Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
 ................................................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
 ................................................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
 ................................................................
சாந்திக் கிரியைகள்!
 ................................................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
 ................................................................
கடவுளைத் தேடி... 22
 ................................................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
 ................................................................
ஞாயிறு போற்றுவோம்!
 ................................................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
 ................................................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
 ................................................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
 ................................................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
 ................................................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
 ................................................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
 ................................................................
01-01-17
வியாசரால் பெரிதும் புடம் போடப்பட்ட நிலையிலிருந்த ஜனமேஜெயன் தொடர்ந்து, ""அடுத்தடுத்து என்ன நடந்தது?'' என்று கேட்டான்.

""கூறுகிறேன்... எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகக் கூறிமுடிப்பதுதான் நல்ல குருவுக்கு அழகு...'' என்ற வியாசர் தொடர்ந்து கூறத்தொடங்கினார்.

""சுக்கிராச்சாரியார் பிரகலாதனால் சமாதானமடைந்து, அசுரர்களைத் தொடர்ந்து வழிப்படுத்து வது இனி என் கடமை என்று கூறியதுடன், அவர் களுக்கு அப்போது ஒரு அறிவுரையும் வழங்கினார்.

"என் அருமை சகாக்களே...! இன்று விண்ண கத்து மானுடம் அமிர்தம் உண்டதால் தேவம் என்றும், அது கிடைக்கப்பெறாதவர்கள் அசுரம் என்றும் இரண்டு கூறாகப் பிரிந்துவிட்டது... உண்மையில் தவம் மிகுந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களே தேவர்கள். அப்படிப் பார்த்தால் மிகுந்த தவத்தால் சிவபெருமானிடம் சஞ்ஜீவினி மந்திரம் பெற்று மும்மூர்த்திகளுக்கு இணையானவன் என்றாகிவிட்ட நானும் ஒரு தேவன்தான். அதேசமயம் தேவகுருவாக வியாழன் இருப்பினும், என்னைப்போல மாறுவேடம் போட்டு வந்து உங்களிடையே ஒரு போலியாக நடமாடிய வியாழன் ஒரு அசுரன்தான்.

அசுரம் என்பதும் தேவம் என்பதும் குணத்தின் குறியீடுதானேயன்றி பிறப்பின் குறியீடு அல்ல... எனவே நாம் தேவன்போல் இல்லாமல் போய்விட்டோமே என்று வருந்தாதீர்கள்.

செயலே நம் அடையாளத்தை தீர்மானம் செய்கிறது. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்து, எப்போது எனக்கு சிவபெருமானால் சஞ்ஜீவனம் கிடைத்ததோ, அப்போதே எனக்கு பெரும் காலஞானமும் ஏற்பட்டு விட்டது.

காலஞானம் என்றால் அடுத்து என்ன நடக்கும்? அது எதனால் யாரால் நடக்கும்? அது எப்படி நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதுதான்... இது எப்படி எனக்குக் கிடைத்ததென்று நீங்கள் கேட்கலாம். நான் இப்போது உங்கள் குருவாக இருந்தாலும், மும்மூர்த்திகளுக்கு இணையானவன். அவர்களே காலத்தை வழிநடத்துகின்றவர்களாவர். விஷ்ணு உறக்கத்தில் இருப்பதுபோல நடித்தபடி பெரும் சிந்தனையோடு பிரம்மாவின் மூலம் படைப்புத்தொழிலைச் செய்கிறார்.

அப்படி படைக்கப் பட்டவைகளில் காக்க வேண்டியதை அவரே காத்துவிடுகிறார். அழிக்க வேண்டியவற்றை ஈசனார்வசம் ஒதுக்கிவிட, ஈசனும் அழித்துக் காக்கிறார்.

மொத்தத்தில் இம்மூவருமே மூன்று காலகதியாகவும் உள்ளனர்.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதே அந்த கால வரையறை! நான் இப்போது அவர்களுக்கான பலம் பெற்றுவிட்டபடியால், அவர்கள் செயல்களை யாரும் கூறாமலே என்னால் உணரமுடிகிறது. அருமை சகாக்களே! அப்படி நான் உணர்ந்ததன் அடிப்படையில் நின்று கூறுகிறேன். இனி வரப்போகும் பல்லாயிரம் ஆண்டுகள் தேவர்களுக்கான ஆண்டுகளே! நீங்கள் எவ்வளவு முயன்றாலும் தேவர்களை வெல்ல முடியாது. ஆனால் ஒதுங்கிச்சென்று, அவர்கள் செய்த தவத்தை செய்தபடி பொறுமையோடு காத்திருங் கள். சாவர்ணிக மனுவின் கால கட்டம் என்கிற ஒரு கட்டம் வர உள்ளது. அப்போது பிரகலாதா, உன் வம்சாவழியில் உன் பேரன்களில் ஒருவன் மகாபலி என்கிற பெயரோடு தோன்றி அந்த காலகட்டத்தில் ஆட்சிக்கு வருவான். அவனிடமிருந்து ஸ்ரீவிஷ்ணு மூவுலகையும் யாசகம் பெற்றிடும் ஒரு கட்டமும் உள்ளது. அந்த யாசக பயனுக்குப்பிறகு அசுரர்களான நமக்கே பல யுகங்கள் சக்தி உண்டு. அதுவரை நீங்கள் பொறுமையாக அறத்தோடும் தவத்தோடும் இருங்கள்' என்று கூறி முடித்தார் சுக்கிராச்சாரியார்.ஆனால் அதை பிரகலாதனைத் தவிர மற்றவர்கள் ஏற்கவில்லை.

"குருவே! என்ன பேச்சு இது? எப்போதோ வரப்போகிற யுகம்வரை நாம் அமைதியாகப் போகவேண்டுமா? அதற்குள் இந்த தேவர்கள் மேலும் பெரும் பலம்பெற்றுவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? எங்களையெல்லாம் வெறுமனே அடங்கிப் போகச்சொன்னால் நாங்கள் கேட்கமாட்டோம் என்றே நீங்கள் எங்களை அமைதிப்படுத்த சாவர்ணிக மனுவின் காலம்வரை பொறுத்திருக்கச் சொல்கிறீர்கள். வெற்றியோ தோல்வியோ- மோதுவதுதான் வீரனுக்கு அழகு. நாமெல்லாம் வீரர்கள்...' என்றான் ஒரு அசுரன்.

"இல்லை... இப்படி அவசரப்பட்டு உணர்ச்சி வசப்படாதீர்கள். நான் சொல்வது சத்தியம். நமக்கு இப்போது பலம் கிடையாது என்பதைவிட, தேவர்கள் நம்மைவிட பலசாலிகள் என்பதே சரி. எப்போதும் மிகுந்த பலமுடையவர்களே வெற்றி பெற்றிடுவர். நான் இப்போது உங்கள் குரு சுக்கிரன் மட்டுமல்ல... சஞ்ஜீவினி எனும் மந்திரத்தால் காலஞானம் பெற்று விட்ட ஒருவன். நான் சொல்வதைக் கேளுங்கள்' என்று சுக்கிராச்சாரியார் சொன்னது மட்டுமின்றி, அவர்களுக்கு அங்கே தன் சக்தியால் ஒரு காட்சியைக் காண்பித்தார்.

கழுதை ஒன்று இடிந்த சுவர் அருகே படுத்தபடி இருந்தது. அங்கே பெரிய அளவில் வெளிச்சமும் இல்லை.

"இந்தக் கழுதையை எதற்குக் காட்டுகிறீர்கள்' என்று அசுரன் ஒருவன் கேட்டான்.

"இந்தக் கழுதைதான் மகாபலியாக- பிரகலாதன் பேரனாக பிறக்கவுள்ளது. இப்போது இது கழுதையாக இருக்கவும் சரியான காரணம் உள்ளது. கழுதைதான் சுமக்கும். அரசனும் ராஜ்ய பாரத்தை சுமக்கும் ஒருவனே!' என்றார் சுக்கிராச்சாரியார்.

அதைக்கேட்டு அசுரர்கள் சிரித்தனர்.

"பிரகலாதரே... இனியும் நாம் இவர் பேச்சைக் கேட்டால் காலாகாலத்துக்கும் இப்படியேதான் இருப்போம். இவருக்கு நம்மேல் உள்ள கோபம் போகவில்லை. அதனால்தான் நம்மை இப்படி இவர் கட்டிப்போட்டு அழிக்க முயற்சிக்கிறார். இவர் சொல்வதைத்தான் வியாழ குருவும் சொன்னார். இவருக்கு வரம் கிட்டவும் இவரும் தேவர்கள்போல சிந்திக்க ஆரம்பித்து விட்டார்' என்றனர்.

அதற்குமேல் சுக்கிராச்சாரியார் ஏதும் பேசவில்லை. எப்போதும் பேச்சு என்பதற்கு ஒரு அளவும் எல்லையும் உள்ளது.

அதைக் கடந்தால் பொருள் மாறிவிடும். சுக்கிராச்சாரியாரும் சிரித்தார்.

"இப்போதும் சொல்கிறேன்... உங்கள் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் பேச்சைக்கேட்டால் வரும் காலம் இழப்புகள் இன்றி இருக்கலாம். இல்லாவிட்டால் பெரும் இழப்புகளுக்கு ஆளாக வேண்டும். ஆளாக வேண்டும் என்பதே விதி. அதனால் தான் நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை. விதியாகிய காலமறிந்த நான் இதை எதிர்பார்த்தே பேசினேன். இனியும் இப்படியே பேசுவேன். போகப்போக மற்றவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்' என்று முடித்துக்கொண்டார்.

அசுரர்களும் பிரகலாதன் தலைமையில் தேவர்களோடு மோத ஆரம்பித்தனர்.

ஆனால் எந்த பயனும் இல்லை. தேவர்களே தொடர்ந்து வெற்றி பெற்றிடத் தொடங்கினர்.

இதனால் இந்திரன் அகமகிழ்ந்து போனான். இந்திரனுடைய வெற்றிக்குப் பின்னால் இருந்தது உண்மையில் யார் தெரியுமா?''

வியாசர் தான் கூறிவந்த கதையை ஒரு கட்டத்தில் நிறுத்தியவராகக் கேட்டார். ஜனமேஜெயனும் யாரது என்பதுபோல பார்த்தான்.

""ஜனமே ஜெயா! இந்திரன் கெட்டிக் காரன். எப்போதும் சந்தோஷமும் வெற்றியும் ஒருவரிடம் நிலைத்திருக்க வேண்டுமானால் தேவியின் அருள்  முக்கியம். அவளருளே நவசக்திகளையும் தரும். நவசக்திகளும் இருந்தாலே எடுத்த காரியம் யாவிலும் வெற்றி கிடைத்திடும். எனவே இந்திரன் தேவியை வேண்டி முற்றாக அசுரர்களை ஒழிக்கும்படி கோரிக்கை விடுத்தான்.

"அம்மா... அசுர இனமே இனி இருக்கக்கூடாது. அவர்களைப் பூண்டோடு அழித்து விடு. அதுவே தேவர்கள் தலைவனான எனது கோரிக்கை' என்றான்.

தேவியும் தன் பரிவாரங்களுடன் புறப்பட்டுவிட்டாள்.''

வியாசர் இவ்வாறு கூறி நிறுத்தவும் ஜனமே ஜெயனிடம் பெரும் வியப்பு.

""குருவே, என்ன இது விந்தை! நமக்கு அருள்தரும் அன்னை நம்மை காத்திட தானே நேரில் வந்தாளா?'' என்று கேட்டிட, ""ஆம் ஜனமேஜெயா... இதை எல்லாம்கூட சுக்கிராச்சாரியார் உணர்ந்திருந்ததால்தான், பாதாள லோகத்துக்கு அனைவரையும் போகச்சொல்லி அடக்கமாய் இருக்கச் சொன்னார். ஆனால் விதி அவர்கள் அடக்கப்பட வேண்டும் என்று இருப்பதால் அவர்கள் அவர் பேச்சைக் கேட்கவில்லை...''

""சரி; பிறகு என்னாயிற்று?''

""என்னாகும்... பக்குவமான பிரகலாதன் இம்முறை சுக்கிராச்சாரியாரின் எச்சரிக் கையை எண்ணிப் பார்த்தவனாக, தேவி யுத்த முழக்கத்தோடு வரவும் அவன்தான் முன்வந்து தேவியைப் பணிந்து நின்றான்.

தேவியும் அவனை கோபத்தோடு பார்த் தாள். பிரகலாதன் அதைப்பார்த்து பயந்து விடாமல் தேவியை முதலில் துதித்தான். பின் தேவியிடம் நியாயம் கேட்கத் தொடங்கினான்.

"அம்மா... இந்திரனின் கோரிக்கைக்காக எங்களை அழிக்க நீ நேரிலேயே வந்து விட்டாயே. நான் உன்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். நீ என்ன தேவர்களுக்கு மட்டும்தான் தாயா? எங்களுக்குக் கிடையாதா? எங்களை அழிப்பதன் மூலம் நீ நடுநிலை தவறியவள் என்று ஆகிவிடமாட்டாயா? நாங்கள் ஏன் பேதமுற்று அசுரர் என்று முதலில் அழைக்கப்பட வேண்டும்? தேவர்கள்தான் தலைக் கனத்தோடு தங்களை உயர்த்திக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் உன்னை வணங்கிவிட்டதற்காகவே நீ அவர்கள் பக்கம் சாய்ந்து எங்களை அழிக்க முற்பட லாமா?

நீ எங்களுக்கும் தானே தாய்... நாங்கள் ஏன் போராடுகிறோம்... அமிர்தம் கிடைக் காததால்தானே? பாரபட்சமாக அப்போது தேவர்கள் நடந்து கொண்டது சரியா?' என்று பிரகலாதன் தேவியிடம் கேட்டான்.''

(தொடரும்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :