Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
 ................................................................
சாந்திக் கிரியைகள்!
 ................................................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
 ................................................................
கடவுளைத் தேடி... 22
 ................................................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
 ................................................................
ஞாயிறு போற்றுவோம்!
 ................................................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
 ................................................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
 ................................................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
 ................................................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
 ................................................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
 ................................................................
01-01-17வைகுண்ட ஏகாதசி- 8-1-2017

ருசமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த பிரம்மாவை அழிக்க முயன்றார்கள் இரண்டு அசுரர்கள். பிரம்மதேவனைக் காக்கும் பொருட்டு திருமால் அசுரர்களை வதைக்க வந்தபோது, அவ்வசுரர்களுக்கு நல்லறிவு வந்தது.

அவர்கள் திருமாலிடம், ""எங்களை வதைப்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. உங்களால் அழிக்கப்பட்டால் எங்களுக்கு சித்தியடையும் வாய்ப்பு கிடைக்கும். எனவே நாங்கள் மரணமடைந்தவுடன் வைகுண்டத்தில் வாசம்செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும்'' என்று வேண்டினர்.

திருமாலும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று, விண்ணகரத்தின் வடக்கு வாசலைத் திறந்து, அதன்வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அவர்களை அனுப்பினார்.

திருமாலிடம் அரக்கர்கள் வேண்டியபடி, அந்த நாளில் பூவுலகிலுள்ள திருக்கோவில் களில் சுவர்க்க வாசல் வழியாக தான் எழுந்தருளுவதாகவும்; அன்று அந்த தரிசனத்தைக் காண்பவர்களுக்கும் சுவர்க்கவாசல் வழியாக வருபவர்களுக் கும் மோட்சம் அளிப்பதாகவும் திருமால் அனுக்கிரகித்தார்.

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசி திருநாளாக அனைத்து பெருமாள்  திருக்கோவில்களிலும் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்னர் பத்து நாட்களும், பின்னர் பத்து நாட்களும் பகல் பத்து, இராப்பத்து உற்சவங்கள் திருமங்கையாழ்வார், நாதமுனி கள், பகவத் ராமானுஜர் வழிகாட்டியபடி தற்போது நடந்து வருகிறது.

வைகுண்ட ஏகாதசியின் மகிமையைப்பற்றி ஆங்கீரஸ முனிவரிடம் கேட்டறிந்தார் பீஷ்ம பிதாமகர். அதை தரும புத்திரர் முதலானவர்க்கு உபதேசித்தார். அவையாவன:

✷  சிறந்த குலத்தில் பிறந்து சீரும் சிறப்புடனும் வாழ சித்திரை,

வைகாசி மாதங்களில் ஏகாதசி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

✷  ஒருவேளை உணவருந்தி ஆனி மாத ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்.

✷  ஆடி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் நன்மக்கட் பேற்றினை அடைவர்.

✷  அழகுடனும், செல்வ வளத்துடனும் வாழ்பவர்கள் ஆவணி மாத ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பவராய் இருந்திருப்பர்.✷  புரட்டாசி ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு செல்வச் செழிப்பு, இகபர சுகங்கள் கிடைக்கும்.

✷  சிறந்த புத்திமானாய் நற்பிறவி அமைய ஐப்பசி மாத ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

✷  கார்த்திகை மாத ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் தைரியமும் வீரியமும் உள்ளவராய் மறுபிறவி எடுப்பர்.

✷  மார்கழி மாத ஏகாதசி நோன்பு நோற்பவர்கள் மோட்ச சாம்ராஜ்யத்தையே அடைவர்.

✷  புகழ்பெற்றவராய் விளங்க தை மாத ஏகாதசி விரதம் கைகொடுக்கும்.

✷  மாசி, பங்குனி மாத ஏகாதசி விரதம்

அனுஷ்டிப்பவர்கள் கீர்த்தியுடன் விளங்குவர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் மோட்ச சாம்ராஜ்யத்தையே தருவதால், இது மோட்ச ஏகாதசி என்றே புகழப்பட்டு விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசியன்றுதான், பாற்கடலைக் கடைய மத்தாகப் பயன்பட்ட மந்தர மலையைத் தாங்க திருமால் ஆமை வடிவம் எடுத்தார் என்பது ஆன்றோர் வாக்கு.

அதேபோல திருப்பாற்கடலிலிருந்து ஆலகால விஷம் தோன்றியபோது பரமசிவன் அவ்விஷத்தை உண்டு நீலகண்டனானார் என்றும் கூறப் படுவதால்,  இந்துக்களுக்கு இது முக்கிய விரதமாக அமைந்துள்ளது.

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கண்ண பரமாத்மா அர்ஜுனுக்கு கீதோபதேசம் செய்தார் என்பர்.

வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு மிகவும் புகழ்பெற்ற தலம் ஸ்ரீரங்கமாகும். அதுபோலவே பண்டரிபுரம், குருவாயூர் தலங்களும் ஏகாதசி விரத மகிமை கொண்டவை.

ஆண்டாள் நாச்சியார் இம்மாதத்தில் நோன்பு நோற்று மாலவனையே மணக்கும் பாக்கியம் பெற்றார். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டம் செல்வார் யாரும் இல்லையென்றதால்தான் அது மூடப்பட்டிருந்ததாம். ஆழ்வார் வைகுண்டப் பிராப்தியடைந்த நாளே அது அவருக்காகத் திறக்கப்பட்டதாம். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே திருமால் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.

அந்த நாளில் பரந்தாமனின் திவ்ய தரிசனம் கண்டு நற்கதி அடைவோம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :