Add1
logo
மோசடி வழக்கில் - மதன் மீண்டும் கைது || அதிமுக ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும் - மு.க.ஸ்டாலின் || அரசாணைக்கு தொழில் கல்வி ஆசிரியர்கள் வரவேற்பு || ஆதித்தனார் நினைவு நாள் இன்று - உருவச்சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கிறார் || தமிழக மீனவர்கள் 6 பேரை - இலங்கை கடற்படை கைது செய்தது || தமிழகத்தில் மோடிக்குக் கிடைத்த 2 அடிமைகள் - துரைமுருகன் பேச்சு || இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி || கொரிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு! || ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகன் ரோஜர் மூர் காலமானார் || சிதம்பரத்தில் தனியார் பள்ளிகளின் கட்டாய கல்வி கட்டணத்தை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் || காக்களூர் பால்பண்ணையில் புதிய கட்டிடத்தை திறந்துவைத்த ராஜேந்திரபாலாஜி ( படங்கள் || பைக் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி || தமிழக கல்வி முறைக்குள் சிபிஎஸ்சியை கொண்டுவருவது மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது -கனிமொழி பேட்டி ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
......................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
......................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
......................................
சாந்திக் கிரியைகள்!
......................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
......................................
கடவுளைத் தேடி... 22
......................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
......................................
ஞாயிறு போற்றுவோம்!
......................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
......................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
......................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
......................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
......................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
......................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
......................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
......................................
01-01-17டி.ஆர். பரிமளரங்கன்

மிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புப் பெறுகின்றன. அந்தவகையில் மகிமைகள் நிறைந்த மாதமாகத் திகழ்கிறது தை மாதம். தேவர்களின் பகல் பொழுது ஆரம்பமாகும் புனித மாதம் இது. தை முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழிவரை இரவுப் பொழுதாகவும் திகழ்கிறது என்று புராணங்கள் கூறுகின்றன.

சூரியன் தன் பயணப்பாதையை தெற்கிலிருந்து வடக்கே மாற்ற ஆயத்தமாகிறான். இதனை உத்தராயன புண்ணிய காலம் என்பர். இந்நாளில்தான் பொங்கல் விழா கொண்டாடுகிறோம்.

இந்தப் பொங்கல் திருநாளில்தான் விசுவாமித்திரர் சூரியனைப் போற்றி காயத்ரி மந்திரத்தை இயற்றினார்.

தை மாத முதல் நாள்தான் கேரளாவில் மகர மாதம் தொடங்குகிறது. அன்றைய தினம் சபரிமலையில் சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சிதந்தருள்வார்.

தைப்பொங்கலன்று சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுவதுபோல, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் படைத்து வழிபடுவார்கள். இக்கோவிலில் தினசரி உச்சிக்கால பூஜையின்போது, மடப்பள்ளியில் வெண்கலப்பானையில் பிரசாதங்கள் தயாரித்து முருகனுக்குப் படைப்பார்கள். ஆனால், ஆண்டுக்கு ஒருநாள் தைப்பொங்கல் நாளில் மட்டும் மண்பானையில் பொங்கல் தயாரித்து படைக்கப்படும். பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கும் அதனைப் பிரசாதமாக வழங்குவர்.

பொதுவாக வைணவத் திருத்தலங்களில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் பெருமாள் அதிகாலையில் சொர்க்கவாசலைக் கடக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்பொழுது பக்தர்களும் உடன்செல்வார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்திலுள்ள ஆதிரங்கம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள்  தைப்பொங்கல் அன்று மாலையில் சொர்க்கவாசலைக் கடக்கிறார். வருடத்தில் அன்று ஒருநாள் மட்டும் மூலவர் வெண்ணெய்க் காப்பில் பக்தர்களுக்குக் காட்சிதருகிறார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணமடத்தின் அருகிலுள்ளது ஸ்ரீகங்காதேஸ்வரர் ஆலயம். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் திருமேனிமீது பொங்கல் திருநாளன்று மட்டும் சூரியன் மாலை 5.45 முதல் 6.00 மணிவரை தன் ஒளிக்கிரணங்களைப் படரவிட்டு வழிபடுகிறான்.

மகர சங்கராந்தி என்று போற்றப் படும் தைப்பொங்கலன்றுதான், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோவில் வளாகத்திலிருக்கும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலையை சோமசுந்தரேசப் பெருமான் நடத்தியருளினார்.

ஒடிசா மாநிலத்தில் மகர சங்கராந்தியை ஒட்டி சாம்பா தசமி கொண்டாடப்படுகிறது. சாம்பா தசமி விரதம் சூரிய வழிபாடாகவும் அனுசரிக்கப்படுகிறது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது, வளர்பிறை தசமி நாளில் இவ்விரதத்தினை அம்மாநில மக்கள் மேற்கொள்கிறார்கள். அப்போது அங்கு ஓடும் சந்திரபாகா நதியில் நீராடி சூரியனுக்குப் பொங்கல் படைத்துப் பூஜிப்பார்கள்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் நமக்கு பால் கொடுத்து உதவும் பசுவையும், உழவர்களுக்கு உழைக்கும் காளையையும் நீராட்டி அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதனை கிராமப்புறங்களில் காணலாம். காமதேனுவின் வாரிசான பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். எனவே மாட்டுப் பொங்கலன்று கோமாதா என்று போற்றப்படும் பசுவை வழிபட்டால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும். சிவபெருமானின் வாகனமான காளையை வழிபட சிவனருள் கிட்டும் என்பர்.

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல் மலைவாழ் மக்கள் ஆட்டுப் பொங்கல், எருமைப் பொங்கல் எல்லாம் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் முதுமலை வனப்பகுதியில் வன பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாவலர்கள் விநாயகப் பெருமான் உருவத்தை எழுந்தருளச் செய்து, வனப்பகுதியில் பொங்கல் விழா கொண்டாடுவர். இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், அந்த விநாயகர் பூஜையை அங்குள்ள யானைகள் சூழ்ந்திருக்க தலைமை யானை ஒன்று பூஜைக்குரிய மலர் மாலையை விநாயகருக்குச் சூட்டும். பூஜைக்குரிய மணியை துதிக்கையில் எடுத்து அசைத்து ஒலி எழுப்பும். பிறகு பெரிய தாம்பாளத்தில் சூடம் ஏற்றி வைக்க, தீபாராதனை காட்டும். அங்கு போடப்பட்டிருக்கும் படையலுக்கு நீர் விளாவும். இப்படி மனிதர்கள் செய்வதுபோல் யானை பூஜை செய்யும் சிறப்பினை ஒவ்வொரு மாட்டுப் பொங்கலன்றும் தரிசிக்கலாம்.

மாட்டுப்பொங்கல் நாள்தான் "உலகப் பொதுமறை' என்ற திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தினம். "ஏரின் பின்னால்தான் உலகம் சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர் பெருமான். (அதிகாரம் 104- உழவு).

அந்த ஏர்முனையை முன்னேந்தி செல்பவை மாடுகள். அந்த மாடுகளை கடவுளாகக் கருதி வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல்.

கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவர் பெருந்தகை, காதலுடன்அவ்வரிய நூலை நிறைவு செய்கிறார்.

என்று முதல் குறளை ஆரம்பித்து, என்று 1,330-ஆவது குறளை நிறைவு செய்கிறார்.

தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்தான "அ'கரத்தில் தொடங்கும் திருக்குறள் கடைசி எழுத்தான "ன்' என்பதில் முடிகிறது. பழந்தமிழர் இலக்கியத்தில் "அ'வில் தொடங்கி "ன்'-ல் முடிகிற ஒரே நூல் திருக்குறள் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

திருவள்ளுவருக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோவில்கள் உள்ளன. சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள தலமரம் இலுப்பை மரம். இங்குதான் வள்ளுவர் அவதரித்தாகச் சொல்லப்படுகிறது. அவர் அவதரித்த இலுப்பை மரத்தடி இன்றும் உள்ளது. அதற்கு செப்புத்தகடு காப்பிட்டு பாதுகாத்திருக்கிறார்கள். வள்ளுவரின் தாய்- தந்தையான ஆதி- பகவன் இருவரின் சிலையும் உள்ளது. இந்த இலுப்பை மரத்தடியில் ஒரு பீடத்தில் பாதம் உள்ளது. இது வள்ளுவருடைய குருவின் பாதமாம். கருவறையில் சின்முத்திரை காட்டி, திருக்குறள் ஏந்தி, யோகத்தில் அமர்ந்திருக்கிறார் வள்ளுவர். அருகே தனிச்சந்நிதியில் வள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார் காட்சி தருகிறார்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பெரிய கலையம்புத்தூரில் திருவள்ளுவருக்கு கோவில் உள்ளது. இங்கு நான்கரை அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை உள்ளது. தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் திருவள்ளுவரின் வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஏடும் உள்ளன.

வள்ளுவர் ஆண்டு என்பது ஆங்கில ஆண்டுடன்31-ஐக் கூட்டினால் வருவது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளத்தில்தான் திருக்குறள் அரங்கேற்றம் ஆனதாக வரலாறு கூறுகிறது. புராண நிகழ்வுகள் நடந்த புகழ்பெற்றது இந்தப் பொற்றாமரைக்குளம். நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழியளித்தது, கீரணைக் கரையேற்றியதுடன் இலக்கணம் உபதேசித்தது என்பனவற்றுடன் பொற்றாமரைக்குளம் தொடர்புடையது. இக்குளத் தைச் சுற்றியுள்ள பிராகாரங்களில் தென்புறக்கரையில்தான் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றதாம். இதனைப் போற்றும் விதமாக இச்சுவற்றில் 1330 குறட்பாக்களையும் பொறித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

பொங்கல் விழாவை மகிழ்ந்து கொண்டாடும் வேளையில் திருவள்ளுவரையும் நினைவு கூர்வோம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(1)
Name : Muthu Date & Time : 2/4/2017 11:28:34 AM
-----------------------------------------------------------------------------------------------------
மயிலாப்பூர் வள்ளுவருக்கு , திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மைலாப்பூரில் உள்ள வள்ளுவர் என்ற பெயரில் வாழ்ந்தவர் 16 நூற்றாண்டில் வாழ்ந்த நபர். திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் தந்தை பெயர், தாய் பெயர் யாருக்கும் தெரியாது. மனைவி பெயரும் வயசுக்கு இல்லை. 18 நூற்றாண்டில் திருக்குறள் பற்றி காழ்ப்புணர்வு கொண்டவர்கள் கிளப்பிய புரளிதான்...இந்த மயிலாப்பூர் வள்ளுவர்.
-----------------------------------------------------------------------------------------------------