Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
சாகித்ய அகாதெமி விருது 2016
 ................................................................
இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு - 2025
 ................................................................
தமிழக அரசின் புதிய செயல் திட்டங்கள்
 ................................................................
வார்தா புயல்
 ................................................................
ஜெ. ஜெயலலிதா -கோவி. லெனின்
 ................................................................
உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
 ................................................................
01-01-17

ந்திய பிரதமரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இந்தியா-ஜப்பான் 2025 தொலைநோக்குத் திட்டத்தின் பகுதியாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன் விபரம் வறுமாறு.

*
    உலக வளத்துக்கு அடிப்படையாக உள்ள இந்திய-பசிபிக் மண்டலத்தின் முக்கியத்துவம்  ஜனநாயகம், அமைதி, சட்டம், சகிப்புத்தன்மை, மண்டலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி, பன்முகத் தன்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கான சூழ்நிலையை மதித்தல்


*
    இந்தியாவின் கிழக்கு நாடுகள் சார்ந்த கொள்கை, ஜப்பான் நாட்டின் தரமான கட்டுமானத்துக்கான விரிவடைந்த கூட்டாண்மை ஆகிய இரண்டுக்கும் இடையில் ஒருங்கியக்கம்  வேண்டும் என்று இரு நாடுகளும் முடிவுசெய்துள்ளன. இந்த ஒருங்கியக்கம் பரஸ்பர ஆலோசனை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மண்டல ஒருங்கிணைப்பு, மேம்பட்ட தொடர்பு, மற்றும் தொழில்களின் இணைப்பு ஆகியவற்றுக்காக இந்தியாவும் ஜப்பானும் பரஸ்பரம் நெருக்கமாக ஒருங்கிணைந்தும், மற்றவர்களுடனும் இணைந்து அமையவேண்டும்


*
    புவி எதிர்கொண்டுள்ள பருவமாற்றம், பயங்கர வாதத்தை ஒடுக்குதல், தீவிரவாதத்தைச் சமாளித்தல் ஆகிய சவால்களில் பொதுவான தளத்தை விரிவு செய்யவும், ஒத்துழைக்கவும் முடிவு செய்தனர். சர்வதேச அடிப்படையிலான ஒழுங்கைப் பராமரித்தபடி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐ.நா. சபை சீர்திருத்தம் குறித்தும் ஒத்துழைக்க முடிவு


*
    ஜப்பானின் நீரிலும் வானிலும் இயங்கக் கூடிய "யுஎஸ் 2' ரக போர் விமானம் உள்பட அதி நவீன பாதுகாப்பு படைகளை இந்தியாவுக்கு அளித்தல் இது இரு நாடுகளுக்கும் இடையில் கொண்டிருக்கும் நம்பிக்கையை இரு தரப்பு பாதுகாப்பு பரிமாற்றங்களில் இரு நாடுகளும் கண்டுள்ள முன்னேற்றத்தைத் தெரிவிக்கிறது.

வளத்துக்கான கூட்டுமேலாண்மை

"இந்தியாவில் உற்பத்தி செய்', "திறன் இந்தியா', "டிஜிட்டல் இந்தியா'. "பொலிலிவுறு நகரம்'. "இந்தியா தொடங்கு இந்தியா'. "தூய்மை இந்தியா இயக்கம்' ஆகிய திட்டங்களைப் பற்றி, ஜப்பான் பிரதமர் ஆபேயிடம் இந்தியப் பிரதமர் விவரித்தார். இந்த முன்முயற்சிக்கு அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (ODA) ஜப்பானின் பொதுத் துறை தனியார்துறை முதலீடுகளைச் செய்வதன் வாயிலாக தனது மேம்பட்ட திறன்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள உறுதியான ஆதரவை அளிப்பதாக  ஜப்பான் பிரதமர் ஆபே தெரிவித்தார். இந்த முன் முயற்சிகள் இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள தனியார் நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்புக்கு கணிசமான வாய்ப்புகளைத் தரும் என்பதை இரு நாட்டுப்பிரதமர்களும் அடிக்கோடிட்டனர்.

*
    இந்திய ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான முதன்மைக்குரிய மும்பை அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் குறித்து, இரு நாடுகளின் கூட்டுக் குழு கூட்டங்கள் 2016-ஆம் ஆண்டில் மூன்று முறை நடைபெற்று, அதில்  சீரான முன்னேற்றம் ஏற்படுவதை இரு நாட்டின் பிரதமர்களும் வரவேற்றுள்ளனர்.


*
    உற்பத்தி, திறனாளிகளை மாற்றுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் மூலம்  இந்தியாவில் உற்பத்தித் துறையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை விஷயத்தில் இரு பிரதமர்களும் ஒத்துழைத்துச் செயல்படுவது என்று இரு பிரதமர்களும் முடிவு செய்துள்ளனர். இத்திட்டம் இந்திய உற்பத்தி தளத்தை உயர்த்தும். அத்துடன்,  அடுத்த பத்தாண்டுகளில் ஜப்பான் நாட்டு உற்பத்தித் திறன் பாணியில் 30 ஆயிரம் பேருக்குப் பயிற்சி அளித்து "இந்தியாவில் உற்பத்தி செய்', "திறன் இந்தியா' திட்டங்களுக்கு பங்களிப்பைச் செலுத்தும். அதற்கு, பொதுத்துறை, தனியார் துறை கூட்டுடன் இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க ஜப்பான் நிறுவனங்கள் வாயிலாக ஜப்பான்-இந்தியா உற்பத்திக்கான நிறுவனத்தை அமைப்பதன் மூலம் ஜப்பான் ஆதரவில் வடிவமைக்கப்பட்ட படிப்புகளைக் கொண்டு இவை நிறைவேற்றப்படும். உற்பத்தித் துறைக்கான இந்தப் பயிற்சித் திட்டம் 2017-ஆம் ஆண்டு கோடையில் குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடங்கும்.


*
    சென்னை அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம், மும்பை ரயில்-துறைமுக இணைப்புப் போக்குவரத்துத் திட்டம், தில்லியில் கிழக்குப்
புறநகர் போக்குவரத்துத் திட்டத்துடன் கூடிய  திறன் போக்குவரத்து முறை  ஆகிய திட்டங்களை இரு நாட்டுப் பிரதமர்கள் வரவேற்றனர்.

*
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாசனத் திட்டங்கள், ஒடிசாவில் வன வள மேலாண்மையின் கீழ் ஆயத்த தகவல் திரட்டுவது, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்
பாசனத் திட்டத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக் காக அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியின் (ODA)) கீழ் கடனுதவி பெறுவது

*
    ஜப்பான் நிறுவனங்கள், இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், நிப்பான் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு காப்பீட்டு (NEXI)) நிறுவனம், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (
JBIC) ஆகியவை இணைந்து 1.5 லட்சம் கோடி யென் அளவுக்கு ஜப்பான்-இந்தியா இந்தியாவில் தயாரிப்போம் சிறப்பு நிதி வசதியை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரண்டு பிரதமர்களும் வலிலியுறுத்தினர். இந்தியாவில் கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பது குறித்து ஆராய தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதி (NIIF), போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான ஜப்பான் வெளிநாடு கட்டமைப்பு முதலீட்டு கழகம் ((JOIN)) ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அவர்கள் வரவேற்றனர்.

*
    2016-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற
ஜப்பான்-இந்தியா 8-வது எரிசக்தி பேச்சுவார்த் தையில் வகுக்கப்பட்ட ஜப்பான்-இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும், இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தனர்.

*
    வானிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவருவதை இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர்.


*
    அணுசக்தியை அமைதிவழியில் பயன்படுத்து வதற்கான ஒத்துழைப்புக்கு இந்திய அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை இரண்டு பிரதமர்களும் வரவேற்றனர். இந்த ஒப்பந்தம், தூய்மையான எரிசக்தி, பொருளாதார வளர்ச்சி,  அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகத்தை ஏற்படுத்தும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய

அளவிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.

*
    பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில், கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்காக 2009-ம் ஆண்டில் ஹாங்காங்கில் உருவாக்கப்பட்ட சர்வதேச தீர்மானத்தை விரைவில் இறுதிசெய்ய வேண்டும் என்ற விருப்பத்தை இரண்டு பிரதமர்களும் வெளிப்படுத்தினர்.


*
    ஜாக்சா (JAXA) மற்றும் இஸ்ரோ (ISRO) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டதை அவர்கள் வரவேற்றனர். கடல் பகுதி, புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு விரிவுபட்டிருப்பதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதற்காக புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் ஜாம்ஸ்டெக் (JAMSTEC)) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்துக்கு இருவரும் வரவேற்பு தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸுக்கான இருதரப்பு கூட்டு பணிக் குழு, ஜெட்ரோவுடன் (JETRO) இணைந்து ஜப்பான்-இந்தியா ஐஓடி முதலீட்டு நடவடிக்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துக்கான கூட்டுக்குழு ஆகிய நடவடிக்கைகள் மூலம் இருதரப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐஓடி-யில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் குறிப்பிட்டனர்.


*
    நுண்கிருமி தடுப்பு, ஸ்டெம்செல் ஆராய்ச்சி, மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் ஒருங்கிணைப்பு வலுப்பட்டிருப்பதற்கு இரண்டு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

ஜப்பானில் ஜெனரிக் மருந்துகள் அதிக அளவில் இருக்கும் நிலையில், இந்திய மற்றும் ஜப்பானிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை
அவர்கள் குறிப்பிட்டனர்.

*
    இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான விதிகளை தளர்த்த உள்ளதாக பிரதமர் ஆபே அறிவித்தார். இந்திய நாட்டவர்களுக்கு விசா விண்ணப்பங்களை வழங்கும் இடங்களின் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்த விரும்புவதாக ஆபே தெரிவித்தார்.*
    இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கும், ஜப்பானின் கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் இடையே விளையாட்டுத் துறை சார்ந்த ஒருங்கிணைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு இரண்டு பிரதமர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இதன்படி, டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் நடைபெற ஒலிலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் ஆகியவற்றை சிறப்பு கவனத்தில் கொண்டு, அனுபவங்கள், திறன், தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் புலமை பரிமாறிக் கொள்ளப்படும்.


*   கடல் பகுதி, விண்வெளி மற்றும் இணையதளம் போன்ற சர்வதேச நாடுகளுக்கு பொதுவான பகுதிகளை பாதுகாக்க நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்று இரண்டு பிரதமர்களும் தெரிவித்தனர்.


*
    சர்வதேச சட்டங்களின் கொள்கைகள் அடிப்படை யில், குறிப்பாக கடல் பகுதிகளுக்கான சட்டங்கள் குறித்த ஐநா தீர்மானத்தின் அடிப்படையில், சுதந்திரமாக கடல் பயணம் மேற்கொள்வது,
விமானங்களை இயக்க அனுமதிப்பது, சட்டப்பூர்வ வணிகத்தை தடையில்லாமல் செய்வது ஆகியவற்றுக்கு உறுதிபூண்டுள்ளதாக இரண்டு பிரதமர்களும் தெரிவித்தனர்.


*
    யுரேனியம் செறிவூட்டுதல் உள்ளிட்ட வடகொரியா வின் அணுஆயுத தயாரிப்பு மற்றும் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை தயாரிப்புத் திட்டங்களுக்கு இரு பிரதமர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்தவொரு
அத்துமீறலிலிலும் ஈடுபடக் கூடாது என்று வடகொரியாவை கடுமையாக வலிலியுறுத்தினர்.

*    அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்று இரண்டு பிரதமர்களும் தெரிவித்தனர்.
அணுஆயுத சோதனைக்கு தடைவிதிக்கும் விரிவான ஒப்பந்தத்தை (CTBT) விரைந்து ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஆபே வலிலியுறுத்தினார். ஷேனன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அணுப்பிளவு பொருட்கள் தடைக்கான ஒப்பந்தத்தை (FMCT) பாகுபாடு இல்லாத வகையில், பல அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகளை உள்ளடக்கிய  உரிய வகையில் மேற்கொள்வ தற்கான பேச்சுவார்த்தையை விரைந்து முடித்து, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலிலியுறுத்தினர்.

அணுஆயுத பரவல் மற்றும் அணுஆயுத தீவிரவாதத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற உறுதியை அவர்கள் வெளிப்படுத்தினர்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :