Skip to main content

"இந்திய கிரிக்கெட்ல எனக்குனு ஒரு பேரு வேணும்" - ரிஷப் பந்த்! 

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

rishabh pant

 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டாம் முறையாக வீழ்த்திய வரலாற்று வெற்றியுடன் தாய்நாடு திரும்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள், இன்று தங்களது வீட்டிற்குப் புறப்பட்டு சென்றனர்.

 

ஆஸ்திரேலியாவுடனான இறுதி டெஸ்ட் போட்டியில், அட்டகாசமாக ஆடி அணியை வெற்றிபெற வைத்த ரிஷப் பந்த், தனது சொந்த மாநிலமான டெல்லிக்குத் திரும்பினார். அப்போது அவரிடம் தோனியுடன் ஒப்பிடுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பந்த், இந்திய கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புவதாக கூறினார்.

 

இதுகுறித்து ரிஷப் பந்த், "நீங்கள் தோனி போன்ற ஒருவருடன் ஒப்பிடப்படும்போது அற்புதமாக உணர்வீர்கள். நீங்கள் என்னை அவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள், இது அற்புதமாக இருக்கிறது, ஆனால் நான் யாருடனும் ஒப்பிடப்பட விரும்பவில்லை, இந்திய கிரிக்கெட்டில் எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். அதேபோல், ஒரு இளைஞரை, ஜாம்பவானோடு ஒப்பிடுவது சரியானதல்ல" எனக் கூறியுள்ளார்.