Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
 ................................................................
சாந்திக் கிரியைகள்!
 ................................................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
 ................................................................
கடவுளைத் தேடி... 22
 ................................................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
 ................................................................
ஞாயிறு போற்றுவோம்!
 ................................................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
 ................................................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
 ................................................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
 ................................................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
 ................................................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
 ................................................................
01-01-17

பி. ராஜலக்ஷ்மி

சூரியன் பிரத்யட்ச மான தெய்வம். எல்லா ருமே கண்களால் கண்டு வணங்கக்கூடிய தெய்வம். சூரிய வழிபாடு அனைவருக்கும் பொதுவான வழிபாடு. உலக உயிர்கள் அனைத்தையும் தன் ஒளியினால் வாழவைப்பவர் சூரியன்.

அபயம் அல்லது எதற்கும் அஞ்சாத தன்மையை அளிப்பவர் நாராயணன் என்பது சித்தாந்தம். உயிரினங் களை அச்சத்திலிருந்து காப்பவரே ஆதித்யன் என்ற சூரிய பகவான். இருள் சூழ்ந்திருக்கும்போது எல்லா உயிர்கள் அச்சத்தினால் மருண்டிருக்கின்றன. சூரியன் உதித்தவுடன் ஒளியினால் அச்சங்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனாலயே சூரிய நாராயணன் என்று பெயர் விளங்குகிறது.

ஆதிசங்கரர் ஆறுவித முக்கிய தெய்வங்களாகிய கணபதி, சுப்ரமணியர், அம்பிகை, சிவன், விஷ்ணு, சூரியன் என்று உபாசனா மார்க்கத்தை நாம் எல்லாரும் உய்யும் பொருட்டு உபதேசித்தருளினார். நமக்கு எந்த தெய்வத்திடம் ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த தெய்வத்தையே துதிக்கலாம். முறையாகத் துதித்தால் எந்த தெய்வமும் அருள்புரியும் என்று நிலைநாட்டினார்.

சூரியனை விச்வரூப விராட்புருஷனாகிய விஷ்ணுவின் கண்களிலிருந்து தோன்றி வந்தவர் என்று சொல்வார்கள். அந்த ஆதிபுருஷனுடைய நேத்திரம் சூரியன் என போற்றப்படுவதாலேயே சூரியன் நமது கண்களுக்கும் அதிஷ்டான தெய்வமாக இருக்கிறார்.

சௌரம் என்ற சூரிய வழிபாட்டில் காயத்ரி ஜெபம் முக்கியமானது. வேதங்களில் சூரிய வணக்கமும் அடங்கியுள்ளது. உடல் ஆரோக் கியத்திற்காகவும், கண் பார்வை சிறப்பாக இருக்கவும் சூரியனை வழிபடுகிறார்கள். ஞானம் வேண்டியும் வழிபடலாம். ஆஞ்சனேய சுவாமி சூரியனுடன் சஞ்சரித்துக் கொண்டே ஞானோபதேசம் பெற்று "நவவியாகரண பண்டிதன்' என்ற பெருமையைப் பெற்றார். மகரிஷி யாக்ஞ வல்கியர் சூரியனை உபாசித்து சுக்ல யஜுர் வேதத்தைக் கற்றார் என்பதை அறிய முடிகிறது. திரேதா யுகத்தில் சூரியனைதான் முதன்மை தெய்வமாக வழிபட்டு வந்தார்கள்.

சூரிய வம்சத்தில் அவதரித்த ராமபிரான் அகத்திய முனிவரிடம் "ஆதித்ய ஹ்ருதயம்' என்ற மந்திரத்தை உபதேசம் பெற்று, சூரிய வழிபாடு செய்தே இராவணவதம் என்ற அரிய செயலைச் செய்து ராஜ்யஸ்ரீயை அடைந்தார் என்கிறது இராமாயணம்.

சூரிய பகவான் ஞானத்தையும் ஐச்வர்யத்தையும் கொடுப்பவர். சத்யபாமாவின் தந்தை சத்ராஜித் சூரியனை உபாசனை செய்ய, சூரியன் அவனுக்கு எதிரே தோன்றி, ""என்ன வேண்டும்'' என்று கேட்டார். அதற்கு சத்ராஜித், ""தாங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் ச்யமந்தக மணியைத் தரவேண்டும்'' என்று கேட்டான். உடனே சூரியன் அந்த மணியைக் கழற்றிக் கொடுத்துவிட்டார். அந்த மணியை வைத்திருப் பவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு பாரம் தங்கம் கிடைக்குமாம்.

அப்படிப்பட்ட ஐச்வர்யம் சூரிய உபாசனை மூலம் சத்ராஜித் மன்னனுக்குக் கிடைத்தது.

சூரிய பகவான் அன்னத்தையும் அருள்பவர். மகாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்களுக்கு உணவு வேண்டுமே? குறிப்பாக பீமசேனனுக்கு வயிறு நிரம்பவேண்டுமே என்று கவலை வந்தது வியாசருக்கு. உடனே பாண்டவர்களுக்கு சூரியன் பேரில் ஒரு சுலோகத்தை உபதேசம் செய்தார். அத்தனைப் பேரும் அந்த சுலோகத்தைச் சொன்னவுடன், சூரியன் அவர்கள் எதிரே தோன்றி அட்சய பாத்திரத்தை அளித்தார். எவ்வளவு அன்னம் வேண்டுமானாலும் அது கொடுக்கும். சகல பதார்த்தங்களையும் கொடுக்கும்.

அந்த பாத்திரத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையானவற்றை அருந்தி, தங்களைத் தேடி வந்தவர் களையும் உபசரித்தார்கள் பாண்டவர்கள். இப்படி ஐச்வர்யம், ஆரோக்கியம், ஞானம், அன்னம் என்று அனைத்தையும் தருபவர் சூரிய பகவான்.

சூரியனுக்கென்று சிறப்புப் பெற்ற ஆலயங்களும் இருக்கின்றன. கும்பகோணத் திற்கு அருகிலுள்ள சூரியனார் கோவில் மிகவும் விசேஷமானது.

பாஸ்கரர் என்று பெயர் கொண்ட சூரியனை மையமாகக் கொண்டு பாஸ்கரராஜபுரம் என்ற தலத்தில்தான் தேவி உபாசகரான பாஸ்கர ராயர் இருந்தார் என்று பெருமையுடன் கூறுகிறார்கள்.

குடவாசல் அருகே பருத்தியூர் தலத்தி லுள்ள ஆலயத்தில் சூரிய பகவான் அருள்பாலிக்கிறார். தற்போது லால்குடி என்று அழைக்கப்படும் திருத்தவத்துறை க்ஷேத்திரத்தில் எல்லா கிரகங்களும் சூரியனையே நோக்கி அருள்பாலித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டைத் தவிர வேறுபல மாநிலங் களிலும் சூரிய பகவானுக்கு ஆலயமும் வழிபாடும் இருப்பதைக் காணமுடிகிறது. புவனேஸ்வரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள "கோனார்க்' சூரியன் கோவில் மிகவும் பிரசித்தமானது. கங்குல மன்னர்களால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது ஒரு கலைக்கோவிலாகவே திகழ்கிறது. கிழக்குநோக்கி அமைந்துள்ள கோனார்க் ஆலயம் ஒரு பெரிய தேரின் வடிவமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் 12 சக்கரங்கள் உள்ளன.

இந்த தேரை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருப்பது தனிச்சிறப்பு. சூரியனுக்கு உகந்த எருக்கஞ்செடிகள் ஆலயத்திற்கு அருகில் இருப்பது வியப்பு. காஷ்மீரத்தில் மார்த்தாண்டம் என்ற இடத்தில் சூரியன் கோவில் இருந்ததாகச் சொல்வர்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதியன்று சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் மகர சங்கராந்தி எனப்படும். இந்த நாளை நாம் பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். அன்றைய தினம் சூரிய நாராயண பூஜை செய்து வழிபடுகிறோம். நிலத்தை உழுது நீர் பாய்ச்சி நெல், கரும்பு பயிரிடும் விவசாயிகள் பூமித்தாய் அளித்ததை பொங்கலாகப் படைத்து சூரியனை வழிபடுகின்றனர். "பொங்கலோ பொங்கல்' என்று அனைத்து மக்களுமே ஆனந்தமாக சூரியனை வழிபட்டு மகிழ்கின்றனர்.

"யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ, அந்த சுடர்க்கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது சூரிய காயத்ரியின் பொருள். சூரியனை பொங்கல் திருநாளில் வழிபட்டு ஞானமும் ஆரோக்கியமும் பெறுவோம்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :