Skip to main content

அபார தொடக்கம் கண்ட நியூசிலாந்து - விக்கெட் வீழ்த்தாத இந்திய பந்துவீச்சாளர்கள்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

NEWZEALAND

 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில்  மயங்க் அகர்வால் 13 ரன்களிலும்,  கில், அரை சதமடித்தும் ஆட்டமிழந்தனர்.

 

அதேபோல் புஜாரா  26 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதமும், ஷ்ரேயாஸ் ஐயர், தனது அறிமுகப்போட்டியிலேயே சதமடித்தும் அசத்தினர். இருப்பினும் சதமடித்த சிறிது நேரத்திலேயே ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அஸ்வின் 38 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா 345 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங், டாம் லாதம் ஆகிய இருவரும் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினார். இவர்கள் இருவரையும் இன்றைய நாளின் இறுதி வரை இந்திய பந்து வீச்சாளர்களால் வீழ்த்தமுடியவில்லை. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வில் யங் 75 ரன்களிலும், டாம் லாதம் 50 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது.