Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
......................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
......................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
......................................
சாந்திக் கிரியைகள்!
......................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
......................................
கடவுளைத் தேடி... 22
......................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
......................................
ஞாயிறு போற்றுவோம்!
......................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
......................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
......................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
......................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
......................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
......................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
......................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
......................................
01-01-17அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்
மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
8


னதுடன் தனியே எங்கோ பயணப்பட்டிருக்கும் தனது தம்பியின் ஏகாந்தத்தைக் கலைக்க மனதில்லாமல், குருராஜன் அவரையே விழி இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தார். வேங்கடநாதனை சிறுபிராயத்து பாலகனாக- கும்பகோண மடத்தின் ஸ்ரீமூலராம பூஜைக்கு ஒருமுறை அழைத்துச்சென்றதும், இவனைக்கண்ட ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர் ஸ்ரீசுசீந்திரரிடம் தனது தம்பியைக் காண்பித்து சிலாகித்து, நயன பாஷையில் பேசிக்கொண்டதும், பின் தன்னுடன் ஸ்ரீவிஜயீந்திரர் வேங்கடநாதனைப் பற்றி தெய்வீகமாக விவரித்ததும், அதனை தான் அப்படியே தனது தாயாரிடம் சொன்னதும், இப்போது குருராஜனின் நினைவில் வந்து சென்றது.

ஏதோ ஆம்... ஏதோ ஒன்று வேங்கடநாதனை பிரதானப்படுத்தி யுகபோதனை நடக்கப்போவதாக உள்ளுணர்வு குருராஜனுக்கு உணர்த்தியது. கண்களில் ஆனந்த பாஷ்யம். மனதுள் பூரண சந்தோஷம். எங்களைப் பெற்றெடுத்தவர்கள் மகா உன்னதமானவர்கள் என்பதனை அநேக சந்தர்ப்பங்களில் தெய்வமே எனக்கு உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றது. நன்றியுடன் வணங்குகின்றேன் ஸ்ரீமன் நாராயணா. ஹரி சர்வோத்தமரே. அதை உணரக்கூடிய ஞானத்தையும் சமிக்ஞை யினையும் எனக்கருளியதற்கு நன்றி ஐயனே நன்றி.

மனதுள் பொங்கும் இனம்புரியாத அந்த உணர்வில் நனைந்து கொண்டிருந்த குருராஜனை தோள்தொட்டு தன் நிலைக்குக் கொணர்ந்தார் நரசிம்மாச்சாரியார். "சப்தமிடாதே' என்பதாய் உதட்டில் விரலை நெடுக நிறுத்தி, தனியே குருராஜனை வெளியே அழைத்துச்சென்றார்.

""என்னப்பா... பெரும் சந்துஷ்டி உன் முகத்தில் துல்லியப்படுகிறதே?''

""ஆம் மாமா... எனது தம்பியை நன்கு செதுக்கி இருக்கின்றீர்கள். மிக்க நன்றி மாமா.''

""இல்லையப்பா. நான் வெறும் உளிதான். விரலைக்கொண்டு செலுத்தியது இறைவன்தானப்பா. காலமேடையில் நமக்கும் ஒரு கண்ணியமான, பொருத்தமான கதாபாத்திரத்தை இறைவனே தேர்ந்தெடுத்தமைக்கு நாம்தான் ஒருங்கே அவருக்கு நன்றி சொல்லவேண்டும் குருராஜா. உரியநாளில் வேங்கடநாதனால் பார்க்கப்படுபவனும் பேசப்படுபவனும் வாழ்த்தப்படுபவனும் பாக்கியம் பெற்றவர்கள்.அந்த உன்னத தருணங்களை நேரில் பார்க்க இறைவன் நமக்கு ஆயுளை நீட்டித்துத் தர வேண்டுவோம். இப்போதைக்கு இதை மட்டும் நாம் செய்வோம்'' என்றபடி கண்மூடி கரம் கூப்பினார்.

நாட்கள் சில நகர்ந்தன.

ஒரு நல்ல வளர்பிறையில், கும்ப கோண மடத்திற்கு வேங்கடநாதரை அவரின் ஆசானும் தமக்கையின் கணவனுமாகிய ஸ்ரீலஷ்மி நரசிம்மாச்சாரியார் அழைத்துச் சென்றார். தம்மிடம் கற்றது சொற்பம் என்ற தன்னடக்கம் கொண்ட ஆச்சாரியார், மதுரையிலிருந்து கிளம்பும் முன்பாகவே குருராஜனுக்கும் தகவல் அனுப்பிவிட்டார். இருவரும் ஓரிடத்தில் சேர்ந்தபிறகு ஒன்றாக மதுரை செல்வதாக முன்பே பேசிக் கொண்டிருந்தனர்.

கும்பகோணம் மாத்வ மடம்

அந்த அதிகாலை வேளையில் வெகு அழகாக இருந்தது. வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டிருந்தனர். கோலத்தின் நேர்த்தியினை, அதன் ஓரம்முழுக்க காவிபூசி இருந்ததனால் தனித்துக் காட்டியது.

அதுமட்டுமின்றி வெள்ளையடித்த பளிச்சென்ற சுவர் அதன் தரையுடன் சேரும் இடம் முழுக்க என ஓரிடமும் மிச்சமின்றி காவி மெழுகி இருந்ததனால், சாணம் மெழுகிய தரையும் இன்னும் அழகாகத் தெரிந்தது. மகா மண்டபத்து முக்கிய பகுதிகளில் அரிசி மாவில் கட்டை விரலளவு கணமாய், கவனமாய் கோடு வரைந்திருந்தனர்.

ஸ்ரீவிஜயீந்திரரின் மறைவுக் குப்பிறகு ஸ்ரீசுதீந்திரர், மூத்த யதிகளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரும் தனது குருநாதரின் பாதத் தொழுகையின் மானசீகமாக செய்தபிறகே அனைத்து ஸ்ரீமடத்து பூஜையும் மேற்கொள்வார்.

அவர் யதிகளாகப் பட்டமேற்றுக் கொள்ளும்போதே நடுத்தர வயது கடந்திருந்தார். லேசான தள்ளாமையும் முதுமையும் அவருக்கு ஆரம்பித்த காலமது. அன்று மூலராம பூஜையில் ஸ்ரீராமருக்கு அணிவித்த மாலை சரிந்து, இன்று நல்லது நடக்கப்போவதை அவருக்கு ஸ்ரீராமன் சூசகமாகத் தெரிவிக்க, ஸ்ரீசுதீந்திரர் மனதளவில் பரபரப்பானார்.

வேங்கடநாதர் தான் பால்யத்தில் தனது தகப்பனாருடனும் தமையனார் குருராஜனுடனும் மடம் வந்த நாட்கள் மனதுள் நிழலாட, அந்த பழையவைகளில் மனம் சஞ்சரிக்கலாயிற்று. இதோ, இங்குதான் அப்பா வீணை வாசித்திருக்கிறார். இங்குதான் விஜயீந்திர தீர்த்தர் தீர்த்தப் பிரசாதம் கொடுத்திருக்கிறார். இதோ பூஜா மண்டபம். ஸ்ரீமூலராம பூஜையினை தினசரி செய்வாரே யதிகள். இதோ இங்கு அந்த பெட்டி இருக்கும். அதற்குள் சிறுசிறு ஓலைப்பெட்டிகள் இருக்கும். அதனுள்ளிருந்து ஒவ்வொரு தெய்வ விக்ரங்களாக சுதீந்திரர் எடுத்தெடுத்து அபிஷேகத்திற்குக் கொடுக்க, அதை தனது இருகரங்களில் பவ்யமாக பாசமாய் வாங்கிக் கொள்வாரே ஸ்ரீவிஜயீந்திரர். உள்ளே இருக்கும் அநேக சாளக்கிரமங்களுக்கும் அபிஷேகம் நடக்குமே. ஆஹா! ஆரத்தி காண்பிப்பாரே. அது ஒரு தினுசாக, லாவகமாக, தனித்துவமாக இருக்குமே. ஆஹா... நாமும் கண்களில் ஒற்றி அவரின் பாதம் பணிந்திருக்கிறோமே...  அந்த ஞாபகங்களில், அந்த நாட்களில் அவர் தன்னுள் ஆழ்ந்து போய்க்கொண்டிருந்தார். தனது தகப்பனார் பிரியமாய் வாசித்த ராகங்கள் அவரின் ஞாபக அடுக்குகளில் கண் விழிக்கலாயிற்று. வீணை வாசிப்பு அவரது செவிக்குள்ளாக எழும்பலாயிற்று.

உடலெங்கும் ரீங்காரம் பதியலாயிற்று. உடன் கண்களில் நீர் கோர்க்கலாயிற்று. மூடிய விழிகளிலிருந்து வெதுவெதுப்பான கண்ணீர் கன்னங்களில் வழியலாயிற்று. நிலைமையுணர்ந்து மெல்ல தோள்தொட்டு அழுத்தலானார் குருராஜன். தனது மாணவனின் மானசீக உணர்வை மனதுள் உணர்ந்து மௌனமாக கவனித்தவராயிருந்தார் நரசிம்மாச்சாரியார்.

ஸ்ரீயதிகள் வருவதற்கான அறிகுறியாய், பெரிய அகலமான செம்புப் பாத்திரத்தில் அட்சதையினை கைகளிலேந்தி வேகமாக ஒருவர் வந்து நிற்க, உள்ளறையில் இருந்து சுதீந்திரர் வெளிவந்து ஆசனத்தில் அமர்ந்து, கையிலிருந்த ஓலை நறுக்குகளையும் எழுத்தாணியையும் தன்னருகே வைத்து மெல்ல தலை நிமிர்ந்தார். முதலில் குருராஜன் வணங்கி எழுந்தார். நரசிம்மாச்சாரியாரும் பாதம் பணிந்தார். இருவருக்கும் அட்சதை அணிவித்து புன்னகைத்தார்.

""நலமா ஆச்சார்யாரே?'' என்றார் மென்முறுவலுடன். ""தங்களது வித்யா பணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். தங்களது மாணாக்கர்கள் பாக்யசாலிகள். உங்கள் பணியும் வித்யாபலமும் பெருக மூலராமர் ஆசிர்வதித்து துணையிருப்பாராக'' என்றார்.

""பிறகு...'' என்று அவர் முடிக்கும் முன்பாக-

""தங்களின் தரிசனம் பெற்றபிறகு, தங்களிடம் இன்னும் அனேகம் திறம்படக் கற்க எனது மாணவனை சேர்ப்பிக்க தங்களது உத்தரவும் ஆசியும் வேண்டும் ஸ்வாமி.''

""ஆஹா... நிச்சயமாக! எங்கே அந்த மாணவன்?'' என்றார் யதிகள்.

""இதோ... அழைக்கிறேன் ஸ்வாமி''

என்றவர் மெல்லத் திரும்பி, ""வேங்கட நாதா'' என்று அழைத்தார். அறைக்கு வெளியில் காத்திருந்த வேங்கடநாதர் சங்கோஜமாக மெல்லத் தயங்கி உள்நுழைந்து நிமிர...

வேங்கடநாதரை நேரில் கண்ட ஸ்ரீசுதீந்திரரின் மனதுக்குள் சந்தோஷ அதிர்வுகள். ""இது... இது...'' என்றவர் பேச முயல, ""திம்மண்ணரின் இளைய மகன் வேங்கடநாதன்'' என்று முடித்து வைத்தார் நரசிம்மாச்சாரியார்.

அந்த பெரிய அறையில், உயரமாய் வளர்ந்திருந்த- லேசான மாநிறத்தில், வெள்ளையுடுத்தி, பூணூல் தரித்து, மெல்லிய சுண்டு விரல் அகலம் கொண்ட நூல் வஸ்திரத்தால் கட்டப்பட்ட ஓலை நறுக்குகளை வலது கையில் வைத்துக் கொண்டு, மெலிந்திருந்த வேங்கடநாதர் கோதண்டபாணியாய் மின்னலிட்டார். சுதீந்திரருக்கும் அவரது மனதின் உள்ளே, காலை பூஜையின் மாலை மறுபடி சரிந்தது.

"ஸ்ரீராமா... ஸ்ரீராமா...' என்று உரக்க, சந்தோஷமாகக் கூப்பிட்டார். கண்களில் பரவசம் வந்தது. அதற்குள்ளாக வேங்கட நாதர் நெடுஞ்சாண்கிடையாக அவரின் பாதம் பணிந்தார்.

யதிகளுக்கு பேச நா எழவில்லை. பெருத்த உணர்ச்சி வசத்தில் இருந்தார். கண்களில் ஆனந்த லயிப்பு. இரண்டு கைகள் நிறைய அட்சதையிட்டு ஆசிர்வதித்தார். உயர்த்திய இரு கரங்கள் ஆசிர்வதித்துக் கொண்டேயிருந்தது. எழுந்து, உயரமாய் நின்றிருந்த வேங்கடநாதரை சிரம் தொட்டுப் பரவசமானார். ஆஹா... எனது குருவின் குரு. இப்போது இக்கலியுகத்தில் எனக்கு சீடன். இது எனக்கு காலம் கொடுத்த கௌரவம். ஸ்ரீஹரியின் அற்புத விளையாட்டு. ம்... இன்றிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது... நினைத்த அவரிடம் சந்தோஷமுடன் எழுந்தது பெருமூச்சு.

""ஸ்வாமி... வேங்கடநாதனை மடத்திற்கு உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்.

தாங்கள்தான் அவனை முன்னின்று பக்குவப்படுத்த வேண்டும்'' என்றார் குருராஜன்.

""தெரிந்தோ தெரியாமலோ நல்லதை உச்சரித்து விட்டாயப்பா... காலத்தின் உதடுகள்தான் உன்மூலம் பேசியது குருராஜா. சமர்ப்பணம் என்பது ஆண்டவனுக்கு, தெய்வீகத்துக்கு ஒப்பான உயரிய பதம். இது மாத்துவ சமுதாயத்து அர்ப்பணம். ஸ்ரீமத்வர் இந்நிகழ்வை ஆசிர்வதிக்கட்டும்.''

முகத்தில் வித்யாகளை நிறைந்தும், அமைதி ததும்பும் பொறுமையான சலனம் வெளிப்படுத்தும் சரீரமும் ஒருவரை உயரச் செய்யும் பண்புகள். இது அனைத்தும் இதோ என் எதிரே பணிவு காட்டும் எனது சிஷ்யனாகப் போகும் இவனிடம் அதீதமாகவே இருக்கிறது. மடத்திற்கு மிகச்சிறந்த மாணவன் கிடைத்துள்ளான். இவனே சிறந்த சிஷ்யனாக இருப்பான். எனது குரு ஸ்ரீவிஜயீந்திரர் சொன்னது நடந்திருக்கின்றது. என்னுள் இருந்து என்றென்றும் கண்ணாய்க் காப்பாராக.

தான் சிஷ்யனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது இருந்த மனநிலையும், இப்போது தனக்கு வேங்கடநாதன் சிஷ்யனான இந்த தருணத்து மனநிலையும் ஒத்திருப்பதாய் பூரண சந்தோஷ மடைந்தார்.

அங்கு நால்வரும் தத்தமது யோசனைகளின் அடிப்படையில் நிறைவெய்திக் கொண்டிருந்ததை காலம் அமைதியாய் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :