Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
 ................................................................
சாந்திக் கிரியைகள்!
 ................................................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
 ................................................................
கடவுளைத் தேடி... 22
 ................................................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
 ................................................................
ஞாயிறு போற்றுவோம்!
 ................................................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
 ................................................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
 ................................................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
 ................................................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
 ................................................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
 ................................................................
01-01-17
"ஜருகண்டி ஜருகண்டி' என்ற இடத்திற்குப் போகிறோம். அது வேங்கடேசப் பெருமாள் கோவிலாகவோ, மூகாம்பிகையாகவோ, தியாகராயநகர் கோவிலாகவோ இருக்கலாம். முப்பத்தைந்து விநாடிக்குமேல் உங்களால் அங்கு நிற்கமுடியாமல் போகலாம். ஆனால் அது போதும். அந்தப் பார்வையில், அங்கு அவர் இருப்பில், உங்களை அவர் காணும்படி நீங்கள் நின்றுவிட்டு வந்தால் போதும். கண் குளிர அந்த முப்பத்தைந்து விநாடியில் அவரைப் பார்த்தது உங்களுக்குள் நிறைந்திருக்கிறது. அந்த ஒரு இடத்தின் சூழலில், உள் மண்டபத்தில் அல்லது வெளி மண்டபத்தில்
அல்லது வெளிக்கும் வெளியான மண்டபத்தில் அல்லது அந்த கோவிலை விட்டு மதில்சுவர் தாண்டி வேறு ஏதேனும் ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்தால், உள்ளே முப்பத்தைந்து விநாடிகள் பார்த்தது மனதில் தோன்றும்.

பலர் இங்குதான் தவறு செய்கிறார்கள். அந்த முப்பத்தைந்து விநாடி பார்த்துவிட்டு அடுத்த பஸ் எங்க, அடுத்த சோறு எங்க. அடுத்தபடி எங்க போகலாம் ஃபோட்டோ எடுத்துக்க என்று ஆரம்பிக்கிறார்கள். உள்ளே வந்தது காணாமல் போய்விட்டது. எதற்கு வந்தோமோ அது தொலைந்துவிட்டது. எதை உள்ளேபோய் வாரிக்கொண்டு வந்தாயோ அது அங்கேயே குப்பையில் போட்டுவிட்டு வந்துவிட்டாய்.இது வழிபாடு இல்லை. இது குளறுபடி. அல்லது கோவிலுக்குள் நுழையும்போதே லட்டு ஞாபகமும், வடை ஞாபகமும் இருப்பின், அந்த கோவிலில் அந்த இடத்திற்கு மட்டும் போய்வந்துவிடலாம். லட்டு லஞ்சம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ஏழு மணி நேரம் காத்திருந்து முப்பத்தைந்து விநாடிகள் எதற்குப் பார்க்க வேண்டும். அங்கு காத்திருக்கின்ற ஏழு மணி நேரம் எத்தனை அற்புதமான நேரம். உன்னைப் பார்க்கப் போகிறேன். உன்னைப் பார்க்கப் போகிறேன். உன்னை தரிசிக்கப் போகிறேன் என்ற ஆவலோடு, ஒரு தபஸோடு அங்கு இருக்க வேண்டியவர்கள், ஊர்க் கதையெல்லாம் பேசிக்கொண்டு, "இனிமே கலைஞர் வருவாருங்கறே' என்று பேச்சு ஆரம்பித்து பெரும் சிரிப்பும் ஆட்டமு மாய் எதற்குப் போக வேண்டும்.

இவர்கள் வழிபாடு அற்றவர்கள். வழிபாடு என்பது ஒரு வழியில் நிற்றல். இவர்கள் எந்த வழியிலும் நிற்காத தான்தோன்றியாய் வாழ்பவர்கள்.

உங்களுக்கும் கலைஞருக் கும் என்ன சம்பந்தம். "ஸ்ரீநிவாஸா கோவிந்தா ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா பக்தவச்சலா கோவிந்தா பாகவதப் பிரியா கோவிந்தா' என்று பாடலாம். அந்த பாட்டின்போதும் மனம் சிதறலாகத்தான் இருக்கும். அந்தப் பாட்டை தொடர்ந்து பாடப்பாட எங்கோ மனம் அமைதி பெறும். அந்த அமைதியில் உள்ளே என்ன நடக்கிறது என்பதும், அந்த திருவுருவத்தை இடையறாது உள்ளே தேக்கியும், அமைதியாக, உடன்வந்த நண்பர்களோடும், மனைவியோடும், குழந்தையோடும் பேசாமல் இருந்தால் அது பெரிய தபஸ்.

""ஏன் அப்பா உர்ருன்னு வர்றாரு.'' குழந்தை அம்மா வைக் கேள்வி கேட்கும்.

""அவரு ஜபம் பண்றாருடா. "ஓம் ஸ்ரீ வேங்கடேசாயா நம' அப்படின்னு சொல்லிட்டு வர்றாரு.''

""நானும் சொல்லட்டுமா.''

""சொல்லேன்.''

இதுதான் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழங்குகின்ற சொத்து. வேறெதுவும் இல்லை. உங்களைவிட மன அலையல் குறைவான அந்த குழந்தை அதைப் பிடித்துக்கொண்டால் இன்னும் வேகமாக முன்னேறுவான்.

உள்ளே அமைதி பழக்கமாகிவிடும். உள்ளே கடவுள் பெயர் சொல்லிப் பழக்கமான அமைதி, கல்லூரிப் படிப்பில், பள்ளிக்கூடத் தேர்வில் அவனுக்கு மிகப்பெரிய உதவி செய்யும். அமைதியாக கணக்குப் பாடம் கேட்டால் மிகக் கடினமான கணக்கு சட்டென்று பிடிபட்டுவிடும். அவனுக்கு நீங்கள் அமைதியை அந்த வாக்கியத்தின்மூலம் சொல்லிக் கொடுக்கிறீர்கள். நீங்களும் சொல்லி, உங்கள் குழந்தைகளையும் சொல்ல வைத்து, உங்கள் மனைவியும் சொல்ல, உங்கள் குடும்பம் தெளிவாக வளரும். முப்பத்தைந்து விநாடி இழுத்துப் போட்டுவிட்டார்கள். பிள்ளை கேட்கும்.

""என்னப்பா இது?''

""அப்படித்தான்யா. இது போதும். இது கிடைச்சதே பெரிய அதிர்ஷ்டம்.''

""வருஷத்துக்கு ஒரு தடவைதானே வர்றோம்...''

""இதை பாக்கறோம் இல்ல. இது போதும். உட்கார்ந்து சொல்லு. ஸ்ரீநிவாஸா கோவிந்தா. ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா.''

கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து பிள்ளைக்கும் சொல்லிக்கொடுங்கள். உள்ளிருக்கின்ற சக்தியினுடைய அதிர்வு வெகு நிச்சயமாய் அந்த குழந்தையின் உள்ளே புகுந்து பரவும். இதில் நெல் முனையளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

""எனக்கு ஒண்ணும் வரலையே.'' அமைதியில்லாதவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.

""எனக்கு வந்துவிட்டதே, நான் கண்டுகொண்டேன்'' என்று சொல்பவர்களும் அமைதியில்லாதவர்களே.

அமைதியில் உள்ளே புகுந்த உருவம் உன் அமைதியை மேலும் பலப்படுத்தும். எவர் ஒரு கோவிலை விட்டு மிகுந்த அமைதியோடு, திருப்தியோடு வெளியே வருகிறாரோ அவரே வெளிச்சத்தைக் கண்டவர். காணவில்லை என்று சொன்னவனும் பொய்யன். கண்டுவிட்டேன் என்று சொன்னவனும் பொய்யன். இது ஒரு அனு பவம். ஒரு ரகசிய அனுபவம். இதை உன் தந்தையோடு பகிர்ந்துகொண்டால், அதே அனுபவம்பெற்ற உன் தந்தை வெகு எளிதில் உன்னை வழிநடத்திவிடுவார்.

""அப்படியா, நல்லது. நீ பெரும் பாக்கிய சாலி. ஆனால் இதை அப்படியே விடு. இன்னும் அமைதியாக இரு. இதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதே. இது சொல்வதற்காக உனக்கு கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து செய்வதற்காக உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, சொல்லில் விரயம் செய்துவிடாதே. செயலில் தீவிரமாகு'' என்று சொல்லித் தருவார். இது அடர்த்தியான உபதேசம். இதை திரும்பத் திரும்ப படித்தால்தான் உங்களுக்குள் தெளிவாகப் புரியும்.

எனவே, நம்முடைய முன்னோர்கள் எதற்காக இந்த கோவில் என்பதை உருவாக்கினார்களோ, தொழுவதற்கான இடம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதனுடைய சிறப்புகளை அங்கு பெரிதுபடுத்தினார்களோ  அந்த இடத்திற்குப் போவது நல்லது. ஆன்மிகத்தில் கோவில் என்பது ஆரம்பப் பாடம்தான். பக்தி என்பதை வளர்ப்பதற்காக உதவுகின்ற ஒரு இடம்தான். கோவிலுக்குப் போகும்போது கண்மூடி ஒரு பிராகாரத்தில் உட்கார்ந்தோமே, அதுபோல வேறு எங்கும் முடியுமா. முடியும். பஸ் ஸ்டாண்டில் உட்கார முடியும். ஓடுகின்ற பஸ்ஸில் உட்கார முடியும். திரும்பி வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி உட்கார முடியும்.

""அந்த கோவில் போயிட்டு வந்தபிறகு என்னமோ நல்லாயிருக்குப்பா'' என்று தந்தையிடம் பரிமாறிக்கொள்ள முடியும்.

""அப்படியா, உனக்கு அவ்விதம் தோன்றுகிறதா.''

ஆமாம் என்று சொன்னால், ""ஒன்று செய். உனக்கோ கோடை விடுமுறை. நான் காசு தருகிறேன். நீ அந்த கோவிலுக்கு மறுபடியும் போய்வா. தனியே போய் வா.'' ஞானமான தந்தை இப்படி சொல்லிவிடுவார்.

""நீ பள்ளி இறுதி முடித்திருக்கிறாயல்லவா. உனக்கு தனியே போவது ஒன்றும் கடினமில்லையே. போய் வா.''

இதுவரை தந்தையும், தாயும் அரவணைக்க போய் வந்தாய். ஞானமுள்ள உன் தந்தை உன்னை தனியோ அனுப்புகிறார். போவதும், போய் இறங்குவதும் ஒரு நல்ல அனுபவம். உள்ளுக்குள் போகும்போது முன்பு சொன்ன அதே விஷயங்கள் ஞாபகம் வரும். "ஸ்ரீநிவாஸா கோவிந்தா ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா பக்தவச்சலா கோவிந்தா பாகவதப் பிரியா கோவிந்தா.' தனியே புத்தகம் படித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாய். சுற்றி முற்றி பலபேர் பல விஷயங்கள் பேசுவது காதில் விழும். எல்லாம் விலக்கலாம். இன்னும் ஆழக் கிடப்பாய். இன்னும் உள்ளுக்குள் தேங்கி நிற்பாய்.

மறுபடியும் தரிசனம். எதனாலேயோ இந்த முறை நீ ஐந்து நிமிடம் வைக்கப்பட்டிருப்பாய். ஆசைப்பட்டு வந்தாயல்லவா. அந்தக் கடவுள் உன்னைக் கைவிடமாட்டார். முப்பது விநாடிகள் மட்டுமே பார்த்து துரத்திய அனுபவம் உள்ளுக்குள் தேக்கி வைத்தாயல்லவா. இப்பொழுது இன்னும் பார். நன்றாகப் பார். யாரோ இழுத்து ஓரம் நிற்க வைப்பார்கள். கண் குளிர கண் குளிர பார்ப்பாய். யார் நீ. யார் நீ. என்ன அழகு. என்ன கம்பீரம். பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறதே. என்ன பிரார்த்தனை செய்யவேண்டும். மறந்துவிட்டதே. என்ன வேண்டும். ஒன்றும் வேண்டாம். நீதான் வேண்டும். உள்ளே கேள்.

""போதுமா பார்த்தது. போய்ட்டு வாங்கோ' இழுத்து நிறுத்தியவர் அனுப்புவார்.

எது அவரை அவ்விதம் செய்யத் தூண்டி யது என்பது ஆச்சரியமாக இருக்கும். திரும்பித் திரும்பி அவரைப் பார்த்து கைதூக்கி விடைபெற்று வந்து மறுபடியும் பிராகாரத்தில் உட்காருவாய். ஒரே சிரிப்பு. ஒரே குதூகலம். இந்த முறை ஐந்து நிமிடம் நிற்க வைத்தார்கள். உடனே தந்தையிடம் சொல்ல வேண்டும் என்ற பரபரப்பு.

ஆனால் ஞானமுள்ள தந்தையின் மகனல் லவா. சட்டென்று அமைதி பற்றிக்கொள்ளும், பிராகாரத்தில் உட்கார்ந்தது போதாது. கிளம்புங்கள் என்று துரத்தியிருப்பார்கள். உள் பிராகாரத்திலிருந்து வெளிப்பிராகாரம் வந்து அங்கே அமருகிறீர்கள். அங்கேயும் போதாது. கோவிலைவிட்டு வெளியே வந்துவிட்டீர்கள். மனம் நிறைய அந்த திருவுருவம் பிரகாசிக்க, உள்ளுக்குள் அமைதியாய் ஏதேனும் ஒரு குளக்கரையில் அல்லது மலைச் சரிவில் அல்லது அறை வராந்தாவில் கண்மூடி தோளில் துணி போர்த்தி உட்கார்ந்திருப்பீர்கள். தந்தை சொல்லிக் கொடுத்திருப்பார்... மலைப் பிரதேசத்தில் நிறைய கொசுத் தொல்லை உண்டு. தலை முதல் போர்த்திக்கொள் என்று. எனவே இடுப்பில் ஒரு வேட்டியும், மேலே ஒரு வேட்டியும் போர்த்தி உட்கார்ந்திருப்பாய். தலை முழுவதும் மறைந்திருக்கும். உள்ளுக்குள்ளே உட்கார உட்கார, அந்தப் போர்வையினால் ஒரு சுகம் ஏற்பட, அந்த அமர்வினால் ஒரு அமைதி எற்பட உள்ளுக்குள் ஆழ்ந்து அமர்வாய். இப்பொழுது இன்னும் சில விஷயங்கள் புரியும்.

எங்கிருக்கிறது கடவுள். அங்கிருப்பதா. ஆமாம். அங்கிருப்பது எங்கு இருக்கிறது. இங்கே. இந்த இடத்தில் நடு மார்புக் குழியில். அங்கிருந்து ஒரு விரல் நுனி வலப்பக்கம் தள்ளி. அடே, இடப்பக்கத்தில் இருப்பது என்ன. இதயம் அங்கு இல்லையா. அது இதயம். இதயக் கோசம். அது ஒரு தசைக் குவியல். அது ஒரு தசை இயக்கம். அது ரத்த ஓட்டத்தை சீர்செய்கின்ற கருவி. ரத்தத்தை தூய்மைப்படுத்துகின்ற கருவி அதற்குப் பின்னே இருக்கிறது. அதற்கு நுரையீரல் என்று பெயர். ஆனால் இந்த விஷயம்- அதாவது அது எங்கிருக்கிறது. இங்கிருக்கிறது. மார்பின் நடுக்குழியிலிருந்து ஒரு விரல் வலப்பக்கம் தள்ளி.

எப்படிச் சொல்கிறீர்கள்.

நான். நான் யார் தெரியுமா.

நீங்கள் தலையிலா அடித்துக்கொள்கிறீர்கள். நான் பாலகுமாரன். வயிறு தொட்டா சொல்கிறேன். நான் ரொம்ப நல்லவன். நான் தொடையைத் தடவியா பேசுகிறேன். நான் என்று சொல்லும் பொழுதே உங்களுடைய ஐந்து விரல்களும் இதயத்தின் வலப்பக்கம் அல்லவா தேடுகின்றன. "நான் நல்லாயிருக்கேங்க. நீங்க நல்லாயிருக்கீங்களா.' அந்த இதயத்தின் வலப்பக்கம் நான் என்று தொடுகையில் அந்த இடத்தில் நீங்கள் இருப்பது உறுதியாகிறது. உள்ளுக்குள்ளே பார்க்க அந்த இடத்தில்தான் வெளிச்சம் வரும். தான் என்பது தன்னிலை என்பது, தன் இடம் என்பது, அங்குதான் எல்லாமும் இருக்கிறது என்பது அப்போது உணரப்படும்.

கோவில் என்ற விஷயம் இதை உணர்த்தத்தான் உங்களுக்கு தரப்பட்டிருக் கிறது.

லட்டு கொண்டுவந்து கொடுக்கவோ, வடை பரிமாறவோ, அங்கிருந்து காசு கொடுத்து வாங்கிய கற்பூரத்தைக் கொண்டுவந்து நீரிலிட்டு மற்றவருக்கு கொடுக்கவோ அது முயற்சிக்கவில்லை. அதெல்லாம் வியாபாரிகள் செய்த விஷயம். வருமானத்திற்கான விஷயம். உங்களுடைய வருமானம் உள்ளே இருப்பது எதுவென்று அறிவது. அதை அந்தக் கோவில், அந்தக் கடவுள் செய்துவிட்டார். அப்படி அமைதியாக இருந்தால் வெகு நிச்சயமாக இது நிகழும். இப்பொழுது மூன்றாம் முறை கோவிலுக்குப் போக ஆசைப்படுகிறீர்கள். அது எப்படி இருக்கும்.

அந்த மலையப்ப ஸ்வாமி கோவிலுக்கு மூன்றாம் முறை நீங்கள் போனால் என்ன ஆகும்.

இரண்டு முறை அமைதியாக அந்த கோவிலுக்கு போய், அங்கு எது உட்கார்ந்திருக்கிறதோ அதை அனு பவித்துவிட்டு, அதை நேரே பார்த்துவிட்டு, அதனோடு உளமாரப் பேசிவிட்டு வந்து அதன் தன்மையைத் தெரிந்துகொண்டு, இப்பொழுது மூன்றாம் முறை போகப் போகிறீர்கள். எப்படி போவது என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்துவிட்டது. ஒரு கோவிலுக்குப் போவது எங்ஙனம் என்பது உங்களுக்குப் புரிந்துவிட்டது. எனவே, நீங்கள் முன்னைக் காட்டிலும் அமைதியாய், உறுதியாய், ஒருவரோடும் சம்பந்தமின்றி, நீங்கள் மட்டுமே ஒரு மிகப்பெரிய சன்னிதானத்திற்குள் பெரும் வேண்டுதலோடு நுழைகிறீர்கள்.

என்ன வேண்டுதல்? இதுதான் கேள்வி வரும். என்ன வேண்டிக் கொள்வது என்ற எண்ணம் வரும். வேண்டுதலுக்கு இருப்பது உடனே தெரியாது. நான் வேண்டுவதை அறிந்தவன் நீ. உனக்கு என்ன கொடுக்கவேண்டுமென்று தோன்றுகிறதோ அதைக்கொடு என்று சொல்ல, மிகப்பெரிய பக்குவம் வேண்டும். அது அனேகமாக வயதும் அனுபவமும் நிறைந்தவருக்குப் போதும். வயது முதிர்ந்தோருக்கு வராமலும் போகலாம். இதுதான் சிந்தனை.

என்ன வேண்டிக் கொள்வது. நல்லபடியான எண்ணிக்கையோடு தேர்வ டைய வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். கிடைத்த வேலையில் ஜெயிக்கவேண்டும். நல்ல உயர்ந்த இடத்தில் நல்ல சம்பளத்தில் இருக் கும்பொழுது திருமணப் பேச்சு நடத்தல்வேண்டும். நல்ல வசதியான, அழகான, ஆற்றல் மிக்க ஒரு பெண் துணையாக வரவேண்டும். எங்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்கவேண்டும். வீடு, நிலம், தோப்பு, துரவு என்றெல்லாம் வாங்கவேண்டும் என்கிற பிரார்த்தனைகள் வந்து முட்டும்.

இப்படி வேண்டுதலில் என்ன தவறு. ஒரு தவறும் இல்லை. தாராளமாக மலை யப்ப ஸ்வாமியை பார்த்து வேண்டிக் கொள்ளலாம். ஆனால் மூன்றாம் முறை வந்தது இதற்கா, இதுதான் தபசா. இதை கேட்கத்தான் இப்படி ஓடி வருகிறோமா. இதை அங்கிருந்தே கேட்க முடியாதா. மலையப்ப ஸ்வாமி எங்கும் நிறைந்த வரல்லவா. உள்ளங்கை அகல படம் போதுமே என்ற கேள்வியும் வரலாம்.

அந்த ஏழு மணி நேர வரிசையின் நகர்வில் இது பற்றிய சிந்தனைகள் பொங்கிப் பெருக வேண்டும். கேட்பதா, கேட்க வேண்டாமா. எனக்கு கேட்கத் தெரியுமா.

அவருக்கு கொடுக்கத் தெரியாதா என்றெல்லாம் அலசல்கள் நகர்த்தவே அந்த ஏழு மணி நேர வரிசைப் பயணம்.

""நான் மெட்ராஸ், நீங்க வந்தவாசியா. வந்தவாசியில எங்க இருக்கீங்க. அங்க எனக்கு சொந்தக்காரர் இருக்காரு.'' இப்படி ஆரம்பித்தோமென்றால் எந்தவித லாபமும் இன்றி வெறும் குளறுபடி பேச்சாகவே இருக்கும்.

""மெட்ராஸ்லயா இருக்கீங்க, சொந்த ஊர் எது?''

""திருச்சி.''

""அட, எங்களுக்கும் திருச்சிதாங்க. நாங்களும் விவசாயம் பண்ணிட்டுத்தான் வந்தவாசி வந்தோம்.''

""அப்படியா, திருச்சியில எங்க?''

""உறையூர் பக்கம்.''

""ஆமா, நாங்களும்

உறையூர் பக்கம்.''

பேசப் பேச ஒரு அளவில் உறவு என்றேகூட தெரிந்து விடும். தெரிந்து என்ன ஆகும். உங்களுக்கும் கடவுளுக்கும் உண்டான உறவு என்ன என்பதை சிந்திப்பதைவிட்டு, தெருவில் போகிறவர் உறவானார் என்பதில் என்ன லாபம்.

+2 பரீட்சை எழுதி விட்டேன். மலையப்பா, என்ன மார்க் வரும் என்று தெரியவில்லை. ஆயிரத்து நூறுக்கும் மேல் எதிர்பார்க்கிறேன். வரலாம். வராமலும் போகலாம். வந்தால்தான் வாழ்க்கை. இல்லையெனில் என் தகப்பனைப்போல நானும் ஏதாவது சிறு தொழில் செய்து பிழைக்க வேண்டியதுதான். கடன் பட்டும், கடன் அடைத்தும் வாழ்க்கை நடத்த வேண்டியதுதான்.

இந்த இரண்டு ரூம் வாழ்க்கையிலிருந்து விடுதலை கொடு. பெரிய இடம் வேண்டுமே. என் தாயும், தகப்பனையும் நன்கு பராமரிக்க வேண்டுமே. இந்த கவலை நியாய மான கவலை, தாய் பொறுப்பானவள். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு குழந்தை வேண்டாம் என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவள். "நீங்க ஆடற ஆட்டத்திற்கு இதுங்க இரண்டு போதும்' என்று ஒன்பதாவது படிக்கும்போது அவர் சொன்னது இப் போது புரிகிறது.

அப்போது அம்மா கல்யாணத்திற்கு கொடுத்த பட்டுப்புடவை தவிர வேற பட்டுப் புடவையே இல்லை. அதுக்கப்புறம் அவங்க அப்பா கபகபன்னு வந்துட்டாரு இல்ல. காலைல ஏழு மணிக்குப்போய் ராத்திரி எட்டு மணிக்கு வந்து, சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அல்லாடி உனக்கு நல்ல புடவையெல்லாம் வாங்கிக்கொடுத் திருக்காரு. தீபாவளி போனஸ், விஜயதசமி போனஸ் எல்லாம் நல்லா செலவழிச்சோமே. தங்கை பெரியவளானபோது ஒரு கட்டம் போட்ட பட்டுப்பாவாடை, தாவணி வாங்கினாங்க.

எல்லாருக்கும் மூச்சடைச்சு போச்சு. எங்கம்மா அவளைப் பாத்துப்பாத்து அழுவுறாங்க. எனக்கு கலவரமா போச்சு.

என்னம்மா இப்படி அழறீங்களேன்னு கேட்டேன். "இவளை ஒரு நல்ல ஆள்கிட்ட கைபிடிச்சுக் கொடுக்கணுமேடா. நல்லபடி கரை ஏத்தணுமே. இவ நல்லாயிருக்கணுமேடா'ன்னாங்க. டொக்குன்னு தலைமேல யாரோ கருங்கல் பாறை வைச்சா மாறி ஆகிப்போச்சு எனக்கு. அது அம்மா பாரம் மட்டுமில்லை.

அம்மா கவலை மட்டுமில்லை. என் கவலையும். என்னுடைய பொறுப்பும். இதைப் பற்றிக் கேட்கலாமா. மலையப்பா மலையப்பா. என் தங்கை நல்லபடியா வாழ்க்கைப்படணும். நல்ல இடத்துல கல்யாணம் ஆகணும். "மாசறு பொன்னே வலம்புரி முத்தே' மனதில் ஓடியது. தங்கை அழகி. அதுபோல் தனக்கும் ஒரு அழகி கிடைத்தால் நன்றாக இருக்காதா. தான் பாட வேண்டாமா. "மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விதையே கனியே தேனே.' என்னுடைய மனைவி யார். என்னுடைய ஆள் யார்.

ஒன்றிலிருந்து ஒன்று மனம் தாவிக் கொண்டே இருக்கிறது. வெவ்வேறு சந்துகளில் நுழைந்து நடந்துகொண்டே இருக்கிறது. மார்பு அழுந்த, மார்பில் படர்ந்தபடி ஒரு மங்கை இருந்தால் என்ன சுகம். மலையப்பா மலையப்பா... எனக்கென்று...

நில்லடா. இதையெல்லாமா அவரிடம் கேட்பாய். உள்ளே எதிர்ப்புக் குரல் வந்தது. கெஞ்சலும் இருந்தது. நான் கேட்பதா. கூடாதா. குழப்பம் வந்தது.

இம்மாதிரி உங்களுக்கு ஏற்படின் இதுகுறித்து கவலைப்படத்தேவையில்லை. இது விஷாத யோகம். கலங்கியதுதான் தெளியும். கலக்கம் உள்ளதுதான் வண்டல். கீழே தேங்கி தெளிவு மேலே வரும். எனவே, இப்படி நாலாவிதமாக யோசிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் யோசிப்பு மயக்கத்திலேயே நாம் போய்விடக்கூடாது. என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேள்வி கேட்கவேண்டும். சரியா என்று விசாரிக்க வேண்டும். மயக்கமற்று உன்னு டைய ஆசை என்னவென்று நின்று நிதானிக்கவேண்டும்.

மலையப்பா. முப்பத்தைந்து விநாடி தரிசனத்திற்கு ஏழு மணி நேர வரிசை என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை. இது கொடுக்கிற அமைதி எவ்வளவு பெரிய சக்தி. இந்த இடத்திலா பேசுவது. இந்த இடத்திலா பாடுவது. இந்த இடத்திலா அரட்டை அடிப்பது. இல்லை. கோபமும் தாபமும் கழற்றி வைத்துவிட்டுப்பேசலாம்.

""ஏன் இடிச்சிட்டு போறீர்.''

""நான் எங்க இடிச்சேன். போடா குரங்கு.''

""நு கோதி'' என்று மாறி மாறி கத்துவதற்கா இந்த இடம் வந்தது. காமமும் தவிர்த்து, கோபமும் தவிர்த்து கோவிலுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. ஏழு மணி நேர வரிசைக்குப் பிறகு உள்ளுக்குள் வந்தால் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஆயிரம் வருஷத்து கோவில். இதோ சுவரில் வைக்கப்பட்டிருக்கிற இந்த கடப்பாறை, இது எண்ணூறு வருடங்களுக்கு முன்பு ஒரு வைணவ அடியார் இங்கு குளம் தோண்டுவதற்காக உபயோகப்படுத்திய நீண்ட கடப்பாறை. தூண்கள், வெளி மண்டபம், கொடி மரம் எல்லாம் நாயக்கர் காலத்தியவை. இவர் திருமலை நாயக்கர்.

இன்னும் நெருங்கியாயிற்று. கடவுளே கடவுளே. எனக்கு ஆயிரத்து நூத்தி எண்பதா வது வரணும். இதுதான் உடனடியான பிரச்சினை. உடனடியான பிரச்சனைதான் மிக முன்னதாக ஞாபகத்திற்கு வரும். மண்டபம் ஏறியாயிற்று. இன்னும் ஐந்து நிமிடம் நகர வேண்டும். அப்போதுதான் தொலைதூரத்திலிருந்து அந்த திகழ் சக்கரம் தெரியும். "கோவிந்தா கோவிந்தா' என்று பெரும் குரலோடு கூவுகிறார்கள். பார்த்தவர்கள் பதட்டப்படுகிறார்கள். பரவசப்படுகிறார்கள். அந்தக்குரல் உங்களையும் தாக்குகிறது.

இப்போது நீங்கள், அந்த பிரதிமை மட்டும் இருக்கிறீர்கள். பிரதிமை கண்ணுக்குத் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியவேண்டும். தெரியும். நல்ல தரிசனம் வேண்டும். பகவானே, உன்னை நன்கு தரிசிக்க வேண்டும். மலையப்பா, உன்னை கண் குளிரப் பார்க்க வேண்டும். இதுவரை இருந்த பல்வேறு வேண்டுதல்கள் போய், இப்போது இந்த க்ஷணம் தரிசனம் மட்டுமே முக்கியம் என்று வருகிறது. என்ன மார்க். என்ன எண்ணிக்கை என்னுடையது.

கடவுளே, மலையப்பா, நூத்தி எண்பத்தைந்து இல்லை நூத்தி எண்பத்தாறு. சும்மா இருடா. இதெல்லாம் வராது. நீ என்ன எழுதியிருக்கிறாய். எவ்வளவு வரும். ஆயிரத்தி நூத்தி எழுபத்தி ஐந்து. வருமா. வரலாம்.

அழுத்திச் சொல். வருமா. ஆயிரத்தி நூத்தி எழுபது வரும். போதுமா. போதாதய்யா. சீட்டும் கிடைக்காது. இன்ஜினியர் சீட்டுக்கும் காசு கொடுக்க வேண்டும். என்ன மார்க் இது. கண்ணில் பளிச்சென்று நீர் பொங்கியது. நெஞ்சு விம்மியது.

(தொடரும்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :