Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
......................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
......................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
......................................
சாந்திக் கிரியைகள்!
......................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
......................................
கடவுளைத் தேடி... 22
......................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
......................................
ஞாயிறு போற்றுவோம்!
......................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
......................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
......................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
......................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
......................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
......................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
......................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
......................................
01-01-17ட்சத்திர வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிந்துவரும் நிலையில், அஸ்வினி முதல் சித்திரை வரையிலான நட்சத்திர சாந்தி முறைகளைக் கண்டோம். இனி மற்ற நட்சத்திர சாந்திகளைக் காண்போம்...

சுவாதி

இந்த நட்சத்திர தேவதை வாயு தேவர். இவரை மான்மீது அமர்ந்தவரும், புகை போன்ற நிறத்தவரும், இரு கைகளில் கத்தி, கேடயம் ஏந்தியவருமாக எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவரை காரகில் சந்தனத்துடன், மரிக்கொழுந்தால் பூஜித்து, வெள்ளை அகில் மரத்தூளால் தூபமளித்து, தயிரன்னத்தை நிவேதித்து, "ஸனப்பிதா' எனும் மந்திரத்தை ஜெபித்து, நெய் கலந்த, யவை தானியம் மற்றும் பாயசன்னத்தால் ஹோமத்தில் ஆஹுதியும், சந்தமன மலருடன் கூடிய பாயசன்னத்தால் பலியும் அளித்து, சுவாதி நட்சத்திர சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.

விசாகம்

இந்த நட்சத்திர தேவதைகளான இந்திரன், அக்னி இருவரும் மங்களத்தை அளிப்பவர்களாய், அபய, வரத முத்திரைகளுடன் கூடிய இருகரங்களை உடையவர் களாய் தியானித்துப் பூஜிக்கத் தக்கவர்கள். இவ்விருவருக்கும் சந்தனத்துடன் கூடிய தாமரைப்பூ, பந்தூக மலர்களால் பூஜையும், தேவதாரு மரத்தூளால் தூபமும், நெய் கலந்த பாயசத்தால் நிவேதனத்தையும் செய்து, "சம்ந இந்த்ராக்னி' எனும் மந்திரத்தால் ஜெபமும், நெய் பாலன்ன ஆஹுதியும், கந்தபுஷ்பத்துடன் பால்சாத பலியும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.அனுஷம்

அனூராதா என்னும் அனுஷ நட்சத்திர தேவதையான மித்ரதேவரை, செந்நிறத் தவராய், இரு கைகளில் திரிசூலம், அங்குசம் ஏந்தியவராய், பத்மாசனத்தில் அமர்ந்துள்ளவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை வெண்தாமரை மலரால் அர்ச்சித்து, சந்தனத்தால் தூபமிட்டு, நெய்பாயசத்தை நிவேதித்து, "மித்ரஸ்ய சர்ஷணீத்ருத' எனும் மந்திரத்தால் ஜெபம், ஹோமம் செய்து, சூர்ணகந்தத்தால் சாந்தி செய்யப்பட வேண்டும்.

கேட்டை

ஜ்யேஷ்டா எனப்படும் கேட்டை நட்சத்திர தேவதையான இந்திரனை, ஐராவதமெனும் யானைமீது அமர்ந்தவரும், வஜ்ரம், பாசம், வரதம், அபயம் கொண்ட நாற்கரத்தவருமாக எண்ணிப் பூஜித்திடவும். இவரை சந்தனத் துடன் தாமரை மற்றும் படோலீ (பாதிரி) பூக்களால் பூஜித்து, பச்சைக் கற்பூரத்துடன் அகில் மரத்தூளால் தூபமிட்டு, சித்ரான்னம் நிவேதித்து "இந்த்ரம் வோ' எனும் மந்திரத்தால் ஜெபமும் ஹோமமும் செய்து, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வேர் இவற்றின் ஆஹுதியையும், சந்தன மலர்களுடன் கூடிய தயிரன்னத்தால் பலியையும் தந்து சாந்தி செய்யவேண்டும்.

மூலம்


மூல நட்சத்திர தேவதையான நிரு ருதிதேவரை, உக்ரமான வாயுடைய ஒரு முகத்த வரும், கருநீல நிறத்தவரும், ராட்சச குலத்தின் தலைவரும், மேல்நோக்கிய பரட்டை முடியை உடையவரும், சிவந்து உக்ரமான வட்ட விழிகளைக் கொண்டவருமாக எண்ணிப் பூஜிக்கவும். இவரை காரகில் (மற்றும் ஆட்டுக்கொம்புப் பொடி) தூபமும், காரகில் சந்தனத்துடன் கூடிய நீலநிற எருக்கம்பூ, சாமந்திப்பூ, சிவப்புநிற அசோகப்பூ, கருநெய்தல் பூ இவற்றால் பூஜித்து, உளுந்து சாதம், (மீன், மாமிசம், கள் முதலியவற்றை) நிவேதித்து "மோஷுண: பராபரா' என்ற மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, நிருருதிக்கு பலி தந்து சாந்தி செய்ய வேண்டும்.

பூராடம்

பூர்வாஷாடா எனப்படும் பூராட நட்சத்திர தேவதையாகிய ஆபதேவர்களை (ஆப: நீர்) கடலின்மீதில் அலைவடிவாய் இருந்து அனைத்து ஜீவர்களைக் காப்பவர்களாயும், தினமும் மங்களம் அளிப்போராகவும் எண்ணிப் பூஜிக்கவும். இவர்களை கல்ஹாரமெனும் கருநெய்தல்பூவால் அர்ச்சித்து, மனோசிலை தாதுப்பொடியால் தூபமிட்டு, தயிர்கலந்த அரிசிக் கஞ்சியை நிவேதித்து, "ஆபோஹிஷ்டா' எனும் மந்திரத்தால் ஜெபஹோமம் செய்து, செந்நெல் தானியத் தால் ஆஹுதியும், சீரகச்சாதம், பாயசன்னம் பலி தந்தும் சாந்தி செய்யவேண்டும்.

உத்திராடம்

உத்தராஷாடா எனப்படும் உத்திர நட்சத்திரத்தின் தேவதை விச்வே தேவர்கள். அழகு, வளம், புகழ், அறிவு அளித்திடும் விச்வே தேவர்களை எல்லா பாவங்களையும் போக்குவதற்காக எண்ணி வணங்குவோம். இவர்களை ஐந்து மலர்களாலும், அரக்குடன் கூடிய அகருதூபத்தாலும், ஐவகை பட்சண நிவேதனத்துடன் பூஜித்து, "விச்வே தேவாஸ ஆகதே' எனும் மந்திர ஜெபமும், நெய்யுடன் கூடிய சல்ல துண்டுகளால் திரவியாஹுதியும், பாயசன்னத்தால் பலிதானமும் தந்து சாந்தி செய்யவேண்டும்.

அபிஜித்

அபிஜித் நட்சத்திரத்தின் தேவதை, திரு மாலின் நாபிக்கமலத்திலிருந்து வெளிப்பட்டு அமர்ந்து வேதமோதும் பிரம்மதேவர். இவரை நான்கு முகமும் நான்கு கரமும் கொண்டு பத்மாசனத்தில் இருப்பவராக- தீர்த்த கண்டிகை, அட்சமாலை, வேதப் புத்தகம், தாமரைப்பூ இவற்றைத் தனது நாற்கரங்களில் ஏந்தியவராக தியானித்து முறைப்படி பூஜித்திட வேண்டும். இந்த நட்சத்திரத்தின் சாந்தியை தனியாகச் செய்யாமல், அடுத்ததான திருமாலின் திருவோண நட்சத் திரத்துடன் சேர்த்துப்பூஜித்து, ஹோமதானாதிகளுடன் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

திருவோணம்

திருவோணம் எனப்படுகிற ச்ரோணா நட்சத்திரத்தின் தேவதையான விஷ்ணுவானவர், சாந்தமான தோற்றமும், தாமரைப்பூ இதழ் போன்ற அழகிய இருபெரும் கண்களும், சங்கு, சக்ரம், அபயம், வரதம் ஏந்திய நான்கு கைகளும், நீலநிறத் திருமேனியும் கொண்டு, கருட வாகனத்தில் இருப்பவராக தியானித் துப் பூஜிக்கத் தக்கவர். இவரை சந்தனத்துடன் கூடிய தாமரை மற்றும் ஜாதீபுஷ்பத்தாலும், தசாங்க திரவியப்பொடி தூபத்தாலும், நெய், பால், சர்க்கரைக்கஞ்சி அல்லது நெய் பாயசன்ன நிவேதனத்துடன் "அதோ தேவா' எனும் மந்திரத்தினால் ஜெபமும், சிவப்பு அரிசியால் திரவியாஹுதியும், முடிவில் சந்தமன மலருடன் விஷ்ணுவின் பொருட்டு அன்னபலி தானமும் செய்து சாந்தி செய்வது முறையாம்.

அவிட்டம்

ச்ரவிஷ்டா எனும் அவிட்ட நட்சத்திர தேவதைகளான அஷ்டவஸுக்கள் எனும் எண்மரையும், மகுடம் தரித்து தேரின்மீது இருப்பவர்களாகவும், சங்கு, சக்கர உருவில் கைரேகை உள்ளவர்களாயும் எண்ணிப் பூஜித்திட வேண்டும். இவர்கள் எண்மரையும் நூறு இதழ் உள்ள தாமரைப்பூவால் பூஜையும், குங்குலியத்தால் தூபமும், பாயசம், நெய்போளி பலகாரம் இவற்றால் நிவேதனமும், அரசு, வில்வம், அத்தி ஆகிய சமித்துக் களால் ஆஹுதியும், "த்ராயந்தாமிஹ தேவா' எனும் மந்திரஜெப ஹோமத்துடன் நெய் கலந்த பயிறு சாத பலிதானமும் தந்து சாந்தி செய்ய வேண்டும்.

சதயம்

சதபிஷக் எனப்படும் சதய நட்சத்திர தேவதையான வருணதேவரை, தன் இரு கைகளில் அமுதகலசம், பாசம் இவற்றை ஏந்தியவராய், வெண்ணிறத்தவராய், தேவர்களால் வணங்கப்படுவராக எண்ணிப் பூஜித்தல் முறை. இவரை தாமரை முதலிய நீர்ப்பூவகையால் அர்ச்சித்து, தசாங்கத்தால் தூபமும், நெய்பாயசம் மற்றும் அரிசிக் கஞ்சி நிவேதனமும், "இமம் மே வருண' எனும் மந்திர ஜெபத்துடன், நீரில் தோன்றிக் கிடைக்கும் பொருள்களால் ஆஹுதியும் செய்து, பாயசன்னத்தால் பலியும் தந்து சாந்தியை முறைப்படி செய்யவேண்டும்.

பூரட்டாதி

பூர்வப்ரோஷ்டபதா எனப்படும் பூரட்டாதி நட்சத்திர தேவதை அஜர். (மஹாப் பிரளய காலத்து பைரவர்). இவரை ஒரு கால் மட்டும் உடையவராகவும், தோன்றாத் தன்மையுடன் நித்யமாய் விளங்குபவரும், அனைத்து தேவர்களாலும் வணங்கப் படுபவரும், சம்ஹார காலத்திய ருத்ரமூர்த்தி யுமாக சிந்தித்துப் பூஜித்திட வேண்டும். இவரை எருக்கம்பூ, பெரம்புப் பூவால் அர்ச்சித்து, மூலிகைப் பொருளால் தூபமிட்டு, நெய், தேன் கலந்த தயிரன்னம் நிவேதித்து, நெய் தோய்த்த பூசணித் துண்டால் ஆஹுதி செய்து, நெய் சாதத்தால் பலிதானம் செய்து சாந்தி செய்யவேண்டும்.

உத்திரட்டாதி

உத்தராபாத்ரா எனப்படும் உத்திரட் டாதி நட்சத்திர தேவதையான அஹிர்புத்னியர் என்பவரை மகுடமணிந்தவராய், சங்கு, சக்கரம் ஏந்தியவராக தியானித்துப் பூஜிக்கவும். இவரை கரஞ்சி (விஷ்ணுகிராந்தி) பத்ரத்தால் அர்ச்சித்து, நெய் தூபமிட்டு, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, நெய்யுடன் உளுந்து, பயறு தானியங்களால் ஆஹுதி செய்து, நெய்வெல்ல சாதம் பலிதானம் செய்து சாந்தி செய்திடவேண்டும்.

ரேவதி

ரேவதி நட்சத்திரத்தின் தேவதை பூஷா என்பவர். இவர் ஒரு முகம், இரு கால்களுடன், இரு கைகளில் வரதமும், அபயமும் கொண்டு ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவராக தியானித்துப் பூஜிக்கத்தக்கவர். இவரை மந்தார மலரால் அர்ச்சித்து, செஞ்சந்தனத்துடன்  கூடிய குங்குலிய தூபமிட்டு, எள், அரிசி, வெல்லப்பொடியை நிவேதனம் செய்து, நெய்யுடன் கூடிய வாழைப்பழம் அல்லது மாம்பழம் இவற்றால் ஆஹுதியைச் செய்து, பாயசன்னத்தால் பலிதந்து சாந்தி செய்திட வேண்டும்.

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :