Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
சாகித்ய அகாதெமி விருது 2016
 ................................................................
இந்தியா-ஜப்பான் தொலைநோக்கு - 2025
 ................................................................
தமிழக அரசின் புதிய செயல் திட்டங்கள்
 ................................................................
வார்தா புயல்
 ................................................................
ஜெ. ஜெயலலிதா -கோவி. லெனின்
 ................................................................
உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
 ................................................................
01-01-17

உலக நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிலிருந்து 140 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ. கியூபாவின் அதிகாரப்பூர்வ மொழி ஸ்பானிஷ்.

அமெரிக்கா ஒதுக்கி வைத்ததனால் பொருளாதாரம் சீர்குலைந்த நாடு கியூபா. அதன் அரசியல்கூட இதனால்பெருமளவில் சிதைந்தது. என்றாலும்கூட கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு இதெல்லாம் மனதில் தைக்காது. அவர்கள் நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரிக்கும் ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ.

இளம் வழக்கறிஞர்

கியூபாவில் தனது  ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது அமெரிக்கா. சில வருடங்கள் தான்.

கியூபாவாசிகள் ஸ்பெயினுக்காகக் காட்டிய அதே சிவப்புக் கொடியை அமெரிக்காவுக்கும் காட்டினார்கள். அமெரிக்காபணிந்தது. கியூபா தன்னைத்தானே ஆளட்டும் என்று விட்டுக் கொடுத்தது.

ஆனால் "கியூபாவிலுள்ள காண்டனமோ விரிகுடா என்ற இடத்தை அமெரிக்காவுக்கு நிரந்தரக்குத்தகைக்கு விடவேண்டும். அங்கே அமெரிக்கா தனது கடற்படையை நிறுத்தி வைக்கலாம்' என்பது போன்ற நிபந்தனைகளை விதித்தது. அன்றைய அவசரத்துக்கு கியூபா இதற்கு ஒப்புக்கொண்டது.

படிஸ்டா என்பவர் கியூபாவின் அதிபரானார்.

தான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் ஆட்சிநடத்த ஆரம்பித்தபோது மக்கள் மிகவும் துன்பமடைந்தார்கள்.

இதைக் கண்டு குமுறினார் ஓர் இளம் வழக்கறிஞர். குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை படிஸ்டா வரவேற்பதற்கு எதிர்ப்பு காட்டினார். படிஸ்டாவுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிலிருந்து விடுதலையானவுடன், மெக்ஸிகோவுக்குச் சென்று மீண்டும் புரட்சி திட்டங்களைத் தீட்டிய அந்த இளம் வழக்கறிஞர் ஃபிடல் காஸ்ட்ரோ!.

யாருக்கும் இல்லாத பெருமை

யாருக்கும் இல்லாத ஒரு பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர். 1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர்.

படித்தது மதபோதகப் பள்ளிகளான ஜெசூட் கல்வி அமைப்புகளில் படிப்பில் நிறைய நாட்டம் கொண்டவர். முக்கியமாக ஸ்பானிஷ் மொழியில் மிகுந்த தேர்ச்சி கொண்டவர். விவசாயம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் என்றால் அவருக்குமிகவும் விருப்பம். பாடங்கள் ஒருபுறமிருக்க பாடமல்லாத விஷயங்களிலும் மிகுந்த அக்கறை காட்டினார்.

அரசியலிலில் மாளாத ஆர்வம். தவிர தடகளப் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

ஆனால் இத்தனை இருந்தும் அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தார். பிறருடன் எளிதில் பழக மாட்டார். ஆனால் இந்தக் கூச்ச மெல்லாம் கல்லூரியில் சேரும் வரையில்தான்.

1945-இல் கியூபாவின் தலைநகரில் இருந்த ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை எடுத்துப் படித்தார்.

கியூபாவின் மிகக் கவர்ச்சிகரமான வானொலி வர்ணனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் பிடல். அப்போது அரசின் கொள்கைகளைப் பற்றி அழகாக விமர்சித்து பலரது மனங்களை மாற்றினார். முக்கியமாக கியூபாவின் ஊழல் அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தினார்.

ஜனநாயகம் என்பதை ஏற்க மறுத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. ஆயுதப் புரட்சிதான் சரியான வழி என்று தீர்மானித்தார். 1953-இல் இவரும் இவர் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவும் (இன்றைய கியூபாவின் அதிபர்) இணைந்து படிஸ்டா அரசின்மீது தாக்குதல் நடத்த, கிடைத்தது ஆட்சி அல்ல.

15 வருட சிறை தண்டனை. பின்னர் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மெக்ஸிகோவுக்கு தப்பிச் சென்றார் ஃபிடல் காஸ்ட்ரோ. அங்கு அர்ஜென்டினாவைச் சேர்ந்த புரட்சித் தலைவர்சேகுவாராவின் நட்பும், ஆதரவும் கிடைத்தது.

புரட்சி இயக்கம்

"ஜூலை 26 இயக்கம்' என்பது ஃபிடல் காஸ்ட்ரோவால் உருவாக்கப்பட்டது. இந்தப் புரட்சி இயக்கம் கியூபாவை ஆண்ட சர்வாதிகாரி படிஸ்டாவுக்கு எதிரானது. சொல்லப் போனால் அவரைப் பதவியிலிலிருந்து இறக்குவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமே.

சாண்டியாகோ நகரில் இருந்த அரசின் ராணுவப் பகுதியின்மீது இந்த அமைப்பு தன் முதல் தாக்குதலை நடத்தியது ஜூலை 26, 1953 அன்று. அதனால் இந்தப் பெயர் அதற்குக் கிடைத்து விட்டது. (இந்தத் தாக்குதல் வெற்றிகரமானதாக இல்லை என்பது வேறு விஷயம்). மெக்ஸிகோவிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. படிஸ்டாவின் ஆட்சியை நீக்குவதற்காக கட்டுப்பாடு நிறைந்த கொரில்லா படையாக இது மாறியது.

படகுகளின் மூலமாக 1956 டிசம்பர் 2 அன்று இந்த இயக்கத்தினர் கியூபாவை அடைந்தனர் இந்த இயக்கத்தைச் சேர்ந்த 82 பேர். பட்டப் பகலிலில் இவர்கள் வந்து இறங்கியதால், கியூபாவின் விமானப்படை இவர்களின் மீது தாக்குதல் நடத்தியது. தவிர இந்த அணியினர் இரண்டாகப் பிரிந்துவிட்டனர்.

உணவுகூட போதிய அளவில் கிடைக்கவில்லை. அரசு ராணுவத்தினரால் பலரும் கொல்லப்பட்டனர்.

சேகுவாரா கழுத்தில் சுடப்பட்டார். என்றாலும் காயம்பட்ட சக கொரில்லா வீரர்களுக்கு அவர் தொடர்ந்து மருத்துவ உதவிகளைச் செய்தார்.

(அவர் மருத்துவம் படித்தவர்).

புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த 82 பேரில் 12 பேர் மட்டுமே உயிர் தப்பினர். கொல்லப்பட்டவர்களில் ஃபிடல் காஸ்ட்ரோவும் ஒருவர் என்று தவறாக நம்பிய படிஸ்டா அவசரமாக இதை அறிவிக்கவும் செய்தார். பிறகுதான் உண்மை புரிந்தது. இதுதான் கியூபா புரட்சியின் தொடக்கக் கட்டம். போகப்போக இது வலுவடைந்தது.

சியெரா மாஸ்ட்ரா என்பது கியூபாவின் எல்லைப் பகுதியில் அடர்ந்த காடுகள் அமைந்த மலைத்தொடர். இதைத்தான் தங்களது முக்கிய களமாகத் தேர்ந்தெடுத்தனர் ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும். இந்த மலைப்பகுதியில் மறைந்தபடிதான் படிஸ்டாவின் ராணுவ வீரர்கள் மீது சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து கொரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள்.

நடுநடுவே சிறு சிறு ராணுவப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள ஆயுதத் தளவாடங்களை கடத்தினார்கள். அதே சமயம் தங்களால் தாக்கப்பட்ட ராணுவத்தினருக்கு மருத்துவ உதவிகளையும் இவர்கள் அவ்வப்போது செய்து வந்தனர்.

பத்திரிக்கைகளுக்கு உள்ளூரில் கடும் தணிக்கை என்பதால் ஃபிடல் காஸ்ட்ரோவின் கருத்துகள் மக்களை அடையவில்லை. எனவே ஃபிடல் காஸ்ட்ரோ வெளிநாட்டு ஊடகங்களைத் தொடர்பு கொண்டார். நியூயார்க் டைம்ஸ் இதழில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நேர்முகம் வெளியானதும் அவரது புகழ் மிகவும் பரவியது.

1958-இல் ஃபிடல் காஸ்ட்ரோவின் இயக்கம் மேலும் வலிலிமை பெற்றது. வேறுவழியின்றி ராணுவம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கியது. மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளி, சுரங்கம் என்று ஒவ்வொன்றாக புரட்சி இயக்கத்தின் கைவசம் ஆயின.

கியூபாவின் அதிபராக...

கியூபாவின் அதிபராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு வருகை தந்தார்.

ராணுவ வீரர் அணிவதைப் போன்ற ஓர் உடை, இடது கையில் ஒரு புத்தகம், சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் - இப்படி ஃபிடல் காஸ்ட்ரோ விமானத்திலிலிருந்து இறங்கியவுடனேயே பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ""உங்களை மாஸ்கோவின் ஏஜன்ட்டாக நாங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை சரமாரியாகக் கொல்கிறீர்களே இதை எப்படி ஏற்க முடியும்?"" என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர்.

தாங்கள் தண்டிப்பதும் கொல்வதும் கொலைகாரர் களைத்தான் என்றும் அவர்கள் தனக்கெதிராக மட்டுமல்ல, நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்ட வர்கள் என்றும் கூறினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

மார்க்ஸிய, லெனின் பின்பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார செயல்முறையைத் தான் தாங்களும் பின்பற்றப் போவதாக காஸ்ட்ரோ அறிவிக்க, அதிருப்தியாளர்கள் உருவாயினர்.

அமெரிக்காவும் இந்த இயக்கத்துக்கு எதிர்நிலையை எடுத்தது.

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்குமான விரோதம் அதிகமானது. காஸ்ட்ரோவின் அரசு, அமெரிக்கர்களுக்குச் சொந்தமான - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.

கோபத்தின் உச்சிக்கே போன அமெரிக்கா  கியூபாவிலிலிருந்து சர்க்கரை இறக்குமதி  செய்வதை நிறுத்திக் கொண்டது. உடனே, கியூபாவிலுள்ள  அத்தனை வியாபாரங்களையும் அரசே சுவீகரித்துக் கொள்ளும் என்று அறிவித்தார் காஸ்ட்ரோ. கியூபாவுடனான தனது தூதரகத் தொடர்புகளை விலக்கிக் கொண்டது அமெரிக்கா.

இதற்கிடையேதான் சோவியத் யூனியன் உடைந்தது. கியூபாவுக்கு அளித்து வந்த பல சலுகைகளை வேறுவழியின்றி நீக்கிக் கொண்டது ரஷ்யா. நாளடைவில் தன் ராணுவத்தையும் திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.

ஏழை நாடாகியது கியூபா

சர்க்கரை ஏற்றுமதி மூலம் கிடைத்த பெரும் நிதியை தனது நாட்டின் கல்வி, ராணுவம் மற்றும் உடல் ஆரோக்கியத் துறைகளுக்குச் செலவழித்தது கியூபா. இதன் காரணமாக உலகின் தலைசிறந்த பள்ளிகளும், மருத்துவமனைகளும் கியூபாவில் உருவாயின. அனைவருக்கும் மிகத் தரமான இலவச கல்வி, மிக தரமான மருத்துவம் வழங்கும் நாடு கியூபா. தென்னாப்ரிக்க ராணுவம் அங்குள்ள கருப்பு மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியபோது, கியூபாவின் ராணுவம் கருப்பு மக்களை ஆதரித்தது.

போதாக்குறைக்கு அமெரிக்கா சமயம் பார்த்து தனது பொருளாதாரத் தடைகளை கியூபாவின் மீது விதித்தது. காஸ்ட்ரோ பதவி இறங்கினால் தான் தடைகளை நீக்கிக் கொள்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது அமெரிக்கா. 1990-களில் கியூபா மிக ஏழ்மையான நாடாகியது.

அதன்பின் கியூபாவின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மேலும் வீழ்ச்சி கண்டது. ஆயிரக்கணக்கான வர்கள் கடல்வழியாக அமெரிக்காவுக்குப் பிழைப்பைத் தேடி ஓடத் தொடங்கினர். 1980-இல் ஒன்றேகால் லட்சம், 1994-இல் முப்பதாயிரம் என்றெல்லாம் வகை தொகையில்லாமல் அகதிகள் வந்து சேரவே அமெரிக்கா இவர்கள் வருகைக்குத் தடைபோட்டது. தங்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருந்த கியூபா மக்களை அப்படியே கடலிலிலேயே வளைத்துப் பிடித்து கியூபாவில் உள்ள தங்கள் கடற்தளத்துக்கு திருப்பியனுப்பத் தொடங்கியது அமெரிக்க ராணுவம்.

மக்களின் அதிருப்தியும் நம்பிக்கையும்

கியூபாவில் மேலும் பல மாறுதல்களைக் கொண்டு வந்தார் காஸ்ட்ரோ. கியூபாவின் வணிகத்தில் இணைந்திருந்த அமெரிக்காவின் பங்கை ஒட்டுமொத்தமாகக் நீக்கினார். அமெரிக்கா கொதித்தது. கியூபாவுடனான உறவை முழுவதுமாக துண்டித்துக் கொண்டது. அமெரிக்கர்களும் கியூபாவை வெறுக்கத் தொடங்கினர்.

"ஏழைகளின் சொர்க்க பூமியாக' விளங்கிய கியூபா பெரும் சிக்கலிலில் திணறத் தொடங்கியது.

அரசு அளிக்கும் ரேஷன் பொருட்களை வாங்க மூச்சு முட்டும் கூட்டத்தில் தினந்தோறும் நின்று வாங்கிக் கொண்டு, தள்ளாடியபடி திரும்பினர். பல குடும்பங்கள் தங்கள் ஷூக்கள், அலமாரிகள் போன்றவற்றை எல்லாம்கூட விற்று குச்சிக்கிழங்கு வாங்கித் தின்று உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளத் தொடங்கினர்.

'என்ன செய்ய? எல்லாவற்றையும் அவர் கண்ட்ரோல் செய்கிறார்"" என்று சொல்லி தாடியை உருவுவதுபோல சைகையிலேயே காஸ்ட்ரோவை மனத்தாங்கலுடன் குற்றம் சாட்டத் தொடங்கினர் மக்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இயந்திரங்களை இயக்க வைக்க எரிபொருள் இல்லை.

வாங்கவோ, சரியாக விநியோகிக்கவோ வழியில்லாமல் விளைந்த பயிர்கள் எல்லாம் வயல்களிலேயே வாடத் தொடங்கின.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காஸ்ட்ரோ ஒரு முக்கியக் காரணம் என்ற கடும் விமர்சனத்தை முன்வைத்தாலும் அந்தச் சரிவிலிலிருந்து கியூபாவைக் கடைத்தேற்றவும் அவர் ஒருவரால்தான் முடியும் என்று மக்கள் நம்பினார்கள்.

கொள்கையில் மாற்றம்

ஃபிடல் காஸ்ட்ரோ நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு தான் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத பல விஷயங்களில் வளைந்து கொடுக்கத் தொடங்கினார். ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் கியூபாவில் ஓட்டல்கள் கட்ட அனுமதி அளித்தார்.

கனடா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்குச் சில கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தார். ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுடன் வணிகத்தில் ஈடுபட்டார். முதல் முறையாக அங்கு வருமானவரி அறிமுகமானது.

சோவியத் யூனியனின் மானியங்கள் நின்று போனதில் கியூபாவில் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட, நிலைமை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அமெரிக்கா உதவ முன்வந்தது. அதாவது அது கியூபா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்கிக் கொள்ள வில்லை. ஆனால் உணவு, மருந்து போன்றவற்றை நன்கொடையாக அளிப்பதாகச் சொன்னது.

அதை ஏற்றுக் கொள்ள கியூபாவின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. 1993 வரை இந்த மறுப்பு தொடர்ந்தது.

ரஷ்யாவுக்குப் பிறகு கியூபாவுக்கு ஆதரவான நாடுகளாக சீனா, வெனிசுலா, பொலிலிவியா ஆகியவை ஓரளவு விளங்கின. முக்கியமாக வெனிசுலாவும், பொலிலிவியாவும் பெட்ரோல் விஷயத்தில் கியூபாவுக்குக் உதவி செய்தன. கியூபா வேகமாக வளர்ச்சியடைய தொடங்கியது.

ஒருகட்டத்தில் காஸ்ட்ரோ தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு ஒரு முக்கிய காரணம் அவரது உடல் நலம்.  ஒருவித செரிமான நோய் எனலாம்.

பெருங்குடலிலின் உட்பகுதி தொற்றுகளால் பாதிக்கப்பட்டுஅங்கே சிறு சிறு பைகள் போன்ற அமைப்புகள் உருவாகி விட்டிருந்தன. இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் காஸ்ட்ரோ. இந்த அறுவை சிகிச்சை 2006-இல் நடைபெற்றது. இதைச் செய்து கொள்வதற்கு முன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடமைகளை தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

காஸ்ட்ரோவை பாதுகாக்க நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரியான ஃபேபியன் எஸ்கலண்டே என்பவர் அமெரிக்க உளவுத்துறை, காஸ்ட்ரோவை கொலை செய்ய 638 முறை முயன்றது என்றார். கியூபா அரசைக் கவிழ்க்க திட்டமிட்ட இந்தக் கொலை முயற்சிகளுக்கு ஆபரேஷன் மங்கூஸ்' என்றும் பெயரிடப்பட்டிருந்ததாம்.

""இதுவே என் கடைசி உரை''

கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சியில் மக்கள் முன் தோன்றிய ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையில்""இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்.

நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டுநண்பர்களுக்கும் கியூபா மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.

நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன்.

காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்தப் புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்.

கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்தபொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடு களை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும்'' என்றவர் நவம்பர் 2016-இல் மறைந்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : kaniraj Date & Time : 1/27/2017 11:55:58 AM
-----------------------------------------------------------------------------------------------------
குட் மோர்னிங் சார்/மேடம் தி புக்ஸ் ரீடிங்கு நல்லா இருக்கு
-----------------------------------------------------------------------------------------------------