Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
......................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
......................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
......................................
சாந்திக் கிரியைகள்!
......................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
......................................
கடவுளைத் தேடி... 22
......................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
......................................
ஞாயிறு போற்றுவோம்!
......................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
......................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
......................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
......................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
......................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
......................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
......................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
......................................
01-01-17ருசமயம் கயிலையில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே சக்தி பெரிதா, சிவம் பெரிதா என்ற வாக்குவாதம் எழுந்து முற்றியது. இதில் கோபமடைந்த ஈசன் தேவியை, ""உக்ரகாளியாகப் பிறக்கக்கடவது'' என்று சபித்தார். அதனால் கலக்கமடைந்த ஈஸ்வரி, ""சுவாமி! வாதம்புரிந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்னை மன்னித்து சாபவிமோசனம் அளியுங்கள்'' என்று மனமுருகினாள்.

அதற்கு பரமேஸ்வரன், ""பார்வதி! நீ உக்ரகாளியாக அவதரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. பூலோகத்தில் அரக்கர்கள் தொல்லை அதிகரித்து தேவர்கள் தத்தளிக்கிறார்கள். நீ அரக்கர்களை அழித்து தேவர்களைக் காக்கவே திருவிளையாடல் புரிந்து சாபமிட்டோம்.

அரக்க வதம் முடிந்தபிறகு, தில்லையில் உம்மை ஆட்கொள்வோம்'' என்று விளக்கினார்.

நாதனின் விளக்கம்கேட்டு மனமுவந்த தேவி மறுகணமே பூலோகத்தில் உக்ரகாளி யாக அவதரித்தாள். அரக்கர்களை அழித்து தேவர்களைக் காத்தாள். அவதார நோக்கம் நிறைவேறியது. அதன்பின்பும் உக்ரம் தணியாமல் ஆவேசமாக இருக்கவே, காளியின் உக்ரத்தைத் தணிக்கவேண்டி தேவர்கள், சிவபெருமானை சரணடைந்தனர்.

அவரும் உக்ரம் தணிய நடனப்போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.

அதன்படி சிவபெருமானுக்கும் உக்ரகாளிக்கும் இடையே பதஞ்சலி, வியாக்கிர பாத முனிவர்கள், தேவர்கள் முன்னிலையில் போட்டி தொடங்கியது.

அவர் ஆடும் நடனத்தை அப்படியே காளியும் ஆடவேண்டுமென்பது போட்டி விதிகளுள் ஒன்று. வெற்றி- தோல்வியை தீர்மானிக்க முடியாதபடி கடும்போட்டி நிலவியது.

அப்போது ஈசன் தன் காதிலிருந்த குண்டலத்தைக் கீழே விழச்செய்தார். அதை தன் வலது காலால் எடுத்து, காலை உயரே தூக்கி காதில் பொருத்தினார். பெண்ணான தேவி சபை நடுவே அவ்வாறு செய்ய இயலாததால் மேலும் ஆவேசமடைந்து ஊரின் வடக்குப் பகுதியில் போய் அமர்ந்துகொண்டாள். அப்போது அங்குவந்த பிரம்ம தேவன் பாடல்பாடி காளியை சாந்தப்படுத்தினார். பின்னர் காளிதேவியை சிவபெருமான் ஆட்கொண்டார்.

நடராஜர் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களம் அமைந்திருந்த இடமே தற்போது, திருக்களப்பூர் என்றழைக்கப்படுகிறது. (சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகேயுள்ள பஞ்சசபைத் தலங்களுள் ஒன்றான திருவாலங்காடு தலத்திலும் சிவபெருமான் ஊர்த்துவதாண்டவம் ஆடி உக்ரகாளியின் சினத்தை தணித்ததாகப் புராணம் உண்டு). களப்பூரில் அமையப்பெற்றுள்ள ஆலயம் சிதம்பரம் சிவாலயத்திற்கு முற்பட்டதாகக் கூறப் படுகிறது. ஆகவே இத்தலம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.""இங்குள்ள அலங்கார மண்டபத்தில் வைத்து உற்சவர்களுக்கு தீபாராதனை காண்பித்த செய்தி சுரங்கப்பாதை வழியே சிதம்பரம் கோவிலுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதன்பின்னரே அங்கு கொடியேற்றி, திருவிழா தொடங்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது'' என்கிறார்கள் இவ்வூர்ப் பிரமுகர்களான ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ரவி, ராமானுஜம், சுப்பிரமணியன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர்.

சில ஆண்டுகளுக்குமுன்பு ஒருநாள் இரவில் திருடர்கள் கோவில்பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளேபுகுந்து நடராஜர் உள்பட உற்சவச் சிலைகளைத்  தூக்கிக்கொண்டு வெளியேற முயன்றுள்ளனர்.

அப்போது வாயிற் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதாம். இதனால் வெளியேற முடியாமல் தவித்த திருடர்கள் சிலைகளை அப்படியே போட்டுவிட்டு சுவரேறி தப்பிச்சென்றுள்ளனர். மறுநாள் காலையில் குருக்கள் வந்தபோது, கதவுகளைத் திறக்க முடியவில்லை. பின்னர் திட்டிவாசல் வழியாகச் சென்றவர் சிலைகள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து காவல்துறையில் புகார் கூறியுள்ளார். இது பற்றி விசாரிக்க காவல்துறையினர் வந்தபோது, பூட்டப்பட்டி ருந்த கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டனவாம். இச்சம்பவத்தை இப்பகுதி மக்கள் இறைவனின் மகிமையாகச்சொல்லி மெய்சிலிர்க்கின்றனர்.

கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சிசெய்த ராசேந்திர சோழன் இக்கோவிலைப் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ததாகக் குறிப்புகள் உள்ளன. தற்போது மீண்டும் திருப்பணிசெய்து கும்பாபிஷேகம் நடத்தவுள்ளனர். பக்தர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம்.இவ்வாலய இறைவன் வனத்தீஸ்வரர்; இறைவி பாலாமணியம்பிகை. விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சனி பகவான், நவகிரக சந்நிதிகளும் உள்ளன. திருமணத்தடை அகலவும் மகப்பேறு கிட்டவும் சுபகாரியங்கள் கைகூடவும் இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் இருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர்; சிதம்பரத்திற்கு மேற்கே 40 கிலோமீட்டர்; விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலையில், காடுவெட்டிக்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திருக்களப்பூர் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :