Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
 ................................................................
சாந்திக் கிரியைகள்!
 ................................................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
 ................................................................
கடவுளைத் தேடி... 22
 ................................................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
 ................................................................
ஞாயிறு போற்றுவோம்!
 ................................................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
 ................................................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
 ................................................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
 ................................................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
 ................................................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
 ................................................................
01-01-17


பொன்மலை பரிமளம்

மிழகத்தில் தை முதல் தேதி சூரியனை வழிபட்டு பொங்கல் திருநாள் கொண்டாடுகிறோம். ஆனால் வடநாட்டில் சில பகுதிகளில், ஐப்பசி தீபாவளி பண்டிகை முடிந்து ஒருவாரம் கழித்து "சாத்பூஜை' என்ற பெயரில் சூரிய பூஜை மேற்கொள்கிறார்கள். பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தில் சாத்பூஜை கொண்டாடப்படுகிறது. அப்போது, நதிக்கரையில் பெண்கள் கரும்பினால் பந்தலிட்டு, அந்தப் பந்தலில் புது அடுப்பில் பானையில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி, பூஜைக்குரிய பொருட்களுடன் சூரியனுக்கு சமர்ப்பித்து கொண்டாடுவார்கள். இதேபோல் டில்லியில் அமான் விகார் பகுதியில் அமைந்துள்ள யமுனை நதிப் படித்துறையில் சாத் பூஜை கொண்டாடுவர்.

ஆதவன், பாஸ்கரன், சுடர், பதஸ்கன், இருள்வலி, சூரன், மார்த்தாண்டன், அருணன், மித்ரன், செங்கதிரோன், தபனன், ஆதித்தன், சான்றோன், சவிதா, அனலி, அரி, பானு, விஸ்வான், பகன், பாலோன், அருக்கன், தினகரன், வெய்யோன், கதிரவன், திவாகரன், அரியமா, உதயன், பகலவன், ஞாயிறு, வேந்தன், விண்மணி, இரவி என்று பல பெயர்களைப் பெற்ற சூரியன், வானில் உலாவரும் கிரகங்களில் முதன்மையான இடத்தைப் பெறுகிறார்.

நவகிரகங்களுக்கு தலைவன் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

புராணக் கூற்றின்படி சூரியன், அதிதி- காசியப முனிவரின் புதல்வன் என்று சொல்லப்பட்டாலும், உலக உற்பத்தியின்போது "ஓம்' எனும் உரத்த ஒலி   ஒலித்ததும் அதிலிருந்து தோன்றியதே சூரியன் என்றும் புராணம் கூறுகிறது. சூரியனுக்கு இரு மனைவிகள் என்று கூறும் புராணங்கள், ரஜினி, சுவர்ணா, சாயா, சுவர்ச்சலா ஆகிய நான்கு மனைவி களைக் கொண்டவர் என்றும், செம்பொன் மேனியை உடையவர் என்றும், ஆயிரமாயிரம் கதிர்களை வெளிப்படுத்தும் உத்தமர் என்றும் புகழ்கின்றன.

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களின் மூலாதாரம் சூரியன் என்கிறது ரிக்வேதம். மேலும், மகாவிஷ்ணுவே சூரிய நாராயணன் என்றும் கூறுகிறது. சிவபெருமானின் வலக்கண் சூரியன் என்றும் இடக்கண் சந்திரன் என்றும் சொல்லப்படுகிறது. ஆரோகன், பிராஜன், படரன், பதங்கன், ஸ்வர்ணான், ஜோதிஷுமான், லிபாசன், காஸ்யபன் என எட்டு சூரியர்கள் உள்ளதாக உபநிடதம் கூறுகிறது. இதில் எட்டாவதான காஸ்யபனைச் சார்ந்தே இதர சூரியர்கள் யாவும் அமையும் என்கிறது சூரிய புராணம்.

பல நோய்களை சூரியனின் கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் கூறுகிறது. வேதங்களில் காணும் உண்மைகள், நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு முரணாக இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சூரிய ஒளியில் ஏழுவிதமான வண்ணங்கள் நிறைந்திருக்கின்றன. சூரியனின் கதிர் இயக்கத்தால் மனித உடலில் அமைந்துள்ள கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரம் இரண்டு, வாய் ஒன்று ஆகிய ஏழு உறுப்புக்கள் உருவாகின்றன என்று முண்டக உபநிடதம் கூறுகின்றது.

சூரியனின் இரு மனைவிகளுள் ஒருத்தி யான சஞ்சினிக்கு வைவஸ்தமனு, யமன், யமுனா என்ற மக்களும், சாயாவுக்கு சர்வர்ணிமனு, ச்ருதகர்மா (சனி பகவான்) என்ற மகன்களும் உண்டு. அஸ்வினி தேவர் களும் கர்ணன், சுக்ரீவன் ஆகியோரும் சூரியனின் மகன்கள் ஆவர்.

வேதங்கள் பல அறிந்த சூரியனுக்கு அனுமன், யாக்ஞவல்கியர் என சீடர்கள் இருவர். சகல வேத சாஸ்திரங்களையும், அனுமன் சூரிய தேவனிடம் கற்றார். மேலும், சூரியனின் மகளான சுவர்ச்சனா தேவியை மணந்தார் அனுமன். அதனால் சூரியன், அனுமனுக்கு மாமனார் ஆனார் என்கிறது புராணம்.

சூரியன் உதிக்கும் அதிகாலை  நேரம் உஷத்காலம் எனப்படுகிறது. இந்த நேரத்திற்கு உரிய பெண் தேவதை உஷஸ் என்று வேதம் கூறுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே, சூரியன் உதயமாகிறான். அதனால்தான் அதிகாலை நேரத்தை உஷத் காலம் என்கிறார் கள். இந்த நேரத்தில் உஷஸின் சிறப் பான கிரணங்கள் பூமியை நோக்கிப் பாய்வதால் நீர் நிலைகளில் உள்ள நீர் வெதுவெதுப் பாக இருக்கும். எனவே, உஷத்காலத்தில் நீராடினால் உடல் நலம் சீராகும். பாவங்கள் நீங்கும்.

"ஆதித்யஹ்ருதயம் புண்யம்
ஸர்வசத்ரு விநாசனம்
ஐயாவஹம்
ஜபேந்நித்யம்
அக்ஷயம் பரமம்சிவம்'

என்னும் மந்திர சுலோகத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜெபிக்க வேண்டும் என்பது விதியாகும்.

ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா வின் மகன் சாம்பன், நாரதரை அவமதித்தான். இதையறிந்த கிருஷ்ணர், மகனென்றும் பாரா மல், "தொழு நோய் பீடிக்கட்டும்' என்று சபித்தார். சாம்பன் தொழுநோயால் துன்புறுவதைக் கண்ட நாரதர் அவ னைப் பார்த்து, ""சந்திரபாகா நதிக்கரையில், முனி பத்தினிகள் எல்லா ரும் விரதம் மேற்கொண்டு சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட இருக்கிறார்கள். நீ அங்கே சென்று அந்த அடுப்பிலிருந்து வெளிவரும் புகை உன் உடலில் படும்படி நின்று, நீயும் சூரியனை வழிபடு. உன் சாபமும் நிவர்த்தியாகி, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவாய்'' என்று ஆலோசனை வழங்கினார். உடனே சாம்பன் சந்திரபாகா நதிக்கரைக்குச் சென்று சூரிய வழிபாட்டில் கலந்துகொண்டு நிவாரணமும் பெற்றான் என்கிறது புராணம். அந்த வழிபாடுதான் இப்போதும் பொங்கல் பண்டிகையாக அங்கு கொண்டாடப்படுகிறது.

தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்ற சாம்பன்- சந்திரபாகா நதிக்கரையில் சூரியனுக்கு ஒரு கோவில் கட்டி வழி பட்டான். அதுதான் சூரியனுக்குரிய முதல் கோவில் எனப்படுகிறது. இக்கோவில் தற்போதைய பாகிஸ்தானில் சந்திரபாகா எனப்பட்ட செனாப் ஆற்றங்கரையிலுள்ள மூல்தான் (மூலஸ்தானம்) என்ற ஊரில் இருந்ததாகக் கூறும் ஆய்வாளர்கள், அது அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது என்றும் கூறுகிறார்கள்.  அவுரங்கசீப்புக்குமுன் பஞ்சாப் பகுதியை ஆட்சி புரிந்த மொகலாய சக்கரவர்த்தி அக்பர் தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்தார் என்றும்; காயத்ரி பவனம் என்ற மாளிகையையும் கட்டி சூரியனை வணங்கியுள்ளார் என்றும் சரித்திரம் சொல்கிறது.

சாளுக்கியர்களும் சூரிய வழிபாட்டில் சிறந்து விளங்கியுள்ளனர். ஹர்ஷரின் குலதெய்வம் சூரியன் என்றும், பாஞ்சால நாட்டின் நாணயங்களில் சூரியன் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மூல்தானிலிருந்து சூரிய வழிபாடு காஷ்மீருக்குப் பரவியதால், அந்த நாட்டினை ஆண்டுவந்த மன்னன் லலிதாதித்ய முக்தாபீடன் என்பவன் சூரியனுக்கு ஒரு கோவில் கட்டினான். அந்தக் கோவில் கிரேக்க ஆலய அமைப்பில் அமைந்திருந்தது. அந்த மன்னனுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றிய சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி. 1391-1414) அந்தக் கோவிலை இடித்து இருக்கு மிடம் தெரியாமல் அழித்தான் என்று வரலாறு கூறுகிறது.

ஒடிஸா மாநிலத்திலுள்ள கொனார்க் சூரியன் கோவில் கலிங்கத்தை ஆட்சி செய்த நரசிங்கத்தேவன் என்னும் மன்னனால் (கி.பி. 1238-64) கட்டப்பட்டது. அதன் சில பகுதிகள் அழிந்தாலும் எஞ்சியவை வியப் பூட்டும் வண்ணம் உள்ளன.

குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொதேரா என்னுமிடத்தில் சூரியன் கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆட்சி புரிந்த ஸோலங்கி வம்சத்தினரால் இவ்வாலயம் கட்டப்பட்டதாக ஆய்வாளர் கள் கருதுகிறார்கள். இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பதால் சூரிய திருவுருவின்மேல் தினமும் சூரிய ஒளி காலை வேளையில் படும்படி அமைந்துள்ளது. சூரிய குளம் என்ற திருக்குளமும் உள்ளது. இக்கோவிலும் தற்போது சிதலமடைந்துள்ளது.

புனித நதி ஓடும் காசி மாநகரத்தில் மட்டும் சூரியனுக்கு 56 கோவில்கள் உள்ளன. இவை நன்கு பராமரிக்கப்பட்டு எழிலுடன் திகழ்கின்றன.

தமிழகத்தில், கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில், சூரியனுக்கென்றே அமைக்கப்பட்ட ஆலயமாகும். இங்கு சூரிய பகவான் தன் பத்தினிகளான உஷா, பிரத்யுஷா (சாயாதேவி) ஆகியோருடன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரைச் சுற்றி மற்ற கிரகங்கள் அவரைப் பார்த்தபடி உள்ளன. குறிப்பாக அவர் எதிரில் குரு பகவான் எழுந்தருளி யுள்ளார்.

மேலும், தமிழகத்தில் புகார் நகரில் உச்சிக்கிழான் கோட்டம் என்ற பெயரில் சூரியன் கோவில் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

கேரள மாநிலம், கோட்டயம் அருகி லுள்ள ஆதித்யபுரம் என்ற தலத்தில் "சூரிய தேவன் ஆலயம்' அமைந்துள்ளது. இது திரேதாயுகத்தில் அமைக்கப்பட்ட கோவில் என்று புராண வரலாறு கூறுகிறது. பக்தர் கள் இங்கு வழிபடும்போது கிழக்கிலிருந்து உதயமாகி ஒளிதரும் சூரியனையும் சேர்த்து வழிபடும் வகையில், மேற்கு நோக்கி மூலஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சூரிய பகவான் பத்மாசனத்தில் அமர்ந்து தவம் செய்யும் கோலத்தில் உள்ளார்.

வெளிநாடுகள் பலவற்றிலும் சூரிய வழிபாடு நடைபெற்றதற்கான ஆதாரங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகமெங்கும் வழிபடும் சூரியனை சிவசூரியன் என்றும், சூரிய நாராயணன் என்றும் ஆன்மிகம் போற்றுகிறது. கண் கண்ட தெய்வமான சூரியனைப் போற்றும் மந்திரம்தான் வேதங்களின் தாய் எனப்படும் காயத்ரி மந்திரம்.

"ஓம் பூர் புவஸ்ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோந: ப்ரசோதயாத்.'

ஒரு சிறந்த குருவிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று தினமும் சூரிய வழிபாடு மேற்கொண்டால் வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :