Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
சாகித்ய அகாதெமி விருது 2016
 ................................................................
இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு - 2025
 ................................................................
தமிழக அரசின் புதிய செயல் திட்டங்கள்
 ................................................................
வார்தா புயல்
 ................................................................
ஜெ. ஜெயலலிதா -கோவி. லெனின்
 ................................................................
உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
 ................................................................
01-01-17
ண்மையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கான 141 பக்க கோரிக்கை மனுவை அளித்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு.

    நதி பிரச்சினை

*   காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினைச்செயல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

*    மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாற்றில் 152 அடியாக நீரைத் தேக்க அனுமதி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்குத் தேவையான நிதியை அளிக்க வேண்டும். அணை பாதுகாப்புச் சட்டத்தில் தமிழகத்தின் கவலைகளைப் போக்க வேண்டும்.

    மீனவர் பிரச்சினை

*   பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கச்சத்தீவை மீட்க வேண்டும். மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலிலில் சேர்க்க வேண்டும். மீன்பிடித்தலுக்கான ஒருங்கிணைந்த சிறப்புத் திட்டத்துக்கான நிதியை விரைந்து அளிக்க வேண்டும்.

    மின்சாரம்

*    செய்யூர் உயர் மின் திட்டத்துக்கான திருத்தப்பட்ட ஒப்பந்த ஆவணங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் உபரியாக உள்ள காற்றாலை மின்சாரத்தை வினியோகம் செய்வதற்காக மாநிலங்களிடையே மின்வழித் தடத்தை ஏற்படுத்திட வேண்டும்.

    மருத்துவ நுழைவுத் தேர்வு

*    தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் கொள்கையானது மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. இதில் தகுதி நுழைவுத் தேர்வை நுழைப்பது, கிராமப்புற மாணவர்களுக்கு அநீதியை இழைப்பதாகும்.

*    மேலும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வைக் கொண்டு வரும் திட்டத்துக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    உணவுப் பொருள்

* தமிழகத்துக்கு 85 ஆயிரம் மெட்ரிக் டன்கள் அரிசி கூடுதலாகத் தேவைப்படுகிறது. இந்தக் கூடுதல் அரிசியையும் கிலோவுக்கு ரூ.8.30 என்ற விலையிலேயே மத்திய அரசு வழங்கிட வேண்டும். இதன்மூலம், கூடுதல் நிதிச்சுமை தவிர்க்கப்படும். கூடுதலான மண்ணெண்ணெய் ஒதுக்கிட வேண்டும். நேரடி மானியத் திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்தக்கூடாது.

நிதி ஆதாரம்   

* வெள்ள மேலாண்மை சார்ந்த ரூ.613.43 கோடி மதிப்பிலான ஐந்து பெருந்திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் மத்திய அரசு தனது பங்காக ரூ.460.07 கோடியை விடுவிக்க வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட பணிகளில் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.59.82 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. மீதமுள்ள தொகையை மாநில அரசு தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்தே செய்துள்ளது.

    நிவாரண நிதி

*    மாநில பேரிடர் மீட்பு நிதியத்துக்கான தொகையை மத்திய அரசு விடுவித்து வருகிறது. முதல் தவணைத் தொகையான ரூ.267.37 கோடியை விடுவித்துள்ளது.

*    வார்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு களைச் சீர் செய்ய தமிழக அரசு ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளது.

*    மத்திய அரசு இரண்டாவது தவணையாக ரூ.267.675 கோடியை விடுவித்தால் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். இந்த உதவி தகுந்த நேரத்தில் செய்யப்பட்டதாக இருக்கும்.

*    கடந்த ஆண்டு சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இதனை ஆய்வு செய்த மத்திய அரசின் உயர்நிலைக் குழு, ரூ.1,737.65 கோடி நிவாரணம் வழங்க ஒப்புதல் அளித்தது. அதில் ரூ.1,365.67 கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்தது. மீதமுள்ள ரூ.371.98 கோடியை அளிக்க வேண்டும்.

  காவல்துறை நவீனமயம்

*    கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது தமிழகத்தில் காவல்துறை நவீனமயமாக்கலுக்கு ரூ.12 ஆயிரத்து 379.30 கோடி ஒதுக்கீடு செய்தது.

*    இந்தத் தொகை 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டது. இது போதுமானதாக இல்லை. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் காவல்துறை நவீனமயமாக்கல் பணிக்காக ரூ.10 ஆயிரம் கோடியை அளிக்க வேண்டும்.

  புயல் பாதித்தோருக்கு வீடுகள்

*    வார்தா புயல் தாக்குதல் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. குறிப்பாக, குடிசைகள், ஓட்டு வீடுகளில் வாழ்ந்தோர் அவற்றை இழந்து தவிக்கின்றனர்.

எனவே, பேரிடர்கள் பாதிக்காத அளவிலான வீடுகள் கட்டப்படுவது அவசியமாகிறது. எனவே, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக கட்ட அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே 2016-17-ஆம் நிதியாண்டுக்கு 1.31 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது.

  100 நாள் வேலைத் திட்டம்

*    தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் (நூறு நாள் வேலைத்திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

*    இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 2 மாதங்களில் மட்டும் கூலிலி அளித்ததன் அடிப்படையில் ரூ.794 கோடி ஒதுக்க வேண்டும். மொத்த மாக இந்தத் திட்டத்துக்கென தமிழக அரசுக்கு ரூ.1,994 கோடியை விடுவிக்க வேண்டும்.

     சென்னை மெட்ரோ ரயில்

*    சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் தேவைப்படுகின்றன.

*    ரயில்வேத் துறையிடம் இருக்கும் நிலங்களை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கிட வேண்டும்.

  இரட்டைக் குடியுரிமை

*    தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முகாம்களிலும், வெளியிடங்களிலும் இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். எனவே, அத்தகைய மக்களுக்கு இந்தியா-இலங்கை சார்பில் இரட்டை குடியுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம், இந்தியாவிலும் அவர்கள் எந்தவித இடையூறுமின்றி வணிகம் செய்திட முடியும்.

    வழக்காடும் மொழி

   சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்
வழக்காடும் மொழியாகவும், அதிகாரப்பூர்வமான மொழியாகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :