Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
......................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
......................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
......................................
சாந்திக் கிரியைகள்!
......................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
......................................
கடவுளைத் தேடி... 22
......................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
......................................
ஞாயிறு போற்றுவோம்!
......................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
......................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
......................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
......................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
......................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
......................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
......................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
......................................
01-01-17மேஷம்

மேஷ ராசிக்கு அட்டமச்சனி நடக்கிறது. 2017 ஆங்கிலப் புத்தாண்டு கன்னி  லக்னத்திலும் மகர ராசியிலும் பிறக்கிறது. கடன் அல்லது வைத்தியச் செலவு அல்லது போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளைச் சந்திக்கும் காலம். என்றாலும் புதிய தொழில்முயற்சிகள் வெற்றியடையும். 10-ஆம் இடத்துக்கும் மகர ராசிக்கும் குருபார்வை இருப்பதால் தொழில்வளம், உடல்நலம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் காணப்பட்டாலும், குடும்பத் தில் உள்ளவர்களால் மனவேதனைக்கு ஆளாகும்  சம்பவங்களை சந்திக்க நேரும். அதனால் சந்தோஷக்குறைவு ஏற்படலாம். அழஅழச் சொல்கிறவர்கள் அன்புடையவர்கள்; உங்கள்மீது அக்கறை உடையவர்கள். சிரிக்கச் சிரிக்க சொல்கிறவர்கள் உங்களைச் சீரழிக்கச் செய்கிறவர்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டால் எல்லாரும் நல்லவர்களே!

ரிஷபம்


புது வருடம் உங்கள் ராசிக்கு 5-ஆவது லக்னம், 9-ஆவது ராசியில் பிறப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு இனிய ஆண்டாகத் திகழும். உங்களுடைய நீண்டகால கனவுத்திட்டங்கள் கைகூடும். இழந்த பதவி, இழந்த செல்வம், இழந்த செல்வாக்கு எல்லாம் 2017-ல் உங்களை வந்தடையும். பிரிந்துபோன உறவுகளும் விரும்பிவந்து ஒட்டிக்கொள்ளும். திருமணத்தடை விலகும். புத்திர பாக்கியத்துக்காகக் காத்திருக்கிறவர்களுக்கு வாரிசு யோகம் அமையும். 7-க்குடைய செவ்வாயும் 10-க்குடைய சனியும் பரிவர்த்தனை. புதிய தொழில் யோகம் அமையும். மனைவிக்கு வேலை, தொழில் யோகம் உண்டாகும். சிலருக்கு மனைவிவழி சொத்து சுகம் ஏற்பட இடமுண்டாகும். மனைவி இல்லாதவர்களுக்கு மனைவிவழி உறவினர்களினால் நன்மையுண்டாகும்.மிதுனம்


2017- உங்கள் ராசிக்கு 4-ஆவது லக்னத்திலும், 8-ஆவது ராசியிலும் பிறக்கிறது. தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். கௌரவம், மதிப்பு மரியாதை, செல்வாக்கு பெருகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணயோகமும், வாரிசு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கிய மும் உண்டாகும். படித்துமுடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வெளிநாட்டு வேலை யோகமும் அமையும். தகப்பனார் அல்லது பிதுரார்ஜித சொத்துவகையில் சிலர் பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும். சிலர் பங்காளிப்பகை அல்லது பிரச்சினைகளைச் சந்தித்தாலும் "கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்' என்ற தத்துவப்படி அவர்களுக்கு சில நன்மைகளும் உண்டாகலாம். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கல்விபயிலும் மாணவ- மாணவியருக்கு சிறப்பான காலம்!

கடகம்


2017- கடக ராசிக்கு 3-ஆவது லக்னத்திலும், 7-ஆவது ராசியிலும் பிறப்பது சிறப்பு! ஆங்கிலப் புத்தாண்டு ராசிநாதன் சந்திரன் சாரத்தில் (திருவோணம்) பிறப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு திருப்புமுனையாக அமையும். கடந்த பல வருடங்களாக தொழில், வருமானம் எதுவும் சரியில்லாமல் சங்கடப்பட்டவர்களுக்கு சந்தோஷமும் திருப்தியும் ஏற்படுமளவு தொழில், வேலை, சம்பாத்தியம் உண்டாகும். பழைய கடன் சிக்கல்கள் எல்லாம் முழுமையாகத் தீர்ந்துவிடும். சிலருக்கு சுபவிரயமும் லாப விரயமும் ஏற்படலாம். ஒருசிலர் தொழில், குடியிருப்பில் மாற்றம் செய்வர். அது ஏற்றம் உடையதாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் ஏற்படுவதோடு பாராட்டும் உதவியும் எதிர்பார்க்கலாம். ஆன்மிகப் பயணங்கள் ஏற்படும்.

சிம்மம்


2017-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 2-ஆவது லக்னத்திலும், 6-ஆவது ராசியிலும் பிறக்கிறது. பொருளாதாரத்தில் நிறைவும் திருப்தியும் உண்டாகும். 12-க்குடையவர் 6-ல் மறைவதால் கடன், போட்டி, பொறாமை, சத்ரு ஆகிய தொல்லைகள் எல்லாம் மறையும். சிலருக்கு வெளிமாநிலம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு உண்டாகும். அல்லது ஆன்மிக யாத்திரை போகலாம். கடமையுணர்வும் உண்மையுணர்வும் உள்ள உழைப்பாளிகளுக்கு 2017 எல்லாவகையிலும் உயர்வும் முன்னேற்றமும் தரும். அதேசமயம் ஜால்ரா தட்டும் ஆமாம் சாமிகளுக்கும், நம்பிக்கைத்துரோகம் செய்கிறவர்களுக்கும் 2017 பாடம் புகட்டும். கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் தெரியும் என்பதும், பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதும், சிலரை சிலநாள் ஏமாற்றலாம்- பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதும் பொய்யாகாது.

கன்னி


2017- ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் லக்னத்தில்தான் உதயமாகிறது. அதுமட்டுமல்ல; உங்கள் ராசிக்கு 5-ஆவது ராசியான மகரத்தில்தான் 2017 பிறக்கிறது. எனவே, இந்த ஆண்டு உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறும். கருதிய காரியங் கள் யாவும் கைகூடும். தடைகளும் எதிர்ப்பு களும் ஒருபுறம் காணப்பட்டாலும், அவற்றைக்கடந்து உங்கள் வெற்றிப்பயணம் தொடரும். பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும். வரவேண்டிய பாக்கிசாக்கி பணம் எல்லாம் வசூலாகும். கொடுக்கவேண்டிய பாக்கிசாக்கி கடன்களை எல்லாம் கொடுத்து நல்லபேர் எடுக்கலாம். குலதெய்வ வழிபாடும் பிரார்த் தனை நேர்ச்சைகளும் நிறைவேறும். ஆன்மிகத்தேடலும் ஆர்வமும் உண்டாகும். செய்தொழிலில் லாபம் பெருகும். சேமிப்பும் உருவாகும். தேக ஆரோக்கியமும் தெளிவுபெறும்.

துலாம்


உங்கள் ராசிக்கு 12-ஆவது லக்னத் திலும், 4-ஆவது ராசியிலும் 2017-ஆம் ஆண்டு பிறக்கிறது. துலா ராசிக்கு 3, 6-க்குடையவர் 12-ல் மறைவதால் கடன்கள் அடைபடும். சொத்துகள் விற்பனைத் திட்டம் இருந்தால் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் செயல்படும். சிலர் பழையதைக் கொடுத்துப் புதியதை வாங்கி பரிவர்த்தனை செய்யலாம். வாழ்க்கையில் முன்னேற்றமும் புதிய தொழில்முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் ஆர்வமும் அக் கறையும் இருப்பதால் பின்னடைவில்லாத பெருமையும் திறமைக்கேற்ற பலனும்
அடையலாம். "பழையன கழிதலும் புதிய புகுதலும்' என்ற தொல்காப்பிய தத்துவப்படி நெருங்கிப்பழகியவர்கள் உங்களைவிட்டு ஒதுங்க- புதியவர்கள் அந்த இடத்தை நிரப்பி உதவியாக இருப்பார்கள். ஒருகதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும்.

விருச்சிகம்


உங்கள் ராசிக்கு 2017-ஆம் ஆண்டு 11-ஆவது லக்னத்திலும், 3-ஆவது ராசியிலும் பிறக்கிறது. விருச்சிக ராசிக்கு 9-க்குடைய சந்திரன் சாரத்தில் (திருவோணம்) வருடம் பிறப்பதால், குருவருளும் திருவருளும் பரிபூரணமாக உங்களை வழிநடத்துவதால் நீங்களே 2017-ன் அதிர்ஷ்டசாலியாக ஜொலிப்பீர்கள். 4-ல் சுக்கிரன், கேது சம்பந்தம் பெறுவதால் சிலருக்கு தேக சுகக் குறைவு, வாகனம் சம்பந்தமான செலவுகள், தாயார் வகையில் கெடுபலன்கள் நடக்கலாம். என்றாலும் ராசிநாதன் செவ்வாய் அங்கு இருப்பதும் சனியுடன் பரிவர்த்தனை என்பதும் பாதகப்பலன் நீங்கி சாதகப்பலனாக மாறக்கூடும். 2-க்குடைய குரு 11-ல் நின்ற பலன் குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், லாபம் உண்டாகும். மனைவி, மக்களின் கருத்து வேறுபாடு விலகி இணக்கமும் நெருக்கமும் ஏற்படும்.

தனுசு


தனுசு ராசிநாதன் குரு 10-ல் நிற்க- அவர் நின்ற இடமே 2017 வருட லக்னமாக அமைவதும், 2-ஆம் இடம் மகரத்தில் ராசியாக அமைவதும் உங்களுக்கு அனுகூலமான திருப்பம்! ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்தாலும் வீண்விரயம் விலகி பயனுள்ள விரயமாக மாறும். புதிய வேலை, புதிய தொழில், புதிய பதவி, புதிய பொறுப்பு போன்றவற்றால் உங்கள் திறமை பளிச்சிடும். பெருமையும் புகழும் உண்டாகும். 9-ல் ராகு. 9-க்குடைய சூரியன் உங்கள் ஜென்ம ராசியில்! தெய்வ அனுகூலம் உங்களுக்கு நூற்றுக்கு நூறு உண்டு. அதனால் சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து சாதனை படைக்கலாம். சொந்தபந்தம், சுற்றம் வகையில் சில வருத்தங்கள் ஏற்பட்டாலும் நீரடித்து நீர் விலகாது. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை.

மகரம்


2017-ஆம் ஆண்டு உங்கள் ராசியிலும், 9-ஆம் இடம் கன்னியிலும் பிறக்கிறது. 7-க்குடையவர் ஜென்மத்தில்! திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். வாரிசு யோகம் அமையும். செல்வாக்கும் புகழும் கீர்த்தியும் உண்டாகும். கௌரவப்பதவிகள் தேடிவரும். அரசியல், பொது வாழ்க்கையில் முக்கியத்துவம் ஏற்படும். வியாபாரத்தில் சில சீர்திருத்தங்களையும் விருத்தியம்சங்களுக்கான நடவடிக்கை களையும் மேற்கொள்ளலாம். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடையலாம். கூடப்பழகியவர்களிடம் பொருளாதாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். கொடுக்கல்- வாங்கலில் ஆதாரத்தோடு வரவு- செலவு வைத்துக்கொள்ள வேண்டும். பெருந்தன்மை இருக்கலாம்; ஆனால் ஏமாளியாக இருக்கக் கூடாது.

கும்பம்


2017-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 8-ஆவது லக்னத்திலும், 12-ஆவது ராசியிலும் பிறக்கிறது. இரண்டுமே உங்களுக்கு எதிராக அமைகிறது. எனவே மிகவும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் செயல்படவேண்டும். "தாட்சண்யம் தனநாசம்' என்பார்கள். அதேபோல "பார்க்காத தொழிலும் கேட்காத பணமும் கெட்டுப்போகும்' என்பார்கள். தாயானாலும் பிள்ளையானாலும் வாயும்வயிறும் வெவ்வேறு என்பது பழமொழி. ஆக, 2017-ல் எல்லாவகையிலும் எதிர்நீச்சல் போட்டுத்தான், போராடித்தான் எல்லா காரியங்களையும் செயல்படுத்தவேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்- முயற்சி திருவினையாக்கும் என்ற பாலிஸியைக் கைக்கொண்டால்- கடைப்பிடித்தால் தோல்விக்கு இடமில்லை. ராசிக்கு சனிபார்வையும் குருபார்வையும் கிடைப்பதால் வெற்றி நிச்சயம்.

மீனம்

2017-ஆம் ஆண்டு மீன ராசிக்கு 7-ஆவது லக்னத்திலும், 11-ஆவது ராசியிலும் பிறப்பதால் இந்த ஆண்டு இனிய ஆண்டாக விளங்கும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாகத் திகழ்வார்கள். உங்களால் பயனும் பலனும் அடைந்தவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும் அதன் பலனை விரைவில் அவர்கள் அனுபவிப்பார்கள்; உணருவார்கள். "எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்ற கீதாசாரத்தின் விதிப்படி ஆறுதல் அடையுங்கள். காலம் உங்களுக்குத் துணையாக அமையும். உங்கள் கனவுகள் நனவாகும். வாழ்க்கையில் வசந்தம் உண்டாகும். இல்லறம் நல்லறமாகும். வாக்கு, தனம், குடும்பம் மேன்மையாக அமையும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :