Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
 ................................................................
சாந்திக் கிரியைகள்!
 ................................................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
 ................................................................
கடவுளைத் தேடி... 22
 ................................................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
 ................................................................
ஞாயிறு போற்றுவோம்!
 ................................................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
 ................................................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
 ................................................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
 ................................................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
 ................................................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
 ................................................................
01-01-17


ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்


1, 10, 19, 28-ஆம் தேதிகளில்
பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஓய்வில்லாமல் வேலை செய்யவேண்டி வரும். ஒருசிலர் புனிதப் பயணமாக தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வருவார்கள். நிதிச்சுமை குறைந்து, சேமிப்பு உயரும். பிள்ளைகளால் நல்ல வருமானம் வரும். பெற்றோர்கள் கவலை தீரும். வரன் தேடும் ஆண்- பெண் இருவருக்கும் நல்ல வரன்கள் அமையும். விலகிச் சென்ற சொந்தங்கள் ஒன்றுசேரும். வியாபாரிகள் கடும்போட்டியை சந்தித்தபோதும் நல்ல லாபத்தைப் பெறுவார் கள். விலைவாசி ஏற்றம் காரணமாக பொது மக்களின் வசவுகள் வரலாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் பிரச்சினையை நேரடியாகக் கண்காணித்து தீர்வு காணவேண்டும். மற்றவர்களை நம்பினால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். அரசு ஊழியர்களின் பணிச் சுமை கூடும். அதிகாரிகள் ஆதரவு கிட்டும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். மாணவர் கள் பெற்றோர்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தருவார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகள் விலகிச் செல்வர்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 1, 3, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறவில் லையே என்று ஏங்குவோரின் கவலைகள் தீரும் மாதம். நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறப்பு கள் வகையில் இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். பொருளாதாரம் உயரும். பிள்ளைகளின் உயர்கல்வி திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் கொள்முதலை அளவோடு செய்தால் நல்ல விற்பனையை அடைவார்கள். கமிஷன் தொழில் செய்வோர் களுக்கு திடீர் லாபங்கள் வரும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். திருமணத்தடைகள் விலகி, பிள்ளைகளின் திருமணம் இனிதே நடைபெறும். காணாமல்போன பொருள்கள் உங்கள் வீட்டு பீரோவிலேயே காட்சி தரும். தொலைந்த பொருள் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமை உற்சாகத்தைத் தரும். மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவார்கள். வேலைதேடி அலுத்துப்போன இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும். சிலர் வெளிநாடு செல்வார்கள். அரசியல்வாதிகள் மேல்மட்டத்தில் காரியத்தை சாதிக்கும் மாதம்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் முழுவதும் டென்ஷன் இல்லாமல் செயல்பட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காணலாம். பிள்ளைகள் முன்வந்து உதவுவார்கள். பால்ய நண்பர் களை திடீரென காணும் சந்தர்ப்பம் வரும். புதிய வீடு, இடம் வாங்கும் திட்டம் நிறைவேறும். நல்ல வரன்கள் வீடு தேடிவரும். வயதான பெற்றோர்களுக்காக மருத்துவச் செலவுகள் வரலாம். தொழிலதிபர்கள் புதியதொழில் தொடங்குவார்கள். வெளிநாட்டு ஆர்டர்கள் வந்துசேரும். பணியாளர்களை எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் அதிக பணிச்சுமையைக் காண்பார்கள். சிலர் கேட்ட இடத்திற்கு மாறுதலும் வரும். வியாபாரிகள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை உத்தரவு வந்துசேரும். சகோதரர்கள் ஒற்றுமை கூடும். கோள்மூட்டிய மனைவி திருந்துவார். பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்டு திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். கடல்வாணிபம் செய்வோர் நல்ல லாபம் பெறுவார்கள். அரசியல்வாதிகள் தலைமையின் பாராட்டைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்க வேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத் துவக்கம் சுணக்கமாக இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் எதிர்பாராத விதமாக நல்ல வருவாய் வந்துசேரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வரவேண்டிய இனங்கள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாக முடிவாகும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தம்பதியர் நேரடித் தொடர்பில் ஒன்றுகூடி, பிரிக்க நினைத்தவர்களை ஆச்சரியப்பட வைப்பார்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபம் பெறுவார்கள். மொத்த கொள்முதல் வியாபாரிகள் கூடுதல் லாபம் பெறுவார்கள். வசூலாகாமல் இருந்த தொகைகள் கேட்காமலே வசூலாகும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் பணியில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிலருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் வரலாம். வேலை தேடுவோர் நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். சிலருக்கு இரண்டாவது மனைவி வரலாம். அதனால் லாபமும் கிட்டும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். கலைஞர்கள் நல்ல ஒப்பந்தங் களைப் பெறுவர். மாணவர்கள் அக்கறை செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். அரசியல்வாதிகள் கவனமாக செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்குப் பொன்னான மாதம். பொன்னும் பொருளும் வாங்க திட்டமிட்ட பெண்களின் எண்ணம் ஈடேறும். குடும்பத் தலைவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். பாகப்பிரிவினைமூலம் சொத்துகள் நல்ல விலைக்குச் செல்லும். வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில் நீண்டநாட்களாக தங்கிவிட்ட பிள்ளைகள் பெற்றோர்களைக் காணவருவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். குழந்தையில்லாத தம்பதியர் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபம் பெறுவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் லாபம் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் கிட்டும். வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலையைப் பெறுவார்கள். வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்லவேண்டும். சில இளைஞர்களுக்கு அரசு வேலை கிட்டும். பிள்ளைகள் விருப்பப்படி பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் உயர்வார்கள். பங்காளிகள் சண்டை நீங்கி ஒன்றுகூடுவார்கள். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் விலகிச் செல்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை வாட்டிவதைத்த கடன் தொல்லைகளிலிருந்து பலரும் விடுபடுவார்கள். அன்றாடப் பணிகளை தவறாமல் செய்வதால், அனைத்து பணிகளில் உள்ளவர்களும் நல்ல மதிப்பு, மரியாதையைப் பெறுவார்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். காலம் காலமாய் இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான தீர்வுக்கு வரும். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகி தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் வெளிமாநிலத்தில் மொத்த கொள்முதல் செய்ய போட்ட திட்டம் நிறைவேறும்; நல்ல லாபத்தைத் தரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியத்தையும் அடைவார்கள். சிலரது குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் திடீரென கைகூடும். பெண்பிள்ளை பருவவயதைக் கடந்தும் ருதுவாகவில்லையே என்று ஏங்கிய பெற்றோர்களின் கவலை தீரும். ஆசிரியர்கள், மாணவர்களால் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் கேட்ட இடமாற்றம் தாமதமாகும். அதுவும் நன்மைக்கே. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவு வீடுதேடிவந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வேங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் எடுத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்துவந்த வழக்குகள் சாதகமாகும். பெண்கள் வீட்டில் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் மாதம். நீண்ட காலமாக வீட்டிற்கு வராமல் ஒதுங்கியிருந்த மகளும் மருமகனும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வந்து பெற்றோர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவார்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பும் பொருளாதார உதவியும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையும் கூடும். வியாபாரிகள் அதிக லாபத் தையும், வாடிக்கையாளர்களின் ஆதரவையும் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாறுதலும் கிடைக்கப் பெறுவார்கள். அதிகாரிகள் ஆதரவும் கூடும். காவல்துறையினர் கூடுதல் வேலைப்பளுவைச் சந்திப்பார்கள். மகான்களின் தரிசனம் மகிழ்ச்சியைத் தரும். தடைப்பட்ட சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்கவேண்டும். எல்லா தரப்பு மக்களிடமும் குதூகலமும் மகிழ்ச்சியும் இருக்கும். தெய்வ பக்தியும், தன்னம்பிக்கையும் அதிக பலனைத் தரும். அரசியல் பிரமுகர்கள் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல தொழிலாளர்களை அடைவார்கள். உற்பத்தி இரட்டிப்பாகப் பெருகும். விற்பனையும் கூடும். பணவரவுகள் ஏதேனும் ஒருவகையில் வந்துகொண்டேயிருக்கும். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் அமையும். சிலர் தூரதேசப் புனித யாத்திரை மேற்கொள் வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். இறைவன் அருளும் கூடும். வேலையிழந்த அரசுப் பணியாளர்கள் மீண்டும் வேலையையும் பழைய நிலுவைகளையும் பெறுவார்கள். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கூடும். அதிகாரிகளாக இருப்பவர்கள் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சக ஊழியர்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம். வியாபாரிகள் கையிருப்பு சரக்குகளை நல்லமுறையில் விற்றுத் தீர்ப்பார்கள். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்று கூடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவேண்டிய மாதம். வழக்குகள் உள்ளோருக்கு சாதகமான தீர்ப்பு வரும். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வேங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்து, உயர்பதவிகளில் உள்ள சிலர், பதவி ஓய்விலிருந்து கூடுதல் காலக்கெடு பெறுவார்கள். பணிச்சுமை கூடும். ஓய்வுக்காலம் தள்ளிச் செல்லும். மக்களால் நன்மையடையும் மாதம். மனைவியர் கணவர் பேச்சைக்கேட்டு, சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிப்பை உயர்த்துவார்கள். மகள், மருமகன் சண்டை விலகி தம்பதியரின் ஒற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலதிபர்கள் கூடுதல் உற்பத்தியைப் பெறுவார்கள்; பணியாளர்களின் நலனில் கவனம் செலுத்துவார்கள். மறைமுகமான போட்டிகளால், வியாபாரிகள் சற்று லாபத்தை விட்டுக்கொடுத்து விற்பனையைப் பெருக்குவார்கள். பெண்கள் தங்கள் பெயரில் சொத்து வாங்கிச் சேர்ப்பார்கள். அரசு ஊழியர்கள் பணிச்சுமை கூடியபோதிலும் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சொத்துப் பிரிவினை சுமுகமாக இருக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு மகான்களின் தரிசனம் கிட்டும். உடல்நிலையில் இருந்துவந்த சோர்வு நீங்கும். மரியாதை நிமித்தமாக பெரிய மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கூடிவரும். சில அரசியல் பிரமுகர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :