Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
சாகித்ய அகாதெமி விருது 2016
 ................................................................
இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு - 2025
 ................................................................
தமிழக அரசின் புதிய செயல் திட்டங்கள்
 ................................................................
வார்தா புயல்
 ................................................................
ஜெ. ஜெயலலிதா -கோவி. லெனின்
 ................................................................
உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
 ................................................................
01-01-17


-கோவி. லெனின்
மிழக முதல்வர்களில் மிகக் குறைந்த வயதில் பதவிக்கு வந்தவர் செல்வி. ஜெயலலிதா. முதன்முறையாக அவர் பதவியேற்றபோது அவருக்கு 43 வயது. திராவிட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தமிழக முதல்வர்களில் ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த முதல் முதல்வர்செல்வி. ஜெயலலிதாதான் 1991-96. அவருக்குமுன் பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் உள்ளிட்ட யாரும் 5 ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை. 1996-2001 வரையிலான காலத்தில்தான் கலைஞர் மு.கருணாநிதி முதன்முறையாக முழுமையாக 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அறிஞர் அண்ணா முதல்வராகி இரண்டாண்டுகளிலேயே மரணமடைந்துவிட்டார். எம்.ஜி.ஆர் மூன்று முறை தொடர்ந்து முதல்வராகியும் ஒரு முறை கூட முழுமையாக 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்யவில்லை.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க 4 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்துள்ளது. 4 முறை வெற்றி பெற்று 6 முறைமுதல்வராகப் பொறுப்பேற்றவர் ஜெயலலிலிதா.

அதற்கு காரணம், நீதிமன்ற தீர்ப்பினால் இரண்டு முறை அவருடைய முதல்வர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிறகு மீண்டும் பதவியேற்றார்.

முதல்வர் பதவியில் இருந்தபோது சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்ற ஒரே முதல்வரும் ஜெயலலிதா தான். இந்திய மாநிலங்களில் வேறெந்த முதல்வரும் இப்படித் தண்டிக்கப்பட்டதில்லை.

தமிழகத்தை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார் செல்வி. ஜெயலலிதா. ஏற்றங்களும் இறக்கங்களும் நிறைந்தது அவரது ஆட்சிக்காலம். 1991-இல் முதன்முறையாக அவர் பதவியேற்றபோது, மலிவு விலை மதுவைத் தடை செய்து முதல் கையெழுத்திட்டார். பெண் குழந்தைகளை சுமையாகக் கருதி அவை பிறந்ததுமே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் கொடிய வழக்கம் சில மாவட்டங்களில் நிலவியது. அதைத் தடுக்கும்வகையில் தொட்டில் குழந்தைத் திட்டத்தை ஜெயலலிதா அரசு கொண்டு வந்தது. பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர், குழந்தை பிறந்ததும் அரசுத் தொட்டிலிலில் அதைப் போட்டு விட்டால், அரசு பொறுப்பில் அது வளர்க்கப்படும் என்பதுதான் இத்திட்டமாகும்.

தமிழகத்தில் பெண் போலீசார் இருந்து வந்த நிலையில், பெண் காவலர்களை மட்டுமே கொண்ட அனைத்து  மகளிர்  காவல் நிலையங்களை ஜெயலலிதா தொடங்கினார். பெண்கள் சார்ந்த குடும்பப் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை இந்தக் காவல் நிலையங்கள் விசாரித்தன. தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்குமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 69% இடஒதுக்கீடு உள்ளது. இந்திரா சஹானி என்பவர் தொடுத்த வழக்கில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 50%க்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வலிலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், 31(சி) பிரிவின்கீழ் சட்டத்திருத்தம் கொண்டு வந்து, அதனை இந்தியஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெறச் செய்து, இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தது ஜெயலலிலிதா அரசு.

தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, முத்தமிழுடன் அறிவியல் தமிழை நான்காவது தமிழாகக் கொள்ள  வேண்டும் என வலிலியுறுத்தினார் ஜெயலலிதா. 1996-ஆம் ஆண்டுத் தேர்தலில் ஜெயலலிதாவும் அவரது கட்சியும் படுதோல்வி அடைந்தது.

2001-ஆம் ஆண்டில் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. வீடுகள்தோறும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தச் செய்தது, சென்னைக்கு புதிய வீராணம் குடிநீர்த் திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம் ஆகியவை இந்த ஆட்சிக்காலத்தில் அவர் நிறைவேற்றிய முக்கிய திட்டங்களாகும். அதே நேரத்தில் அவரது ஆட்சிக்காலங்களில் அடக்குமுறைகளுக்குப் பஞ்சமேயில்லை. 1991-96-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு, முரசொலிலி-இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உள்ளிட்ட பத்திரிகைகள் மீது சட்டமன்ற நடவடிக்கை. நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டோர்கள் மீது கைது நடவடிக்கை, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம்-விஜயன் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் என ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது ஜெயலலிதா ஆட்சி. 

மலிலிவு விலை மதுவைத் தடை செய்து கையெழுத்திட்ட அதே ஜெயலலிலிதாதான் தனது ஆட்சிக்காலத்தில் பார் வசதியுடன் கூடிய மதுக்கடை களைத் திறந்தார். பின்னர் அரசாங்கமே நேரடியாக மது விற்பனையை செய்யும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளைத் தொடங்கினார்.

2001-2006 ஆட்சிக்காலத்தில் நக்கீரன் ஆசிரியரைப்பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து (இந்தியாவிலேயே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிக்கை ஆசிரியர்) 252 நாட்கள் சிறையில் அடைத்தார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் ஆண்டுக்கணக்கில் பொடா சிறைவாசிகளாயினர்.

அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் பணி நீக்கம் செய்து அவர்கள் மீது எஸ்மா-டெஸ்மா உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக கடும் நடவடிக்கை மேற்கொண்டார். கருத்து சுதந்திரம்-ஜனநாயக உரிமை ஆகியவை நசுக்கப்பட்டன.

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோல்வி அடைந்தது. இதன்பின்னர் தனது நிலைப்பாடுகள் பலவற்றை மாற்றிக் கொண்டார் ஜெயலலிதா.

அதே ஆண்டில் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை ஜெயலலிதா அரசு கைது செய்தது. சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

2011-ஆம் ஆண்டு மீண்டும் முதல்வரானார் ஜெயலலிலிதா. மிகக்குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் அம்மா உணவகங்களை மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் திறந்தார். தொடர்ந்து அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா விதைகள் என மலிலிவு விலையில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில் சில பயனளித்தன. சில பெயரளவுக்கே இருந்தன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கியது ஜெயலலிலிதா அரசு. அத்துடன் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவையும் வழங்கப்பட்டன. கிராமப்புற ஏழை மக்களுக்கு விலையில்லா ஆடு-மாடுகள் வழங்கப்பட்டன. ஏழைப் பெண்களின் திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டு தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்டவையும் உயர்த்தப்பட்டன. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தையும் ஜெயலலிலிதா அரசு செயல்படுத்தியது.

2016-ஆம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு 32 ஆண்டுகள் கழித்து ஆட்சியைத் தக்க வைத்த முதல்வர் என்ற பெயரும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், சிறு விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரத்து ஆகியவற்றை  செயல்படுத்தினார். எனினும் 6 மாதங்களுக்குள்ளாக நோய்வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 5.12-2016 அன்று காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொள்கைகள் பற்றிக் கவலைப்படாமல் தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. தமிழீழம் என்ற நாடு அமையப் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்க வலியுறுத்தியதுடன், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை கைது செய்து தண்டிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. பின்னர் அதே சட்டமன்றத்தில் ஈழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலிலியுறுத்தியும், தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. பின்னர் அரசியல் சூழல்களைக் கருதி அதே வழக்கில் மற்ற மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வலிலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ராஜீவ் கொலை வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட 7  பேரின்  விடுதலைக்கான தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். ஆனால் அவரது மரணம் வரை அவர்கள் விடுவிக்கப் படவில்லை.

பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட போது அப்போதைய மாநில அரசுடன் ஒத்துழைக்க மறுத்த ஜெயலலிதா, பின்னர்தனது ஆட்சியில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்தியஅரசை வலிலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தை பல்  இல்லா ஆணையம் என்று விமர்சித்த ஜெயலலிதா,நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினால் தமிழகத்திற்கு பலனில்லை எனத் தெரிவித்தார். பிறகு தனதுஆட்சியில் அந்த இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வலிலியுறுத்தி, அது வெளியிடப்பட்டபோது தனது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டு விழாநடத்தினார். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரத்தில் அவருக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களும் விவசாய அமைப்பினரும்  பிற கட்சியினரும் பாடுபட்டிருந்தபோதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தனக்கு கிடைத்த வெற்றி எனப் பாராட்டு விழா நடத்தினார்.

தனது கட்சியான அ.தி.மு.க.வை பலப்படுத்திய துடன் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் பெண்மணியாகப் பெயரெடுத்தார்ஜெயலலிதா. பிரதமராகவும் விருப்பப்பட்டார். 2014நாடாளுமன்றத் தேர்தலிலில் அவரது கட்சி தமிழகத்தில் 37 தொகுதிகளை வென்றது. எனினும் அவரது பிரதமர் கனவு நிறைவேறவில்லை. தொலைநோக்கு வளர்ச்சியிலானத் திட்டங்களை செயல்படுத்தாமல்எளிய மக்களைக் கவரும் திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் பேராதரவைப் பெற்று தன் விருப்பப்படியான அரசியலையும் ஆட்சியையும் நடத்தியவர் செல்வி. ஜெயலலிதா.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(2)
Name : serma Date & Time : 1/23/2017 4:03:43 PM
-----------------------------------------------------------------------------------------------------
i like administration of j jayalalitha . she iis one of the best pollitecian . we never compare with other . i like courrageous women amma
-----------------------------------------------------------------------------------------------------
Name : Jamuna Date & Time : 1/15/2017 7:54:32 AM
-----------------------------------------------------------------------------------------------------
இத்தன மக்கள் இரத்தம் அம்மா மரணத்தக்க ௺யயம் இல்லய .this is the first time, I m trying in Tamil. EOC
-----------------------------------------------------------------------------------------------------