Skip to main content

டி20 உலகக்கோப்பை- பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

Pakistan win T20 World Cup

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 07.00 PM மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

 

அதைத் தொடர்ந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57, ரிஷப் பந்த் 39, ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்தனர். அதேபோல், பாகிஸ்தானி அணி தரப்பில் ஷாஹீன்- ஷா அஃப்ரிடி 3, ஹசன் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 

Pakistan win T20 World Cup MATCH

 

அதன் தொடர்ச்சியாக, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்து, இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் அஸாம் 68, ரிஸ்வான் 79 ரன்களைக் குவித்தனர். 

 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி வீழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.