Add1
logo
காலாவதியான மாத்திரைகள், கிராமத்தில் விற்பனை || பார்லி.,க்கு வர விரும்பத சச்சின் பதவி விலகட்டும் - நரேஷ் அகர்வால் || நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்! - ஓ.பி.எஸ்.-ன் ஹைடெக் பிரச்சாரம். || அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் அருகே தீ (படங்கள்) || தஞ்சையில் 3 வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம் || சார்நிலைக்கருவூலத்தினை முற்றுக்கையிட்ட ஆசிரியர்கள் || பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் (படங்கள்) || ஆர்.கே நகரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம்! (படங்கள்) || வைகோ நடத்தும் - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா (படங்கள்) || பா.ஜ.க.தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || வாரிசு சான்றிதழ் தரமால் அலையவிடும் அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்தில் மூதாட்டி உண்ணாவிரதம் போராட்டம் || மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சிறையில் அடைப்பு! (படங்கள்) || 10,000 பரிசு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ||
Logo
ஓம்
மீனம்
......................................
கும்பம்
......................................
மகரம்
......................................
தனுசு
......................................
விருச்சிகம்
......................................
துலாம்
......................................
கன்னி
......................................
சிம்மம்
......................................
கடகம்
......................................
மிதுனம்
......................................
ரிஷபம்
......................................
12 ராசிக்காரர்களின் பயோடேட்டா-மேஷம்
......................................
ஸ்ரீ ராகவேந்திர விஜயம்!
......................................
நாராயணனின் நல்லதோர் திருவிழா!
......................................
சாந்திக் கிரியைகள்!
......................................
மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாங்குடி
......................................
கடவுளைத் தேடி... 22
......................................
2017 ஜனவரி மாத ராசிபலன்கள்
......................................
ஞாயிறு போற்றுவோம்!
......................................
திகட்டாமல் இனிக்கும் பாடல்!
......................................
2017 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்
......................................
அறிவைத் தூண்டும் மேலான ஒளி!
......................................
திருவருள் பெருக்கும் திருக்களப்பூர் வனத்தீஸ்வரர்!
......................................
யாதுமாகி நின்றாள்! இந்திரா சௌந்தர்ராஜன்
......................................
சிறப்பு மிக்க தைத்திங்கள்!
......................................
யார் அறிவார் உன் அருளின் தன்மை!
......................................
01-01-17வைணவம் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவு. மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த இந்த பிரிவினர் திருமாலை வழிபடும் நெறியைக் கொண்டவர்கள். வைணவ உலகின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த இராமானுஜர்,  "விசிஷ்டாத்வைதம்' என்னும் சமயத் தத்துவத்தை போதித்தவர்.

ஸ்ரீஇராமானுஜரை, ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனின் மறுஅவதாரம் என்றும் கூறுவார்கள். இவரைப் பற்றி இராமானுச நூற்றந்தாதியில்,

"காரேய் கருணை இராமா
னுச! இக்கடல் இடத்தில்
ஆரே அறிபவர்நின் அருளின் தன்மை
அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்த நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்குயிராய் அடி
யேன் இன்று தித்திக்குமே'

எனப் போற்றிப் புகழப்படுகிறது.

"முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ'

எனப் பாவேந்தர் பாரதிதாசன் இராமானுஜரின் சமய, சமூகத் தொண்டைப் பாடியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில், வேத சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய ஆசூரி கேசவருக்கும், காந்திமதி அம்மையாருக்கும் சித்திரை மாதம் திருவாதிரை நாளில் (4-4-1017) இராமானுஜர் பிறந்தார்.

குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு, காந்திமதி அம்மையாரின் சகோதரர் திருமலை, தனது மருமகனைப் பார்க்க ஆசையுடன் திருமலையிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். குழந்தை முகத்தில் தெரிந்த தெய்வீகப் பொலிவைக் கண்டவுடன் "லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்த' (திருநிறைச் செல்வன் தெய்வ மகன் இலக்குவன்) என்பதற்கேற்ப, குழந்தைக்கு "இளையாழ்வான்' எனப் பெயர் சூட்டி வாழ்த்தினார். திருமலை நம்பி வைணவ நெறியில் பெரிய பண்டிதர். திருமாலின் தீவிர பக்தர். அது மட்டுமின்றி அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீஆளவந்தாரின் முக்கிய சீடர்.

குலமரபுப்படி உபநயன சடங்கு முடிந்த பின்னர், காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள திருப்புட்குழி எனும் ஊரில் வாழ்ந்த யாதவப் பிரகாசரிடம், இளையாழ்வானை வேதம் கற்பதற்காகச் சேர்த்தார் தந்தையார். இளையாழ்வான் யாதவப்பிரகாசரிடம் முறைப்படி வேதாந்த தத்துவத்தைக் கற்கும் சமயத்தில் அவரது பதினாறாம் வயதில் தஞ்சமாம்பாள் என்னும் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்தனர். குருகுலத்தில் கற்கும் காலத்தில், அறிவுக் கூர்மையால் சில சமயங்களில் குருவை விஞ்சும் அளவுக்கு இளையாழ்வானின் ஞானம் பிரகாசித்தது. அதனால் இவருக்கும் யாதவருக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்பட்டது.

திருக்கச்சி நம்பி என்கிற வைசியர் பூவிருந்தவல்லி அருகே வாழ்ந்து வந்தார். இவர் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலில் ஆலவட்ட திருப்பணியை (விசிறி வீசும் திருப்பணி) செய்துவந்தவர்.

திருக்கச்சி நம்பியின் மூலம் இராமானுஜர் இறைவனுக்கு கைங்கரிய சேவையைச் செய்ய விரும்பினார். சிறிது காலம் காஞ்சிபுரத்தில் இருந்தவண்ணம் இறைப்பணியைச் செய்து வந்தார்.

1037-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த ஆளவந்தார் காஞ்சிபுரத்திற்கு வந்த வேளையில், திருக்கச்சி நம்பி மூலம் இராமானுஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை அழைத்து வருமாறு கூறினார். ஞானப்பொலிவும், வடிவழகும் கொண்ட இராமானுஜரின் ஆத்ம குணம் ஆளவந்தாரை மிகவும் கவர்ந்தது. எதிர்காலத்தில் பெரிய ஞானியாவார் என்பதை உணர்ந்துகொண்டு வாழ்த்தினார்.

குரு யாதவப் பிரகாசரிடமிருந்து முழுமையாக விலகி காஞ்சிபுரத்தில் கச்சிநம்பியுடன் இருந்த இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருமாறு, தமது சீடரான பெரிய நம்பியை காஞ்சிக்கு அனுப்பி வைத்தார் ஆளவந்தார். இருவரும் ஸ்ரீரங்கம் செல்வதற்குள் ஆளவந்தார் இறைவன் திருவடியை அடைந்துவிட்டார். இறக்கும் தறுவாயில் ஆளவந்தாருக்கு மனதளவில் மூன்று குறைகள்- வைணவ நெறியை வளர்க்கும் வகையில் இருந்தது. அதைக் கேள்விப்பட்ட இராமானுஜர் ஆளவந்தார் எண்ணியிருந்தவற்றை நிறைவேற்றி வைப்பதாக உறுதி பூண்டார்.ஆளவந்தாருக்குப் பின்னர் வைணவத்தை வளர்க்கும் பணி தமக்காகக் காத்து நிற்கிறது என்பதை இராமானுஜர் உணர்ந்தார். கச்சி நம்பி மூலம் தமது ஆத்ம யாத்திரையைத் தொடங்க திட்டமிட்டார்.
பெருமாளுடன் பேசும் அளவுக்கு அருள்பெற்ற கச்சி நம்பியிடம், தம் மனதிலிருக்கும் ஆறு விஷயங்களை காஞ்சி வரதராஜப்பெருமானிடம் கேட்டு, உத்தரவு பெற்றுத்தருமாறு வேண்டினார் இராமானுஜர்.

✶ திருமாலே முழுமுதற்கடவுள்.

✶ ஜீவாத்மாக்களினின்று பரமாத்மா வேறுபட்டவனே.

✶ இறைவனை அடையும் ஒரேவழி சரணாகதி.

✶ இறைவடி சேர்ந்தார்க்கு மரணகால பயமில்லை.

✶ உடல் சாய்ந்த பிறகே  மனிதருக்கு முக்தி.

✶ பெரிய நம்பியை ஆசாரியராகப் பற்றுவது.

இந்த ஆறு வாக்கியங்களுக்கு பெருமாள் கச்சி நம்பி மூலம் உத்தரவு தந்ததால் இதையே தமது தத்துவக்கருத்தாக இராமானுஜர் ஏற்றுக் கொண்டார். இந்த கருத்து வைணவ உலகில் வெகுவாகப் பரவியது. இதன்மூலம் இராமானுஜரின் புகழ் உயர்ந்தது.

ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, அவர் மூலம் வைணவ மரபின் பஞ்ச சம்ஸ்காரங்களை மேற்கொள்ள ஸ்ரீரங்கம் நோக்கிச் சென்றார். வழியில் பெரிய நம்பியை மதுராந்தகத்தில் கண்ட இராமானுஜர், தமக்கு மந்திரோபதேசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி திருமந்திரோபதேசம் பெற்றார்.

ஆளவந்தாரின் சீடர்களில் முக்கியமானவர்கள் பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பெரிய திருமலைநம்பி, திருமாலையாண்டான், திருவரங்கப்பெருமாள் அரையர் ஆகியோர். அவர்களிடம் தத்துவ உபதேசம் பெற்று ஞானத் தெளிவடைய இல்லறத்தைத் துறந்து துறவு மேற்கொள்ள தமது முப்பத்தைந்தாவது வயதில் (1052-ஆம் ஆண்டு) முடிவு செய்தார். துறவு மேற்கொண்ட பின்னர் "யதிராஜன்' என்கிற ஆசிரமப்பெய ரைப் பெற்று, ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து இறைப்பணியைச் செய்துவந்தார்.

வேதாந்த தத்துவத்தை மேலும் அறிய வேண்டும் என்னும் வேட்கையில், ஸ்ரீரங்கத்திலிருந்து கோஷ்புரம் (திருக் கோட்டியூர்) சென்று, திருக்கோட்டியூர் நம்பியைக் காணச்சென்றார். வைணவ பெரிய பண்டிதரான திருக்கோட்டியூர் நம்பி, இராமானுஜரை சந்திக்காமல் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் சந்திக்க முடியாமல் கோஷ்புரத்துக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் பதினெட்டு முறை மனம் தளராமல் நடையாக நடந்தார் இராமானுஜர்.

இறுதியில் இராமானுஜரின் அறிவுத்திறனையும், ஆத்ம குணங்களையும் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி, இராமானுஜரை நேரில் வருமாறு அழைத்து, பிரணவத்தின் ஆழ்பொருள், எட்டெழுத்தின் செம்பொருளான மந்திரோபதேசத்தை இராமானுஜருக்கு உபதேசித்தார். இந்த உபதேச மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்கிற நிபந்தனையும் விதித்தார்.

மந்திரோபதேசம் பெற்ற இராமானுஜர், "ஞானத்தை வழங்கும் இந்த மந்திரத்தை எதற்காக பிறர் செவிப்படாமல் மறைக்க வேண்டும்? அனைவரும் இதையறிந்தால் அவர்கள் வாழ்வு சிறக்கும். பிறவிக் கடலிலிருந்து விடுதலை பெறலாம்' என எண்ணினார்.

மேலும் "இந்த மந்திரோபதேசம் பெறுவதற் கான எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும், தமது குரு உடனே உபதேசம் செய்யாமல் பதினெட்டு முறை நடக்க வைத்தார். அப்படியிருக்க பாமர மக்கள் எப்படி இந்த மந்திரத் தைப் பெறுவார்கள்' என சமுதாய நோக்கில் பொதுவுடமையுடன் சிந்தித்தார்.

இறைவனின் அருள்பெற விரும்புவோர்க் கெல்லாம் இந்த மந்திரத்தை உபதேசம் செய்யவேண்டும் என்னும் எண்ணம் மிகவே, திருக்கோட்டியூர் கோவிலின் தென்புறமுள்ள தெற்காழ்வார் கோபுரத்தின் மேலேறி நின்றுகொண்டு, தாம்பெற்ற மந்திரோபதேசத்தை பலர் கூடியிருக்கும் நேரத்தில் குருவின் ஆணையை மீறி உரக்கச் சொன்னார். அரிய மந்திரத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் ஊரார் இராமானுஜரை பெரிதும் போற்றினர். அவரது பரந்த மனப்பான்மையைக் கண்டு வியந்தனர்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி இராமானுஜரை நேரில் அழைத்து, ""பரம ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி உபதேசித் ததை ஏன் ஊராருக்கு உபதேசம் செய்தாய்?'' என சற்று கோபமாகக் கேட்க, இராமானுஜர் நடத்தை பணிவுடன் விளக்கினார்.

""குருவின் சொல்லை மீறினால் உனக்கு நரகம்தான் கிட்டும் என்பது தெரியாதா?'' என மீண்டும் வினவினார் திருக்கோட்டியூர் நம்பி.

"குருவின் உத்தரவை மீறினால் நரகம் என்பது தெரியும்'' என மீண்டும் பணிவாக இராமானுஜர் கூற, இவரது பதிலால் ஆச்சரியமடைந்த திருக்கோட்டியூர் நம்பி, ""அறிந்தே தவறு செய்தது ஏன்?'' என கேட்டார்.

""குருவின் வாக்கை மீறியதால் என் ஒருவனுக்கு மட்டுமே நரகம். ஆனால் இந்த மந்திரத்தைக் கேட்ட எல்லாருக்கும் அதை ஜெபிப்பதன் மூலம் மறுபிறவி இல்லாத சொர்க்க வாழ்வு கிட்டும். நான் ஒருவன் நரகத்தில் வீழ்ந்தாலும் பரவா யில்லை; பலர் நன்றாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் இதை வெளிப்படுத்தினேன்'' என்றார் இராமானுஜர். பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மை கொண்ட இராமானுஜரைப் பார்த்து, "வாரீர் எம்பெருமானாரே- அவரோ நீர்' என புகழ்ந்து வாரியணைத்துக் கொண்டார் திருக்கோட்டியூர் நம்பி.

"காரேய் கருணை இராமானுசா, ஆரே அறிவர் நின் அருளின் தன்மை' என்பதற் கேற்ப, தம் வாழ்வில் அதை நடத்திக் காட்டிய இராமானுஜரை அவர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் (2017- ஏப்ரல்) நிறைவுற இருக்கும் நிலையிலும், இன்னும் மனித குலம் அவரை மறக்காமல் போற்றுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :