Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
பொது அறிவு உலகம்
சாகித்ய அகாதெமி விருது 2016
......................................
இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு - 2025
......................................
தமிழக அரசின் புதிய செயல் திட்டங்கள்
......................................
வார்தா புயல்
......................................
ஜெ. ஜெயலலிதா -கோவி. லெனின்
......................................
உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
......................................
01-01-17

ங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளுக்கான நடப்பு ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லிலியில் சாகித்ய அகாதெமி வளாகத்தில் அதன் தலைவர் டாக்டர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட 24 மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் உள்ளிட்ட படைப்புகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின்னர், விருதுக்குத் தேர்வு பெற்றவர்கள் விவரங்கள் குறித்து சாகித்ய அகாதெமியின் செயலர் டாக்டர் கே.ஸ்ரீனிவாசராவ் அறிவித்தார்.

இதுகுறித்து சாகித்ய அகாதெமியின் ஒருங்கிணைப்பாளரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசியருமான கி.நாச்சிமுத்து கூறுகையில் ""தமிழ்ப்பிரிவில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் வண்ணதாசன் என்ற கல்யாணிஜி என்ற சி.கல்யாணசுந்தரத்திற்கு கிடைத்துள்ளது. அவர் நீண்ட காலமாக இலக்கியத் துறையில் கவிதைகளும், சிறுகதைகளும் படைத்து வருபவர்.

தென் மாவட்டங்களில் வாழும் சராசரி, நடுத்தர மக்கள் ஆகியோரின் வாழ்க்கையை நுட்பமாக உளவியல், கருத்தியல் ரீதியாக சிந்தித்து அவர் எழுதியுள்ளார். அவர் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். தேர்வுக்கான பரிசீலனையில் எட்டு புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பும், எழுத்தாளர் இன்குலாப்பின் கவிதையும் முக்கியமாக இடம் பெற்றிருந்தன. முடிவாக வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பை பரிசுக்கான மூவர் குழு தேர்ந்தெடுத்தது'' என்றார்.

2016-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது திருநெல்வேலிலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு ஒரு சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது இயற்பெயர் சி. கல்யாணசுந்தரம் (71). கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.

மணிப்பூரி, மராத்தி, டோகிரி, மைதிலிலி, ஒடியா, ராஜஸ்தானி, தமிழ் ஆகிய 7 மொழிகளில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்கள் இந்தாண்டுக்கான விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இதில், தமிழில் வண்ணதாசனுக்கு இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான விருதுப் பட்டியலில் அவர் இடம்பெறுவார் என எழுத்துலகில் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் அதை மெய்ப்பிக்கும் வகையில் சாகித்ய அகாதெமி இந்த விருதை அறிவித்துள்ளது. இவரது தந்தையும், திறனாய்வாளருமான தி.க. சிவசங்கரன், 2000-இல் இந்த விருது பெற்றார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இது தொடர்பாக வண்ணதாசன் கூறியது - ""நெல்லையைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிலிக்கண்ணனுக்கு நான் எழுதிய கடிதங்கள்தான் என்னை எழுதத் தூண்டியது. அந்தக் கடிதங்களை நான் பொக்கிஷமாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதுகிறேன். என்னுடன், 1960-களில் எழுதத் தொடங்கிய பலரும் இப்போது எழுதுவதில்லை. இருப்பினும், இன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. தமிழில் பிரசித்தி பெற்ற படைப்பாளர்களின் படைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து இன்றைய எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டும். தொடர்ந்து தாமிரவருணி சார்ந்து படைப்புலகில் இயங்குவேன்'' என்றார்.

வாழ்க்கை குறிப்பு - இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பெற்றோர் தி.க.சிவசங்கரன் - தெய்வானை. இளநிலை வணிகவியல் பயின்றவர். வணிகவியல் பயின்றவர். பின்னர் எழுதத் தொடங்கினார். 1962 ஏப்ரல் மாதம் புதுமை இதழில் இவரது முதல் சிறுகதை வெளி
யானது. 13 சிறுகதைத் தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

எல்லோருக்கும் அன்புடன் எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

 அவர் கூறியதாவது ""தமிழ்ப் படைப்பாளிகள் அவரவர் தளங்களில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எனது எழுத்துகள் முதிர்ச்சியடைந் துள்ளதாக நான் நினைத்த பின்பு வெளியான ஒரு சிறு இசை என்ற படைப்புக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இவ்விருதால் எனது எழுத்துக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இன்னும் அதிகமான வாசகர்களை எனது எழுத்துகள் சென்றடையும். என் தந்தை தி.க.சி.யைத் தொடர்ந்து எனக்கும் கிடைத்திருப்பதை பாரம்பரிய தொடர்ச்சியாகப் பார்க்கிறேன்.

தமிழில் புதிய படைப்பாளிகள் வந்து  கொண்டே இருக்கின்றனர். நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள் என ஏராளமானவை வெளிவருகின்றன. இளைஞர் களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்ததாகத் தெரிய வில்லை. விருதைப் பெற்றுத் தந்துள்ள இத்தொகுப்பில் நான் சந்தித்த மனிதர்களின் நுட்பமான கொள்கை களைப் பதிவு செய்துள்ளேன்'' என்றார்.

திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஜா வழங்கிய பாவலர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, சுஜாதா அறக்கட்டளை விருது உள்ளிட்ட விருதுகளும், பரிசுகளும் பெற்றவர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இப்போது சாகித்ய அகாதெமி விருதும் பெற்றுள்ளார்.

சிறுகதைத் தொகுப்புகள் : கலைக்க முடியாத ஒப்பனைகள் (1976), தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் (1978), சமவெளி (1983), பெயர் தெரியாமல் ஒரு பறவை (1985), மனுஷா, மனுஷா (1990), கனிவு (1992), நடுகை (1996), உயரப் பறத்தல் (1998), கிருஷ்ணன் வைத்த வீடு (2000), வண்ணதாசன் கதைகள் தொகுப்பு (2001), பெய்தலும், ஓய்தலும் (2007), ஒளியிலே தெரிவது (2010) கவிதைத் தொகுப்புகள் : புலரி (1981), கல்யாண்ஜி கவிதைகள் (1987), முன்பின் (1994), அந்நியமற்ற நதி (1997), நிலா பார்த்தல் (2000), கல்யாண்ஜி முழுத் தொகுப்பு (2001), உறக்கமற்ற மழைத்துளி (2005), கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள் (2007), இன்னொரு கேலிலிச் சித்திரம் (2008), மணல் உள்ள ஆறு (2011).

குறுநாவல் : சின்னு முதல் சின்னு வரை (1990), கடிதத் தொகுப்பு - எல்லோருக்கும் அன்புடன் (1995), கட்டுரைத் தொகுப்பு - அகம்புறம் (2008)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :