Add1
logo
திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது! || இன்றைய ராசி பலன் || “புண்ணாக்கு கடை வைக்கிறோம்” என கூறி மதுக்கடை அமைத்த அதிகாரிகளை கண்டித்து பெண்கள் போராட்டம்! || பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை || சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு || நகைக்கடையில் கொள்ளை; 32-வயது இளைஞர் 33-வது முறையாக சிறை || வீடுகளில் “டாஸ்மாக்” சரக்கு விற்பனை செய்த பத்து பேர் கைது || ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 34 பேருக்கு ரூ.10,085 அபராதம்! || கொளத்தூர் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை || பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேருக்கு பரோல் வழங்கவேண்டும் - சீமான் || வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் || ஜூலை 7ல் 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் || பெட்ரோல் 25 காசுகள் - டீசல் 10 காசுகள் விலை குறைப்பு ||
Logo
பொது அறிவு உலகம்
சாகித்ய அகாதெமி விருது 2016
 ................................................................
இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு - 2025
 ................................................................
தமிழக அரசின் புதிய செயல் திட்டங்கள்
 ................................................................
வார்தா புயல்
 ................................................................
ஜெ. ஜெயலலிதா -கோவி. லெனின்
 ................................................................
உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
 ................................................................
01-01-17

வார்தா புயல்


*    வங்கக் கடலிலில் உருவான வார்தா புயல் டிசம்பர் 12-ஆம் தேதி சென்னைக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடந்தது.

*    அப்போது மணிக்கு 100 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

*    இந்த புயல் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சின்னா பின்னமாக்கி விட்டது.

*   புயல் காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை நகரில் பல்லாயிரக்கணக் கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்தன.

*    போக்குவரத்து அடியோடு முடங்கியதோடு மின்சார வினியோகமும் துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி போனது. விமான சேவையும் நிறுத்தப்பட்டது.

*    வார்தா புயல் காரணமாக சாலையோரம் மற்றும் அலுவலக வளாகங்களில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன. மேலும் ஏராளமான ராட்சத மின்கோபுரங் களும் சரிந்து விழுந்தன.

*    இதனால் சென்னை நகரம், சென்னையின் புறநகர் பகுதிகளில் மின் வினியோகம் தடைப்பட்டது.

*    வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்கு முன் 1994-ஆம் ஆண்டு தாக்கிய புயல் உயிரியல் பூங்காவில் லேசான சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் வார்தா புயல் இங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. 1994-ஆம் வீசிய புயலைவிட வார்தா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

*    இந்த புயலிலினால் 12 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பொருட்சேதம் ஏற்பட்டது.

*    இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் பற்றிய தகவல்களை அடிக்கடி தெரிவித்ததோடு, புயல் கரையை கடக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரித்து இருந்தது. அதனால் மக்கள் வெளியில் செல்லவில்லை. இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

*    வார்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 
*   இந்த நிலையில் புயல் நிவாரண பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

*    வார்தா புயல் சென்னை நகர மக்களின் மனத்தில் அழியாத வடுவை ஏற்படுத்தி சென்றுவிட்டது.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :