயலலிதாவின் வருமானமும் சொத்துக்களும் எங்கே? நகை நட்டுக்கள் எங்கே? ஜெயலலிதாவும் அவர் அம்மா வேதாவும் அவர்களது பணத்தில் வாங்கிய போயஸ் தோட்ட வீட்டை, அதற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டது எப்படி? ஜெ. தானாய் இறந்தாரா? இல்லை திட்டமிட்டுக் கொல்லப்பட்டாரா? என்பதுபோன்ற கேள்விகள் இப்போது மக்கள் மத்தியில் இருந்து ஆவேசமாக எழுந்திருக்கிறது.

ஜெ.’வின் உயிர்குறித்து மட்டுமல்ல; அவரது உடல் குறித்தும் பலத்த சந்தேகங்கள்  எழுந்துள்ளன. மருத்துவம் என்ற பெயரில் ஜெ. உடல் சிதைக்கப்பட்டு, உறுப்புகள் அகற்றப்பட்டு, மர்ம சித்திரவதைகளை அனுபவித்தபடியே அவர் இறந்தாரா என்று, ராஜாஜி ஹாலில் அவர் உடலைப் பார்த்த பொதுமக்கள் கலக்கமும் கண்ணீருமாய்க் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆறு அடி நீளமுள்ள கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெ’வின் உடல், ஏறத்தாழ வெறும்  மூன்றரை அடி அளவுக்கே இருந்தது. இதைப் பார்த்தவர்கள் திகைத்தார்கள்.

வெளியே எடுக்கப்பட்டு, கொடிகள் போர்த்தப்பட்டு, ராஜாஜி ஹாலில் மக்கள் பார்வைக்காக ஜெ.வின் உடல் வைக்கப்பட்டபோது, அது மறுபடியும் ஆறடியாக மாறியது. இது என்ன மாயாஜாலம் என பலரும் திகைத்தனர். அந்தத் திகைப்பு, அதிக நேரம் நீடிக்கவில்லை. அஞ்சலி செலுத்தவந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மலர்வளையத்தை ஜெ.’வின் கால்கள் மீது கிடத்தியபோது, ஜெ.’மீது போர்த்தப்பட்ட துணி ‘பொசுக்கென உள்வாங்கிக்கொண்டது. அப்போதுதான், ஜெ.வின் கால்கள் இருக்கவேண்டிய இடம், சமதளமாய் இருப்பது தெரிந்தது. ஆக ஜெ.வின் உடலில் கால்களே இல்லை.

இல்லாத கால்களை இருப்பதுபோல்காட்ட, கால்மாட்டுத் துணியை இழுத்து நீட்டிக் கட்டிவைத்திருக்கிறார்கள். இதை அருகில் இருந்து கவனித்தவர்களும், தொலைக்காட்சி சேனல்களில் பார்த்தவர்களும், உண்மையை உணர்ந்து அதிர்ந்துபோனார்கள். ஜெயலலிதாவின் கால்கள் எங்கே என்று கேள்விகள் கேட்டார்கள். இதன் அடிப்படையில் நக்கீரனில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப் பட்டன.  

இதுமட்டுமல்ல; அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் வாய் மெல்ல திறந்தபோதும் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது புன்னகை முகத்தில் இருக்கவேண்டிய முன்பற்கள் காணாமல் போயிருந்தன. ஜெ.வின் பற்கள் உடைக்கப்பட்டனவா? இல்லை நீக்கப்பட்டனவா? என்ற கேள்விக்கும் விடையில்லை. ஜெ.வின் வாய் திறந்திருப்பதைப் பார்த்த சசிகலா, பலமுறை அவர் வாயையும் உதடுகளையும் இழுத்து மூடினார். அவரருகே இருந்த இளவரசி மகள் பிரியாவும் இதே வேலையாக இருந்தார். இதன்பின்னும் ஜெ.வின் வாய் திறந்ததால், மன்னார்குடி நபர் ஒருவர் மூலம், ஜெ’வின் தாடையையும் தலையையும் துணியால் இழுத்துக் கட்டச் செய்தார் சசிகலா. இதைப்பார்த்தும் மக்கள் சந்தேகத்தில் உழல்கிறார்கள்.

இவை எல்லாம்தான் ஜெ.வின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு பலமான ஆதாரங்களாக இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே ஜெ.வுக்கு நயவஞ்சகமாய் அநீதிகள் இழைக்கப்பட்டதாக மக்கள் குமுறுகிறார்கள். தமிழகப் பெண்கள் இன்னும் கண்ணீர்விட்டுக் கதறி அழுகிறார்கள். மன்னார்குடித் தரப்பை சபிக்கிறார்கள்.

’ஜெ.வின் சந்தேக மரணம் குறித்த வழக்குகள், உச்சநீதிமன்றத் திலும் உயர்நீதி மன்றத்திலும் குவிந்துகொண்டிருக்கின்றன. ஜெ.வின் மரணத்திற்கு நீதிகேட்டு சட்டப் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.

இந்த நிலையில்தான், மரணம் குறித்து ஜோன்ஸ் என்பவர் தொடுத்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது, நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரடங்கிய சென்னை உயர்நீதி மன்ற பெஞ்ச்.

அப்போது நீதிபதி வைத்தியநாதன், "மருத்துவமனையில் இருந்த ஜெ.’வை பார்க்க, எந்த  உறவினரையும் அனுமதிக்காதது ஏன்? ஜெயலலிதா உடல்நிலை குறித்து முழு விவரங்களையும் ஏன் வெளியிடவில்லை? ஜெயலலிதா மரணம் பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்குக்கூட உத்தரவிடாதது ஏன்? மத்திய அரசு ஏன் வாயே திறக்கவில்லை.?'’என்றெல்லாம் அதிரடிக் கேள்விகளை எழுப்பிவிட்டு கடைசியாக, ‘""ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது. நான் இந்த வழக்கை விசாரித்தால், ஜெ.வின் உடலைத் தோண்டி எடுத்து உடல்கூராய்வு நடத்தவும் உத்தரவிட்டிருப்பேன். இது பொதுநல வழக்கு என்பதால் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுதான்  இதை விசாரிக்கவேண்டும்' என்று வழக்கை அங்கே நகர்த்தியிருக்கிறார். 

வழக்கை விசாரிக்கும் முன்பாகவே, நீதிபதிக்கு இப்படி ஒரு அழுத்தமான சந்தேகம் ஏற்படுகிறது என்றால், அவர் உணர்ந்த உண்மை குறித்து அரசு விசாரிக்க வேண்டாமா?. ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் நீதிபதியின் கேள்விகள் மட்டுமல்ல; தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் கேள்வியுமாகும்.  ஜெ. வுக்கு என்ன நடந்தது? அதிகாரத்திற்காகவும் சொத்துக்களுக்காகவும் ஜெ.கொல்லப் பட்டாரா? ஜெ.வின் கால்கள் எங்கே? பற்கள் எங்கே? ஜெ.வின் மரணத்திற்கு நீதி எங்கே? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சட்டம் பதில் சொல்லாவிட்டால். விரைவில் தர்மம் பதில் சொல்லும்.

வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட ஜெயலலிதாவின் ஆன்மா, அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படாதவரை சாந்தியடையாது. 

ஆதங்கமும் வருத்தமுமாய்...

நக்கீரன் கோபால்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(9)
Name : arun Date & Time : 2/10/2017 8:15:01 PM
-----------------------------------------------------------------------------------------------------
தி.மு.க. விற்கு சாதகமானவற்றை மட்டும் பதிவேற்றுங்கள். வெற்றி என்பது நமக்கும் தி.மு.க விற்கு மட்டுமே
-----------------------------------------------------------------------------------------------------
Name : arun Date & Time : 2/10/2017 8:15:01 PM
-----------------------------------------------------------------------------------------------------
அண்னே அண்னே! இதையும் போடுங்க.. ஸ்டாலினின் எழுச்சி பக்கங்கள்-ன்னு (தி.மு.க வை நக்கி பிழைக்கிற நீங்க எல்லாம் நியாயத்தை பேசுறது.. சசிகலா செய்யிறதைவிட கொடுமையானது.)
-----------------------------------------------------------------------------------------------------
Name : kumaresan.s Date & Time : 2/4/2017 11:57:12 PM
-----------------------------------------------------------------------------------------------------
உணமை ஒரு கூடிய சீக்கிரம் (ஆறே மாதத்தில்) வெளிய வரும் அதற்கான பிரமாஸ்திரம் புறப்பட்டுவிட்டது அது தான் தீப என்னும் இனொரு ஜெயலலிதா
-----------------------------------------------------------------------------------------------------
Name : Maya Date & Time : 1/17/2017 9:56:15 AM
-----------------------------------------------------------------------------------------------------
ப்ளீஸ் இதை niraiya கோப்பி எடுத்து சமுக வலை தலத்தில் பரப்புக. ஒவொரு தமிழனும் நீதி கேட்டு புறப்பட வேண்டிய தருணம். நம் வீட்டு சாவு இது. ஒன்று திரண்டு போராடுவோம் நீதி கேட்டு. புறப்ப்ப்ட்டுங்கள் உண்மை தமிழா
-----------------------------------------------------------------------------------------------------
Name : S P DHANASEKARAN Date & Time : 1/15/2017 7:54:42 AM
-----------------------------------------------------------------------------------------------------
சார், சத்தியமா சொல்றேன் ...நீங்களாவது ஏதாவது செய்யக் கூடாதா? தாங்க முடியல சார். அநியாயமா பதவிக்காக சில சுயநல நாய்களின் துணையுடன் அம்மாவை கொன்று விட்டார்கள். ப்ளீஸ் சார், இவங்கள விடாதீர்கள் .
-----------------------------------------------------------------------------------------------------
Name : pulliyappan Date & Time : 1/15/2017 7:54:32 AM
-----------------------------------------------------------------------------------------------------
அருமையான கட்டுரை. ஒரு நாள் தர்மம் வெல்லும். அன்று நக்கீரன் நினைக்கப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------
Name : Muthuchezhiyan Date & Time : 1/12/2017 5:41:49 PM
-----------------------------------------------------------------------------------------------------
இரும்பு மனுஷி நிலைமை எப்படி அரசியலில் உண்மை இல்லை என்றால் முடிவு இதுதான் .
-----------------------------------------------------------------------------------------------------
Name : raghavan mageswary Date & Time : 1/12/2017 5:41:49 PM
-----------------------------------------------------------------------------------------------------
தமிழ் நாட்டு மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை அப்படியே வரிசைப்படுத்திவிட்டார் ஆசிரியர். ஆனால் சட்டம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை . நாம் தர்மத்தைத்தான் நம்பியிருக்க வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
Name : Rangarajan Date & Time : 1/12/2017 9:42:40 AM
-----------------------------------------------------------------------------------------------------
மக்களின் உள்ளக்குமுறல்களை அவைகளின் ஏற்ற இறங்கங்களின் தாளங்கள் தப்பாமல் விவரிக்க இன்னும் ஒருமுறை உங்களாலேயே முடியுமா என எண்ணத்தோன்றுகிறது. கூடா நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஜெயலலிதாவின் முடிவு.
-----------------------------------------------------------------------------------------------------